பைரவா தமிழ் படத்தின் விமர்சனம்

விஜயின் வழக்கமான பாணியாக இருந்தாலும், அவரது ரசிகர்களுக்கான பொங்கல் விருந்தாகவே உள்ளது ‘பைரவா’.

லோன் வாங்கிட்டு ராவடி செய்யும் ரவுடிகளிடம் வசூல் செய்வதில் கில்லியான பேங்க் கலெக்‌ஷன் ஏஜெண்ட் விஜய், திருமண நிகழ்வு ஒன்றில் கீர்த்தி சுரேஷை கண்டதும் காதல் கொள்கிறார். கீர்த்தி சுரேஷிடம் தனது காதலை சொல்வதற்காக முயற்சிக்கும் விஜய், கீர்த்தி சுரேஷை சுற்றி இருக்கும் ஆபத்தையும், அதன் பின்னணி மற்றும் அதற்கு காரணமானவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்கிறார்.

கீர்த்தி சுரேஷிடம் காதலை சொல்வதுடன், அவரது ஆபத்துக்கு காரணமானவர்களை களை எடுக்க அவருடன் திருநெல்வேலிக்கு செல்லும் விஜய், அவர்களை எப்படி வீழ்த்தினார், அவர்களுக்கும் கீர்த்தி சுரேஷுக்கு என்ன சம்மந்தம், என்பது தான் ‘பைரவா’ படத்தின் மீதிக் கதை.

தனது ரசிகர்களை திருப்தி படுத்துவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தும் விஜய், இந்த படத்தில் மாணவர்களையும் திருப்திப் படுத்துகிறார்.

பல ஹீரோக்களால் சில விஷயங்கள் மட்டுமே செய்ய முடியும், சில ஹீரோக்களால் மட்டுமே பல விஷயங்கள் செய்ய முடியும். இதில், இரண்டாம் ரகத்தை சேர்ந்தவரான விஜய், அவருக்கே உரித்தான விஷயங்களை ரசிக்கும்படி செய்திருக்கிறார். அறிமுக காட்சியில் கிரிக்கெட் பேட் வைத்து வில்லன்களை பதம் பார்ப்பது, கல்யாண நிகழ்வில் வரும் பாடல், அதில் விஜய் கொடுக்கும் எக்ஸ்பிரஷன், வில்லன்களிடம் பேசும் வசனங்கள், மற்றும் சில தத்துவ வசனங்கள், என்று அனைத்தையுமே ரசிக்கும்படியாக செய்திருக்கிறார்.

எப்போதுமே இளமையாக இருக்கும் விஜய், விக்குடன் நடித்தது இந்த படத்திற்கு பெரும் பலவீனம் தான். சில காட்சிகளில் அந்த விக் முடியும் அழகாக தெரிந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் தெலுங்கு நடிகர்களை நினைவுப் படுத்தி விடுகிறது.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இருந்தாலும், திரைக்கதையில் ஓரம் கட்டப்பட்டுள்ள கீர்த்தி சுரேஷ், விஜயுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுவதற்கு ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். எப்படியோ தனது வழக்கமான கண் அடிக்கும் யுக்தியை பயன்படுத்தியும், சிரித்துமே சமாளித்துள்ளவர், அதே ரெகுலர் நடிப்பையே வெளிக்காட்டியிருக்கிறார்.

மெயின் வில்லனாக ஜெகபதிபாபு, அவருக்கு அடுத்தபடியாக டேனியல் பாலாஜி. இருவரும் திருநெல்வேலி ரவுடிகளாக காட்டப்பட்டு இருந்தாலும், ஜெகபதிபாபுக்கு சுத்தமாக பொருந்தவில்லை. அவரது பேச்சி மற்றும் நடிப்பு இரண்டிலுமே நேட்டிவிட்டியும் இல்ல வில்லத்தனமும் இல்ல. டேனியல் பாலாஜி ஓரளவு மட்டுமே. தம்பி ராமையா பெயருக்கு மட்டுமே இருந்தாலும், சதிஷின் கவுண்டர்களும், அதற்கு விஜய் கொடுக்கும் பதிலும் சிரிக்க வைக்கிறது.

சந்தோஷ் நாராயணின் பாடல்கள் ரசிக்கும்படியாக இருந்தாலும், பின்னணி இசை மற்றும் தீம் சாங் எடுபடவில்லை. சுகுமாரின் ஒளிப்பதிவும், அனல் அரசின் ஆக்‌ஷன் காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.

