ஜூன் 10 ஆம் தேதி வெளியாகும் “வித்தையடி நானுனக்கு”

ஜூன் 10 முதல் “வித்தையடி நானுனக்கு”! – இது யாரைபற்றிய கதையும் அல்ல!

நான் “வித்தையடி நானுனக்கு” படத்தை சில முக்கிய திரைத்துறை புள்ளிகளிடம் போட்டு காண்பித்தபோது, அவர்கள் இந்தபடம் இன்னார் இன்னாரின் கதையிலிருந்து எடுக்கபட்டதுதானே என்று கேட்டார்கள். நான் திரைப்படங்கள் மட்டும்தான் பார்ப்பவன். எடுத்தவர்களின் கதை எனக்கு தேவையில்லாதது. அதனால் நான் சொன்னேன் ”நீங்கள் சொன்ன இன்னாரின் கதை எனக்கு தெரியாது. இது யாரை பற்றிய கதையும் இல்லை. ஒரு சாதாரணமான, தமிழ் படம்தான்” என்று பேச ஆரம்பித்தார் இயக்குனர் ராமநாதன் கேபி.

“வித்தையடி நானுனக்கு” படம் பற்றி கேட்டபொழுது, இந்த படத்தின் கதைகளத்திற்க்கு இரண்டே கதாபாத்திரங்கள் மட்டுமே தேவைபட்டது. அதனால் இரண்டேபேரை வைத்து படத்தை முடித்துவிட்டேன். இதில் பெரும் சவாலாக இருந்தது திரைக்கதை அமைப்புதான்.  வீட்டைவிட்டு ஓடிவந்த ஒரு இளம்பெண். அவள் கார் நடுவழியில் நின்று போக ஒரு நடுத்தர வயது ஆண் உதவிக்கு வருகிறார். படம் முழுக்க அவர்களுக்குள் நடக்கும் போராட்டம்தான் கரு. இதை வைத்து காதல் கதை பண்ணலாம், காமெடி கதை பண்ணலாம், ஏன் பேய்கதையாக கூடபண்ணலாம், ஆனால் நான் இதை ஒரு சைகொலாஜிக்கல் திரில்லராக, முந்தைய ஹாலிவுட் க்ளாஸிக் ஸ்டைலில் செய்திருக்கிறேன். அதனால் சற்று நிதானமாகவும், இண்ட்ரஸ்டிங்காகவும் படம் போகவேண்டும். அது மட்டும்தான் சற்று கடினமாக இருந்தது. 15 நாள் ஷூட். படத்தை முடித்து வந்துவிட்டோம் என்றாலும் நாங்கள் ஒரு மாதம் முழு மூச்சாக ஒத்திகை பார்த்து காமிரா கோணங்களிலிருந்து மனப்பாடம் செய்து சென்றோம். ஆங்கிலத்தில் நியோ நொயர் என்று ஒரு ஜாண்டர் இருக்கிறது. அதை முழுவதுமாக சாராமல், சற்று தட்டி கொட்டி தமிழ் படுத்த முயற்சி செய்திருக்கிறேன். மற்றபடி இது ஒரு தமிழ் படம். ’வித்தியாசமாக’ ‘முதன் முறையாக’ என்ற பெரும் வார்த்தைகள் இதில் இல்லை. இந்த முயற்சி ஆங்கிலத்தில் நிறைய செய்திருக்கிறார்கள். 20 வருடங்களுக்கு முன் ”ஸ்லூத்” SLEUTH என்று ஒரு படம், இருவர் மட்டுமே நடித்தது. கலெக்டர் என்று மற்றும் ஒரு படம், 1930’ஸில் நினைக்கிறேன். அன்றே முயற்சி செய்திருக்கிறார்கள். என்று நீளமாக பதில் சொன்னார்.

ஜூன் 10 ஆம் தேதி வெளியாகும் "வித்தையடி நானுனக்கு"

ஜூன் 10 ஆம் தேதி வெளியாகும் “வித்தையடி நானுனக்கு”

இந்த படத்தின் மூலம் நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்று கேட்டால் அவர் சற்று சிரித்து விட்டு ‘பெரிசா மெஸ்ஸேஜ் சொல்லும் அளவுக்கு நாங்க இன்னும் வளரல சார்…. ஆனால் ஒரு நல்ல படம் பார்த்த ஃபீல் கண்டிப்பா கொடுக்கும்னு நம்பறேன். ஏன்னா ஜெனரலா ஒரு நல்ல படம்னு எதை சொல்லுவோம்? படம் பார்த்து முடித்து வெளியே வந்த பிறகும் படத்தின் தாக்கம் கொஞ்ச நேரம் தொடரும். அதை நாங்கள் ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறோம் என்று நம்பறோம்.

