புதிய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை

புதிய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை:-

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியை துவக்குங்கள் என புதிய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை அளித்துள்ளார், நேற்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று புதிய அமைச்சர்களை சந்தித்துள்ளார் மோடி.

இதில் 19 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர், பின்னர் பாரத பிரதமர் மோடி அவர்களுடன் 30 நிமிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். உங்களது பொறுப்புள்ள செயல்பாடுகளால், அரசின் திட்டங்கள் கடைக்கோடியில் இருக்கும் பாமரனுக்கும் சென்றடைய வேண்டும். என அறிவுரை வழங்கினார் பாரத பிரதமர் மோடி அவர்கள்.

குளச்சலில் வர்த்தக துறைமுகம் வருவது உறுதி

குளச்சலில் வர்த்தக துறைமுகம் வருவது உறுதி:

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது, இந்த திட்டத்தின் மதிப்பு ரூ. 25 ஆயிரம் கோடியாகும்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத் தில் இனையம் அருகே குளச்சல் துறைமுகம் கட்ட கொள்கையள வில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார் மேலும் இந்த திட்டத்தின் மூலம், 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

துறைமுகம் வராமல் தடுப்பதற்கு அப்பாவி மீனவர்களை திமுக, மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தூண்டி விடுவதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருந்தார்.

துறைமுகத்தை வரவிடாமல் தடுக்க, திட்டமிட்டு நடத்தப்பட்ட தீய சக்திகிகளின் முயற்சிகளை பொருட்படுத் தாமல், மத்திய அரசு உறுதியாக முடிவு எடுத்துள்ளது, இதற்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

துறைமுகப் பணிகள் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தொடங்கும் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இதற்கான பணிகள் மூன்று கட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது, முதற்கட்ட பணியை, 6,575 கோடி ரூபாயில் மேற்கொள்ளவும், மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான முதற்கட்ட வேலைகள் 2 அல்லது 3 மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்க படுகிறது.

மோடி அமைச்சரவை இல் 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்

மோடி அமைச்சரவை இல் 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்:-

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது, பிரதமர் மோடி அவர்கள் பதவி ஏற்ற பின் இரண்டாவது முறையாக அமைச்சரவை இல் மாற்றம் செய்வது குறிப்பிட தக்கது.

புதிய அமைச்சரவையில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 19 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது, இதற்கான சிறப்பு நிகழ்ச்சி ராஷ்டிரபதி பவனில் இன்று நடந்தது.  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையில் புதிய மந்திரிகள் பதவி ஏற்று கொண்டனர்.

புதிய அமைச்சரவை விவரம் பின்வருமாறு:-

பிரகாஷ் ஜவடேகர் – சுற்று சூழல் துறை இணை மந்திரி (தனி பொறுப்பு) அவர் கேபினட் மந்திரி அந்தஸதுக்கு உயர்த்தப்பட்டு உள்ளார்.

அவரை தொடர்ந்து, பகான் சிங் குலஸ்தே, டார்ஜிலிங் எம்.பி. எஸ்.எஸ்.அலுவாலியா, பிஜாபூர் எம்.பி. ரமேஷ் சந்தப்பா ஜிகஜிநாகி, டெல்லி பாஜக தலைவரும் ராஜஸ்தான் மாநில எம்.பி.யுமான விஜய் கோயல், இந்திய குடியரசு கட்சி (என்டிஏ கூட்டணியில் உள்ளது) எம்.பி. பந்து அதாவாலே, அசாம் எம்.பி. ராஜன் கோஹெய்ன், அனில் மாதவ் தவே, குஜராத் பாஜக தலைவர் பார்சோத்தம் ரூபாலா, மகேந்திரநாத் பாண்டே, உத்தரகாண்ட் எம்.பி. அஜய் டம்டா, ஷாஜன்பூர் எம்.பி. கிருஷ்ணராஜ், மனுஷ் மந்தாவியா, அப்னா தல் தலைவர் அனுப்பிரியா படேல், ராஜஸ்தான் எம்.பி. சி.ஆர்.சவுத்ரி, நாடாளுமன்ற கூட்ட நடவடிக்கைக் குழு தலைவர் பி.பி.சவுத்ரி, துலே எம்.பி. சுபாஷ் பாம்ரே ஆகியோர் பதவியேற்றனர்.

மேலும் 5 பேர் அமைச்சரவை இல் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிட தக்கது.

நீக்க பட்டவர்கள் பட்டியல்:-

ரசாயன மற்றும் உர துறை இணை அமைச்சர் நிஹல்சந்த் மேக்வால், மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கதீரியா, நீர்வளத் துறை இணை அமைச்சர் சன்வர் லால் ஜாட், பழங்குடியின விவகாரத்துறை இணை அமைச்சர் மன்சுக்பாய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். டி.பாஸ்வா, எம்.கே.குந்தாரியா ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

புதுவையில் இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது : பொன்.ராதாகிருஷ்ணன்

புதுவையில் இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது : பொன்.ராதாகிருஷ்ணன்:-

புதுவை மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் வரும், என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காரைக்காலுக்கு வந்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

புதுவையில் மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு மாறாக தேர்தலில் வெற்றி பெறாத ஒரு தலைவரை முதல்அமைச்சராக காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தி இருக்கின்றது. எனவே எப்பொழுது வேண்டுமானாலும் புதுவை மாநிலத்திற்கு இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

புதுவையில் நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்று சொன்னால் மத்தியில் ஆளுகின்ற பிரதமர் நரேந்திரமோடியினுடைய திட்டங்களை புதுவை மாநிலத்திற்கு அதிகமாக கொண்டு சேர்க்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆளுமை நிறைந்த ஒரு அரசாங்கம் புதுவைக்கு வர வேண்டும். அது நிகழ்வதற்கான வாய்ப்பும் பெருகி வருகிறது.

சட்டம்ஒழுங்கை பொறுத்தவரை அது அந்தந்த மாநிலங்களின் கையில்தான் உள்ளன. ரயில் நிலையம் மற்றும் ரயில் பயணம் இதுபோன்ற இடங்களில் மட்டும் ரயில்வே துறையின் கவனம் கொடுக்கப்படுகிறது. அவர்களது எல்லைக்கு அப்பாற்பட்டு அவர்களால் செயல்பட முடியாது. இது எல்லோருக்கும் நன்றாக தெரியும். சட்டம்ஒழுங்கை பொறுத்தவரை மாநில அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். ரயில்வே பகுதிக்கு உள்ளே தவறுகள் நடைபெறாத வகையில் ரயில்வே துறை செயல்படும்.

பிரதமர் நரேந்திரமோடி எந்த கட்சியின் ஆட்சி, எந்த மாநிலத்தில் நடைபெறுகிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல், அனைத்து மாநில மக்களுக்கும் செய்ய வேண்டியது நமது கடமை, எனது இந்திய நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டியது எனது கடமை என்று எல்லா திட்டங்களையும் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வழங்கி வருகிறார்.

பிரதமர் எல்லா வி‌ஷயங்களுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுப்பார். சில வி‌ஷயங்களுக்கு சிறப்பம்சங்கள் புதுவை மாநிலத்திற்கு உள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் பிரதமர்தான் தரவேண்டும் என்று சொன்னால் எந்தளவிற்கு சாத்தியம் என்பது குறித்து மக்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

புதுவை மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ஏராளமான நிதிகள் கிடைக்காமல் இருந்து வருகிறது. புதுவையில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று மாநில பா.ஜனதா கட்சி சார்பில் தீர்மானமே போடப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது குறித்து நான் பலதடவை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜூடன் பேசி உள்ளேன். பிரதமர் நரேந்திரமோடி மீனவர்களின் கவலைகளை நேரடியாக தெரிந்து கொண்டிருக்கிறார். மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒலிம்பிக்ல் பங்கேற்கும் இந்திய வீரர்களை சந்தித்தார் பாரத பிரதமர் மோடி

ஒலிம்பிக்ல் பங்கேற்கும் இந்திய வீரர்களை சந்தித்தார் பாரத பிரதமர் மோடி:-

ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள தடகள வீரர், வீராங்கனைகளை டெல்லியில் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

உலகின் மிகப்பெரிய தொடர் எனக் கருதப்படும் இந்த தொடருக்கு இந்தியாவில் இருந்து 13 வகையான பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் தகுதிப் பெற்றுள்ளனர். போட்டிகள் அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் வீரர்களை டெல்லி, மானக்ஷா மையத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், விளையாட்டுத்துறை செயலாளர் ராஜிவ் யாதவ், அனைத்திந்திய விளையாட்டு கவுன்சில் (ஏஐசிஎஸ்), சேர்மன் விஜய் மல்கோத்ரா, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் ராஜிவ் மேதா, ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் பாத்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது அவர்கள் வெற்றி பெற பாரத பிரதமர் மோடி அவர்கள் மனமார வாழ்த்தினர்.

சர்வதேச யோகா தினம்: ஜூன் 21ஆம் தேதியை தேர்வு செய்தது ஏன்?

