தென்னிந்திய​ ​நடிகர் சங்கத்துக்கு ​மலையாள நடிகர் சங்கம் ஆதரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மலையாள நடிகர் சங்கம் ஆதரவு

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில்

மலையாள திரைப்பட நடிகர்களின் அமைப்பான “அம்மா”வுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. இதில் நடிகர் சங்கம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் வெற்றி பெற ஒத்துழைத்த “அம்மா” அமைப்புக்கு நன்றி தெரிவிப்பதோடு எதிர் காலத்தில் நடிகர் சங்கமும் தோளோடு தோள் சேர்ந்து சினிமா தொழிலின் வளர்ச்சிக்காகவும் நடிகர் நடிகைகளின் நலனுக்காகவும் நல்ல பல திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளோம். இந்த கடிதத்தை “அம்மா” அமைப்பின் சமீபத்தில் நடந்த பொதுகுழுவில் மெகா ஸ்டார் மம்முட்டி வாசிக்க, அனைத்து அங்கத்தினரின் ஒப்புதலும் பெறபெற்றது. மேலும் “அம்மா” அமைப்புயின் அதரவும், நடிகர் சங்க நல் உறவு வலுவடையவும்

சகலவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அதன் செயலாளர் நடிகர் பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நடிகர் சங்கம் மீண்டும் திருட்டு விசிடி வேட்டை

நடிகர் சங்கம் மீண்டும் திருட்டு வி.சி.டி வேட்டை, கும்பகோணம் “Can TV” லோக்கல் சேனலில்

சமீபகாலங்களில் தென்னிந்திய திரைப்படங்கள் அனைத்துமே திருட்டு வி.சி.டி, மற்றும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக ஒளிபரப்புவதும் லோக்கல் கேபிள் டீவி மற்றும் ஆமினி பேருந்துகளில் அனுமதியின்றி ஒளிபரப்படுவதால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவது பெரிதும் பாதிக்கப்படுவதும், சினிமாவை நம்பி முதலீடு செய்பவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவது மிகப்பெரிய சோக கதையாக நடந்து கொண்டிருக்கிறது. அதை தடுக்கும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சட்டபூர்வமாக நடவடிக்கைள் எடுத்து வருகிறது, அதற்காக தமிழகமெங்கும் பல கண்காணிப்பு குழுக்களை அமைத்து அதன்மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இந்த தேடுதல் வேட்டையின் போது கும்பகோணம் “Can TV” லோக்கல் சேனலில் ரெட்ஜெயண்ட தயாரித்த மனிதன் திரைப்படத்தை ஒளிபரப்பபட்டது, இதுகுறித்து நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் புகாரின் பேரில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு கண் காணிப்பாளர். திருமதி. ஜெயலட்சுமி IPS. உத்திரவு படி காவல் ஆய்வாளர்கள். திரு செந்தில். திருமதி. சித்ரா, நடிகர் சங்க திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர். சதீஷ்குமார் ஆகியோர் “Can TV” உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் கைது செய்து கும்பகோணம் சிறையில் அடைத்தனர். மேற்கண்ட செய்தியை நடிகர் சங்கம் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

ஜேப்பியார் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்

சத்யபாமா பல்கலைக்கழக நிறுவனர் ஜேப்பியார் மறைவுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் கல்வி தாளாளருமான திரு.ஜேப்பியார் அவர்களின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகம் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் சார்பாக ஆழந்த இறங்களையும் ,அவரது பிரிவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்துக்கு அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம். திரு.ஜேப்பியார் அவர்கள் திரைத்துறையில் நடிகராக , இயக்குநராக ,தயாரிப்பாளராக பல நிலைகளில் அரும்பங்காற்றியவர். உதவி மனப்பாண்மையுடன் திரைத்துறையின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும் நடிகர் சங்கத்தின் மீதும் அதன் உறுப்பினர்களின் மீதும் அளவு கடந்த அன்பும் பாசமும் கொண்டவருமாவார்.

