நடிகர் விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் காதல் முறிவு?

நடிகர் விஷாலும் நடிகை வரலட்சுமியும் பல ஆண்டுகளாகக் காதலித்துவருகிறார்கள். இதை இருவரும் நேரடியாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இது தொடர்பான செய்திகளுக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததில்லை.

சமீபத்தில், வார இதழ் ஒன்றுக்கு விஷால் அளித்த பேட்டியில், வரலட்சுமியுடன் காதல். கூடிய சீக்கிரமே கல்யாணம்னு சொல்றாங்க. அது எப்போது? என்கிற கேள்விக்கு அவர் அளித்த பதில்: ‘வரலட்சுமியும் நானும் சிறிய வயதிலிருந்தே நண்பர்கள். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என் திருமணம்தான். ஆமாம், 2018-ம் ஆண்டு ஜனவரி 14, என் திருமணம். இப்போதே கார்த்தியிடம் சொல்லி பதிவு செய்துவிட்டேன்.’ என்று கூறியிருந்தார். இதனையடுத்து விஷால் – வரலட்சுமி திருமணம் குறித்த உறுதியான தகவலாக அது எண்ணப்பட்டது.

இந்நிலையில் காதல் முறிவு குறித்து நடிகை வரலட்சுமி ட்விட்டரில் ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: காதலர்கள் பிரிவது இதைவிட மோசமாக இருக்காது. ஒரு நபர் 7 ஆண்டுக் கால காதலை தன்னுடைய மேலாளரின் வழியாக முறித்துக்கொண்டுள்ளார். உண்மையான காதல் எங்கே போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனை முன்வைத்து விஷால் – வரலட்சுமி காதல் முறிவு என்று சமூக வலைத்தளத்தில் பலரும் பேசிவருகிறார்கள்.

நாடக நடிகருக்கு சினிமா வாய்ப்பு கொடுத்த விஷால்!

விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘கத்தி சண்டை’ படத்தில் ஆரணி அருகே உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் குமணன், என்பவர் விஷாலின் நண்பராக நடித்து வருகிறார்.

இவரது கதாபாத்திரம் படத்தின் முக்கியமான வேடமாகும்.

அடிப்படையில் நாடக நடிகரான வாசுதேவன் குமணன், பல ஆண்டுகளாக சினிமா வாய்ப்புக்காக அலைந்தும் எந்தவித பிரயோஜனமும் இல்லை. இதற்கிடையில் நடிகர் சங்க தேர்தலின் போது, விஷாலின் தலைமையிலான பாண்டவர் அணியின் வெற்றிக்காக இவர் பெரும் பங்காற்றினார். அதன் மூலம் விஷாலுடன் நட்பு ஏற்பட்டு, தற்போது சினிமா வாய்ப்பையும் பெற்று விட்டார். இவருடன், நடிகர் சங்கத்தைச் சேர்ந்த ஜெரால்ட் என்பவருக்கும் ‘கத்தி சண்டை’ படத்தில் விஷால் வாய்ப்பு வழங்கியுள்ளார்.

நாடகத்தில் நடித்து வந்த தனக்கு நட்பின் அடிப்படையில் முதன் முறையாக திரைப்படத்தில் நடிக்க வாய்பளித்த நடிகர் சங்க பொது செயலாளர் விஷாலுக்கு வாசுதேவன் தன்னுடைய நன்றிகளை தெரிவித்திருக்கிறார்.

குட்டி குட்டி என்று தமன்னாவை கொஞ்சும் விஷால்

விஷால் – தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ‘கத்தி சண்டை’ படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ். ஆனந்தகோபால் தயாரித்து வர, சுராஜ் இயக்குகிறார். வடிவேலு, சூரி இருவரும் காமெடி வேடத்தில் நடிக்க, இவர்களுடன் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு, தருண் அரோரா, ஜெயப்பிரகாஷ், நிரோஷா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றான விஷால் – தமன்னா இடம்பெற்ற “குட்டி குட்டி…” என்று தொடங்கும் பாடலுக்கு ராதிகா நடனம் அமைத்துள்ளார். ஜார்ஜியாவில் சமீபத்தில் படமாக்கப்பட்ட இப்படால் முழுவதும் விஷாலுக்கு குட்டியாக இருக்கும் தமன்னாவை அவர் குட்டி குட்டி என்றே அழைத்து வந்தாராம்.