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்ற ஐ.நா சபை கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதன்படி, ஜூன் 21ஆம் தேதியை உலக யோகா தினமாக உலக நாடுகள் கொண்டாடி வருகின்றன. இன்று 2வது சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதும் கொண்டாடுப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜூன் 21ஆம் தேதியை எதற்காக யோகா தினமாக தேர்வு செய்யப்பட்டது என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும், சிலருக்கு உண்மையான தகவல் தெரியவில்லை. மேலும், சிலரோ, இந்துத்துவாவை வளர்க்கும் பா.ஜ.க 21ஆம் தேதியை யோகா தினமாக அறிவித்ததற்கு உள்நோக்கம் இருக்கிறது, என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், உண்மை அதுவல்ல, இந்தியாவில் வேனில் காலம், மழைக் காலம், குளிர்காலம் என எல்லாக் காலமும் பகலும் இரவும் கிட்டத்தட்ட சமம். அதாவது பகல் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை.

அமெரிக்காவின் சில பகுதிகள், ஐரோப்பாவின் பெரும்பகுதி, ஆசியாவில் ரஷ்யா, சீனா ஜப்பான் போன்ற நாடுகளின் பெரும்பகுதிகள், இவற்றில் சில சமயம் சூரியன் ஒன்றிரண்டு மணி நேரம்தான் வெளியில் இருக்கும். ஆண்டு தோறும் ஜூன் 21ஆம், தேதி அன்று தான் உலகெங்கும் சூரியன் நீண்ட நேரம் வெளியில் இருக்கும். பல உலக நாடுகளில் இந்நாள் ஒரு குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது, என்பதனாலேயே இந்த நாளை சர்வதேச யோகா நாளாக தேர்வு செய்யப்பட்டது.

Visit Chennaivision for More Tamil Cinema News

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த 2014-ம் ஆண்டு, மே மாதம் 26 ஆம் தேதி பதவி ஏற்றது. அதைத்தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி மத்திய அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டது.

அதன்பின்னர் 18 மாதங்களுக்கு இடையே மத்திய அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

ஆனால் நீண்ட காலமாக மத்திய அமைச்சரவை மாற்றம் பற்றி பேசப்பட்டு வருகிறது. அந்த மாற்றம், வரும் 18, 20- ஆம் தேதிகளுக்கு இடையே செய்யப்பட்டு விடும் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கானா உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 12ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் அந்தப் பயணத்தை முடித்து விட்டு நாடு திரும்பிய பின்னர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் ஒரு நாளில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு எடுத்திருப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

Visit Chennaivision for More Tamil Cinema News

நெல்லுக்கான மத்திய அரசு விலை போதுமானதல்ல: ராமதாஸ்

ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு அறிவித்துள்ள நெல் ஆதரவு விலை போதுமானதாக இல்லை, என்று பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேளாண் விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில் உழவர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. உலகிற்கே சோறு போடும் கடவுள்களாக திகழ்பவர்கள் உழவர்கள் தான். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உலகம் பசியின்றி வாழ முடியும். ஆனால், தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயிக்கும் உரிமைக் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இயற்கை சீற்றங்கள், காலநிலை மாறுபாடு உள்ளிட்ட அனைத்தையும் எதிர்கொண்டு  அதிக செலவு செய்து உற்பத்தி செய்யப்படும் நெல், கரும்பு போன்ற பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததால் தான் உழவர்களின் தற்கொலை கடந்த 25 ஆண்டுகளாக தொடர்கதையாகி வருகிறது.

நெல்லுக்கான மத்திய அரசு விலை போதுமானதல்ல: ராமதாஸ்

நெல்லுக்கான மத்திய அரசு விலை போதுமானதல்ல: ராமதாஸ்

நடப்பாண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 4.1 % மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் கடந்த ஆண்டில் நெல்லுக்கான உற்பத்திச் செலவு 10 விழுக்காடு அதிகரித்திருகிறது. இதை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.1424 ஆகும். 2014-15 ஆம் ஆண்டில் இது 1549 ஆக அதிகரித்திருக்கிறது. ரூ.1549 செலவு செய்து விளைவித்த ஒரு குவிண்டால் நெல்லை ரூ.1470-க்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நஷ்டத்திற்கு விற்க வேண்டும் என்று கூறுவது சரியா?

உத்தரப்பிரதேசத்தின் பரேலி நகரில் 28.02.2016 அன்று நடைபெற்ற உழவர்கள் பேரணியில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் 75&ஆவது விடுதலை ஆண்டான 2022 ஆம் ஆண்டுக்குள்  உழவர்களின் வருமானத்தை இப்போது இருப்பதை விட இரு மடங்காக்கப் போவதாக உறுதியளித்தார். இது சாதாரணமான இலக்கு அல்ல. விவசாயத்திற்கான செலவு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அச்செலவை ஈடுகட்டும் அளவுக்கு வேளாண் விளைபொருட்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட வேண்டும்.

