ம.தி.மு.க.வில் நிர்வாகிகள் விலகி செல்வதால் பாதிப்பும் இல்லை: வைகோ

மதிமுக உயர் நிலைக்குழு கூட்டம், அக்கட்சியின் தலைமையிடமான தாயகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை இந்திய அரசியலமைப்பு சட்டம் 161-ஐ பயன்படுத்தி மாநில அரசே விடுதலை செய்யலாம். அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. அவர்களின் உடல் நலம் கருதி 3 மாதம் பரோலில் கூட விடுவிக்கலாம். நிரந்தரமான விடுதலை வழங்க கூடிய வாய்ப்பு உள்ளது.

ம.தி.மு.க.வில் இருந்து ரெட்சன் அம்பிகாபதி விலகி உள்ளனர். அவர் என்னை பாராட்டியதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ம.தி.மு.க.வில் நிர்வாகிகள் விலகி செல்வதால் எந்த பாதிப்பும் இல்லை.

ம.தி.மு.க. 23 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது ம.தி.மு.க.வை அழிக்க பல வழிகளில் முயற்சி செய்தது. தாயகத்தை கைப்பற்ற நினைத்தார்கள். போட்டி பொதுக்குழு நடத்தினார்கள்.

ஆனால் எதுவும் வெற்றி பெறவில்லை. தொண்டர்களின் உறுதியில் உருவான கட்சி ம.தி.மு.க. ஒரு சில நிர்வாகிகள் சென்றாலும் அந்த இடத்தில் புதிய நிர்வாகிகள் கூடுதல் பலத்துடன் செயல்படுவார்கள்.

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. சட்டசபையில் காவிரி பாசன பகுதிகளை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திமுக தோல்விக்கு நான் தான் காரணம் – வைகோ

திமுக தோல்விக்கு நான் தான் காரணம் – வைகோ:-

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில், கட்சிகளை ஒன்றினைத்த வைகோ, அதிமுக-வுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அதிமுக-வை வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்பதற்காகவே விஜயகாந்தை தன்னுடன் கூட்டணி சேர்த்ததாகவும் கூறப்பட்டு வந்தது. மேலும், இதற்காக அவர் அதிமுக-விடம் இருந்து பல ஆயிரம் கோடி பணத்தை பெற்றதாகவும் கூறப்பட்டது. ஆனால், இவை அனைத்தையும் வைகோ மறுத்து வந்தார்.

இந்த நிலையில், திமுக தோல்விக்கு எனது ராஜதந்திரமே காரணம், என்று வைகோ கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வாளாடியில் நடைபெற்றது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், “என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்து கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜ தந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும் கூட தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை  மறுக்க முடியாது.

இந்த நிமிடம் வரை நமது இயக்கத்தை அழிக்க நினைத்து நிர்வாகிகளை இழுத்து வருகின்றார்கள். நம்மை அழிக்க நினைத்தார்கள், அவர்கள் அழிந்து போய்விட்டார்கள். எங்களுக்காக நீங்க இருக்கிறீர்கள், உங்களுக்காக நான் இருக்கிறேன். இதுதான் நமது இயக்கத்தின் பிணைப்பு. நான் எப்போதும் கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை கைவிடமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

சென்னை வந்த ‘கங்கை பயணம்’ திருவள்ளுவர் சிலை

திருவள்ளூவர் மற்றும் திருக்குறள் பற்றி பாரளுமன்றத்தில் பேசி வரும், உத்தரகாண்ட் பா.ஜ.க எம்.பி தருண் விஜய், ஹரிதுவாரில் 12 அடி உயர் திருவள்ளுவர் சிலையை வரும் 29ஆம் தேதி அமைக்க உள்ளார்.

இதற்காக அவர் மாதிரி திருவள்ளுவர் சிலை ஒன்றை கன்னியாகுமரியில் இருந்து ’கங்கை பயணம்’ என்ற பெயரில் எடுத்து செல்கிறார். இந்த பயணம் கடந்த 18ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது.

