மெகந்தியால் அலர்ஜி: வதந்தியால் இரவு முழுவதும் பரபரப்பு

செஞ்சி பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்த கடைகளில் விற்கப்படும் மெகந்தியை (கோன்) வாங்கி அலங்காரம் செய்து கொண்டனர். இதை பயன்படுத்திய சிலருக்கு கைகளில் அலர்ஜி, மயக்கம் ஏற்படுவதாக நேற்று இரவு தகவல் பரவியது.

இதையடுத்து நள்ளிரவு இரவு 2 மணிக்கு சொரத்தூர் மற்றும் அப்பம்பட்டை சேர்ந்த  சில பெண்கள் மருத்துவமனைக்கு  சென்று சிகிச்சை பெற்றதாகவும், இதில் ஒரு பெண்ணுக்கு மயக்கம், தலைவலி இருந்ததால் செஞ்சியில் இருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவல் செஞ்சி பகுதியில் உள்ள முஸ்லீம்கள் மத்தியில் மொபைல் போன் மூலம் வேகமாக பரவியது. இதையடுத்து இன்று அதிகாலை 4.30 மணிவரை 123 பேர் மெகந்தி வைத்ததால் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிலர் முன்னெச்சரிக்கையாகவும் சிகிச்சைக்கு வந்தனர். இதனால் செஞ்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

ரம்ஜான்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

தமிழக ஆளுநர் கே. ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ரம்ஜான் திருநாளையொட்டி, இஸ்லாமிய பெருமக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: ரம்ஜான் திருநாளையொட்டி முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புனித குரான் கூறியுள்ள கொள்கைகளை பின்பற்றி உண்மையான, உத்தமமான வாழ்க்கையை மேற்கொள்ள தீர்மானிப்போம்.

உண்ணாநோன்பை முடித்துக் கொள்ளும் இந்த திருநாளானது, நம்மிடையே பகிர்ந்து கொள்ளுதல், ஈகை, அன்பு, கருணை, பரஸ்பர நட்பு, சமாதானம் போன்ற நற்குணங்களை பரப்பட்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்; இஸ்லாமியப் பெருமக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில் எனது உள்ளம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏழை, எளியோருக்கு உணவு வழங்கி தாமும் உண்டு, உள்ளம் மகிழும் இனிய திருநாள் ரம்ஜான் திருநாள் ஆகும். முப்பது நாள்கள் பகலில் பருகாமலும், உண்ணாமலும் நோன்பு இருந்து, தீய எண்ணங்கள் அனைத்தையும் அழித்து, இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், பிணியுற்றவரைச் சென்று பாருங்கள், துன்புறுத்தப்பட்டவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள் என்று நபிகள் நாயகம் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆழ்ந்த சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ வேண்டும்.

தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகிற்குப் பறைசாற்றியுள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும்.

இந்த இனிய திருநாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சின்சின்னாட்டி டென்னிஸ்: பெடரர் சாம்பியன்

சின்சின்னாட்டிஸ் இறுதி போட்டியில் நேற்று சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடர், 2வது இடத்தில் உள்ள ஜோகோவிச்சுடன் மோதினார். இதில் பெடரர், 6-0, 7-6(7) என்ற செட் கணக்கில் ஜேதகோவிச்சை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

ரம்ஜான் வாழ்த்து பிரதமர் மன்மோகன்சிங்

ரம்ஜான் பண்டிகையையொட்டி பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ஈத் பெருநாள், மகிழ்ச்சிக்குரிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை சகோதரத்துவ உணர்வையும், தியாகத்தையும் வெளிப்படுத்துகிறது.

இந்த ஆண்டு ஈத் பண்டிகை நமது கலாசார பிணைப்பினை வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் சமாதானத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும் என கூறியுள்ளார்.

சாய்னாவுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு: சச்சின் வழங்கினார்

பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவலுக்கு பி.எம்.டபுள்யூ கார் வழங்கினார் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

நேற்று ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த கார்சாய்னாவுக்கு வழங்கப்பட்டது.