மற்றபடி இந்த படத்துல ஹீரோ ஹீரோயின்னு இல்லாமல் இரு கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இளம் பெண்ணாக நடித்த சவுரா ஸயித் மிக யதர்த்தமாகவும் அழுத்தமாகவும் நடித்திருக்கிறார். ராஜேஷ் கடம்கோட் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்க, இசை விவேக் நாராயண் மிக சிறப்பாக ரி-ரிகார்டிங் செய்திருக்கிறார். ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸின் செல்வக்குமார் என் கூடவே இரவு பகல் பாராமல் இருந்து படத்தை துரிதமா முடிக்க உதவியிருக்கிறார்.

இந்த படத்தில் முக்கியமாக மஹாகவியின் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. ‘பாயும் ஒளி நீயெனக்கு” அதன் கடைசிவரி “வித்தையடி நானுனக்கு” தான் படத்தின் பெயர். இந்த பாட்டை வேறுவிதமாக டியூன் போட்டு மேற்கத்திய இசை வண்ணம் பூசியிருக்கிறோம். L9 மற்றும் ISR Ventures இணைந்து தயார் செய்திருக்கிறார்கள். படம் ஜூன் 10 ஆம் தேதி வெளிவரயிருக்கிறது.

Visit Chennaivision for More Tamil Cinema News

சிங்கம்-2 தயாரிப்பாளரின் புதிய படம் மாதேஷ் டைரக்க்ஷனில் த்ரிஷா !

சிங்கம்-2 தயாரிப்பாளரின் புதிய படம் மாதேஷ் டைரக்க்ஷனில் த்ரிஷா !

சிங்கம்-2 தயாரிப்பாளரின் புதிய படம் மாதேஷ் டைரக்க்ஷனில் த்ரிஷா !

சூப்பர் ஹிட் படமான சூர்யா நடித்த “சிங்கம் 2” படத்தை  தயாரித்தவர் எஸ். லட்சுமண் குமார். இவரின் “ சிங்கம் 2 “ பட நிறுவனம் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் “ மோகினி “.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை அம்சம் உள்ள இப்படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார். த்ரிஷாவின் சினிமா வரலாற்றில் இப்படம் முக்கிய பங்குவகிக்கும். மேலும் சுகன்யா , கௌசல்யா , முகேஷ் திவாரி , யோகி பாபு , சாமி நாதன் , ஆர்த்தி கணேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

நம்பர் ஒன்  இயக்குநர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பனிபுரிந்தவர் R. மாதேஷ். இவர் இயக்கத்தில் விஜய் நடித்த “மதுர” படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார்.

இசை: விவேக் மெர்வின் ( புகழ் இசையமைப்பாளர் )

ஒளிப்பதிவு: ஆர்.பி. குருதேவ்

படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன்

ஸ்பெஷல் எபக்ட்ஸ்: Harry Potter படத்திற்கு VFX செய்த லண்டனை சேர்ந்த பிரபல VFX குழுவினர் இப்படத்தின் ஸ்பெஷல் எபக்ட்ஸில் பணியாற்றவுள்ளனர்.

கலை: பாலா

நிர்வாக தயாரிப்பு: கே.வி. துரை

தயாரிப்பு: லட்சுமண் குமார்

இதன் படபிடிப்பு ஜூன் 2 ஆம் தேதி முதல் லண்டனில் ஆரம்பமாகிறது தொடர்ந்து 40  நடைபெறுகிறது. அதன் பிறகு இந்தியாவில் 20  நாட்களும் , பாங்காகில் 10 நாட்களும் ,                   மெக்சிகோவிலும் நடைபெறும்.

ஹாரர் த்ரில்லர் படமாக இப்படத்தை உருவாக்குகிறார் R. மாதேஷ்

Visit Chennaivision for More Tamil Cinema News

 

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர். நாம் இரசித்துக் குடிக்கும் காபி, அக்னிக் கனல் போல நம் நாவையே எரித்தால் எப்படி இருக்கும். அப்படி விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் நடக்கும் நெருப்பான போராட்டம்தான் வித்தையடி நானுனக்கு.

தன் வழி தனி வழி அதுதான் ஒரே வழி. இதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் போகக்கூடிய நேரெதிர் துருவங்கள் (Noir characters).  அவர்களின் காதலும், மோதலும் தான் வித்தையடி நானுனக்கு.

ஒரே காட்சியில் ஒரே சூழ்நிலைக்கு அதில் உள்ள கதாபாத்திரங்கள் விதம்விதமான மனோபாவங்களை வெளிப்படுத்துவார்கள் . அந்த உணர்வுக்குவியல்களை  தனது (Stroop effect) இசையால்  திகிலும் தீஞ்சுவையும் கலந்து நமக்குள் ஊடுருவுகிறார் இசையமைப்பாளர் விவேக் நாராயண்.

அமெரிக்காவில் வசிக்கும் சௌரா சையத் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஆழ்மனத் துடிப்பை எகிற வைத்து, திரையை சூடாக்கும் அனலடிக்கும் காட்சிகளுடன் ராம்நாதன் கே.பி எழுதி இயக்கியுள்ளார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் வித்தையடி நானுக்கு திரைப்படம் எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனங்களின் பெருமை மிகு கூட்டுத் தயாரிப்பு.

இரு கதாப்பாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் சைக்கோ த்ரில்லர் ‘வித்தையடி நானுனக்கு’!…

ராமநாதன் KB இயக்கத்தில், எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ்  தயாரிக்கும் புதிய படம் ‘வித்தையடி நானுனக்கு’.

இது ஒரு சைக்கோ த்ரில்லர் படமாகும்.

சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ என்ற படம் நினைவிருக்கிறதா.. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வசந்த சேனா வசந்த சேனா…’ பாடல் மிகப் பிரபலம். அந்தப் படத்துக்கு டிஎஸ் முரளிதரன் என்ற பெயரில் இசையமைத்தவர்தான் இப்போது ‘ராமநாதன் KB’ என பெயர் மாற்றிக் கொண்டு இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

அதுமட்டுமல்ல, படத்தின் இரு கதாப்பாத்திரங்களில் ஒருவர்  இவர்தான். இவருக்கு ஜோடியாக சவுரா சையத் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

விவேக் நாராயண் இசையமைக்கிறார். ராஜேஷ் கடம்கோட் ஒளிப்பதிவு செய்கிறார்.

எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் பேனரில் லோகநாதன் D – ஐஎஸ்ஆர் செல்வகுமார்  தயாரிக்கின்றனர்.

படத்தில் ஒரேயொரு பாடல்தான். அதுவும் மகாகவி பாரதியின் ‘பாயும் ஒளி நீ எனக்கு ‘எனத் தொடங்கும் அற்புதமான பாடல். இதற்கு மேற்கத்திய பாணியில் மெட்டமைத்துள்ளாராம் விவேக் நாராயண்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானலில்  படமாக்கப்பட்டுள்ளது.

Visit Chennaivision for More Tamil Cinema News

 

தமிழ் நடிகைகளை தொடர்ந்து புறக்கணிக்கிறார்களே! – ஒரு இளம் நாயகியின் வேதனை

தமிழ் நடிகைகளை தொடர்ந்து புறக்கணிக்கிறார்களே

தமிழ் நடிகைகளை தொடர்ந்து புறக்கணிக்கிறார்களே

தமிழ் நடிகைகளை, தமிழ் பேசும் நடிகைகளை தொடர்ந்து திரையுலகினர் புறக்கணித்து வருவது ஏன்? இது வேதனையாக உள்ளது என்றார் இளம் நாயகி ஸ்ரீப்ரியங்கா.

கங்காரு, வந்தா மல, கோடை மழை போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது சாரல் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இவர். சொந்தக் குரலில் டப்பிங் பேசக்கூடியவர். அழகு நடிப்பு என அனைத்து தகுதிகளும் இருந்தும் முன்னணி நடிகையாக வர முடியவில்லையே என்ற ஆதங்கம் இவருக்கு.

மேடை கிடைத்ததும் அந்த ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டார்.

நேற்று நடந்த சாரல் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர்கள் விவேக், விஜய் சேதுபதி, இயக்குநர் விக்ரமன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என திரைப் பிரபலங்களுக்கு முன்னிலையில் அவர் இப்படிப் பேசினார்:

“நான் நடித்த மூன்று படங்களிலுமே எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. எந்தக் காட்சியிலும் சொதப்பியதில்லை. எல்லா இயக்குநர்களிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கிறேன். இருந்தாலும் எனக்கு ஏன் இன்னும் தமிழ் சினிமாவில் முன்னணி இடம் கிடைக்கவில்லை? தமிழ்ப் பொண்ணு என்பதாலா? என்ற கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்தக் கேள்வியை எனக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பதைவிட, மீடியாக்கள், திரையுலகப் பிரமுகர்கள் இருக்கும் இந்த மேடையில் வெளிப்படுத்தினால் விடை கிடைக்குமோ என்றுதான் இங்கே சொல்கிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநர் பேசுவது கூட அடுத்தவருக்குக் கேட்காது. அத்தனை சாதுவானவர். எனக்கு இந்தப் படத்திலும் நல்ல வேடம். சாரல் உங்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

