எம்.எல்.ஏ. கருணாஸ் இசையமைப்பில் ‘பகிரி’ திரைப்படம்

வாட்ஸ் அப்பை மையமாக வைத்து உருவாகும் நகைச்சுவை காதல் கதை ‘பகிரி’

இன்று சமூக ஊடகங்களில்  ஃபேஸ்புக் ,வாட்ஸ் அப் போன்றவை தகவல்   தொடர்பு புரட்சி செய்து வருகின்றன. இந்த வாட்ஸ்அப்பை  மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் பெயர் ‘பகிரி’ .

அதாவது வாட்ஸ் அப் என்றால் ‘பகிரி’ என்று பொருள்படும் வகையில் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை  எழுதி தயாரித்து இயக்குபவர் இசக்கி கார்வண்ணன்..

நாயகனாக பிரபு ரணவீரன் நடித்திருக்கிறார். இவர் விஜய் டிவியின் ‘கனாக்காணும் காலங்கள் தொடரின் நாயகனாக நடித்தவர். நாயகி ஷர்வியா, இவர் ஆந்திர வரவு.

ரவிமரியா, ஏ.வெங்கடேசன், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன் என பல இயக்குநர்கள் முக்கிய வேடமேற்று நடித்துள்ளார்கள். திருமாவேலன், சூப்பர்குட் சுப்ரமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஒளிப்பதிவு வீரகுமார். இசை கருணாஸ் எம்.எல்.ஏ. நடிகர் கருணாஸ் இசையமைத்துள்ள முதல் படம் இதுவே. படத்தில் 3 பாடல்கள்.

படம் பற்றி இயக்குநர் இசக்கி கார்வண்ணன் கூறும் போது, ” இது ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதை. பகிர்தல் தொடர்புடைய கதை .

எனவேதான் ‘பகிரி’ எனப்பெயர் வைத்தோம். தாம்பரம் தாண்டி முடிச்சூரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் இளைஞன் ஒருவனை மையம் கொள்கிற கதை இது.

இப்போதைய சமூகச்சூழலில் இக்கால இளைஞர்கள் தங்களின் காதல் எப்படி இருக்க வேண்டும் , வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் , விருப்பம் ,வேலை  எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதை நகைச்சுவை இழையோட சொல்லியிருக்கிறேன். நான்  பகிரவேண்டிய செய்தியையும் சிரிக்கச் சிரிக்க பகிர்ந்திருக்கிறேன். ” என்கிறார்.

படப்பிடிப்பு சென்னையில் மட்டுமல்ல , தாம்பரம், முடிச்சூர், ஸ்ரீபெரும்புதூர்  போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

35 நாட்களில் முழுப்படப்பிடிப்பையும் முடித்து வந்துள்ளது, படக்குழுவின் திட்டமிடலுக்கு ஒரு சான்றாகும்.

விரைவில் பாடல்கள் வெளியாகவுள்ளன.

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த ‘பகிரி’ படம் ஜூலை மாதம் வெளியாகும் விதத்தில் இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Visit Chennaivision for More Tamil Cinema News

கருணாஸ் இசையில் உருவாகும் வாட்ஸ்-அப் பற்றிய படம்

இன்று சமூக ஊடகங்களில்  ஃபேஸ்புக் ,வாட்ஸ் அப் போன்றவை தகவல் தொடர்பு புரட்சி செய்து வருகின்றன. இந்த வாட்ஸ்அப்பை  மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் பெயர் ‘பகிரி’. அதாவது வாட்ஸ் அப் என்றால் ‘பகிரி’ என்று பொருள்படும் வகையில் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை  எழுதி தயாரித்து இயக்குபவர் இசக்கி கார்வண்ணன். நாயகனாக பிரபு ரணவீரன் நடித்திருக்கிறார். இவர் விஜய் டிவியின் ‘கனாக்காணும் காலங்கள்’ தொடரின் நாயகனாக நடித்தவர். நாயகி ஷர்வியா, இவர் ஆந்திர வரவு.

