கமல்ஹாசனுக்கு கால் முறிவு! மருத்துவமனையில் அனுமதி!

கமல்ஹாசன் தனது வீட்டில் வழுக்கி விழுந்ததில், காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், அமெரிக்காவில் தனது ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சமீபத்தில் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் வழுக்கி விழுந்து காலில் அவருக்கு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். காலியில் சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனையில் உள்ள கமல்ஹாசன், சில நாட்களில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

தவறான செய்தி வெளியிட்டால் வழக்கு தொடர்வோம் : லைகா அறிவிப்பு

விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’, கமல்ஹாசன் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரிப்பதுடன், பல படங்களை விநியோகமும் செய்து வருகிறது.இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக செயல்படும் லைகா, பிரான்ஸ் நாட்டில் வரி ஏய்ப்பு செய்ததாகவும், இதனால் அந்நிறுவன அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, லைகா நிறுவனத்தின் அங்கமான லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் கைவிடப்படுவதாகவும் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டது.ஆனால், இதை மறுத்துள்ள லைகா நிறுவனம், வேறு ஒரு நிறுவனத்தில் நடந்த சோதனையை லைகா நிறுவனத்தில் நடந்ததாக தவறாக தங்களது போட்டியாளர்கள் சித்தரித்து விட்டனர், இதற்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ராஜு மகாலிங்கம் கூறுகையில், “லைகா மொபைல் நிறுவனத்துக்கும் இந்த சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. லைகா மொபைல் விநியோகஸ்தரின் நிறுவனம் ஒன்றில் நடந்த சோதனையை லைகா நிறுவனத்துடன் முடிச்சுப் போட்டுள்ளனர். அதன் போட்டியாளர்கள்.

இந்த செய்திகள் வெளியிட்டோர் மீது சட்டப்படி லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போகிறார்கள். இன்னொன்று இந்த செய்திகளை லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்தோடு முடிச்சுப்போட்டு சிலர் எழுதி வருகின்றனர். இது மிகத் தவறானது. லைகா புரொடக்‌ஷன்ஸ் மிகவும் பெருமைக்குரிய நிறுவனம். எங்கள் செயல்பாடுகள் நேர்மையானவை. மிகப் பெரிய திட்டங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை களங்கப்படுத்த வேண்டாம். இந்த சோதனைக்கும் லைகாவும் எந்த சம்மந்தமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

சிம்புவுக்கு ஏற்பட்ட நிலை கமல்ஹாசனுக்கு ஏற்படுமா?

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவை விழிபிதுங்க வைத்தவர்களில் முக்கியமானவர்கள் இளங்கோவன் மற்றும் வழக்கறிஞர் ஜெயபால். இவர்கள் கோவை நீதிமன்றத்தில் பீப் பாடலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததை அடுத்துதான், சிம்பு மீது கோவை ரேஷ் கோர்ஸ் போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பிறகு சிம்புவின் நிலை என்ன ஆனது என்று உலகத்திற்கே தெரியும், இதற்கிடையில், சிம்பு மீது வழக்கு தொடர்ந்த இளங்கோவனும், வழக்கறிஞர் ஜெயபாலும், தற்போது கமல்ஹாசன் படத்திற்கு எதிராக போர்கொடி உயர்த்தியுள்ளனர்.

தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவையின் பொதுச்செயலாளர் இளங்கோவன் மற்றும் வழக்கறிஞர் ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ‘சபாஷ் நாயுடு’ பட போஸ்டரை கிழித்து போராட்டம் நடத்தினர்.

சிம்புவுக்கு ஏற்பட்ட நிலை கமல்ஹாசனுக்கு ஏற்படுமா?

சிம்புவுக்கு ஏற்பட்ட நிலை கமல்ஹாசனுக்கு ஏற்படுமா?

பின்னர் அருந்ததியர் முன்னேற்ற பேரவை பொதுச்செயலாளர் ப.இளங்கோவன் கோவை மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், “நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படத்துக்கு சபாஷ் நாயுடு என்று பெயரிட்டு விளம்பரங்கள் செய்து வருகின்றனர். இந்த தலைப்பு சமூக அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தை வெளியிட அனுமதி அளித்தால் சாதி பெயரில் படத்தலைப்புகளை கொச்சையாக அமைத்து திரைப்படங்களை உருவாக்கும் தவறான செயலுக்கு முன்னுதாரணமாக அமையும்.

