கொள்ளுப்பேரன் காலம் வரை ஆட்சியில் நீடிக்க வேண்டுமா கருணாநிதிக்கு தா.பாண்டியன் கேள்வி

கொள்ளுப்பேரன் காலம் வரை ஆட்சியில் நீடிக்க வேண்டுமா

கொள்ளுப்பேரன் காலம் வரை ஆட்சியில் நீடிக்க வேண்டுமா

கருணாநிதி வரும் சட்டமன்ற தேர்தலில் ஆறாவது முறையாக முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன் கோவையில் பேட்டியொன்றில் தனது கொள்ளுப்பேரன் காலம் வரை ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி விரும்புகிறார் என்று கேள்வி ஒன்று எழுப்பி உள்ளார்.

அதை தொடர்ந்து தா.பாண்டியன் அளித்த பேட்டியில் தேர்தல் நடைமுறை விதிகளை பயன்படுத்தி காலம் காலமாக நடத்தப்பட்டு வரும் உழைப்பாளர்கள் தினமான மே 1 அன்று கொடிகள் கட்டக் கூடாது உட்பட பல்வேறு தடைகளை தேர்தல் ஆணையம் விதிப்பது சரி இல்லை என்று கூறினார்.

தொடர்ந்து தா.பாண்டியன் பேசுகையில் தேர்தல் ஆணையம் இதுவரை ரூ.60 கோடி வரை பணம் பறிமுதல் செய்ததாக சொல்லியுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை பின்னணி யார் என்று கூறவேயில்லை. தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த பணத்துக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

Visit Chennaivision for More Tamil Cinema News

அமைச்சர் கோகுல இந்திரா வை எதிர்த்து நடிகர் குமரன் அண்ணாநகரில் போட்டி

அமைச்சர் கோகுல இந்திரா வை எதிர்த்து நடிகர் குமரன்

அமைச்சர் கோகுல இந்திரா வை எதிர்த்து நடிகர் குமரன்

அமைச்சர் கோகுல இந்திரா வை எதிர்த்து நடிகர் குமரன் அண்ணாநகரில் போட்டி

2010ல் வெளியான தைரியம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் குமரன். அதனை தொடர்ந்து வருஷநாடு பெயரிடப்படாத பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம்யூனியன் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்தேர்தலில் குறைந்த வயதில் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட முதல்(தமிழ்நாட்டில்) வேட்பாளர் குமரன்.. யூனியன் தலைவராக இவர் பணியாற்றிய போது வெளிப்படையான, நேர்மையான நிர்வாகம்,, எளிதில் மக்கள் அணுக கூடிய தலைவராக இவர் இருந்தால் மாவட்ட ஆட்சித் தலைவரால் பல முறை பாராட்டப்பட்டார், இவ் அனுபவத்தின் காரணமாக 2003 ஆம் ஆண்டு இளைஞர் மற்றும் மாணவர்கட்சியை தொடங்கினார்,

இவ் அமைப்பின் வட்ட மாவட்ட குழுக்களை தமிழ் நாடு முழுவதும் உருவாக்கி மாணவர், இளைகர்களுக்கு உயர் கல்வி பயிற்சி வகுப்புகள், மாவட்ட மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தி வந்தனர் நடை பெற இருக்கும் 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 2 3 4 தொகுதிகளிலும் இளைஞர் மற்றும் மாணவர்கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு முழுமையும் பிரஷர் குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக 125 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.சென்னை அண்ணா நகர் தொகுதியில் அதிமுக அமைச்சர் கோகுல இந்திரா வை எதிர்த்து இளைஞர் மற்றும் மாணவர்கட்சியின் மாநில தலைவர் ப.குமரன் போட்டியிடுகிறார்.

Visit Chennaivision for More Tamil Cinema News