ப்ரியங்கா பேசி முடித்ததும் மைக் பிடித்த விஜய் சேதுபதி, “இப்போது பேசிய ப்ரியங்கா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பார்க்க லட்சணமாக அழகாக இருக்கிறார். பெரிய வாய்ப்புகள் வரவில்லையே என்று புலம்ப வேண்டாம். நிச்சயம் அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் அவருக்கு வரும்,” என்றார்.

அடுத்து பேசிய நடிகர் விவேக் ஒருபடி மேலே போய், “பாலிவுட்டில் கலக்கிய வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, ஸ்ரீதேவியெல்லாம் தமிழ்ப் பெண்கள்தாம்மா. அந்த மாதிரி ப்ரியங்காவும் வரலாம். ஏன், நாளைக்கே கூட நம்ம விஜய் சேதுபதி வாய்ப்புக் கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை,” என்றார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

Similar Tags:

7 நாட்கள் திரைப்படத்தின் கதை மிக சிறந்த கதை பி.வாசு பேச்சு

“வீல்சேரில் உட்கார்ந்தபடி நடிக்கிறதை என் மனைவியும் இரண்டு மகன்களும் விரும்பவில்லை” – ஹேண்ட்சம் நாகார்ஜூனா

தோழா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

தோழா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

”நல்ல கதையில் நடிக்கவேண்டும் என்ற தேடலில் ‘தோழா’வுக்காக ஒரு வருடம் காத்திருந்தேன்’ – ஜூனியர் மார்க்கண்டேயன் கார்த்தி

’தோழா’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தங்களது  திரைப்படப் பயணத்தில் மறக்க முடியாத உணர்வுப்பூர்வமான தருணங்களை பகிர்ந்து கொண்ட ‘எவர்க்ரீன் ஹீரோ’ நாகார்ஜூனா, ’ஜூனியர் மார்க்கண்டேயன்’ கார்த்தி மற்றும் ‘நவீன கலைவாணர்’ விவேக்.

என்னுடைய சினிமா கேரியர்ல ‘தோழா’ படம் ஒரு மைல்கல் படமாக இருக்கும்னு சொல்ல. ஆனால் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய படம். சமீபத்துல ‘InTouchables” ஒரு ஃப்ரெஞ்ச் படத்தைப் பார்த்தேன். இந்த மாதிரி ஒரு அருமையான படத்தை ஏன் இங்கே ரீமேக் பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு. அப்படியொரு உணர்வுப்பூர்வமான படம். அந்தப் படத்தைப் பார்த்த நாள்ல இருந்து, நான் சந்திக்கிற நண்பர்கள்கிட்டயெல்லாம் ‘InTouchables’ படத்தைப் பாருங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன். அந்த மாதிரியான ஒரு உணர்வை ‘தோழா’ படம் நிச்சயம் கொடுக்கும். இன்னொரு விஷயம் ‘தோழா’ படத்துல நான் நடிக்கிறதுல என் குடும்பத்துல யாருக்குமே விரும்பமில்ல. நான் நடிக்கக்கூடாதுன்னு என்னோட மனைவி அமலா, ரெண்டு பசங்களும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. இந்தப் படத்துல நான் வீல் சேர்ல உட்கார்ந்தபடி நடிக்கிற காட்சிகள் இருக்கு. என் பசங்களாலயும், மனைவியாலும் என்னை அப்படியொரு சூழ்நிலையில நடிக்கிறத ஏத்துக்கவே முடியல. இதுதான் அவங்க என்னை நடிக்க வேண்டாம்னு சொன்னதுக்கு காரணம். அதனால ‘தோழா’வை பார்க்கும்போது என்ன சொல்ல போறாங்களோன்னு எனக்கு ரொம்ப படபடப்பாக இருக்கு” என எமோஷனல் பஞ்ச் வைத்தார் நாகார்ஜூனா.