ஜேப்பியார் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்

ஜேப்பியார் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்

தற்போதையை நடிகர் சங்க நிர்வாகம் தேர்தலை சந்தித்த காலகட்டத்தில் அவரை சந்தித்த போது , நடிகர் சங்க எதிர் கால வளர்ச்சி பணிகள் பற்றி பேசுகையில் மிக ஆர்வத்துடன் அதை கேட்டு அறிந்து புதிய நிர்வாகம் அமைந்த பின் எடுக்கும் அனைத்து செயல்களுக்கும் , முடிவுகளுக்கும் நான் முழு ஓத்துழைப்பு தருவேன் என்னுடைய உதவி எப்போதும் உங்களுக்கு உண்டு என்று அன்போடு உறுதி அளித்தார். அதை தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும்போது அந்த கட்டிடத்துக்கு தேவையான அடிப்படை கட்டுமான பொருட்களை நான் எனது நிறுவனத்தின் மூலம் தருகிறேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். அது மட்டும் இன்றி நடிகர்களாக இருந்து இன்று முதியவர்களாக மாறி , மருத்துவம் மற்றும் பொருளாதார அடிப்படை வசதியின்றி போராடி கொண்டிருக்கும் கலைஞர்களுக்கு என்னால் இயன்ற அளவிற்கு உதவிகளை நடிகர் சங்கம் மூலமாக செய்கிறேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

சமீபத்தில் அவரை அணுகி பேசுகையில் வரும் மாதத்தில் நாம் ஒன்றாக அமர்ந்து கலந்து ஆலோசித்து விரிவாக எல்லாவற்றையும் முடிவு செய்வோம் என்றும் மகிழ்ச்சிடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் நம்மைவிட்டு பிரிந்தது தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும் , திரைத்துறைக்கும் மிகப்பெரிய இழப்பாகும். கடந்த காலங்களில் அவர் எங்கள் மீது கொண்டிருந்த அன்புக்கும் பாசத்துக்கும் நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். அவரது ஆத்மா இறைவனிடம் சேர்ந்து எங்களுடைய மூத்த கலைஞர்களின் ஆத்மாகளோடு இணைந்து எங்களுக்கு வழி காட்டுவார் என்று நம்புகிறோம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Visit Chennaivision for More Tamil Cinema News

தஞ்சாவூரில் விவசாயம் செய்யப் போகும் விஷால்

தஞ்சாவூரில் சொந்தமாக நிலம் வாங்கி, அதில் விவசாயம் செய்யப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கத்தில் நெல் திருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் விஷால் பேசியதாவது:

விதை விதைக்கும் பணிதான் எனக்கும் பிடிக்கும். சென்னையில் நாசர், கருணாஸ், கார்த்தி, நான் ஆகியோர் சேர்ந்து ஒரு அணிக்கான விதையை விதைத்தோம். இன்று அது பெரிதாக உருவாகி தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற ஒன்றையே நடத்திக்காட்டும் அளவில் வளர்ந்துள்ளது.

விவசாயிகளுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு பேச வேண்டுமானால், நானும் விவசாயியாக மாறவேண்டும். விரைவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் என்னுடைய உழைப்பில் உருவான பணத்திலிருந்து நிலம் வாங்கி விவசாயம் செய்ய உள்ளேன். என்னுடைய நீண்ட நாள் விருப்பமும் அதுதான்.

தஞ்சாவூரில் விவசாயம் செய்யப் போகும் விஷால்

தஞ்சாவூரில் விவசாயம் செய்யப் போகும் விஷால்

எனது பள்ளிக்காலத்தில் படித்த இயற்பியல், வேதியியல் பாடம் எல்லாம் மறந்துவிட்டன. ஆனால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம் என்று படித்தது மட்டும் இன்னும் மறக்காமல் உள்ளது. அந்த விவசாயத்தை பொறியியல் துறை, மருத்துவத்துறை போன்ற விவசாயத்தையும் ஒரு துறையாக மாற்றி சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை வர வேண்டும். சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பிரச்சனை இருக்கவே செய்கிறது. கடன் உள்ளிட்ட எந்த பிரச்சனை வந்தாலும் தற்கொலை என்ற முடிவுக்கு செல்லக்கூடாது. அது நிரந்தர தீர்வும் அல்ல.