கொள்முதல் விலையை ஒருபுறம் அதிகரிப்பதுடன் அதிக லாபம் தரும் பயிர்களை பயிரிடுவதற்கு உழவர்களை தயார்படுத்த வேண்டும். வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி  விற்பதற்கான பயிற்சிகளை வழங்குதல் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் தான் விவசாயிகளின் வருமானத்தை அடுத்த 6 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க  முடியும். ஆனால், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதில் மத்தியஅரசு  இந்த அணுகுமுறை தொடர்ந்தால் விவசாயிகளின் வருமானம் பெருகுவதற்கு பதில் குறைந்து விடும்.

விவசாயிகள் மற்றும் வேளாண்மை வளர்ச்சிக்கான திட்டங்களை பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அதன் அறிக்கையை 04.10.2006 அன்று மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்க வசதியாக, அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அதன்பின் 10 ஆண்டுகளாகும் நிலையில் இன்று வரை அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதன்விளைவு தான் உலகிற்கு உணவு படைக்கும் உழவர்களின் வாழ்க்கைத்தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதுடன், தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன.

உழவர்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதாக கூறி வரும் பிரதமர் நரேந்திர மோடி, அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். அவற்றில் முதல் கட்டமாக வேளாண் விளைபொருளுக்கு அவற்றின் உற்பத்தி செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும். அதன்படி ஒரு குவிண்டால் நெல்லுக்கு கொள்முதல் விலையாக, உற்பத்திச் செலவு 1549 ரூபாயுடன் லாபம் ரூ.775 சேர்த்து  ரூ. 2324 என்று நிர்ணயிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த கலெக்டர் மீது நடவடிக்கை

மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானி மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் அஜய் சிங் கங்வார்.

இவர் தனது பேஸ்புக்கில் நாட்டின் முதல் பிரதமர் நேரு பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். அதில் அவர், ‘‘1947-ம் ஆண்டு நம் நாடு இந்து தலிபான்கள் தேசமாக மாறுவதை தடுத்தது நேருவின் தவறா? ஐஐடி, இஸ்ரோ, பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம், ஐ.ஐ.எம், பெல் போன்ற நிறுவனங்களை உருவாக்கியது அவரது தவறா? ஆசாராம் பாபு, ராம் தேவ் போன்றவர்களை பாராட்டாமல், சாராபாய், ஹோமி ஜஹாங்கீர் போன்ற விஞ்ஞானிகளை பாராட்டியது அவரது தவறா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த கலெக்டர் மீது நடவடிக்கை

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருப்பவர் இதுபோல் கருத்து தெரிவிப்பது சர்வீஸ் விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி அஜய் சிங் கங்வார் மீது விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், கங்வார் பர்வானி கலெக்டர் பதவியிலிருந்து தலைமை செயலக துணைச் செயலாளர் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அஜய் சிங் கங்வாருக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய வேண்டும் என்று பேஸ்புக்கில் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி (நேதாஜி பிறந்தநாள்) கருத்து தெரிவித்திருந்ததாக மத்திய பிரதேச மாநில அரசு நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டை கங்வார் மறுத்துள்ளார்.

ஐ.நா.சபையில் யோகா முகாம் நடத்தும் சத்குரு ஜக்கி வாசுதேவ்

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா சபை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது.

ஐ.நா.சபையில் யோகா முகாம் நடத்தும் சத்குரு ஜக்கி வாசுதேவ்

இதையடுத்து, டெல்லி ராஜபாதையில் 21-6-2015 அன்று 5 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி குழந்தைகள் உள்பட சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டெல்லியில் உள்ள 152 வெளிநாட்டு உயர் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பல வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.

ஐ.நா.சபையில் யோகா முகாம் நடத்தும் சத்குரு ஜக்கி வாசுதேவ்

அன்றைய யோகாசன நிகழ்ச்சியில் 35 ஆயிரத்து 985 பேர் பங்கேற்றதாக கணக்கிட்டுள்ள கின்னஸ் நிறுவனம், உலகிலேயே முதன்முதலாக அதிக நபர்கள் ஒரே இடத்தில் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி என்ற உலக சாதனையில் அன்றைய நிகழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதேபோல், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் பங்கேற்ற மாபெரும் யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிலையில், அடுத்த (ஜுன்) மாதம் 21-ம் தேதியன்று இரண்டாவது சர்வதேச யோகா தினத்தையும் சிறப்பாக நடத்த ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்யப்படுகிறது. ‘நிலைத்த முன்னேற்ற இலக்கு’ என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த சிறப்பு யோகாசன முகாமில் ‘இஷா’ ஆன்மிக மையத்தின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் மாபெரும் யோகாசன முகாமை நடத்த ஐ.நா.சபைக்கான இந்தியாவுக்கான நிரந்தர மையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது

Visit Chennaivision for More Tamil Cinema News