விஜயின் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி சினிமா ஆடியன்ஸுக்கும் பிடிக்கும் விதத்தில், ஆரம்ப திரைக்கதை அமைந்தாலும், இரண்டாம் பாதியில் வரும் திரைக்கதையில் எந்த வித சஸ்பென்ஸும், எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் போவது படத்தை சற்று பலவீனமடையச் செய்கிறது. இருப்பினும், விஜய் தனது பர்பாமன்ஸ் மற்றும் வசனங்கள் மூலம் அந்த இடங்களில் ரசிகர்களை எண்டெர்டெயின் பண்ணிவிடுகிறார்.

ஜெகதிபாபு பிரதமரை கொலை செய்யப் போவதாக சொல்லி, அவரை போலீஸிடம் விஜய் மாட்டிவிடுவது, மிகப்பெரிய லாஜிக் மீறல். கமர்ஷியல் படங்களில் லாஜிக் பார்க்க கூடாது தான், அதற்காக, சமுதாயத்தில் மரியாதை உள்ள ஒரு மனிதர், பிரதமரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார், என்று போன் மூலம் வரும் தகவலை வைத்து அவரை போலீஸ் கைது செய்வது என்பது, பானைக்குள் யானையை அடைத்து வைப்பது போல உள்ளது. அதேபோல், படத்தின் இரண்டாம் பாகத்தின் நீளமும் ரசிகர்களை சற்று சோர்வடைய செய்துவிடுகிறது.

இதுபோன்ற சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத நகைச்சுவைக் காட்சிகள், பஞ்ச் வசனங்கள் இருந்தாலும், சில உச்சு கொட்ட வைக்கும் தத்து வசனங்கள், மாணவர்கள் மற்றும் குடும்பம் பற்றிய வசனங்கள் என்று படத்தை பாராட்டுவதற்கான அம்ஷங்களும் உண்டு.

மொத்தத்தில், ‘பைரவா’ குடும்பத்தோடு பார்க்ககூடிய மாஸ் கமர்ஷியல் படமாக உள்ளது.

விஜய்யுடன் குழந்தை நட்சத்திரம் மோனிகா சிவா

விஜய்யுடன் குழந்தை நட்சத்திரம் மோனிகா சிவா

இன்றைய குழந்தை நட்சத்திரங்கள் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் என்பது உண்மை !

கமல், ஸ்ரீதேவி, விஜய், சிம்பு, ஷாலினி, ஷாம்லி இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் மோனிகா சிவாவும் வருங்காலப் பட்டியலில் இடம் பிடிப்பாள்.

சென்னையில் படிக்கும் அந்த ஆறு வயசு குழந்தையின் கைகளில் பத்து விரல்களை மிஞ்சிய படங்கள்.

இளைய தளபதி விஜய்யின் 60 மற்றும் சங்கு சக்கரம், கட்டப்பாவை காணோம், ஜெய்யுடன் ஒரு படம், சித்தார்த் நடிக்கும் படம் என இன்னும் பெயரிடப் படாத சில படங்கள். துருதுருவென ஓடிக் கொண்டிருக்கும் இந்த பாப்பாவின் சேட்டைகளை இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் ரசித்து வரவேற்பது மோனிகா சிவாவுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கிறது.

விஜய் 60 படத்தில்யாருக்கு மகளாக நடிக்கிறே என்று கேட்டோம்.. உதட்டின் மீது கை வைத்து “ உஷ் “ சொல்லக் கூடாது என்று பெரிய மனுஷி போல பேச வாயடைத்து போனோம் வாழ்க வளர்க மோனிகா.

’கத்தி’ ரீமேக்கை தொடங்கினார் சிரஞ்சீவி

முன்னணி தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி, அரசியலில் நுழைந்தவுடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இதையடுத்து ஒரு சில படங்களில் கவுரவ தோற்றத்தில் நடித்து வந்த அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்க முடிவு செய்தார். இப்படம் அவரது 150வது படம் என்பதால், படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும், என்று பலரிடம் கதை கேட்டு இறுதியில், விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை ரீமேக் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. வி.வி.விநாயக் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம்சரண், லைகா நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்திற்கான ஹீரோயின் மற்றும் பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Visit Chennaivision for More Tamil Cinema News

விஜய் படத்தில் நடிக்கும் ஷாரூக்கான்

விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் படத்தில் நடிக்கும் ஷாரூக்கான்

விஜய் படத்தில் நடிக்கும் ஷாரூக்கான்

’சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘தில்வாலே’ ஆகிய படங்களை இயக்கிய ரோஹித் ஷெட்டி, ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கை பெற்றுள்ளாராம். அவர் இப்படத்தில் நடிக்க ஷாருக்கானை அனுபியதற்கு, அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

தற்போது, பிற நடிகர் நடிகைகள் தேர்வில் ஈடுபட்டுள்ள ரோஹித் ஷெட்டி, இந்தி ரீமெக் ‘தெறி’ படத்தை 2018ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம்.

Visit Chennaivision for More Tamil Cinema News

நட்சத்திர கூட்டத்தில் நடைபெற்ற ‘காத்தாடி’ இசை வெளியீட்டு விழா

கேலக்ஸி  பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக ஸ்ரீனிவாஸ் சம்மந்தம்  தயாரிக்கும் படம் ’காத்தாடி’. இந்த படத்தில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் அக்கா மகனும், பிரபல நடிகை மகேஸ்வரியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.  தாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். இவர் தற்போது  ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  மற்றும் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், காளி வெங்கட், சுமார் மூஞ்சி குமார் டேனியல், நான் கடவுள் ராஜேந்திரன், பசங்க சிவகுமார், லொள்ளு சபா மனோகர், வினோதினி, மதுமிதா, சூப்பர் குட் சுப்ரமணி, சேரன்ராஜ். மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் பேபி சாதன்யா நடிக்கிறார்.

ஜெமின் ஜோம் அயாநாத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கு பவன் இசையமைக்க, தீபன் பின்னணி இசையமைக்கிறார். மோகன்ராஜன் பாடல்கள் எழுத, அன்பறிவு சண்டைப்பயிற்சியை மேற்கொள்கின்றனர். ஜெய் கலைத்துறையை கவனிக்க, அரவிந்த் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.கல்யாண் இயக்குகிறார்.

நட்சத்திர கூட்டத்தில் நடைபெற்ற ‘காத்தாடி’ இசை வெளியீட்டு விழா

நட்சத்திர கூட்டத்தில் நடைபெற்ற ‘காத்தாடி’ இசை வெளியீட்டு விழா

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, நடிகை மீனா, மகேஸ்வரி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர்கள் ஆரி, கயல் சந்திரன், மங்காத்தா அஸ்வின், ஜான் விஜய் மற்றும் படத்தின் இயக்குனர் எஸ்.கல்யாண், நாயகன் அவிஷேக், நாயகி தன்ஷிகா, படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சமந்தம், படத்தை வெளியிடும் வி.என்.ரஞ்சித்குமார்,கே.சசிகுகுமார் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும், திரையுலக பிரமுகர்களும் கலந்துக்கொண்டார்கள்.

காத்தாடி இசை வெளியீட்டைத் தொடர்ந்து இளையராஜா, யுவன்சங்கர்ராஜா வெங்கட்பிரபு  ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் படக்குழுவினர்.

லிப்பி சினி கிராப்ட்ஸ் வி.என்.ரஞ்சித்குமார் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டியோஸ் கே.சசிகுமாரும்  இந்த படத்தை உலகம் முழுதும் வெளியிடுகிறார்கள்.

Visit Chennaivision for More Tamil Cinema News

விஜய் படத்தை பற்றிய உண்மையை போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்

விஜய் படத்தை பற்றிய உண்மையை போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்

விஜய் படத்தை பற்றிய உண்மையை போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்

க க போ திரைப்படத்தின் ஆடியோ வெளீயிட்டு விழாவில் விஜய் படத்தை பற்றிய உண்மையை போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்,

நேற்று (27/05/2016) கமலா திரையரங்கில் ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் வெளீயிடும்  DNS மூவி புரொடக்சன்ஸ் வழங்கும் கககபோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்ட முறையில் நடைபெற்றது.இவ்விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறபித்த உயர்திரு. ஜெ . அன்பழகன் எம்.எல்.எ அவர்கள் இப்போது சிறுபடங்கள் பெரியபடங்கள் என பாராபட்சம் பார்க்காமல் படங்கள் வெளீயிடுவதில் பிரச்சனை வருகிறது,அதுபோல்தான் விஜய் நடித்த தலைவா திரைப்படத்தை வெளியீட கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது, அதனால் மனமுடைந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் போகவே , அதை கண்டு வருத்தமுற்ற நான் அதை வாங்கி வெளியிடுகிறேன் என்று அறிவித்தேன் இரவோடு இரவாக அய்யப்பன் 400 திரையங்குகளை புக் செய்தார் , அதன் பின்னரே படம் வெளியானது இதுபோல நிறைய சின்ன படங்களை வாழ வைத்த ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது அவரது மகன் பாரதி அய்யப்பன் சார்பாக மீண்டும் துவங்கபட்டு சிறிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது , அவரது தந்தைக்கு என் பூரண ஆசிகள் இருந்தது போன்று இவருக்கும் என் ஆசியும் எப்போதும் உண்டு என்று கூறி முடித்தார்.