நேற்று சென்னை வந்தடைந்த இந்த பயணத்தை, சென்னையில் இருந்து தமிழக கவர்னர் கே.ரோசய்யா நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர் சுதர்சன நாச்சியப்பன், நிலைக்குழு உறுப்பினர்களான எம்.பி.க்கள் பி.பி.சவுத்ரி, பாரத் சிங், ரஜினி பாட்டீல், மஜித் மாம், ஏ.சம்பத், உதயகுமார், வரபிரசாத் ராவ், வி.வி.நாயக், பகவந்த் மான், தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ். மூத்த நிர்வாகி சூர்ய நாராயண் ராஜி, ராமகிருஷ்ண மடம் சென்னை மேலாளர் விபுதானந்தஜி, கவிஞர் வைரமுத்து மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Visit Chennaivision for More Tamil Cinema News

மாற்று வழியில் பி.டிபருத்தி விதைகள்: எச்சரிக்கை விடுத்த வைகோ

மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்திக்கு மாற்றாக அதே விதைகளை மத்திய அரசு அறிமுகம் செய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ள வைகோ, விவாசயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாற்று வழியில் பி.டிபருத்தி விதைகள்: எச்சரிக்கை விடுத்த வைகோ

மாற்று வழியில் பி.டிபருத்தி விதைகள்: எச்சரிக்கை விடுத்த வைகோ

மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்திக்கு மாற்றாக புதிய வகை பருத்தியை மத்திய அரசு அறிமுகப்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நமது விவசாயத்தின் தற்சார்பை அழிக்கும் ‘மான்சான்டோ’ நிறுவனத்தின் பி.டி. பருத்திக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் பி.டி. பருத்திக்கு மாற்றாக மரபணு ஆராய்ச்சி மூலம், மரபு சார்ந்த வகை பருத்தியை அறிமுகம் செய்யப்போவதாக விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகமும் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறையும் தெரிவித்துள்ளன.

மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்திக்கு மாற்று என்ற பெயரால் மீண்டும் மான்சான்டோவின் மரபீனி பருத்தி விதைகளையே வேறொரு வடிவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக ஐயப்பாடு எழுந்துள்ளது. எனவே, மரபணு மாற்றப்பட்ட பருத்தியை எந்த வடிவத்திலும் பயிரிட அனுமதிக்கக்கூடாது; நமது பாரம்பரிய பருத்தி ரகங்களைப் பாதுகாத்து, வேளாண் துறையில் தற்சார்பை காக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Visit Chennaivision for More Tamil Cinema News

இளையராஜாவை காக்க வைத்த பெங்களூர் அதிகாரிகள்: வைகோ கண்டனம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நம் தாய்த் தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்துள்ள மாமனிதர்களுள் ஒருவர்தான், தென் தமிழ்நாட்டின் பண்ணைப்புரம் தந்த இசைப் பேரரசர் இளையராஜா அவர்கள். தமிழ்த் திரைப்படங்களுக்கு அவர் அமைத்த இசை காலங்களைக் கடந்து ஒலிக்கும் பெருமைக்குரியது. ஆசியக் கண்டத்தில் ஒரு ஜப்பானியனோ, சீனாக்காரனோ, கொரியாக்காரனோ சாதிக்க முடியாததை, சிம்பொனி இசை அமைத்து, அகிலத்தின் பல்வேறு இசை மேதைகளால் பாராட்டப்பட்டவர்.

இளையராஜாவை காக்க வைத்த பெங்களூர் அதிகாரிகள்: வைகோ கண்டனம்

இளையராஜாவை காக்க வைத்த பெங்களூர் அதிகாரிகள்: வைகோ கண்டனம்

அவர் சிறந்த கவிஞரும் கூட. அவரும், அவரது குடும்பத்தினரும் ஆலய வழிபாட்டை முடித்துக் கொண்டு, பிரசாதப் பொருட்களுடன் சென்னை பயணிக்க பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தபோது, அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள், கோவில் பிரசாதப் பொருட்களை அனுமதிக்காததுடன், இளையராஜா அவர்களின் விளக்கத்தையும் ஏற்காமல் ஒரு மணி நேரம் காக்க வைத்துள்ளனர்.

