மானத்தை வாங்காதீர்கள் : நடிகர் சங்கத்துக்கு ஆர். கே. செல்வமணி வேண்டுகோள்!

மானத்தை வாங்காதீர்கள் – நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி

மானத்தை வாங்காதீர்கள் நடிகர்களில் கிரிக்கெட் ஆடத் தெரிந்தவர்களை போட்டிக்கு அனுப்புங்கள் என்று நடிகர் சங்கத்துக்கு  ஆர். கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

இது பற்றிய விவரம் இதோ:

சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப  வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ் .அவர்  தன்மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் ‘காட்டுப்புறா’. இது தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகள் வாசனைப் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா தியாகராயர் க்ளப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ஆடியோவை வெளியிட்டார்.

மானத்தை வாங்காதீர்கள் - நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி

விழாவில்  தமிழ் திரைப்பட இயக்குநர்கள்  சங்கத்தின் செயலாளர் ஆர்.கே. செல்வமணி பேசும் போது

” இந்த பாபு கணேஷ் என் நெருங்கிய நண்பர். குடும்பத்துடன் பழகிடும் குடும்ப நண்பர். என் காலத்தில் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். நான் 30 ஆண்டுகளுக்கு முன் ‘செம்பருத்தி’ எடுத்தபோது அவர் ‘கடல்புறா’ எடுத்தார். இப்போது ‘காட்டுப்புறா’ எடுத்திருக்கிறார். அவர் மகன் அன்று கைக்குழந்தை, இன்று கதாநாயகனாகி இருக்கிறான். 8 பேக் வைத்திருக்கிறான்  ஒரு நாள் பாபு கணேஷ் எனக்கு தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசினார். என் மகனை சிசி எல்லில் சேர்க்காமல் தவிர்த்து விட்டார்கள் என்று. ஏதாவது செய்ய முடியுமா  என்றார். அது நடிகர் சங்கம் சம்பந்தப்பட்டது நான் ஒன்றும் செய்ய முடியாதுப்பா என்றேன். என் மனைவி ரோஜாவின் அண்ணன் மகள் என்னிடம் கேட்டாள். ‘என்ன மாமா உங்க ஆளுங்க. ஊத்திக்கிட்டு வந்துட்டாங்க போல..’ அவள் என்னைக் கேலி செய்தாள்.செலிபிரிட்டி கிரிக்கெட்டில் நம் நடிகர்கள் சரியாக ஆடாததைத்தான் அப்படிச் சொல்லிக் காட்டினாள்.

யாரோ  நடிகர்கள் செலிபிரிட்டி கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஆனால் வெளியில் இருப்பவர்கள் தமிழ்நாடே ஆடுவதாக  நினைக்கிறார்கள்..தமிழர்களே ஆடுவதாக நினைக்கிறார்கள். நம் மானம் போகிறது. நடிகர் சங்கத்துக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன் இதுமாதிரி செலிபிரிட்டி கிரிக்கெட்டுக்கு ஆடத்தெரிந்த நடிகர்களை அனுப்புங்கள் .ஆடத்தெரியவில்லை என்றால் சில மாதம் பயிற்சி கொடுத்து அனுப்புங்கள்.இப்படி மானத்தை வாங்காதீர்கள். ரிஷிகாந்துக்கு தாணு சார் வாய்ப்பு தருவதாக கூறியிருக்கிறார்.இன்றைக்கு சினிமா மாறியிருக்கிறது.இன்றுள்ள சூழலில்  ‘காட்டுப்புறா’வை  வெளியிட முடியுமா?  இன்றைக்குள்ள சினிமாபழையபடி வருமா?

இன்று படம் ஓடவில்லை ஓடவில்லை  என்கிறோம். எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடுகிறது என்று நமக்கே தெரிவதில்லை ரசிகன் எப்படி வருவான்?

பழையபடி குறிப்பிட்ட திரையரங்குகளில் தினசரி 3 காட்சிகள் முறை  மீண்டும் வர வேண்டும். எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடுகிறது என்று ரசிகர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும்.

சினிமா சூழல் மாறி விட்டது. முதலில் எங்களை விரட்டினார்கள். இனி உங்களையும்  (தயாரிப்பாளர்களை )விரட்டப் போகிறார்கள்.