தோழா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

அடுத்து பேசிய கார்த்தி, “ஒரு நல்லப்படம் நடிக்கணும்னு நமக்கு ஒரு தேடல் இருக்குமே. அந்த தேடலில் கிடைச்ச ஒரு நல்ல வாய்ப்புதான் ‘தோழா’. உண்மையைச் சொல்லணும்னா, நல்ல கதையில நடிக்கிறதுக்காக ஒரு வருஷம் காத்திருந்தேன். என்னோட தேடல் வீண் போகல. ‘தோழா’வோட ஒரிஜினல் வெர்ஷனை பார்த்தப்ப, அதை அப்படியே பிரதிபலிக்கிற மாதிரி என்னால பண்ணமுடியுமான்னு ஒரு சின்ன சந்தேகம் இருந்துச்சு. ஆனால் டைரக்டர் வம்சி செம புத்திசாலி. நமக்கு ஏற்றமாதிரி கதையை மிக அழகாக, அதனோட எமோஷன் குறையாம எடுத்திருக்கார்” என உற்சாகமானார்.

“என்னோட முப்பது வருஷ சினிமா வாழ்க்கையில் ‘ஹேண்ட்சம்’ நாகார்ஜூனா உடன் சேர்ந்து நடிக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஆனால் அவரோடு சேர்ந்து நடிக்கிற மாதிரியான காட்சிகள் எனக்கு எதுவுமில்ல” என ஆதங்கப்பட்டார் விவேக்.

’தோழா’ படத்தின் மெகா ஸ்டார்களை அடுத்து பேசிய, தேசிய விருது வென்ற எடிட்டர் கே.எல். ப்ரவீன், “ஒவ்வொரு காட்சிகளிலும் நாகார்ஜூனா வெளிப்படுத்தின எமோஷனலான நடிப்பைப் பார்த்து, நான் இப்போ அவரோட தீவிர ரசிகர் ஆயிட்டேன். மறுபக்கம் கார்த்தி ஒட்டுமொத்த படத்திலும் சரி ஷூட்டிங்கிலும் சரி தன்னோட குசும்பு கொப்பளிக்கும் நடிப்பால கலகலன்னு சிரிக்க வைச்சதையும் மறக்க முடியாது” என்றார்.

அடுத்து பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, “’தோழா’ படத்துல கார்த்தி ஹீரோவாக மட்டும் இல்லாமல் ஒரு ஆர்வமுள்ள உதவி இயக்குநரை போலவும் இருந்து எல்லோரையும் உற்சாகப்படுத்தியதை மறக்க முடியாது. பாடலை எழுதும் போது, இந்த வரியை இப்படி எழுதலாமா, இந்த வார்த்தை வந்தால் நல்லா இருக்குமா என ரொம்பவே உற்சாகப்படுத்தினதை மறக்க முடியாது. இந்தப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் உள்மனதிற்குள் இருக்கும் நம் ஆன்மாவைத் தொடும் பாடல்களாக வந்திருக்கின்றன. மற்ற பாடல்கள் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பாடல்களாக இருக்கும். நாகார்ஜூனா அவர்களுக்கு என் தந்தை ‘ரட்சகன்’ படத்தில் ‘சோனியா சோனியா’ என்ற மெகா ஹிட் பாடலை எழுதியிருந்தார். தற்போது நானும் நாகார்ஜூனா அவர்களுக்கு ஒரு பாடலை எழுதியிருப்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.

சவுகார் பேட்டையில் பேய் வேடத்தில் ராய்லஷ்மி

மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “

இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று  நடிக்கிறார். நாயகியாக லஷ்மிராய் நடிக்கிறார்.  மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், சம்பத், கோவைசரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன், தலைவாசல் விஜய் ரேகா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை –  ஜான்பீட்டர்

ஒளிப்பதிவு    –     சீனிவாசரெட்டி

பாடல்கள்      –     நா.முத்துக்குமார், விவேகா

கலை             –      எஸ்.எஸ்.சுசி தேவராஜ்

நடனம்          –      தினேஷ்

ஸ்டன்ட்        –      கனல்கண்ணன்

எடிட்டிங்       –      எலிசா

தயாரிப்பு நிர்வாகம்   –  ஜி.செந்தில்

வசனம்   –   ஷாம்மேனன்

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வடிவுடையான். இவர்

தயாரிப்பு   –  ஜான்மேக்ஸ்

படத்தை பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்…

இந்த படத்தில் ஸ்ரீகாந்த் இரண்டு வேடமேற்கிறார். அதில் ஒரு கதாப்பாத்திரம் மந்திரவாதி. ராய்லஷ்மி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் முதன் முறையாக ராய்லஷ்மி மாயா  என்ற பேய் வேடத்தில்  நடிக்கிறார். பேய் பிடித்து தானும் ஆடி மற்றவர்களையும் ஆட்டிப் படைக்கும் திகிலான கதாப்பாத்திரம் ஏற்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு தாம்பரம் அருகே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Visit Chennaivision for More Tamil Cinema News

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக கணவர் மட்டும் இருக்க வேண்டும் என்கிற நடிகைகள் காமெடியன் கூட மட்டும் நடிக்க மாட்டார்கள்: விவேக் கலகலப்பு

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக கணவர் மட்டும் இருக்க வேண்டும்  என்கிற நடிகைகள் காமெடியன் கூட மட்டும் நடிக்க  மாட்டார்கள்   என்று விவேக் கலகலப்பாகப் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு.

முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘பாலக்காட்டு மாதவன்’. இப்படத்தை எம். சந்திரமோஹன் இயக்கியுள்ளார். எஸ். சஜீவ் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை அனிருத் வெளியிட நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் விவேக் பேசும் போது ”  மகிழ்ச்சியாக இருக்கிறது.நல்ல வேளையாக இந்த நேரம்வரை இந்தப்படத்தின் மீது யாரும் வழக்கு போடவில்லை..அதற்கு அவசியமில்லாத படம். ஏனென்றால் இது ஒரு குடும்பப் படம். எந்த சர்ச்சையும் இல்லாத படம்.
என் தலைமுடி  இப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்.இப்போது நான் கார்த்தியுடன் ‘காஷ்மோரா’ படத்தில் நடிக்கிறேன். அவரது அப்பாவாக வருகிறேன். தோற்றம் இப்படி இருக்க வேண்டும் என்றார்கள்.அதற்காக கலர் போடாத தலையுடன் போனேன்.இப்படியே இயல்பான தோற்றத்தில் போனேன். ஓகே என்றார்கள்.அதுதான் அப்படியே வந்திருக்கிறேன்.

இந்த ‘பாலக்காட்டு மாதவன்’படம் முதலில் பட்ஜெட் படம் போலத் தொடங்கி விரிவாகி   செலவு அதிகமாகி  பெரிய படமாகி விட்டது..

மலேசியாவில் இலவசமாக எடுக்கலாம் என்று அழைத்துப் போனார்கள்.ஆனால் பார்த்த இடங்களில் எல்லாம் கட்டணம் வசூலித்து விட்டார்கள். இதில் வரும் விலையுயர்ந்த கார்களுக்குக் கூட லட்சக் கணக்கில் வாடகை கொடுத்தோம். எனவே பட்ஜெட் அதிகமாகி செலவு பெரிதாகி விட்டது.
நான் இதில் பாடல் எழுதியிருக்கிறேன். நான் பரம்பரை ஆண்டி அல்ல. பஞ்சத்து ஆண்டி. படப்பிடிப்புக்கு அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் நான் எழுத வேண்டியதாகி விட்டது. அதை அனிருத் பாடியுள்ளார்.

இக்கால இளைஞர்களுக்கு மரியாதை தெரியவில்லை என்கிறார்கள். அவர்கள் அனிருத்தைப் பார்த்தால் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும். அவரைப் பார்க்க நான் வீட்டுக்குப் போனேன். பார்த்து பேசிவிட்டு திரும்பினேன். சார் என்று கூப்பிட்டபடி ஓடிவந்தார். அவர் கையில் என் செருப்புகள் இருந்தன. மறந்து விட்டீர்கள் சார் என்று கொண்டு வந்து கொடுத்தார். அவரது பண்பைப்பார்த்தீர்களா? ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்  உள்ளத்தனையது’ உயர்வு என்பது போல அவரது பண்பால்தான் இப்படி .அவர் இவ்வளவு உயரம் செல்ல முடிகிறது  ஆனால் அவர் ஒரு நடுநிசி நாயகன்.இரவில்தான் வேலை பார்ப்பார்.

இந்த விழாவுக்கு பாடல் சிடியைப் பெற்றுக் கொள்ள சிவகார்த்திகேயனை அழைக்க விரும்பினேன். எனக்கு பல வித யோசனைகள். பிசியாக இருக்கிறாரே,வருவாரா மாட்டாரா என தயக்கம் இருந்தது.ஒரு குறுஞ்செய்திதான் அனுப்பினேன். உடனே போன் செய்தார். நான் உங்கள் பரம ரசிகன் நிச்சயம் வருகிறேன் என்று கூறினார்.சிவகார்த்திகேயனை இனி யாரும் அவர் போனை எடுக்க மாட்டார் என்று தப்பாக கூறாதீர்கள்.
படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். அவர் ஒரு சுரங்கம் போன்றவர். நாம்தான் தோண்டி நல்ல மெட்டுகளை எடுக்க வேண்டும்.ஸ்ரீகாந்த் தேவாவை அப்படியே விட்டால் இதுவே போதும் என்று விட்டு விடுவார்.நம்மை ஏமாற்றி விடுவார்.அவரிடம் நாம்தான் வேலை வாங்க வேண்டும்.