Visit Chennaivision for More Tamil Cinema News

PVP சினிமா நிறுவனம் படத்தயாரிப்பில் இருந்து வெளியேறவில்லை

PVP சினிமா நிறுவனம் படத்தயாரிப்பில் இருந்து வெளியேறவில்லை

PVP சினிமாவின் பத்திரிக்கை குறிப்பு:

‘நான் ஈ’, ‘விஸ்வரூபம்’, ‘தோழா’, ‘பெங்களூரு நாட்கள்’ போன்ற அற்புதமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கிய நிறுவனம் PVP சினிமா.  அண்மையில்,  இந்த நிறுவனம் படத்தயாரிப்பில் இருந்து வெளியேறுகிறது போன்ற செய்திகள்,  ஊடகங்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தகவல்  என்றும், இது போன்ற தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும்  PVP நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. “வதந்திகளும், ஆதாரமற்ற செய்திகளும் சமூக வலைத்தளங்களில் மற்றும் ஊடங்களில் பரவி கொண்டு வருகிறது. தோல்விகளை கண்டிறாத யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அந்த தோல்விகளை வெற்றி படிகளாக மாற்றுவதே உண்மையான வெற்றிக்கு பாதை வகுக்கும்.  ஏற்றங்களும், இறக்கங்களும் சமமாக இருக்கும் ஒரு துறை, சினிமா தான். அப்படி ஏற்பட்ட ஒரு சறுக்களுக்காக பாரம்பரியமிக்க  எங்கள்  நிறுவனம் ஒருபோதும் துவண்டுவிடாது. பிரபல ஹீரோ மற்றும் பிரபல இயக்குனரின்  கூட்டணியில் உருவாகும்  ஒரு படம் எங்களின் தயாரிப்பு வரிசையில் இருப்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம் . அதுமட்டுமின்றி,  PVP சினிமா தொடர்ந்து மக்களுக்காக தரம் வாய்ந்த படங்களை தயாரித்து வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக உள்ளது ” என்று சொல்கிறது PVP சினிமாவின் பத்திரிக்கை குறிப்பு.

Visit Chennaivision for More Tamil Cinema News

 

சிங்கம்-2 தயாரிப்பாளரின் புதிய படம் மாதேஷ் டைரக்க்ஷனில் த்ரிஷா !

சிங்கம்-2 தயாரிப்பாளரின் புதிய படம் மாதேஷ் டைரக்க்ஷனில் த்ரிஷா !

சிங்கம்-2 தயாரிப்பாளரின் புதிய படம் மாதேஷ் டைரக்க்ஷனில் த்ரிஷா !

சூப்பர் ஹிட் படமான சூர்யா நடித்த “சிங்கம் 2” படத்தை  தயாரித்தவர் எஸ். லட்சுமண் குமார். இவரின் “ சிங்கம் 2 “ பட நிறுவனம் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் “ மோகினி “.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை அம்சம் உள்ள இப்படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார். த்ரிஷாவின் சினிமா வரலாற்றில் இப்படம் முக்கிய பங்குவகிக்கும். மேலும் சுகன்யா , கௌசல்யா , முகேஷ் திவாரி , யோகி பாபு , சாமி நாதன் , ஆர்த்தி கணேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

நம்பர் ஒன்  இயக்குநர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பனிபுரிந்தவர் R. மாதேஷ். இவர் இயக்கத்தில் விஜய் நடித்த “மதுர” படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார்.

இசை: விவேக் மெர்வின் ( புகழ் இசையமைப்பாளர் )

ஒளிப்பதிவு: ஆர்.பி. குருதேவ்

படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன்

ஸ்பெஷல் எபக்ட்ஸ்: Harry Potter படத்திற்கு VFX செய்த லண்டனை சேர்ந்த பிரபல VFX குழுவினர் இப்படத்தின் ஸ்பெஷல் எபக்ட்ஸில் பணியாற்றவுள்ளனர்.

கலை: பாலா

நிர்வாக தயாரிப்பு: கே.வி. துரை

தயாரிப்பு: லட்சுமண் குமார்

இதன் படபிடிப்பு ஜூன் 2 ஆம் தேதி முதல் லண்டனில் ஆரம்பமாகிறது தொடர்ந்து 40  நடைபெறுகிறது. அதன் பிறகு இந்தியாவில் 20  நாட்களும் , பாங்காகில் 10 நாட்களும் ,                   மெக்சிகோவிலும் நடைபெறும்.

