முதல் அமைச்சர் ஜெயலலிதா கைரேகை வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

அதிமுக வேட்பாளர் விண்ணப்பத்தில் கைரேகை வைத்தது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் சுயநினைவோடு வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றும், அதிமுக வேட்பாளர் விண்ணப்பத்தில் முதலமைச்சர் கைரேகை வைத்தது செல்லாது என அறிவிக்கக் கோரியும் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகைக்கு அரசு மருத்துவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினர். அதனால், முதலமைச்சர் கைரேகை வைத்தது தொடர்பான இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், தேவையற்ற முறையில் பொதுநல வழக்கு தொடர்வது சரியானது அல்ல என்றும், மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.