ஆகவே இந்த படத்தின் தலைப்பை மாற்றும் வரையில், இந்த படத்தின் விளம்பரங்களோ அல்லது இந்த திரைப்படமோ வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் போராட்டங்கள் மூலமாகவும், வழக்குகள் மூலமாகவும் சிம்புவை ஆட்டம் காணச் செய்த, இளங்கோவன் மற்றும் வழக்கறிஞர் ஜெயபால், கமல்ஹாசன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், சிம்புவுக்கு ஏற்பட்ட நிலை கமலுக்கும்  ஏற்படுமா, என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மனு குறித்து கோவை கலெக்டர் எடுக்கும் நடவடிக்கை பொறுத்தே அடுத்தது என்ன நடக்கும் என்பது தெரிய வரும்.

தற்போது, கமல்ஹாசன், ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார்.

‘சபாஷ் நாயுடு படத்தின் தலைப்பு எதிராக ஏற்கனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரவிகுமார் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Visit Chennaivision for More Tamil Cinema News

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்கிய லைக்கா

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்கிய லைக்கா

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்கிய லைக்கா

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்கிய லைக்கா, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைக்கா புரொடக்ஷன் இணைந்து வழங்கும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் “ சபாஷ் நாயுடு” படத்தின் துவக்க விழா இன்று காலை 9 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா, லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஸ்கரன் மற்றும் கருணாமூர்த்தி, ராஜு மஹாலிங்கம் இவர்களுடன்  நடிகர் பிரபு, நடிகர் சிவகுமார், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்சங்க பொதுச் செயலாளார் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் படத்தின் தலைப்பை தமிழ், ஹிந்தி, தெலுங்கு மூன்று மொழியிலும் அறிவித்தார்.

லைக்கா நிறுவனத்தின் சேர்மன் சுபாஸ்கரன் அவர்கள் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் நாசரிடம் வழங்கினார்.

விழாவில் நடிகர் சங்க  பொதுச்செயலாளர் விஷால் லைக்கா குழும தலைவர் சுபாஸ்கரனுக்கு நன்றி தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகவுள்ள சபாஷ் நாயுடு

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகவுள்ள சபாஷ் நாயுடு

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகவுள்ள சபாஷ் நாயுடு

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகவுள்ள சபாஷ் நாயுடு படத்தின் துவக்க விழா இன்று நடிகர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முதலாவதாக பேசிய நாசர் இந்த நடிகர் சங்க வளாகத்தில் திரு.கமல்ஹாசன் அவர்கள் மங்களகரமான ஒரு விழாவை துவக்கிவைத்துள்ளார். அவரது திரைப்பட துவக்கவிழாவை இங்கே நடத்தியுள்ளார். இதை தொடர்ந்து இங்கே பல விழாக்கள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். இவ்விழாவை நடத்த வாடகையாக ருபாய் 2.5 – லட்சத்தையும் செலுத்தியுள்ளார்.

அடுத்ததாக பேசிய உலகநாயகன் கமல்ஹாசன் , நடிகர் சங்க வளாகத்தில் விழாவை நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்திற்கான விளம்பரங்களில் “ மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா ?? “ என்ற வாசகம் இருக்கும். அதை படத்தின் தலைப்பு என்று பலரும் யூகித்து இருக்கலாம். அதுவல்ல படத்தின் தலைப்பு , அந்த வாசகம் “ மீண்டும் இங்கே நடிகர் சங்க நிர்வாகத்தில் பொறுப்பேற்று இருப்பது யாரென்று தெரிகிறதா ?? என்பதை குறிக்கும். நடிகர் சங்க கட்டிடத்தை மீண்டும் எழுப்ப புதிதாக பொறுப்பேற்று இருக்கும் நிர்வாகம் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நிர்வாகிகள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விஷயம் இங்கே காத்துகொண்டு இருக்கிறது என்று கூறியவர் நடிகர் சங்க தலைவர் நாசர் , பொது செயலாளர் விஷால் , பொருளாளர் கார்த்தி , துணை தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளை மேடைக்கு அழைத்தார்.

மேடையில் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு லைகா குழுமதத்தின் தலைவர் திரு. அல்லிராஜா சுபாஷ்கரன் 1-கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இந்த விழாவை இங்கு நடத்தி நடிகர்சங்கத்திற்கு பெருமை சேர்த்த உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு நடிகர் சங்கம் ­­­­­சார்பாக எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ருபாய் 1 கோடிக்கான காசோலையை வழங்கிய லைகா குழும தலைவர் திரு. அல்லிராஜா சுபாஷ்கரன் அவர்களுக்கும் நடிகர் சங்கம் ­­­­­சார்பாக எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.