ஒரு காமெடியன் கூட ஜோடியாக நடிக்க எல்லா நடிகைகளும் தயங்குவார்கள். ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழித்து விடுவார்கள்; நடிக்கமாட்டார்கள்.

கதாநாயக நடிகைகள் எல்லாருமே தங்கள் வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்றால் நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பேட்டி யெல்லாம் கொடுப்பார்கள். ஆனால்காமெடியே வாழ்க்கையாக உள்ள, சிரிக்க வைப்பதையே தொழிலாக உள்ள ஒரு காமெடியன் கூட நடிக்க மட்டும் வர மாட்டார்கள்.

ஆனால் என் படத்தில் என் னுடன் நடிக்க சோனியா அகர்வால் சம்மதித்தார் .அதற்காக  சோனியா அகர்வாலுக்கு நன்றி. அது மட்டுமல்ல அவருடன் நடிக்கும் போது அவரது இடுப்பை நான் கிள்ளுவது போன்ற காட்சி இருந்தது.அப்படி நடிக்க நான் தயங்கினேன். கூச்சப்பட்டேன். ஆனால்  சோனியா அகர்வால்  கூச்சப்பட வேண்டாம் கிள்ளுங்க நடிப்பு தானே என்றார்.தைரியம்கொடுத்தார்.’இனி இது உங்க ஏரியா தாராளமாக கிள்ளுங்க’ என்றார். அப்புறம் என்ன?அது போதாதா எனக்கு?
தமிழனுக்கு கோடு போட்டாலே ரோடு போடத் தெரியாதா என்ன? பிறகு நானும்  புகுந்து விளையாடி விட்டேன்.

திரையுலகில் மதிக்கத் தகுந்தவர்கள்  கௌரவிக்க வேண்டியவர்கள் என்றால் அவர்கள் எழுத்தாளர்கள்தான். கௌரவப் படுத்த வேண்டியவர்கள், பணம் சம்பாதிக்க வேண்டியவர்கள் அவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு உரிய கௌரவம் கிடைப்பதில்லை. குறைந்த சம்பளமே கிடைக்கிறது.

இதற்கு வசனம் எழுதியுள்ளவர் ராஜகோபால் .இது அவரது100 வது படம் என்றார். என் படம் அப்படி அமைந்ததில் மகிழ்ச்சி.

கவுண்டமணி, செந்தில் போன்ற,என் போன்ற  எவ்வளவோ பேருக்கு நகைச்சுவைப் பகுதிகளுக்கு எழுதியுள்ளார்.

இந்தப் படத்தில் மூத்த நடிகை ஷீலா நடித்துள்ளார்.மனோபாலா, சிங்கமுத்து,நான் கடவுள் ராஜேந்திரன்,  இமான், பாண்டு, டி.பி.கஜேந்திரன் போன்ற பல அண்ணன்களும் நடித்து இருக்கிறார்கள்.இப்படம் எல்லாருக்கும் பிடிக்கும்.” இவ்வாறு விவேக் பேசினார்.

இசையமைப்பாளர் அனிருத் பேசும்போது ” நான் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். அதற்கு காரணங்கள் இரண்டு உண்டு. முதலில் அந்தப் பாடல் பிடித்திருந்தது. இரண்டாவது விவேக் சார் எனக்குப் பிடித்தவர்.

நான் முதலில் இசையமைத்த கொலவெறி பாடலுக்கு யார்யாரோ பாராட்டினார்கள். அமிதாப் முதல் பிரதமர்வரை அந்தப் பாடல் சென்றடைந்தது. ஆனால் திரையுலகிலிருந்து முதலில் வந்த வாழ்த்து விவேக் சாரிடமிருந்துதான். அதுவும் ஒரு டிவி நிகழ்ச்சியிலிருந்த படி எனக்கு போன் செய்து பாராட்டினார். அதை நான் என்றுமே மறக்க மாட்டேன். அந்த அன்புக்காகத்தான் இன்று இங்கு வந்திருக்கிறேன்.”

