’கபாலி’ திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

’கபாலி’ திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: ரஜினிகாந்தின் ‘கபாலி’ ரிலீஸ் தேதி குறித்த சர்ச்சைகளுக்கு நேற்று முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது. நேற்று மாலை 3 மணியளவில் சென்சார் செய்யப்பட்ட ‘கபாலி’ படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தை வரும் ஜூலை 22ஆம் தேதி ரிலீஸ் செய்யப் போவதாகவும் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகள் பலவற்றி வெளியாக உள்ள ‘கபாலி’ மலேசிய நாட்டில் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும், படத்திற்கான டிக்கெட் முன் பதிவும் தற்போது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முன் பதிவு எப்போது என்று விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

’கபாலி’ திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

’கபாலி’ திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது: ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கபாலி’ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. ரிலீஸ் தேதி தள்ளிபோவதற்கு, பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில், தயாரிப்பாளர் தானுவோ, படம் சென்சார் முடிந்த பிறகே ரிலீஸ் தேதியை அறிவிப்பேன், என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ‘கபாலி’ நேற்று (ஜூலை 11) தணிக்கை குழுவினருக்கு போட்டுகாட்டப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். படம் மொத்தம் 2.32 மணி நேரம் உள்ளதாம்.

ஆக, சென்சார் முடிந்ததால், ‘கபாலி’ இம்மாதம் 22ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

தலகோணா வனப்பகுதியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

தலகோணா வனப்பகுதியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாவது உறுதியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் மலாய் ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தையடுத்து ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தில் நடித்து வருகிறார். அமெரிக்காவில் சில காட்சிகள் படமாக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள தலகோணா வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு படக்குழுவினர் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் படப்பிடிப்பு நடத்துப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் முக்கியக் காட்சிகள் அனைத்தும் இந்த வனப்பகுதியிலேயே படமாக்கவும் திட்டமிட்டுள்ளனராம்.

எனக்குப் பிடித்த ஒன் அன்ட் ஒன்லி ஹீரோ ரஜினி சார்தான்!

எனக்குப் பிடித்த ஹீரோ ஒன் அன்ட் ஒன்லி ரஜினி சார்தான் என்கிறார் அட்ரா மச்சான் விசிலு படத்தின் நாயகி நைனா சர்வார்.
சிவா, நைனா சர்வார், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள அட்ரா மச்சான் விசிலு வரும் ஜூலை 7-ம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தின் நாயகி நைனா சர்வாருக்கு இது முதல் தமிழ்ப் படம். தனது அனுபவங்களை நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.
“என் சொந்த ஊர் பெங்களூர். பி காம் ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறேன்.
ஏற்கெனவே கன்னடத்தில் நான்கு படங்கள் முடித்துவிட்டேன். அட்ரா மச்சான் விசிலு எனக்கு முதல் தமிழ்ப் படம் என்றாலும், இன்னொரு தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளேன். அந்தப் படம் கொளஞ்சி. ஸோ.. மொத்தம் ஆறு படங்கள்.
இந்தப் பட இயக்குநர் இதற்கு முன் நான் நடித்த படங்களைப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. இந்தப் படத்துக்காக என்னை அணுகி கதை சொன்னார் இயக்குநர்.
கதை கேட்டபோது என் பாத்திரத்தில் மட்டும்தான் கவனம் செலுத்தினேன். நகைச்சுவையுடன் கூடிய பப்ளியான ஒரு ரோல். ரொம்பப் பிடித்திருந்தது. உடனே ஒப்புக் கொண்டேன். முழுசாக நடித்து முடித்த பிறகுதான் எனக்கு இந்தக் கதை எதைப் பற்றியது என்பது புரிந்தது. ஆனால் எனக்கு என் பாத்திரம் திருப்தியாக இருந்தது. அது போதும்.
என் ஹீரோ சிவா மாதிரி வசதியான அதாவது கன்வீனியன்டான ஒருவரைப் பார்க்க முடியுமா தெரியவில்லை. எனக்கு தமிழைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பேசுவது சிரமம். அதனால் செட்டில் எல்லோருடனும் பேச சிவாதான் உதவினார். நானும் இயக்குநரும் சிவா மூலம்தான் பேசிக் கொள்வோம்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் பவர் ஸ்டார் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவருக்கும் எனக்கும் சேர்ந்த மாதிரி சீன்கள் இல்லை. அவருடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் நடிப்பேன். ஜோடியாகவும்தான்… இதில் தயக்கம் ஏதுமில்லை.
அட்ரா மச்சான் விசிலு பாடல் புரமோஷன் பார்த்து விட்டு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் எதையும் ஏற்கவில்லை. மனசுக்குப் பிடிச்ச மாதிரி பாத்திரங்கள் அமைந்தால் நானே என் அடுத்த படத்தை அறிவிப்பேன்.
தமிழில் என் பேவரைட் நாயகி நயன்தாரா.
அப்ப ஹீரோ?
வேறு யார்… எவர்கிரீன் ஒன் அன்ட் ஒன்லி ரஜினி சார்தான்!” என்றார்.
’கபாலி’-யில் மோகன்லால்!

’கபாலி’-யில் மோகன்லால்!:-

ரஜினிகாந்த் நடிப்பில், ‘மெட்ராஸ்’ ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கபாலி’ உலக அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது 22ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிபோயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ரிலீஸ் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், ‘காபலி’ யில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்திருக்கிறார். படத்தில் அல்ல, ‘கபாலி’ யின் வியாபாரத்தில். ஆம், ‘கபாலி’ யை கேரளாவில் வெளியிடப்போவது நடிகர் மோகன்லால் தான். அவரது மேக்ஸ் லேப் நிறுவனம், ரூ.8.5 கோடிக்கு படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது.

இந்த தகவலை மோகன்லாலின் மேலாளர் ஆண்டனி பெரும்பாவூர், தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் ரிலீஸ் ஜூலை 22ஆம் தேதிக்கு தள்ளிபோயிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

’கபாலி’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பு

’கபாலி’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பு:-

ரஜினிகாந்தின் ‘கபாலி’ ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம் மற்றும்மலாய் மொழிகளிலும் உருவாகி வருகிறது. இதில் தமிழ் பதிப்புக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், மற்ற மொழிகளின் பின்னணி வேலைகளில் தாமதம் ஏற்பட்டதால், படத்தின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கிடையில் ஜூலை 1ஆம் தேதி படம் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டு வந்த நிலையில், பிறகு ஜூலை 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் இருக்கும் ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும், வெளியீட்டு தேதியை அதிகாரப்பூவமாக அறிவிக்க இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களினால் ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் இன்னும் ஒரு வாரம் தள்ளிபோனதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. எனவே, கபாலி வரும் ஜூலை 22ஆம் தேதி தான் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், இது குறித்து தயாரிப்பு தரப்பு எந்தவித மறுப்போ அல்லது விளக்கமோ கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Visit Chennaivision for More Tamil Cinema News

ரஜினியின் ஒரு கோடி ரூபாய் விவகாரம் – சத்யநாராயணா விளக்கம்

ரஜினியின் ஒரு கோடி ரூபாய் விவகாரம் – சத்யநாராயணா விளக்கம்:-

கடந்த 2002 ஆம் ரஜினிகாந்த் நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்த ரூ.1 கோடி தருவதாக அறிவித்ததாகவும், ஆனால், அப்பணத்தை ரஜினிகாந்த் இதுவரை கொடுக்க வில்லை, என்று கூறிய தஞ்சை விவசாய சங்கத்தினர், அப்பனத்தை உடனே கொடுக்க வேண்டும், என்றும், அப்படியில்லை என்றால், ரஜினிகாந்துக்கு எதிராக அவரது வீட்டு அருகே உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம், என்று அறிவித்தனர்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் தான் அறிவித்தபடி, ரூ.1 கோடியை கொடுத்துவிட்டதாக, அவரது அண்ண்ணன் சத்யநாராயணா, இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா இன்று குடும்பத்துடன் தஞ்சை வந்தார். அவர் பெரிய கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் வெளியே வந்த நிருபர்களிடம் பேசுகையில், “ரஜினியின் ‘கபாலி’ படம் வெற்றி பெற தஞ்சை பெரிய கோவில், திருநாகேஸ்வரம் கோவில்களில் சிறப்பு பூஜை செய்ய வந்துள்ளேன். அரசியல் பற்றி சொல்ல விரும்பவில்லை. அவர் (ரஜினி) தான் சொல்ல வேண்டும்.