காமெடி, ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தை வரும் தீபாவளியன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

பிறந்த நாள் அன்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஷால்!

நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு “ சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் மகளிர் அணி “ சார்பில் மகளிர் அணி தலைவி மஞ்சுளா தலைமையில் மாபெரும் இரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதை நடிகர் விஷால் துவக்கி வைத்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடிகர் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட புரட்சி தளபதி விஷால் இளைஞர் அணி சார்பில் “ மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா “ இன்று நடைபெற்றது. இவ்விழாவை துவக்கி வைத்து ஏழை எளிய மக்களுக்கு நடிகர் விஷால் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவிற்கான ஏற்ப்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ப. கண்ணன் செய்திருந்தார்.

இன்று நடைபெற்ற நடிகர் விஷாலின் பிறந்தநாள் பிறந்த நாள் விழாக்கள் அனைத்தையும் மேலாளர் எம்.எஸ். முருகராஜ் , புரட்சி தளபதி விஷால் ரசிகர் நற்பணி மன்ற மாநில தலைவர் சி. ஜெய சீலன் , செயலாளர் ஹரி , நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்ப்பாடு செய்து இருந்தனர்.

நடிகர் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாவட்ட புரட்சி நடிகர் தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவை துவக்கி வைத்து ஏழை எளிய மக்களுக்கு நடிகர் விஷால் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விழாவிற்கான ஏற்ப்பாடுகளை சென்னை மாவட்ட தலைவர் எம். ராபர்ட் செய்திருந்தார்.

நடிகர் சங்கம் மீண்டும் திருட்டு விசிடி வேட்டை

நடிகர் சங்கம் மீண்டும் திருட்டு வி.சி.டி வேட்டை, கும்பகோணம் “Can TV” லோக்கல் சேனலில்

சமீபகாலங்களில் தென்னிந்திய திரைப்படங்கள் அனைத்துமே திருட்டு வி.சி.டி, மற்றும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக ஒளிபரப்புவதும் லோக்கல் கேபிள் டீவி மற்றும் ஆமினி பேருந்துகளில் அனுமதியின்றி ஒளிபரப்படுவதால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவது பெரிதும் பாதிக்கப்படுவதும், சினிமாவை நம்பி முதலீடு செய்பவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவது மிகப்பெரிய சோக கதையாக நடந்து கொண்டிருக்கிறது. அதை தடுக்கும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சட்டபூர்வமாக நடவடிக்கைள் எடுத்து வருகிறது, அதற்காக தமிழகமெங்கும் பல கண்காணிப்பு குழுக்களை அமைத்து அதன்மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இந்த தேடுதல் வேட்டையின் போது கும்பகோணம் “Can TV” லோக்கல் சேனலில் ரெட்ஜெயண்ட தயாரித்த மனிதன் திரைப்படத்தை ஒளிபரப்பபட்டது, இதுகுறித்து நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் புகாரின் பேரில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு கண் காணிப்பாளர். திருமதி. ஜெயலட்சுமி IPS. உத்திரவு படி காவல் ஆய்வாளர்கள். திரு செந்தில். திருமதி. சித்ரா, நடிகர் சங்க திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர். சதீஷ்குமார் ஆகியோர் “Can TV” உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் கைது செய்து கும்பகோணம் சிறையில் அடைத்தனர். மேற்கண்ட செய்தியை நடிகர் சங்கம் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு: நடிகர் விஷாலின் உருவபொம்மை எரிப்பு

விலங்குகள் நலை அமைப்பு சார்பில் சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகர் விஷால், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது, என்று கருத்து தெரிவித்தார்.

தற்போது, அவரது கருத்துக்கு எதிப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு: நடிகர் விஷாலின் உருவபொம்மை எரிப்பு

ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு: நடிகர் விஷாலின் உருவபொம்மை எரிப்பு

இதற்கிடையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகத்தினர் இன்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நடிகர் விஷாலின் உருவ பொம்மையை தீ வைத்து எரிக்க முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர்.

இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ராஜேஷ் என்பவர் கூறுகையில், நடிகர் விஷால் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் விஷாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். விஷால் படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

தஞ்சாவூரில் விவசாயம் செய்யப் போகும் விஷால்

தஞ்சாவூரில் சொந்தமாக நிலம் வாங்கி, அதில் விவசாயம் செய்யப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கத்தில் நெல் திருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் விஷால் பேசியதாவது:

விதை விதைக்கும் பணிதான் எனக்கும் பிடிக்கும். சென்னையில் நாசர், கருணாஸ், கார்த்தி, நான் ஆகியோர் சேர்ந்து ஒரு அணிக்கான விதையை விதைத்தோம். இன்று அது பெரிதாக உருவாகி தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற ஒன்றையே நடத்திக்காட்டும் அளவில் வளர்ந்துள்ளது.

விவசாயிகளுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு பேச வேண்டுமானால், நானும் விவசாயியாக மாறவேண்டும். விரைவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் என்னுடைய உழைப்பில் உருவான பணத்திலிருந்து நிலம் வாங்கி விவசாயம் செய்ய உள்ளேன். என்னுடைய நீண்ட நாள் விருப்பமும் அதுதான்.

தஞ்சாவூரில் விவசாயம் செய்யப் போகும் விஷால்

தஞ்சாவூரில் விவசாயம் செய்யப் போகும் விஷால்

எனது பள்ளிக்காலத்தில் படித்த இயற்பியல், வேதியியல் பாடம் எல்லாம் மறந்துவிட்டன. ஆனால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம் என்று படித்தது மட்டும் இன்னும் மறக்காமல் உள்ளது. அந்த விவசாயத்தை பொறியியல் துறை, மருத்துவத்துறை போன்ற விவசாயத்தையும் ஒரு துறையாக மாற்றி சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை வர வேண்டும். சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பிரச்சனை இருக்கவே செய்கிறது. கடன் உள்ளிட்ட எந்த பிரச்சனை வந்தாலும் தற்கொலை என்ற முடிவுக்கு செல்லக்கூடாது. அது நிரந்தர தீர்வும் அல்ல.

Visit Chennaivision for More Tamil Cinema News

ஒரு லட்சம் திருட்டு டிவிடிக்கள் பறிமுதல் – நடிகர் சங்கம் அதிரடி

ஒரு லட்சம் திருட்டு டிவிடிக்கள் பறிமுதல் – நடிகர் சங்கம் அதிரடி

ஒரு லட்சம் திருட்டு டிவிடிக்கள் பறிமுதல் - நடிகர் சங்கம் அதிரடி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷால் அவர்களின் புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் திருட்டு வி.சி.டி விற்கப்படும் கடையை போலீசார் சோதனை இட்டு, அக்கடையில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீடியோ பைரசி sup. Of Police ஜெயலக்ஷ்மி ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் மதுரையில் உள்ள பாலரங்கபுரம் என்னும் பகுதியில் உள்ள குடோனில் இருந்து இந்த கும்பலை போலீசார் பிடித்தனர் அத்துடன் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள கணினி இயந்திரங்களும் மற்றும் புதிய படங்களை பதிவு செய்துள்ள குறும்தகுடுகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்தியன் எலெக்ட்ரிகல்ஸ் என்னும் கடைக்கு மேலே ராம்சந்த லால் சேட்டு என்பவருடைய  குடோனில் 20 பேர் திருட்டு டி.வி.டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கே இருந்து தர்மபுரி , சேலம் , கரூர் , ஈரோடு உள்ளிட்ட  பத்து மாவட்டத்துக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் தலைமையில் பொதுசெயலாளர் விஷால் அவர்களின் புகாரின் அடிப்படையில் அங்குள்ள திருட்டு டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. Sup. Of Police ஜெய லக்ஷ்மி ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் sup.of police Chennai  நீதி ராஜன் அவர்களின் முன்னிலையில் திருட்டு டி.வி.டி கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் கிச்சாபாளையம் பகுதில் இயங்கி வந்த திருட்டு டி.வி.டி தயாரிக்கும் இடமும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள்  ரமணா மற்றும் நந்தா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Visit Chennaivision for More Tamil Cinema News