ஹாரர் த்ரில்லர் படமாக இப்படத்தை உருவாக்குகிறார் R. மாதேஷ்

Visit Chennaivision for More Tamil Cinema News

 

விஜய் படத்தை பற்றிய உண்மையை போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்

விஜய் படத்தை பற்றிய உண்மையை போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்

விஜய் படத்தை பற்றிய உண்மையை போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்

க க போ திரைப்படத்தின் ஆடியோ வெளீயிட்டு விழாவில் விஜய் படத்தை பற்றிய உண்மையை போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்,

நேற்று (27/05/2016) கமலா திரையரங்கில் ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் வெளீயிடும்  DNS மூவி புரொடக்சன்ஸ் வழங்கும் கககபோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்ட முறையில் நடைபெற்றது.இவ்விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறபித்த உயர்திரு. ஜெ . அன்பழகன் எம்.எல்.எ அவர்கள் இப்போது சிறுபடங்கள் பெரியபடங்கள் என பாராபட்சம் பார்க்காமல் படங்கள் வெளீயிடுவதில் பிரச்சனை வருகிறது,அதுபோல்தான் விஜய் நடித்த தலைவா திரைப்படத்தை வெளியீட கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது, அதனால் மனமுடைந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் போகவே , அதை கண்டு வருத்தமுற்ற நான் அதை வாங்கி வெளியிடுகிறேன் என்று அறிவித்தேன் இரவோடு இரவாக அய்யப்பன் 400 திரையங்குகளை புக் செய்தார் , அதன் பின்னரே படம் வெளியானது இதுபோல நிறைய சின்ன படங்களை வாழ வைத்த ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது அவரது மகன் பாரதி அய்யப்பன் சார்பாக மீண்டும் துவங்கபட்டு சிறிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது , அவரது தந்தைக்கு என் பூரண ஆசிகள் இருந்தது போன்று இவருக்கும் என் ஆசியும் எப்போதும் உண்டு என்று கூறி முடித்தார்.

இத்திரைப்படத்தில் பவர் ஸ்டார், சிங்கம் புலி,m.s. பாஸ்கர், கருணாஸ், மதன் பாப், மயில்சாமி,ரோபோ ஷங்கர் உட்பட 25க்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்,இத்திரைப்படத்தை செல்வி சங்கரலிங்கம் தயாரித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர். நாம் இரசித்துக் குடிக்கும் காபி, அக்னிக் கனல் போல நம் நாவையே எரித்தால் எப்படி இருக்கும். அப்படி விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் நடக்கும் நெருப்பான போராட்டம்தான் வித்தையடி நானுனக்கு.

தன் வழி தனி வழி அதுதான் ஒரே வழி. இதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் போகக்கூடிய நேரெதிர் துருவங்கள் (Noir characters).  அவர்களின் காதலும், மோதலும் தான் வித்தையடி நானுனக்கு.

ஒரே காட்சியில் ஒரே சூழ்நிலைக்கு அதில் உள்ள கதாபாத்திரங்கள் விதம்விதமான மனோபாவங்களை வெளிப்படுத்துவார்கள் . அந்த உணர்வுக்குவியல்களை  தனது (Stroop effect) இசையால்  திகிலும் தீஞ்சுவையும் கலந்து நமக்குள் ஊடுருவுகிறார் இசையமைப்பாளர் விவேக் நாராயண்.

அமெரிக்காவில் வசிக்கும் சௌரா சையத் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஆழ்மனத் துடிப்பை எகிற வைத்து, திரையை சூடாக்கும் அனலடிக்கும் காட்சிகளுடன் ராம்நாதன் கே.பி எழுதி இயக்கியுள்ளார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் வித்தையடி நானுக்கு திரைப்படம் எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனங்களின் பெருமை மிகு கூட்டுத் தயாரிப்பு.

இரு கதாப்பாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் சைக்கோ த்ரில்லர் ‘வித்தையடி நானுனக்கு’!…

ராமநாதன் KB இயக்கத்தில், எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ்  தயாரிக்கும் புதிய படம் ‘வித்தையடி நானுனக்கு’.

இது ஒரு சைக்கோ த்ரில்லர் படமாகும்.

சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ என்ற படம் நினைவிருக்கிறதா.. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வசந்த சேனா வசந்த சேனா…’ பாடல் மிகப் பிரபலம். அந்தப் படத்துக்கு டிஎஸ் முரளிதரன் என்ற பெயரில் இசையமைத்தவர்தான் இப்போது ‘ராமநாதன் KB’ என பெயர் மாற்றிக் கொண்டு இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

அதுமட்டுமல்ல, படத்தின் இரு கதாப்பாத்திரங்களில் ஒருவர்  இவர்தான். இவருக்கு ஜோடியாக சவுரா சையத் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

விவேக் நாராயண் இசையமைக்கிறார். ராஜேஷ் கடம்கோட் ஒளிப்பதிவு செய்கிறார்.

எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் பேனரில் லோகநாதன் D – ஐஎஸ்ஆர் செல்வகுமார்  தயாரிக்கின்றனர்.