ரவிமரியா, ஏ.வெங்கடேசன், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன் என பல இயக்குநர்கள் முக்கிய வேடமேற்று நடித்துள்ளார்கள். திருமாவேலன், சூப்பர்குட் சுப்ரமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கருணாஸ் இசையில் உருவாகும் வாட்ஸ்-அப் பற்றிய படம்

கருணாஸ் இசையில் உருவாகும் வாட்ஸ்-அப் பற்றிய படம்

படத்துக்கு ஒளிப்பதிவு வீரகுமார். இப்படத்திற்கு நடிகரும், எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் இசையமைத்துள்ளார். படத்தில் 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

படம் பற்றி இயக்குநர் இசக்கி கார்வண்ணன் கூறும் போது, ”இது ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதை. பகிர்தல் தொடர்புடைய கதை. எனவேதான் ‘பகிரி’ எனப்பெயர் வைத்தோம். தாம்பரம் தாண்டி முடிச்சூரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் இளைஞன் ஒருவனை மையம் கொள்கிற கதை இது.

இப்போதைய சமூகச்சூழலில் இக்கால இளைஞர்கள் தங்களின் காதல் எப்படி இருக்க வேண்டும் , வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் , விருப்பம் ,வேலை  எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதை நகைச்சுவை இழையோட சொல்லியிருக்கிறேன். நான்  பகிரவேண்டிய செய்தியையும் சிரிக்கச் சிரிக்க பகிர்ந்திருக்கிறேன்” என்றார்.

படப்பிடிப்பு சென்னையில் மட்டுமல்ல , தாம்பரம், முடிச்சூர், ஸ்ரீபெரும்புதூர்  போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

தற்போது முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்ட படக்குழுவினர், பாடல்களை விரைவில் வெளியிட உள்ளார்கள்.

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த ‘பகிரி’ படம் ஜூலை மாதம் வெளியாகும் விதத்தில் இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Visit Chennaivision for More Tamil Cinema News

தஞ்சாவூரில் விவசாயம் செய்யப் போகும் விஷால்

தஞ்சாவூரில் சொந்தமாக நிலம் வாங்கி, அதில் விவசாயம் செய்யப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கத்தில் நெல் திருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் விஷால் பேசியதாவது:

விதை விதைக்கும் பணிதான் எனக்கும் பிடிக்கும். சென்னையில் நாசர், கருணாஸ், கார்த்தி, நான் ஆகியோர் சேர்ந்து ஒரு அணிக்கான விதையை விதைத்தோம். இன்று அது பெரிதாக உருவாகி தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற ஒன்றையே நடத்திக்காட்டும் அளவில் வளர்ந்துள்ளது.

விவசாயிகளுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு பேச வேண்டுமானால், நானும் விவசாயியாக மாறவேண்டும். விரைவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் என்னுடைய உழைப்பில் உருவான பணத்திலிருந்து நிலம் வாங்கி விவசாயம் செய்ய உள்ளேன். என்னுடைய நீண்ட நாள் விருப்பமும் அதுதான்.

தஞ்சாவூரில் விவசாயம் செய்யப் போகும் விஷால்

தஞ்சாவூரில் விவசாயம் செய்யப் போகும் விஷால்

எனது பள்ளிக்காலத்தில் படித்த இயற்பியல், வேதியியல் பாடம் எல்லாம் மறந்துவிட்டன. ஆனால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம் என்று படித்தது மட்டும் இன்னும் மறக்காமல் உள்ளது. அந்த விவசாயத்தை பொறியியல் துறை, மருத்துவத்துறை போன்ற விவசாயத்தையும் ஒரு துறையாக மாற்றி சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை வர வேண்டும். சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பிரச்சனை இருக்கவே செய்கிறது. கடன் உள்ளிட்ட எந்த பிரச்சனை வந்தாலும் தற்கொலை என்ற முடிவுக்கு செல்லக்கூடாது. அது நிரந்தர தீர்வும் அல்ல.