பேருந்து உரிமையாளர்களிடம் வேண்டுகோள் வைத்த விஷால்

பேருந்து உரிமையாளர்களிடம் வேண்டுகோள் வைத்த விஷால்

பேருந்து உரிமையாளர்களிடம் வேண்டுகோள் வைத்த விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அதன் பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் தனியார் பேருந்து (ஆம்னி பஸ்) உரிமையாளர்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் மூலமாக வேண்டுகோள் கடிதம் ஒன்று விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

பல கோடி முதலீடு செய்து தயாரிக்கப்படும் திரைப்படம் தியேட்டரில் ரசிகர்கள் ரசித்தால் மட்டுமே போட்ட முதலீட்டை திரும்ப எடுக்க முடியும்! இதில் தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் திருட்டு விசிடி ஆகியவற்றின் பாதிப்புகளை மீறி வெற்றி பெற போராட வேண்டிய நிலை, இது திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினர்களுக்கும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் தனியார் பேருந்துகளில் சட்டவிரோதமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது சமீபகாலங்களில் சர்வ சாதாரணமாகி விட்டது. அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களை மீறிபேருந்தை ஓட்டுவதும், பயண சீட்டு எடுக்காமல் பயணம் செய்வதும் எப்படி சட்டவிரோதமானதோ, அது போலவே திருட்டு விசிடியை பஸ்களில் ஒளிபரப்புவதும் சட்டவிரோதமானதே!

அதனால், திரை உலகை காப்பாற்ற நாங்கள் பல நிலைகளில் போராடி வருகிறோம்! அதற்காக தமிழகமெங்கும் எங்கள் நடிகர்களின் ரசிகர் மன்றங்களின் மூலமாக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை தங்கள் கவனத்தை மீறி ஓட்டுனர்களால் இந்த தவறு நடந்திருந்தால் இனிமேல் இது நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம். இதற்கு தங்களுடைய முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..

இவ்வாறு அறிக்கையில் விஷால் தெரிவித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

ராதாரவியுடன் நடித்தது மறக்க முடியாதது! – விஷால்

ராதாரவியுடன் நடித்தது மறக்க முடியாதது! – விஷால்

ராதாரவியுடன் நடித்தது மறக்க முடியாதது! - விஷால்

ராதாரவியுடன் நடித்தது மறக்க முடியாதது! – விஷால்

ராதாரவியுடன் நடித்தது மறக்க முடியாதது என்று விஷால் கூறினார்.

விஷால்- ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் ‘மருது’ .இப்படத்தை  ‘குட்டிப்புலி’ ,’கொம்பன்’ படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ளார்.   கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என். அன்புசெழியன் தயாரித்துள்ளார்..

இப்படத்தில் தென்னிந்திய நடிகர்சங்கத் தேர்தலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த ராதாரவியும் விஷாலும் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.

‘மருது’ படம் பற்றி விஷால் கூறும் போது, ராதாரவியுடன்  இணைந்து நடித்தது உள்பட பலவற்றையும் பகிர்ந்து கொண்டார்.

இனி விஷாலுடன் பேசுவோம்!

‘மருது’ படத்தின் கதை?

‘அவன் இவன்’ படத்திற்குப் பிறகு நல்லதொரு கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.அப்படி ஒரு படமாக அமைந்த கதைதான் ‘மருது. என் முந்தைய கிராமத்துப் படங்கள் ‘தாமிரபரணி’ ,’சண்டக்கோழி’ படங்களில்  கூட நகரம் சார்ந்த சிலகாட்சிகள் வரும். வெளிநாட்டு பாடல் காட்சிகள் வரும்.இதில் அப்படி இல்லை. முழுதுமே கிராமம்தான். முத்தையா இந்தக் கதையைச் சொன்ன போதே கிராமம், காட்சிகள், என் தோற்றம், உடல்மொழி எல்லாமே மாறுபட்டதாக இருக்கும் என்கிற நம்பிக்கை வந்தது.