படத்தில் ஒரேயொரு பாடல்தான். அதுவும் மகாகவி பாரதியின் ‘பாயும் ஒளி நீ எனக்கு ‘எனத் தொடங்கும் அற்புதமான பாடல். இதற்கு மேற்கத்திய பாணியில் மெட்டமைத்துள்ளாராம் விவேக் நாராயண்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானலில்  படமாக்கப்பட்டுள்ளது.

Visit Chennaivision for More Tamil Cinema News

 

ஒரு லட்சம் திருட்டு டிவிடிக்கள் பறிமுதல் – நடிகர் சங்கம் அதிரடி

ஒரு லட்சம் திருட்டு டிவிடிக்கள் பறிமுதல் – நடிகர் சங்கம் அதிரடி

ஒரு லட்சம் திருட்டு டிவிடிக்கள் பறிமுதல் - நடிகர் சங்கம் அதிரடி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷால் அவர்களின் புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் திருட்டு வி.சி.டி விற்கப்படும் கடையை போலீசார் சோதனை இட்டு, அக்கடையில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீடியோ பைரசி sup. Of Police ஜெயலக்ஷ்மி ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் மதுரையில் உள்ள பாலரங்கபுரம் என்னும் பகுதியில் உள்ள குடோனில் இருந்து இந்த கும்பலை போலீசார் பிடித்தனர் அத்துடன் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள கணினி இயந்திரங்களும் மற்றும் புதிய படங்களை பதிவு செய்துள்ள குறும்தகுடுகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்தியன் எலெக்ட்ரிகல்ஸ் என்னும் கடைக்கு மேலே ராம்சந்த லால் சேட்டு என்பவருடைய  குடோனில் 20 பேர் திருட்டு டி.வி.டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கே இருந்து தர்மபுரி , சேலம் , கரூர் , ஈரோடு உள்ளிட்ட  பத்து மாவட்டத்துக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் தலைமையில் பொதுசெயலாளர் விஷால் அவர்களின் புகாரின் அடிப்படையில் அங்குள்ள திருட்டு டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. Sup. Of Police ஜெய லக்ஷ்மி ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் sup.of police Chennai  நீதி ராஜன் அவர்களின் முன்னிலையில் திருட்டு டி.வி.டி கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் கிச்சாபாளையம் பகுதில் இயங்கி வந்த திருட்டு டி.வி.டி தயாரிக்கும் இடமும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள்  ரமணா மற்றும் நந்தா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Visit Chennaivision for More Tamil Cinema News

பேருந்து உரிமையாளர்களிடம் வேண்டுகோள் வைத்த விஷால்

பேருந்து உரிமையாளர்களிடம் வேண்டுகோள் வைத்த விஷால்

பேருந்து உரிமையாளர்களிடம் வேண்டுகோள் வைத்த விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அதன் பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் தனியார் பேருந்து (ஆம்னி பஸ்) உரிமையாளர்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் மூலமாக வேண்டுகோள் கடிதம் ஒன்று விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

பல கோடி முதலீடு செய்து தயாரிக்கப்படும் திரைப்படம் தியேட்டரில் ரசிகர்கள் ரசித்தால் மட்டுமே போட்ட முதலீட்டை திரும்ப எடுக்க முடியும்! இதில் தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் திருட்டு விசிடி ஆகியவற்றின் பாதிப்புகளை மீறி வெற்றி பெற போராட வேண்டிய நிலை, இது திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினர்களுக்கும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் தனியார் பேருந்துகளில் சட்டவிரோதமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது சமீபகாலங்களில் சர்வ சாதாரணமாகி விட்டது. அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களை மீறிபேருந்தை ஓட்டுவதும், பயண சீட்டு எடுக்காமல் பயணம் செய்வதும் எப்படி சட்டவிரோதமானதோ, அது போலவே திருட்டு விசிடியை பஸ்களில் ஒளிபரப்புவதும் சட்டவிரோதமானதே!

அதனால், திரை உலகை காப்பாற்ற நாங்கள் பல நிலைகளில் போராடி வருகிறோம்! அதற்காக தமிழகமெங்கும் எங்கள் நடிகர்களின் ரசிகர் மன்றங்களின் மூலமாக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை தங்கள் கவனத்தை மீறி ஓட்டுனர்களால் இந்த தவறு நடந்திருந்தால் இனிமேல் இது நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம். இதற்கு தங்களுடைய முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..

இவ்வாறு அறிக்கையில் விஷால் தெரிவித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News