Visit Chennaivision for More Tamil Cinema News

விஜய் படத்தை பற்றிய உண்மையை போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்

விஜய் படத்தை பற்றிய உண்மையை போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்

விஜய் படத்தை பற்றிய உண்மையை போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்

க க போ திரைப்படத்தின் ஆடியோ வெளீயிட்டு விழாவில் விஜய் படத்தை பற்றிய உண்மையை போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்,

நேற்று (27/05/2016) கமலா திரையரங்கில் ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் வெளீயிடும்  DNS மூவி புரொடக்சன்ஸ் வழங்கும் கககபோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்ட முறையில் நடைபெற்றது.இவ்விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறபித்த உயர்திரு. ஜெ . அன்பழகன் எம்.எல்.எ அவர்கள் இப்போது சிறுபடங்கள் பெரியபடங்கள் என பாராபட்சம் பார்க்காமல் படங்கள் வெளீயிடுவதில் பிரச்சனை வருகிறது,அதுபோல்தான் விஜய் நடித்த தலைவா திரைப்படத்தை வெளியீட கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது, அதனால் மனமுடைந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் போகவே , அதை கண்டு வருத்தமுற்ற நான் அதை வாங்கி வெளியிடுகிறேன் என்று அறிவித்தேன் இரவோடு இரவாக அய்யப்பன் 400 திரையங்குகளை புக் செய்தார் , அதன் பின்னரே படம் வெளியானது இதுபோல நிறைய சின்ன படங்களை வாழ வைத்த ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது அவரது மகன் பாரதி அய்யப்பன் சார்பாக மீண்டும் துவங்கபட்டு சிறிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது , அவரது தந்தைக்கு என் பூரண ஆசிகள் இருந்தது போன்று இவருக்கும் என் ஆசியும் எப்போதும் உண்டு என்று கூறி முடித்தார்.

இத்திரைப்படத்தில் பவர் ஸ்டார், சிங்கம் புலி,m.s. பாஸ்கர், கருணாஸ், மதன் பாப், மயில்சாமி,ரோபோ ஷங்கர் உட்பட 25க்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்,இத்திரைப்படத்தை செல்வி சங்கரலிங்கம் தயாரித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

அச்சமின்றி படத்தின் டீசர் விஷால் வெளியிடுகிறார்

அச்சமின்றி படத்தின் டீசர் விஷால் வெளியிடுகிறார்

அச்சமின்றி படத்தின் டீசர் விஷால் வெளியிடுகிறார்

என்னமோ நடக்குது என்ற வித்தியாசமான படத்தைத் தயாரித்த டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” அச்சமின்றி “

தயாரிப்பாளர் வி .வினோத்குமார், நாயகன் விஜய்வசந்த், இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் என்னமோ நடக்குது படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ” அச்சமின்றி ”  படத்தின் மூலம் இணைகிறார்கள்.முக்கிய வேடத்தில் சமுத்திரகனி  நடிக்கிறார்.

நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ராதாரவி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், பரத்ரெட்டி, நித்தியா, ஜெயகுமார், தலைவாசல் விஜய், ஷண்முக சுந்தரம் மற்றும் குழந்தை நட்சத்திரங்களாக ஹிருதிக், நிகிலா ஸ்ரீ  ஆகியோரும் நடிக்கிறார்கள். கௌரவமான வேடத்தில் ரோகினி நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – A.வெங்கடேஷ்

இசை – பிரேம்ஜி

எடிட்டிங் – பிரவீன்

இணை இயக்கம் – வள்ளிமுத்து

பாடல்கள் –  யுகபாரதி

வசனம் – ராதா கிருஷ்ணன்

கலை – சரவணன்

ஸ்டன்ட் – கணேஷ்குமார்

நடனம் – விஜி சதீஷ்

தயாரிப்பு மேற்பார்வை – சொக்கலிங்கம்

தயாரிப்பு – வி.வினோத்குமார்

கதை, திரைக்கதை, இயக்கம் – P.ராஜபாண்டி

படம் பற்றி இயக்குனர் பி.ராஜாண்டியிடம் கேட்டோம்..

இது கர்ஷியல் கலந்த சமூகத்தை பிரதிபலிக்கின்ற படம். இன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெற்றோர்களுக்கு சமூகத்தின் மீது என்ன அக்கறை இருக்கிறது ? அதே மாதிரி சமூகத்திற்கு மக்கள் மீது என்ன மாதிரியான அக்கறை இருக்கிறது என்பதை பக்கா கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறோம். நிறைய செலவு செய்திருக்கிறோம் என்றார் இயக்குனர் பி.ராஜபாண்டி.

இந்த படத்தின் டீசரை பார்த்து வெகுவாக பாராட்டினார் நடிகர் விஷால் சார். அத்துடன் படத்தின் டீசரை இம்மாதம் 13 ம் தேதி வெளியிடுகிறார்.

அவருக்கும் எங்களது படக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர் நாயகன் விஜய் வசந்தும், தயாரிப்பாளர் வி.வினோத்குமாரும்.

Visit Chennaivision for More Tamil Cinema News

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் 20.03.2016 மாலை சென்னை லயோலா கல்லூரி பெட்ரம் அரங்கில் நடைபெற்றது.

தமிழகமெங்கும் உள்ள நாடக நடிகர்கள்,சினிமா நடிகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் காலமான கலைஞர்கள் மனோரமா,குமரிமுத்து, கலாபவன் மணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொதுக்குழு முதல் நிகழ்வாக ஆண்டறிக்கையை கருணாஸ் வாசித்தார். பொதுவாக ஆண்டறிக்கையை வாசித்தல் என்பது சலிப்பூட்டும் அம்சமாக இருக்கும் ஆனால் அதை உணர்ச்சியூட்டும் உரையாக மாற்றி கருணாஸ் வழங்கினார்.
முதலில் நிகழ்ச்சிக்கான உணவு ஏற்பாடு உதவி செய்த ஹன்சிகாவுக்கும் விழாவின் செலவை ஏற்றிருந்த ஒளிப்பதிவாளர் -நடிகர் நட்டிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது..

1.12.1204முதல் 31.3.2015 வரையிலான ஆண்டறிக்கையை கருணாஸ்  வாசித்தார். கல்வி,மருத்துவம், திருமணம், மற்றும் இறுதிச் சடங்கு உதவி என 7,75,500, வழங்கப் பட்டதைக் கூறினார்.

‘குருதட்சணை’ திட்டம் பற்றி விளக்கித் துணைத்தலைவர் பொன்வண்ணன் உரைஆற்றினார்.அவர் பேசும் போது, ‘ ”குருதட்சணை ‘திட்டம்  என்பது தமிழகமெங்கும் சிதறிக் கிடக்கும் நாடக நடிகர்களைப் பற்றித் தகவல்கள் சேகரித்து ஒருங்கிணைக்கும் திட்டமாகும். செயற்குழு உறுப்பினர்கள் 10 குழுவாகப் பிரிந்து 2500 பேரில் 2050 பேரை பதிவு செய்ய உதவினார்கள். புகைப்படம் ,தகவல், வீடியோ, குரல்பதிவு போன்றவை நாடக நடிகர்களுக்கும் வாய்ப்புகளைத் தேடித்தரும் .இவற்றைத் தொகுத்து டைரக்டரி உருவாக்கப்படும். இணையதளத்திலும் வெளியிடப்படும். தங்களுக்கான நடிகர்களை இயக்குநர்கள் தேடிக்கொள்ள உதவியாக இருக்கும்” என்றார்.