பி.எம்.டபுள்யூ காரை சாய்னாவுக்கு வழங்கி சச்சின் பேசுகையில், சாய்னா சந்தோசமாக இருக்கலாம். ஆனால் அவர் திருப்தி அடைந்திருக்க மாட்டார். ஒரு சிறந்த விளையாட்டு வீரரான உங்களுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதைவிட இன்னும் சிறப்பாய் செயல்பட்டு உங்கள் திறமையை இந்த உலகிற்கு காட்ட வாய்ப்புகள் நிறைய உள்ளன என்று நம்புங்கள். அதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். உங்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி ஆகியவையே இந்த பதக்கம் வெல்வதற்கான காரணம். அதவாது இந்த வெற்றி இந்தியாவிற்கு நிறைய செய்திகளை சொல்வதாக உள்ளது என்றார் அவர்.

வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்த சாய்னா நேவால் பேசியதாவது,

எனக்கு ஒன்பது வயது இருக்கும் போது நான் ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றிபெற்று பதக்கம் பெறுவதாக கனவு கண்டேன். ஆனால் இப்போது அது நிறைவேறி இருப்பது என்னால் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

இந்த வெற்றியை பெறுவதற்கு எனக்கு கடுமையான பயிற்சி அளித்த எனது மாஸ்டர் கோபி ஐயா அவர்களுக்கு நான்  நன்றி சொல்லிகொள்கிறேன். என்னால் கொண்டுவரப்பட்ட இந்த முதல் பதக்கம் இந்திய இறகுப்பந்து விளையாட்டியில் மிகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும். இனி நாட்டிற்காக இன்னும் நிறைய பதக்கங்களை நாங்கள் பெற்று தருவோம்.

நமது நாட்டில் கிரிகெட் விளையாட்டுப் போட்டிக்கு நல்ல வரவேற்பு  இருக்கிறது. அதுபோல் இல்லாவிட்டாலும் ஒரு சிறந்த விளையாட்டாக இறகுப்பந்து மாறும் என்று நான் நம்புகிறேன். என்று அவர் கூறினார்.

கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்கே வேண்டும்: முதலமைச்சர் ஜெயலலிதா

கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்கே வேண்டும்:  ஜெயலலிதா

கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்கே வேண்டும்: முதலமைச்சர் ஜெயலலிதாகூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்கே வேண்டும்: ஜெயலலிதா கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள 1,000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வழங்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடித விவரம்:

கூடங்குளம் அணு மின் திட்டத்தின் முதலாவது அணு உலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள 1,000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கே வழங்குவதற்கு தாங்கள் உதவ வேண்டும் எனக் கோரி என கடந்த மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 25-ல் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தை நினைவூட்ட விரும்புகிறேன். அந்த கடிதங்களுக்கு இதுவரையில் எவ்வித பதிலும் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது.

கூடங்குளம் அணு மின் திட்டத்தின் முதலாவது அணு உலையில் எரிபொருளை நிரப்பும் பணியானது அடுத்த சில தினங்களில் நடைபெற உள்ளதாக அறிகிறேன். எனவே, என்னுடைய முந்தைய வேண்டுகோளை தங்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன் என கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

Post you may like:

தேர்தலில் போட்டியிடவில்லை வைகோ அறிக்கை

தனித்து போட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு

ஜெயலலிதா 7வது முறையாக அதிமுக வேட்பாளர் பட்டியலை மாற்றினார்

மக்கள் நலக் கூட்டணி தேமுதிகவில் சில தொகுதிகள் மாற்றம்

முதலமைச்சர் ஜெயலலிதா பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலி! கலைஞர் கண்டனம்

தேர்தல் முன்னோட்ட கருத்து கணிப்புகளை வெளியிட தடை : தேர்தல் ஆணையம் உத்தரவு!

 இந்திய ஜனநாயக கட்சிக்கு 45 தொகுதிகள் அள்ளிகொடுக்கும் பாஜக

ஏப்ரல் 9 ந்தேதி முதல் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம்

சென்னையின் புதிய அடையாளம் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூம் 55-வது கிளை முகலிவாக்கத்தில் திறப்பு

பொதுக்குழுவில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்

மழை குறைவு : மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது

மழை குறைவு : மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது

மழை குறைவு : மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது

மழை குறைவு : மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது ,கர்நாடகத்தில் மழை குறைந்து, காவிரில் திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது.  இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Visit Chennaivision for More Tamil Cinema News

மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை

மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை

மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை 2012-2013 ஆம் ஆண்டில் ரூ.200 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்காக பல சிறப்புத் திட்டங்கள்செயல்படுத்தப்படுகின்றன. மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை, தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.500லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தி ஆணையிட்டு 89381 நபர்கள் பயனடைந்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு, வேலை வாய்ப்பற்றோர் நிவாரணத் தொகை ஷதூவிச்லி இந்த ஆண்டில் ரூ. 11.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாநில / மாவட்ட அளவில் முதல் மூன்று நிலைகளில் மதிப்பெண் பெறும், சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசினை உயர்த்தி, உயர்கல்விபெற உதவித்தொகையும் வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.