இது ஒரு பாட்டி பேரன் பற்றிய உணர்வு பூர்வமான கதை என்றாலும்  ஒரு முழுமையான கமர்ஷியல் படத்துக்குரிய எல்லாமும் இருக்கும் .

படப்பிடிப்பு இடங்கள்?

இந்தக் கதைக்கு தேவைப்பட்டதாலும் இயக்குநரின் ஊர் என்பதாலும் ராஜபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

ராஜபாளையம் ஊர் பற்றி இண்டு இடுக்கு ,சந்து பொந்து எல்லாமும் முத்தையாவுக்குத் தெரிந்து இருந்ததால் ஒரு பிலிம் சிட்டியைப் போல அந்த ஊரை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தினார்.

அந்த ஊர் மண், மக்கள் எல்லாமே எனக்குப் புது அனுபவமாகவும் மறக்க முடியாததாகவும் இருந்தது. அந்த ஊரில் 72 நாட்கள் வாழ்ந்தது அப்பப்பா மறக்க முடியாதது அவ்வூர்  மக்கள் எங்கள் மீது காட்டிய அன்பும் பாசமும் ஆச்சரியப்பட வைத்தது.

ஒரு காட்சியில் நான் நடித்த போது எனக்குக் காலில் அடிபட்டு விட்டது. ஒரு அம்மா பதறிப் போய் என் காலை தன் மடியில் தூக்கி வைத்து நாட்டு மருந்துவ சிகிச்சை செய்தார். என் தரப்பினர் அதை வேண்டாம் ஏதாவது ஸ்பிரே அடிக்கலாம் என்ற போது ‘எங்க புள்ளைக்கு என்ன போடணும்னு எங்களுக்குத் தெரியும்’ என்று உரிமையோடு கூறியது நெகிழ்ச்சி அனுபவம்.

பொதுவாகப் படப்பிடிப்பு நடந்து முடிந்து வந்து விடடால் மீண்டும் அங்கு போக ஆர்வம் வருவதில்லை. ஆனால் அங்கு ஒரு பந்தம் ஏற்பட்டு விட்டது  அதனால்தான் அங்கு  ஏதாவது செய்யத்தோன்றியது கழிப்பறை இல்லாமல் சிரமப்பட்ட மக்களுக்குக் கழிப்பறைகள்  கட்ட ஏற்பாடு செய்தோம் .மீண்டும் அங்கே போக ஆசையாக இருக்கிறது. ராஜபாளையம் என்கிற ஊர் நாய்களுக்குப் புகழ்பெற்றது என்பார்கள். அழகான பெண்களுக்கும் ராஜபாளையம் பெயர் பெற்றது என்பேன். அங்கு அழகழகான பெண்களைக் கண்டு வியந்தேன். ரசித்தேன்.

உடன் நடித்தவர்கள் பற்றி?

கதாநாயகி ஸ்ரீதிவ்யா. என்னுடன் அவர் நடிக்கும் முதல் படம் ‘மருது’ தான்.  அவருக்குப் பொருத்தமான வேடம் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

என் படங்களில் என் பாத்திரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதைப் போலவே எனக்கு எதிரியாக வரும் வில்லன் பாத்திரமும் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்புவேன்.

இதில் வில்லனாக வரும் ஆர்கே சுரேஷ் ஒரு மனுஷனே கிடையாது. அவர் ஒரு பேய், ராட்சசன் என்று கூறலாம். அந்த அளவுக்கு வெளுத்து வாங்கியிருக்கிறார். எங்கள் இருவர் சம்பந்தப் பட்ட காட்சிகள் நேஷனல் ஜியாகிரபி போல மிரட்டும்.

படத்தில் கிராமத்துப் பாட்டியாக மலையாள நடிகை லீலா நடித்திருக்கிறார். அவருக்கு இதுதான் தமிழில் முதல்படம். பிரமாதப் படுத்தியிருக்கிறார். நான்தான் கதாநாயகன், ஸ்ரீதிவ்யாதான் கதாநாயகி என்றாலும் பாட்டி பாத்திரம்தான் படத்தின் உயிர் என்று கூறுவேன்.