இப்போது சினிமா புரோக்கர்கள் கையில் போய்விட்டடது. புரோக்கர்கள்தான் நம்மை ஆண்டு வருகிறார்கள். உற்பத்தி செய்பவர்கள் வாழ முடியவில்லை, விற்கிறவர்களும் வாழ முடியவில்லை. இது விவசாயத்தில் மட்டுமல்ல சினிமாவிலும் வந்து விட்டது. இது என்று மாறும்? ” இவ்வாறு செல்வமணி ஆவேசத்துடன் பேசினார்.

விழாவில் கிரிக்கெட்வீரர் பத்ரிநாத் சுப்ரமணியன், மிஸ்டர் வேர்ல்டு ராஜேந்திரமணி, சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி , பாடகர் கானாபாலா, பாடகி வாணிஜெயராம், இயல்இசை நாடக மன்ற செயலாளர் சச்சு. தயாரிப்பாளர்கள் ‘பிலிம் சேம்பர்’ காட்ரகட்டபிரசாத்,ஜெயந்தி சண்ணப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

(செயல்படுத்த உள்ள தீர்மானங்கள்)

  1. நமது சங்க இயக்குநர்கள் மற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்கள் சம்பள உயர்வு ஒப்பந்தம் தொழிலாளர்கள் நல ஆணையர் முன்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்வாகிகள் கையெழுத்தானது. நமது சங்க உறுப்பினர்களுக்கு மாத வருமானம் உறுதியானது நம் சங்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ஒப்பந்த காலம் 6 மாதங்கள் மட்டுமே. அதற்கு மேலும் படப்பிடிப்பு தொடர்ந்தால் மாதாமாதம் வருமானம் நிச்சயம்.
  2. வருடாவருடம் நம் இயக்குநர்கள் சங்கம் மூலம் 1000 கண் தானம் வழங்கப்படும்.
  3. நமது சங்க அலுவலகத்திற்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் இடம் கேட்டிருந்தோம். நமது கோரிக்கை நியாயமானது என்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் பதில் கூறியதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
  4. Visual Communication Course-ல் உள்ளது போல நமது சங்க உறுப்பினர்கள் Short Films எடுக்க, நமது இயக்குநர்கள் சங்கத்தில் இலவசமாக 5D Cameras, Editing, Re-Recording வசதிகள் செய்து தரப்படும். நாளைய இயக்குநர்கள் போல் தங்களது குறும்படங்களை ஒரு சேனலில் பேசி ஏற்பாடு செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் குறும்பட விழாக்களில் அவர்களது குறும்படங்களும் இடம்பெற வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
  5. “பிரபலம்” என்கிற இணையதளம் தொடங்கி, அதில் சாதனை புரிய வேண்டும் என்று ஆர்வமுள்ள திறமையுள்ள நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் தங்களைப் பற்றிப் (Bio-Data) பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலம் திறமையுள்ள உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உடனே வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் இடைத்தரகர்கள் மூலம் மேற்குறிப்பிட்டவர்கள் ஏமாற்றம் அடைவதைத் தடுக்கலாம். அத்துடன் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு நிச்சயமாவது உறுதியாகிறது.
  6. நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கு ஒழுங்காக கால்சீட் கொடுக்க வேண்டும். தவறியவர்கள் மீது தொழில் ஒத்துழையாமை(Non Co-Operation) அமல்படுத்தப்படும்.
  7. தமிழில் சொந்தக் குரலில் பேசி நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

இயக்குநர் திரு.வி.சேகர்

  1. இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமல் இனிமேல் இயக்குநராக, உதவி இயக்குநராக பணிபுரியமுடியாது.
  2. இயற்கை எய்தியவர்களுக்கு 1 லட்சம் நிதிநிலையை உயர்த்த போலீஸ் கமிஷனரிடம் கடிதம். உறுப்பினர்கள் அடையாள அட்டை காட்டினால் அதற்குத் தகுந்த கண்ணியமாக நடத்துதல்.

இந்த விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் திரு.விக்ரமன், பொதுச்செயலாளர் திரு.ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் திரு.வி.சேகர், இணைச்செயலாளர்கள் திரு.என்.வேல்முருகன், திரு.என்.ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினர்கள் திரு.E.ராமதாஸ், திரு.T.P.கஜேந்திரன், திரு.மனோபாலா, திரு.ரவிமரியா, திருமதி.மதுமிதா, திரு.ராஜாகார்த்திக், திரு.A.K.நம்பிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Visit Chennaivision for More Tamil Cinema News