நதி நீர் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவித்து உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் ரூ. 1 கோடி டெபாசிட் செய்து வைத்துள்ளார். அவர் ஒரு தடவை சொன்னது சொன்னதுதான்” என்று தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

ரஜினிகாந்துக்கு எதிராக உண்ணாவிரதம் : விவசாயி அறிவிப்பு

அமெரிக்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், உடல் நிலை குறித்து அவ்வபோது சில வதந்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, தற்போது அவருக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் உண்ணவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு நதி நீர் இணைப்பு திட்டத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்திருந்தார். தற்போது, அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தென்னிந்திய  நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் மனு அளித்துள்ளார்.

மனு மீது ரஜினிகாந்த் தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக, அறிவித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

தவறான செய்தி வெளியிட்டால் வழக்கு தொடர்வோம் : லைகா அறிவிப்பு

விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’, கமல்ஹாசன் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரிப்பதுடன், பல படங்களை விநியோகமும் செய்து வருகிறது.இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக செயல்படும் லைகா, பிரான்ஸ் நாட்டில் வரி ஏய்ப்பு செய்ததாகவும், இதனால் அந்நிறுவன அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, லைகா நிறுவனத்தின் அங்கமான லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் கைவிடப்படுவதாகவும் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டது.ஆனால், இதை மறுத்துள்ள லைகா நிறுவனம், வேறு ஒரு நிறுவனத்தில் நடந்த சோதனையை லைகா நிறுவனத்தில் நடந்ததாக தவறாக தங்களது போட்டியாளர்கள் சித்தரித்து விட்டனர், இதற்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ராஜு மகாலிங்கம் கூறுகையில், “லைகா மொபைல் நிறுவனத்துக்கும் இந்த சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. லைகா மொபைல் விநியோகஸ்தரின் நிறுவனம் ஒன்றில் நடந்த சோதனையை லைகா நிறுவனத்துடன் முடிச்சுப் போட்டுள்ளனர். அதன் போட்டியாளர்கள்.

இந்த செய்திகள் வெளியிட்டோர் மீது சட்டப்படி லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போகிறார்கள். இன்னொன்று இந்த செய்திகளை லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்தோடு முடிச்சுப்போட்டு சிலர் எழுதி வருகின்றனர். இது மிகத் தவறானது. லைகா புரொடக்‌ஷன்ஸ் மிகவும் பெருமைக்குரிய நிறுவனம். எங்கள் செயல்பாடுகள் நேர்மையானவை. மிகப் பெரிய திட்டங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை களங்கப்படுத்த வேண்டாம். இந்த சோதனைக்கும் லைகாவும் எந்த சம்மந்தமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

ரஜினிகாந்த் ஜூலை மாதம் சென்னை திரும்புகிறார்

’கபாலி’ படத்தை முடித்த ரஜினிகாந்த் ‘2.0’ படத்தின் சில காட்சிகளில் நடித்துவிட்டு, ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். அவர் வந்ததும் ‘கபாலி’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்த படப்பிடிப்புக் குழுவினர், திடீரென்று எந்தவித விழாவும் இன்றி, பாடல்களை இணையத்தில் வெளியிட்டதோடு, அவரது இளைமகள் செளந்தர்யா தலைமையில் எளிமையான ஒரு நிகழ்ச்சியையும் நடத்தினார்கள்.

சென்னையில் நடந்த அந்த நிகழ்வுக்கு ஊடகங்கள் யாரும் அழைக்கப்படாமல், படக்குழுவினரே நடத்தி முடித்தார்கள். இதற்கிடையில், ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அவரது குடும்பத்தினர், ரஜினிகாந்த் விரைவில் சென்னை திரும்புவார் என்று அறிவித்தனர். மேலும், ரஜினிகாந்த் ஜூன் மாதம் இறுதியில் சென்னை திரும்புவார் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில்,  ரஜினிகாந்த் ஜூலை 3ஆம் தேதி சென்னை திரும்புவதாக, அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Visit Chennaivision for More Tamil Cinema News