சென்னையில் கவிஞர் வைரமுத்துவுக்கு பாராட்டு விழா

மகத்தான கலைஞர்களை சரியான நேரத்தில் பாராட்டாமல் விடுவது தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய அளவிலும்  சகஜம். தனக்கு தாமதமாகக் கிடைத்த பத்ம பூசன் விருதை பாடகி எஸ். ஜானகி அவர்கள் திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அவ்வாறில்லாமல் நாமே நமது மகத்தான கலைஞர்களை சேர்ந்து பாராட்டும் ஒரு தொடக்கத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் செய்துள்ளது. கடந்த முறை இயக்குனர் மணிவண்ணனை கவுரவித்ததோடு ஹரிதாஸ் தயாரிப்பாளரையும் பாராட்டி மகிழ்ந்தது.
தற்போது  இன்னொரு முன்னுதாரணமாக, சுமார் 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிவிட்ட கவிஞர் வைரமுத்துவுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி, சென்னையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் பாராட்டு விழா நடக்கிறது.
பாடலாசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர் என பன்முகம் கொண்ட கவிஞராக தமிழ்சினிமாவில் கோலோச்சி வருபவர் வைரமுத்து. அந்த வகையில் அவர் பாடல்களை மட்டுமில்லாமல் ஏராளமான கட்டுரைகளையும், நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
கவிஞர் வைரமுத்து 1980-ம் ஆண்டு ரிலீஸான நிழல்கள் படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப்பொழுது… என்ற பாடல் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார். இதுவரை அவர், 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்.
இதுவரை அவர் 6 தேசிய விருதுகளையும், 6 தமிழக அரசின் விருதுகளையும் வாங்கியிருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். அது மட்டுமில்லாமல் இப்போது வந்திருக்கும் புதிய பாடலாசிரியர்களுக்கு மத்தியில் அவரும் போட்டி போட்டுக் கொண்டு பல படங்களில் பாடல்களை எழுதி வருகிறார்.
அப்படி அவர் பாடல்கள் எழுதி விரைவில் திரைக்கு வர இருக்கும் படங்களில் ஒன்று தான் கங்காரு.  புதுமுகம் அர்ஜுனா, வர்ஷா அஸ்வதி.R, பிரியங்கா, தம்பி ராமையா, கலாபவன் மணி   மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை சாமி டைரக்ட் செய்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் இடம்பெறும் 6 பாடல்களையும் கவிஞர் வைரமுத்துவே எழுதியிருக்கிறார். ஆகவே படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீடு கவிஞர் வைரமுத்துவுக்கு பாராட்டு விழாவாக நடத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்பாடு செய்து வருகிறார்.
அதன்படி, இந்த விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்,நடிகைகள், டைரக்டர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்,பாடகிகள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் இந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவை பற்றிய ஒரு ட்ரெய்லரும், அவர் எழுதி மிக பிரபலமான 10 பாடல் காட்சிகளும், விழாவில் திரையிடப்படுகிறது.
தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் ‘ உ ‘

தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் ‘ உ ‘

தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் ' உ '
தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் ‘ உ ‘ ஃபீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரமாக நடிக்க, அவருடன் பல புதுமுகங்கள் நடிப்பில் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் படம்  ‘உ’.
காமெடியில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் தம்பி ராமையா தற்பொழுது முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்துகொண்டிருக்கிறார்
விசுவல் கம்யூனிகேசன் மற்றும் சென்னை எம்.ஜி.ஆர் பிலிம் இன்ஸ்டியூட்டில் இயக்கம் பயின்ற ஆஷிக்  ‘உ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தனது பல குறும்படங்களுக்காக இந்திய எல்லையைத் தாண்டி வெளிநாடுகளிலும் விருதுகள் பெற்றிருக்கும் ஆஷிக்கின் முதல் வெள்ளித்திரைப் படமாக ‘உ’ வளர்ந்து கொண்டிருக்கிறது.
similar: