விஜயகாந்தை பின்னுக்கு தள்ளிய திமுக வேட்பாளர்

விஜயகாந்தை பின்னுக்கு தள்ளிய திமுக வேட்பாளர்

விஜயகாந்தை பின்னுக்கு தள்ளிய திமுக வேட்பாளர்

உளூந்தூர்பேட்டை,மே 19 (டி.என்.எஸ்) தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முதல் கட்டம் முடிவடைந்துள்ளது. இதில் அதிமுக 125 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக 80 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மக்கள் நலக் கூட்டணி தேமுதிக கூட்டணி இதுவரை ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. மேலும், மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், அவர் போட்டியிட்ட உளூந்தூர்பேட்டை தொகுதியில் காலை முதல் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் இரண்டாம் இடத்தில் இருந்த விஜயகாந்த் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜி.ஆர். வசந்தவேல் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News