சுவாதி கொலைக்கு எதிராக மகளிர் அமைப்பினர் ஏன்  போராட்டம் நடத்தவில்லை? – டி.ராஜேந்தர்

சுவாதி கொலைக்கு எதிராக மகளிர் அமைப்பினர் ஏன்  போராட்டம் நடத்தவில்லை? – டி.ராஜேந்தர்:-

பீப் பாடலுக்காக தெருவில் இறங்கி பல போராட்டங்களை நடத்திய மகளிர் அமைப்புகள், சுவாதி கொலைக்கு போராடடது ஏன்? என்ற கேளிவியை டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தண்டையார்பேட்டை, வினோபா நகரில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர் இவ்வாறு பேசினார்.

‘பீப்’ பாடலுக்கு சிம்புவிற்கு எதிராக மாதர் சங்கத்தினர் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது பொது இடத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெருவித்து அவர்கள் எந்த வித போராட்டமும் செய்யவில்லை, இனி எந்த சுவாதிக்கும் அப்படி ஒரு நிலைமை வரக் கூடாது என்று அவர் கூறினார்.

சிம்புவுக்கு ஏற்பட்ட நிலை கமல்ஹாசனுக்கு ஏற்படுமா?

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவை விழிபிதுங்க வைத்தவர்களில் முக்கியமானவர்கள் இளங்கோவன் மற்றும் வழக்கறிஞர் ஜெயபால். இவர்கள் கோவை நீதிமன்றத்தில் பீப் பாடலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததை அடுத்துதான், சிம்பு மீது கோவை ரேஷ் கோர்ஸ் போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பிறகு சிம்புவின் நிலை என்ன ஆனது என்று உலகத்திற்கே தெரியும், இதற்கிடையில், சிம்பு மீது வழக்கு தொடர்ந்த இளங்கோவனும், வழக்கறிஞர் ஜெயபாலும், தற்போது கமல்ஹாசன் படத்திற்கு எதிராக போர்கொடி உயர்த்தியுள்ளனர்.

தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவையின் பொதுச்செயலாளர் இளங்கோவன் மற்றும் வழக்கறிஞர் ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ‘சபாஷ் நாயுடு’ பட போஸ்டரை கிழித்து போராட்டம் நடத்தினர்.

சிம்புவுக்கு ஏற்பட்ட நிலை கமல்ஹாசனுக்கு ஏற்படுமா?

சிம்புவுக்கு ஏற்பட்ட நிலை கமல்ஹாசனுக்கு ஏற்படுமா?

பின்னர் அருந்ததியர் முன்னேற்ற பேரவை பொதுச்செயலாளர் ப.இளங்கோவன் கோவை மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், “நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படத்துக்கு சபாஷ் நாயுடு என்று பெயரிட்டு விளம்பரங்கள் செய்து வருகின்றனர். இந்த தலைப்பு சமூக அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தை வெளியிட அனுமதி அளித்தால் சாதி பெயரில் படத்தலைப்புகளை கொச்சையாக அமைத்து திரைப்படங்களை உருவாக்கும் தவறான செயலுக்கு முன்னுதாரணமாக அமையும்.

ஆகவே இந்த படத்தின் தலைப்பை மாற்றும் வரையில், இந்த படத்தின் விளம்பரங்களோ அல்லது இந்த திரைப்படமோ வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் போராட்டங்கள் மூலமாகவும், வழக்குகள் மூலமாகவும் சிம்புவை ஆட்டம் காணச் செய்த, இளங்கோவன் மற்றும் வழக்கறிஞர் ஜெயபால், கமல்ஹாசன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், சிம்புவுக்கு ஏற்பட்ட நிலை கமலுக்கும்  ஏற்படுமா, என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மனு குறித்து கோவை கலெக்டர் எடுக்கும் நடவடிக்கை பொறுத்தே அடுத்தது என்ன நடக்கும் என்பது தெரிய வரும்.

தற்போது, கமல்ஹாசன், ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார்.

‘சபாஷ் நாயுடு படத்தின் தலைப்பு எதிராக ஏற்கனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரவிகுமார் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Visit Chennaivision for More Tamil Cinema News

சிம்பு, நயந்தராவின் காதல் காட்சிகள் ஒரு மாதிரியாக இருக்கும்: இயக்குநர் பாண்டிராஜ்

சிம்பு, நயந்தராவின் காதல் காட்சிகள் ஒரு மாதிரியாக இருக்கும்

சிம்பு, நயந்தராவின் காதல் காட்சிகள் ஒரு மாதிரியாக இருக்கும்

பொதுவாக ஹீரோயிசம், அதிரடி, செண்டிமெண்ட் என இருந்த தமிழ் சினிமாவை, ‘பசங்க’ திரைப்படம் மூலம் வேறொரு கோணத்திற்கு எடுத்து சென்றவர் இயக்குநர் பாண்டிராஜ் . தனது ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதையம்சங்களை  கொண்டு வெற்றி கண்ட இயக்குநரான  இவரது படங்களுக்கு  ரசிகர்கள் மத்தியிலும், வணிக ரீதியாகவும்  பெரும் வரவேற்ப்பு எப்போதும் உண்டு.  சிம்பு – நயன்தாரா நடிப்பில் மே 27ஆம் தேதி வெளிவரும் ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் இவரது மகுடத்துக்கு  மணி சேர்க்கும் படமாக இருக்கும் என்று திரை வணிகம் கட்டியம் கூறுகிறது.

“மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் காதலை சந்தித்திருப்பார்கள். விடலை பருவத்திலோ, பணிபுரியும் இடத்திலோ, நடுத்தர வயதிலோ, ஏதாவது ஒரு கட்டத்தில் சட்டென்று உரசி போயிருக்கும். சட்டென்று பூக்கும் பூவைப்போல, மின்னலைப்போல எந்த நொடியில் காதல் தோன்றும் என்பதை சொல்ல முடியாது. அந்த காதலை மைய கருத்தாக கொண்டு நான் செதுக்கியுள்ள திரைப்படம் தான் ’இது நம்ம ஆளு’.

ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தம்பதியர்களின் காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எனக்குள் வெகு நாட்களாக இருந்து வந்தது. எனது அந்த தேடலின் முயற்சி தான் இந்த  50 சதவீத காமெடி மற்றும் 50 சதவீத காதல் திரைப்படம். படத்தில் நாயகன் – நாயகியாக நடித்த சிம்பு – நயன்தாராவிற்கு நான் காதல் காட்சிகளை சொல்லி தர வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்கள் இருவரின் சிரிப்பு, காதல் பார்வை, செல்ல கோபம் என அனைத்தும் படத்தின் லவ் கெமிஸ்டிரிக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. மொத்தத்தில் சிம்பு – நயன்தாராவின் காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை. பத்து வருடத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த படம், எது மாதிரியும் இல்லாம, புது மாதிரியும் இல்லாம, ஒரு மாதிரியா இருக்கும்” என்று  கூறினார்  இயக்குநர் பாண்டிராஜ்.

படத்தின் காமெடி கூட்டணி பற்றி அவர் கூறுகையில், “இதுவரை சிம்பு – சந்தானம் கூட்டணியில்  உருவான காமெடி காட்சிகள் அனைத்தும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து, அவர்களிடம் பெரும் வரவேற்பை  பெற்றவை. அதே போல் இந்த படத்தில் சிம்புவுடன் புதிதாக இணையும் பரோட்டா சூரியின் காமெடியும், ரசிகர்களின் கைத்தட்டல்களுக்கு காரணமாக அமையும். சிறப்பு தோற்றமாக சந்தானம் வரும்  மூன்று சீன்களிலும் சிரிப்பு கரைப்புரண்டு ஓடும்.  மொத்தத்தில், குறைந்தது 100 தடவையாவது ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு, தற்போது இது நம்ம ஆளு திரைப்படம் மூலம் நிஜமாகப்போகிறது” என்றார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

இணையதளங்களில் அச்சம் என்பது மடைமையட படத்தின் பாடல் சாதனை!

இணையதளங்களில் அச்சம் என்பது மடைமையட படத்தின் பாடல் சாதனை!

இணையதளங்களில் அச்சம் என்பது மடைமையட படத்தின் பாடல் சாதனை!

இணையதளங்களில் அச்சம் என்பது மடைமையட படத்தின் பாடல் சாதனை!

நடிகர் சிம்பு நடிப்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில்,இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கும் படம் அச்சம் என்பது மடைமையட இந்த படத்தின் ஒரு பாடல் (தள்ளிபோகதே என்ற பாடல்) மட்டும்  இந்த வருடம்   ஜனவரி 16 வெளியிடப்பட்டது,வெளியிடப்பட்ட நாளில் இருந்து அந்த பாடல் 1 கோடி  தடவை ரசிகர்களால் youtube சமுக வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது, இது இப்படதிற்கு பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்படம் வரும் May 27, 2016. அன்று திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு கவுதம் வாசுதேவ் மேனன்,ஏ.ஆர்.ரகுமான்,நடிகர்  சிம்பு இணையும் இரண்டாவது படம் அச்சம் என்பது மடைமையாட என்பது குறிப்பிடத்தக்கது.

Visit Chennaivision for More Tamil Cinema News

Similar :

அச்சம் என்பது மடைமையட படத்தின் பாடல்

ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி கூறுகிறார் தயாரிப்பாளர் நடிகர் v t v  கணேஷ்

‘விண்ணை தாண்டி வருவாயா ‘ படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியை  கேட்டு பரபரப்பாக  பிரபலமானவர் கணேஷ் .அந்த படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ‘ இங்க என்ன சொல்லுது’  படம் வரை தொடர்ந்து , சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்த படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து  வருகிறது . இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடை பெற்று வந்தது . இதுவரை வந்திராத ஜோடியாக இருக்க வேண்டும் என்ற கணேஷின் எண்ணத்துக்கு ஏற்ப தேர்வு நடந்தது . இறுதியில்சிம்பு ஜோடியாக ஆண்ட்ரியா தேர்ந்து  எடுக்க பட்டார்.
இந்த ஜோடி தேர்வை பற்றி கணேஷ் கூறும் போது ‘ சிம்புவும் ஆண்ட்ரியாவும் மிக சரியான ஜோடி. என் கணிப்பில் , என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது . ரசிகர்களுக்கு இந்த ஜோடியை ரொம்பவே பிடிக்கும் . இந்த கதாபாத்திரமும் அவர்களுக்கெனவே படைத்தது போலவே பொருத்தமாக இருக்கிறது . படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்தது , இறுதிகட்ட பணிகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது .இந்த மாத இறுதியில் படத்தை முடித்து பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டு  இருக்கிறேன் என்கிறார் .