அடக்க உணர்ச்சியும், உயர் பண்பு நலன்களும் கொண்ட இளையராஜா அவர்கள் சிம்பொனி இசையால் உலகமே மெச்சியபோது, இந்திய அரசுத் தொலைக்காட்சி, அந்தச் செய்திகளை இருட்டடிப்புச் செய்தது, ஒரு சாதனைத் தமிழனுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று நாடாளுமன்றத்தில் குமுறலோடு உணர்வுகளைப் பதிவு செய்தவன் என்ற வகையில், பெங்களூரு விமான நிலைய சம்பவம் குறித்து மிகுந்த வேதனை அடைகிறேன்.

இந்த முறையற்ற செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில், பிரேமலதா விஜயகாந்துக்கு முன் ஜாமீன் வழங்க, அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திருப்பூரில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் பிரேமலதா மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு

அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில்  பிரேமலதா மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறேன். கடந்த ஏப்ரல் 1 ம் தேதி, திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி அவதூறாக பேசியதாக என் மீது திருப்பூர் வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நான் யாரையும் அவதூறாக பேசவில்லை. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்த கருத்தை வலியுறுத்தித்தான் பேசினேன். இதனால், வைகோவையும் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். தேமுதிகவுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்துடன் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவிற்கு நேற்று பதில் மனு தாக்கல் செய்த அரசு வழக்கறிஞர், பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்றும், தப்பிக்க முயல்வார் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு (இன்று) உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Visit Chennaivision for More Tamil Cinema News

மன்னிப்பு கேட்ட வைகோ மதிமுக நிர்வாகி பத்திரிக்கையாளரை தாக்க முயன்ற விவகாரம்

பத்திரிகையாளர்களை தாக்குவதும், தகாத வார்த்தைகளால் திட்டுவதையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடைபிடித்து வந்த நிலையில், தற்போது மதிமுக தொண்டர்களும் அத்தகைய செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள்.

மன்னிப்பு கேட்ட வைகோ மதிமுக நிர்வாகி பத்திரிக்கையாளரை தாக்க முயன்ற விவகாரம்

மதிமுக நிர்வாகி பத்திரிக்கையாளரை தாக்க முயன்ற விவகாரம்

இன்று நாகர்கோவில் வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வந்த போது, அக்கட்சியின் நிர்வாகி ஒருவ, “ தேர்தலில் குழப்பத்திற்கு காரணம் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியாளர்கள்” என்று கூறி செய்தியாளர்களிடம் ஆவேசமாக பாய்ந்ததோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டினார்.

இதையடுத்து, ஆவேசம் அடைந்த செய்தியாளர்கள், வைகோ காரை சூழ்ந்து வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கூறினர். இதனால் காரைவிட்டு இறங்கிய வைகோ தொண்டரின் செயலுக்கு வருத்தம் தெரிவிதார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Visit Chennaivision for More Tamil Cinema News

ஜெயலலிதா அறிவிப்பால் எந்த பயனும் இல்லை : வைகோ அறிவிப்பு

ஜெயலலிதா அறிவிப்பால் எந்த பயனும் இல்லை : வைகோ அறிவிப்பு

ஜெயலலிதா அறிவிப்பால் எந்த பயனும் இல்லை : வைகோ அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள மொத்த டாஸ்மாக் கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று ஜெயலலிதாவின் அறிவிப்பால் எந்த பயனும் இல்லை, என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறி இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். ஆனால் அதே நேரம், விவசாயப் பெருங்குடி மக்கள் தேசிய வங்கிகளில் பெற்றுள்ள கடன்களையும் தமிழக அரசே செலுத்தி, அனைத்து விவசாயிகளுக்கும் கடன்சுமையை குறைக்க வேண்டும்.

நூறு யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை என்பதுடன், இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் தற்போதைய முறையை மாற்றி, மாதா மாதம் செலுத்திட அறிவிப்பு வெளியிட்டிருந்தால் சாதாரண, நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.

கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் என்றும், விசைத்தறிக்கு 750 யூனிட்டுகள் என்றும் உயர்த்தி இருப்பது, திருமண உதவி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கம், 8 கிராம் என்று உயர்த்தி இருப்பதும் வரவேற்புக்கு உரியது.

டாஸ்மாக் மதுக்கடைகள் நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் வகையில் நேரத்தைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் படிப்படியான மதுவிலக்கு என்று முதல்வர் கொடுத்த வாக்குறுதி உண்மையிலேயே நடைமுறைக்கு வரும்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 6826 டாஸ்மாக் மதுக்கடைகளில் 500 ஐ மட்டும் மூடுவதால் ஒரு பயனும் இல்லை. உடனடியாக 1826 கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

 

மூட்டை கட்டப்பட்ட முரசு : மாநில அந்தஸ்த்தை இழக்கும் தேமுதிக

மூட்டை கட்டப்பட்ட முரசு : மாநில அந்தஸ்த்தை இழக்கும் தேமுதிக

மூட்டை கட்டப்பட்ட முரசு : மாநில அந்தஸ்த்தை இழக்கும் தேமுதிக

சென்னை,மே 20 (டி.என்.எஸ்) நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி கட்சிகள், தங்களது வாக்கு வங்கியை தொலைத்துவிட்டது தான் மிச்சமாகியுள்ளது.

நடிகராக இருந்து கட்சி தொடங்கிய விஜயகாந்த் வந்த புதிதில், 12 சதவீத வாக்குகளை பெற்று தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தினார். இதையடுத்து, 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அதிமுக-வுடன் கூட்டணி வைத்து 29 இடங்களில் வெற்றி பெற்ற தேமுதிக எதிர்க்கட்சியாக உயர்ந்தது. கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற முதல் கட்சி என்ற பெருமையை பெற்ற தேமுதிக, அதன் பிறகு மேற்கொண்ட நடவடிக்கையால் அந்த கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் விலகினார்கள்.

இது தான் தேமுதிக-வுக்கு முதல் அடியாக அமைந்தது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் உடல்நலக் குறைவு என்று அடிக்குமேல் அடிவிழ, தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்தது பேரடியாக விழுந்தது.

தமிழக மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த தடவை தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு, கடைசியில் வைகோவின் மக்கள் நலக்கூட்டணியுடன் போய் விஜயகாந்த் சேர்ந்தார். இதனாலே விஜயகாந்த் மீதும், தேமுதிக மீதும் மக்களுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு குறைந்துவிட்டது.

இந்த நிலையில் பொது இடங்களில், பிரசார கூட்டங்களில் அவர் நடந்து கொண்ட விதம் விமர்சனத்துக்குள்ளானது. கேலிக்குள்ளானது. சமூக வலைத்தளங்களில் விஜயகாந்த் நடவடிக்கைகள் பரபரப்பாக பகிர்ந்து கொள்ளப்பட்டன.

அந்த சமயத்தில் அவரது பேச்சும் மக்களுக்கு புரியாமல் போய் விட்டது. அவர் பிரசாரம் சுத்தமாக மக்களிடம் எடுபடவில்லை. மக்கள் மனதில் ஹீரோவாக திகழ்ந்த அவர் காமெடியின் ரேஞ்சுக்கு தள்ளப்பட்டு விட்டதாக அரசியல் நிபுணர்கள் கவலையுடன் கூறினார்கள்.

வைகோ, திருமாவளவன் மற்றும் இடது சாரி கட்சிகளின் தலைவர்கள் செய்த பிரசாரமும் விஜயகாந்துக்கு கை கொடுக்கவில்லை. இதனால் மக்களின் மனம் தானாகவே அ.தி.மு.க., தி.மு.க. பக்கம் திரும்பி விட்டது. அதன் காரணமாக தே.மு.தி.க. படுதோல்வியை சந்தித்துள்ளது.

உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமாவது ஜெயிப்பார் என்று சிலர் ஆரூடம் கூறியபடி இருந்தனர். அதுவும் பொய்த்து விட்டது. இரண்டாவது இடத்துக்கு கூட வர முடியாத விஜயகாந்த் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தோல்வி அடைந்தது மட்டுமின்றி தனது டெபாசிட் தொகையையும் விஜயகாந்த் இழந்துள்ளார். 104 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. அனைத்து தொகுதிகளிலும் “டெபாசிட்”டை இழந்துள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் தே.மு.தி.க.வால் சராசரியாக 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வாக்குகளையே பெற முடிந்துள்ளது. தே.மு.தி.க. தொடங்கப்பட்ட இந்த 11 ஆண்டுகளில் இந்த அளவுக்கு சரிவை தே.மு.தி.க. இப்போது தான் முதன் முதலாக சந்தித்துள்ளது.

லட்சக்கணக்கான வாக்குகள் உள்ள தொகுதிகளில் வெறும், 5 ஆயிரம், 10 ஆயிரம் வாக்குகள் பெறும் நிலைக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டுள்ளது. இது ஒட்டு மொத்த தமிழர்களும் தே.மு.தி.க.வை புறக்கணித்து இருப்பதையே காட்டுகிறது.

2011 தேர்தலில் 7.88 சதவீதம் வாக்குகள் பெற்ற தே.மு.தி.க. இந்த தடவை வெறும் 2.40 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது. 5.48 சதவீதம் வாக்குகளை தே.மு.தி.க. இழந்துள்ளது.

2016 சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் வேறு எந்த ஒரு கட்சிக்கும் இத்தகைய மோசமான வாக்கு இழப்பு ஏற்பட்டதில்லை.

சுமார் 6 சதவீதம் வாக்காளர்கள் தே.மு.தி.க.விடம் இருந்து விலகி சென்றிருப்பது விஜயகாந்துக்கு அடுத்தடுத்து சோதனைகளை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. அதன்படி தே.மு.தி.க., மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கப் போகிறது.

ஒரு கட்சி மாநில கட்சி அந்தஸ்தை பெற வேண்டுமானால் 6 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். தற்போது தே.மு.தி.க. அந்த சதவீத வாக்குகளை எட்டவில்லை.

அதோடு சட்டசபையிலும் தே.மு.தி.க.வுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. இதனால் தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் இல்லாத கட்சியாக செயல்பட வேண்டிய துரதிர்ஷ்ட நிலைக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டுள்ளது.

கூட்டணி அமைப்பதில் விஜயகாந்த் எடுத்த தவறான முடிவே தே.மு.தி.க.வின் வீழ்ச்சிக்கு வழி வகுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Visit Chennaivision for More Tamil Cinema News

கொள்ளுப்பேரன் காலம் வரை ஆட்சியில் நீடிக்க வேண்டுமா கருணாநிதிக்கு தா.பாண்டியன் கேள்வி

கொள்ளுப்பேரன் காலம் வரை ஆட்சியில் நீடிக்க வேண்டுமா

கொள்ளுப்பேரன் காலம் வரை ஆட்சியில் நீடிக்க வேண்டுமா

கருணாநிதி வரும் சட்டமன்ற தேர்தலில் ஆறாவது முறையாக முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன் கோவையில் பேட்டியொன்றில் தனது கொள்ளுப்பேரன் காலம் வரை ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி விரும்புகிறார் என்று கேள்வி ஒன்று எழுப்பி உள்ளார்.

அதை தொடர்ந்து தா.பாண்டியன் அளித்த பேட்டியில் தேர்தல் நடைமுறை விதிகளை பயன்படுத்தி காலம் காலமாக நடத்தப்பட்டு வரும் உழைப்பாளர்கள் தினமான மே 1 அன்று கொடிகள் கட்டக் கூடாது உட்பட பல்வேறு தடைகளை தேர்தல் ஆணையம் விதிப்பது சரி இல்லை என்று கூறினார்.

தொடர்ந்து தா.பாண்டியன் பேசுகையில் தேர்தல் ஆணையம் இதுவரை ரூ.60 கோடி வரை பணம் பறிமுதல் செய்ததாக சொல்லியுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை பின்னணி யார் என்று கூறவேயில்லை. தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த பணத்துக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

Visit Chennaivision for More Tamil Cinema News