விழாவில் சிவகார்த்திகேயன் பேசும் போது.” விவேக் சாருக்கு நான் பள்ளிவயது பருவத்திலிருந்து பரம ரசிகன்.அவர் படம் பார்த்து வளர்ந்தவன் நான்.  அவரது காமெடிக் காட்சிகளை ஒன்று விடாமல் வீட்டில் போட்டுப் பார்ப்பேன். விவாதம் எல்லாம் வரும் . அப்போது அவர் ஒரு காட்சியிலாவது கடவுள் இல்லை என்று கூறியிருக்கிறாரா இல்லையே என் பேன். அவரது பாதிப்பு நிச்சயம் எனக்குள் இருக்கும். அது தவிர்க்க முடியாதது.அந்த அளவுக்கு என்னைப்பாதித்தவர் அவர்.

அவரது சீர்திருத்தக் கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. அவரைப் போலவே எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு.ஆனால்  மூட நம்பிக்கை இல்லை.

கல்லூரிக் காலங்களில் மாணவிகள் அவரை ஒரு கதாநாயகன் போலப்பார்ப்பார்கள்.அவர் மீது அவ்வளவு அபிமானம் வைத்து இருப்பார்கள்.  ‘குஷி’ படத்தில் அவர் ஓபனிங் காட்சியில் வந்த போது கைதட்டினார்கள்.திருச்சி ராஜா கலையரங்கத்தில் 1350 பேரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.அப்போது அதில் நானும் ஒருவன். எப்படியும்  என் காமெடிக்காட்சிகளில் அவரது பாதிப்பு நிச்சயம் இருக்கும்.உள்ளுக்குள் அதுதானே இருக்கிறது.மான் கராத்தே’ படத்தில் வரும் அந்த ‘ரத்தி அக்னி ஹோத்ரி’ டின்பீர் வசனம் எல்லாம் பாராட்டப்படுகிறது.ஆனால் அது எப்போதோ அவர் பேசியதை நான் காப்பியடித்ததுதான். அவர் விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ” இவ்வாறு சிவகார்த்தி கேயன் பேசினார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் எஸ்.தாணு, படத்தை இயக்கிய எம். சந்திரமோஹன், ஒளிப்பதிவாளர் கே:எஸ். செல்வராஜ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, நடிகைகள் சோனியா அகர்வால், ஷீலா, ஆர்த்தி, நடிகர்கள் சாமிநாதன், சிங்கமுத்து, கதைவசன கர்த்தா ராஜகோபால், நடன இயக்குநர் பாலாஜி ஆகியோரும் பேசினார்கள். முன்னதாக தயாரிப்பாளர் எஸ். சஜீவ் அனைவரையும் வரவேற்றார். விஜய்டிவி ஈரோடு மகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

எனது 17 படங்களுக்கும் U சர்டிபிகேட் தான் வி.சேகர்

ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. அடிதடி வெட்டுகுத்து, இசைபின்னணி, காதல், காமெடி என ஒவொருவரும் ஒரு பாணியை நூல் பிடித்தாற் போல் பிடித்து வெற்றி வாகை சூடியவர்கள் பலர் !

அதில் குடும்ப கதை மட்டுமே தன் பாணி என்று படமெடுத்து அத்தனையிலும் வெற்றிவாகை சூடியவர் இயக்குனர் வி.சேகர்.

அவரிடம் பேசினோம்….

குடும்பக் கதைகள் மட்டும்தான் உங்கள் பாலிசியா ?

நாம் எல்லோரும் குடும்பதிற்காகத் தான் வாழ்கிறோம்..குடும்பத்திற்காக தான் உழைக்கிறோம்! எதிர்கால சிந்தனை கூட கும்பதிற்காக மட்டுமே யோசிக்கிறோம்.

ஓவொரு குடும்பத்தில் நடக்கிற விஷயங்களை பதிவு செய்கிற போது அது தங்கள் வீட்டு நிகழ்வு போல் நினைத்து என்படங்களை வெற்றி பெற செய்தார்கள்.

இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் சரவண பொய்கை பற்றி ?

இதுவரை குடும்ப படங்களை மட்டுமே இயக்கிய நான் என் மகனை வைத்து எடுத்திருக்கும் காதல் கதைதான் “ சரவண பொய்கை “

இன்றைய இளைய தலைமுறையினர் ரசிக்கும் விதமாக எடுத்திருக்கிறோம்!

இதுவரை திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பாக நான் இயக்கிய 17 படங்களுக்குமே “U “ சர்டிபிகேட் படங்கள் தான்.

சரவண பொய்கை படத்திற்கு ஒரு கட் கூட இல்லாமல்  U சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.

கார்ல்மார்க்ஸ், அருந்ததி, விவேக், கருணாஸ், கோவைசரளா, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் காதல், காமெடி படமாக உருவாகி உள்ளது.

விரைவில் படம் திரைக்கு வர உள்ளது என்றார் வி.சேகர்.