ராதாரவி அண்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சூரியுடன் நான் நடித்துள்ள 4வது படம் இது. சூரி இதில் மாறுபட்ட பாத்திரத்தில் வருகிறார் இயக்குநர் மாரிமுத்து கதாநாயகியின் அப்பாவாக வருகிறார். நமோ நாராயணன் ,அருள்தாஸ்  போன்றோரும் நடித்துள்ளார்கள்.

ராதாரவியுடன் நடித்தது பற்றி?

முத்தையா என்னிடம் கதை சொன்ன போது அந்தப் பாத்திரத்துக்கு ராதாரவி அண்ணன் நடித்தால் நன்றாக இருக்கும்  உங்களுக்கு எப்படி என்று தயங்கியபடி கேட்டார். இதை ஏன்  கேட்கத் தயக்கம்? யார் தேவையோ அவர்களை நடிக்க வையுங்கள் தயங்காதீர்கள் நடிக்கட்டுமே ,என்றேன். இதுவரை நாங்கள் இணைந்து நடித்ததில்லை நடிக்கட்டுமே என்றேன்.

நடிகர் சங்க தேர்தல் பிரச்சினையில் அவர் எதிர் தரப்பில் நின்றார் என்று பகைமை பாராட்டுவதும் அவர் முகத்தில் விழிக்கவே மாட்டேன் என்பதும் முட்டாள்தணம் என்பேன்.நடிகர் சங்க தேர்தலில் அவர் ஒரு கோணத்தில் நின்றார்,நான் ஒரு கோணத்தில் நின்றேன் அவ்வளவுதான்.

அவர் என் படத்தில் நடிப்பது பற்றி படக்குழுவுக்கு மட்டுமல்ல வேடிக்கை பார்க்க வந்த மக்களுக்கும் கூட எதிர்பார்ப்பு பரபரப்பு இருந்தது.. நாளைக்கு வருகிறார். இன்றைக்கு வருகிறார் என்ன நடக்கப்போகிறதோ என்று  எதிரிகளைப் போல விறுவிறுப்பு காட்டினார்கள். ராதாரவி அண்ணன் வந்தார் நடித்தார். அவர் சிறந்த அனுபவம் உள்ள நடிகர்.

சங்கம் வேறு ; நடிப்பு வேறு. சங்கம் வேறு;தொழில்வேறு இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. ராதாரவி அண்ணன் வந்தார் என்னைக் கட்டிப் பிடித்தார். ‘இப்போது நிறைய தொடர்ச்சியாக படங்கள் நடிக்கிறேன் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.நடிகர் சங்கத்துக்கு எந்த உதவி தேவைப் பட்டாலும் சொல்லுப்பா செய்றேன் ‘என்றார் அவர் ஒரு மூத்த நடிகர். அவர் மரியாதைக் குரியவர் என்பதை என்றும் நான் மறந்ததில்லை.

தொழில்நுட்பக் குழுவினர் பற்றி..?

முத்தையா உணர்வு பூர்வமாக கதை சொல்வதில் திறமையானவர். அவர் சொன்ன கதை பிடித்து விட்டது. இந்தப் படத்தில் அவர் சொன்னதை மட்டுமே செய்தேன். அவர் எழுதும் வசனம் சக்தி மிக்கதாக இருக்கும். அழுத்தமாக இருக்கும். .இன்று கிராமம்  பற்றி சினிமா எடுக்க ஆளில்லை. அவர் கிராமம் பட்டுமே தனக்குத் தெரியும் என்பவர் அவர் வாழ்வில் நடந்த பல அனுபவங்களை இதில் வைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் முத்தையாவுக்கு ஏற்ற பெண்பாட்டி போல இருப்பவர்.அவர்களுக்குள் அவ்வளவு பொருத்தம்.இமானின் இசையில் தொடர்ந்து எனக்கு ஹிட் பாடல்கள் அமைந்து வருகின்றன. இதிலும் அப்படி உள்ளது

.’ மருது’  படம் மே 20 -ல் வெளியாகிறது. இது நிச்சயமாக எனக்கு திருப்தியான படமாக இருக்கும்.பார்ப்பவர்களுக்கும் திருப்தியான  மகிழ்ச்சியூட்டும் படமாக இருக்கும்.

Visit Chennaivision for More Tamil Cinema News