இத்திரைப்படத்தில் பவர் ஸ்டார், சிங்கம் புலி,m.s. பாஸ்கர், கருணாஸ், மதன் பாப், மயில்சாமி,ரோபோ ஷங்கர் உட்பட 25க்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்,இத்திரைப்படத்தை செல்வி சங்கரலிங்கம் தயாரித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த விஜய்

தமிழ் சினிமாவின் மாஸ் ஹிரோக்களின் லிஸ்டில் எப்போதுமே முதல் இடத்தில் இருப்பவர் இளைய தளபதி விஜய். துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடல் பாடி அனைவரையும் கவர்ந்தார் அதனை தொடர்ந்து கத்தி படத்தில் செல்ஃபிபுள்ள பாடலையும் பாடி அதையும் சூப்பர் ஹிட்டாக்கினார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த விஜய்

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த விஜய்

 

தற்போது இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக  உருவாகும் புலி படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார் இவருடன் பிரபு, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறார்கள் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி இரண்டு படத்தில் பாடிய பாடல்கள் ஹிட்டாகிய நிலையில் புலி படத்திலும் ஒரு பாடல் பாட வேண்டுமென இளைய தளபதி விஜய் ரசிகர்கள் விரும்பியதால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய புலி படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் இளைய தளபதி.
நூறு ஏக்கர் சோளக் காட்டில்  விஜய் மோகன்லால் சேர்ந்து வில்லன்களுடன் மோதல்

விஜய் மோகன்லால் சேர்ந்து வில்லன்களுடன் மோதல்

விஜய் மோகன்லால் சேர்ந்து வில்லன்களுடன் மோதல்

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க இளையதளபதி விஜய் நடிக்கும் “ஜில்லா” படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்து விட்டது.

மோகன்லால் சிறப்பானதொரு தோற்றத்தில் நடிக்கிறார்.

மற்றும் மகத், சூரி, தம்பிராமய்யா, பூர்ணிமாபாக்யராஜ், நிவேதா, சம்பத், சரண்,ஆர்,கே, ரவிமரியா, பிரதீப்ராவத், பிளாக்பாண்டி, ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  –  கணேஷ் ராஜவேல்

இசை   –  D.இமான்

எடிட்டிங்  –  டான்மேக்ஸ்

பாடல்கள்  –  வைரமுத்து, விவேகா, யுகபாரதி, பார்வதி

கலை  –  ராஜீவன்

நடனம்  –  ராஜுசுந்தரம், ஸ்ரீதர்

ஸ்டன்ட்  –  சில்வா

தயாரிப்பு மேற்பார்வை  –   பாபுராஜா

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  R .T.நேசன்

இனைதயாரிப்பு  –   சுரேஷ் சௌத்ரி, ஜீவன் ரமேஷ், ஜீவா.

தயாரிப்பு   –   R.B.சௌத்ரி

ஹைதராபாத்தில் நூறு ஏக்கர் சோளக்காட்டை பேசி வாங்கினார் R.B.சௌத்ரி .அதில் கொஞ்சம் பகுதியில் சமன் செய்து அதில் பிரமாண்டமான அரங்கு அமைக்கப் பட்டது.

அந்த அரங்கில் விஜய், மோகன்லால் இருவரும் இணைந்து வில்லன்களுடன் பயங்கரமாக மோதும் சண்டைக் காட்சி ஒன்று பத்து நாட்கள் படமாக்கப் பட்டது 40 ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்றனர்.

அதற்காக அமைக்கப்பட்ட  அரங்குக்காக மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப் பட்டுள்ளது. இந்த சண்டைக் காட்சியை ஆறு நவீன காமிரா யுக்தியுடன் படமாக்கி இருக்கிறார்கள்.

அந்த நூறு ஏக்கர் சோளக் காட்டையும் ஹெலிகேம் என்கிற நவீன காமிரா மூலம் படமாக்கி இருப்பது திரையில் பார்க்கும் போது பிரமிக்க வைக்கும்.

Visit Chennaivision for More Tamil Cinema News