2011-2012ஆம் ஆண்டில் பார்வை குறைபாடுடைய 6 வயதிற்குட்பட்ட மாற்று திறனாளி சிறார்களுக்கு, 20 புதிய ஆரம்பநிலை பயிற்சி மையங்கள், 20 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்பவர்களை ஊக்குவிக்கும் வண்ணம், பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு
திருமண உதவித்தொகை ரூ. 50000/- த்துடன் கூடுதலாக மணப்பெண்ணிற்கு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும்அனைவருக்கும் திருமண உதவித்தொகை கிடைக்கும் வகையில் உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. இரு கால்களும் பாதிக்கப்பட்ட கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகள், சுயவேலை புரிபவர்கள் மற்றும் பணிபுரிபவர்களுக்கு 2011-2012 ஆம் ஆண்டு முதல் விலையில்லா 400 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகிறது. செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காதுக்கு பின்புறம் அணியும் விலையில்லா காதொலிக் கருவிகள் வழங்க ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

23 அரசு சிறப்பு பள்ளிகளில் பயிலும் 1720 மாணவ, மாணவியர் பயனடையும் வகையில் 4 இணை சீருடைகள் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளிகளில்  பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதந்திர உணவு மான்யம் ரூபாய் 450 லிருந்து ரூபாய் 650 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் ஒரு துணையாளருக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணச் சலுகை வழங்கப்படுகிறது. பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு தேர்வு எழுதும் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் தொகை ஒரு தேர்வு தாளுக்கு ரூ.100/- லிருந்து ரூ. 250/- ஆக உயர்த்தி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. பள்ளி படிப்பை இடை நிறுத்தம் செய்யாமல் இருக்க ஊக்கத் தொகையாக 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 1500 ம் , 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 1500 ம், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 2000ம் வழங்கப்படுகிறது.

மேலும், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள் 5000 பயனாளிகளுக்கு வழங்க ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. குறைந்த பார்வை திறனுடைய மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பாடநூல்களின் எழுத்துக்களை பெரிதாக்கி படிக்க உதவும் கருவி (Magnifier) ரூபாய் 50 லட்சம் செலவில் 500 மாணவ, மாணவிகளுக்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. கை, கால் இழந்த 100 மாற்றுத் திறனாளிகளுக்கு, நவீன செயற்கை அவயம் வழங்க ரூபாய் 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில்    மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை விடுத்துள்ளது .

சிறப்பு பள்ளிகளில் +2 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக் கணிணியுடன், பேசும் மென்பொருள் வழங்கவும் அரசு ஆணையிட்டு, வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 மாற்றுத் திறனாளிகள் தொழிற் பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பு பணிநியமனம் மூலம் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  325 நபர்களை தேர்வு செய்துள்ளது. இதில் 190 நபர்கள் பார்வையற்றவர்கள் ஆவார்கள். இவ்வாறு, தமிழ்நாடு அரசு பல சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், பார்வையற்ற பட்டதாரிகளுக்கான கலை, இலக்கிய சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 26.11.2012 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அவர்களை 26.11.2012 அன்று நேரில் சந்தித்தும், மேலும் 28.11.2012 அன்று செயலர் மற்றும் ஆணையர் ஆகியோர் முன்னிலையில் சங்க பிரதிநிதிகளை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அவர்கள்  சந்தித்தும், கோரிக்கைகள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்கள். போராட்டத்தை கை விடுவதாகக் கூறிச் சென்ற இந்த சங்கப் பிரதிநிதிகள், மீண்டும் போராட்டம் நடத்தி, பொது மக்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வையற்ற சங்கப் பிரதிநிதிகள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு, அரசுக்கு  ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Visit Chennaivision for More Tamil Cinema News