அடுத்து மூத்த கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு. பி.யூ.சின்னப்பாவின் மருமகளுக்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டது. கொல்லங்குடி கருப்பாயி, ஜெமினி ராஜேஸ்வரி, டி.வி சேகர் போன்ற தமிழக மாவட்டங்கள் தோறும் ஒருவர் தேர்வு செய்து  நிதி உதவி வழங்கப் பட்டது.

நடிகர் சங்கத்துக்கான இணையதளத்தை எஸ்.எஸ்.ஆரின் பேரன் பங்கஜ் வடிவமைத்து இலவசமாக வழங்கினார்.

நடிகர் சங்க கட்டட மாதிரி அனிமேஷன் படம் திரையிடப்படது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

கட்டடத்தில் என்னென்ன இருக்கும் என்று அடுத்துப் பேசிய விஷால் விளக்கினார்.

விஷால் பேசும் போது,
”1. பெரிய ஆடிட்டோரியம்.இ து 1000 பேர் அமரும் வசதி கொண்டது.

2. சிறிய திருமண மண்டபம் .இது 300 பேர் அமரும் வசதி கொண்டது.
.
3. பெரிய திருமண மண்டபம் .இது 900 பேர் அமரும் வசதி கொண்டது.
4.  சாப்பிடுமிடம் 400பேர் அமரும் வசதி கொண்டது.
5. பிரிவியூ திரையரங்கம் 150பேர் அமரும் வசதி கொண்டது.
,6. நடிகர் சங்க அலுவலகம் .
7.நடிகர்களுக்கான உடற்பயிற்சிக்கூடம்.இது  2 00 பேர்  கொண்டது.

அடுத்து கார் பார்க்கிங் .இது 165 கார்களுக்கான கார் நிறுத்தமிடம்.

இவ்வளவும் கொண்ட கட்டடமாகக் கட்டப்படும். இதற்கு 26 கோடிரூபாய் செலவாகும். கடன் 2கோடி உள்ளது .இந்தக் கட்டுமானத் தொகையைப் பெற நட்சத்திரக் கிரிக்கெட், விஷால் கார்த்தி இணைத்து நடிக்கும் படம் எடுப்பது போன்ற பல திட்டங்கள் உள்ளன.

சிறிய திருமண மண்டபத்திற்கான மொத செலவை திரு. ஐசரி கணேஷ் அவர்களும் , பிரிவிவ் திரையரங்கத்திற்கான மொத செலவை திரு .சிவகுமார்,சூரியா,
கார்த்தி குடுபத்தினர் ஏற்று கொள்வதாக உறுதி அளித்துள்ளனர்

இவற்றை வாடகைக்கு விடுவதன் மூலம் மாதம் 56 லட்சத்து 20 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 6 கோடியே74 லட்சம் வருமானம் பெறும் திட்டம் உள்ளது.

இதற்காக  ஏப்ரல் 17ல் நட்சத்திரக் கிரிக்கெட் நடத்தவிருக்கிறோம்.

சூப்பர்ஸ்டார் உள்பட பல நட்சத்திரங்கள் நடிக்கும் நாடகம் நடத்தும் திட்டமும் உள்ளது. ”

என்றவர், இன்றுதான் தான் செயலாளராக பதவி ஏற்பதாக உணர்வதாக கூறினார்.

விழாவின் இடையில் கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து ‘ஸ்கைப்’ மூலம் பேசி அனைவருக்கும் வாழ்த்துக்களைக் கூறினார்.

நடிகர் சங்கத்தின் கட்டட மாதிரியை நடிகர் சிவகுமார், வசனகர்த்தா ஆரூர் தாஸ் அகியோர் திறந்து வைத்தனர்.

பொருளாளர் கார்த்தி பேசும் போது ” இது கனவிலும் நினைத்துப் பார்க்காத மேடை இதை என்பெரிய குடும்பமாக உணர்கிறேன். இனி நாடக நடிகர்கள் எதற்கும் யாரிடமும் கை யேந்த விடமாட்டோம். மருத்துவ, கல்வி, ஓய்வூதியத்திட்டங்கள் பலன் தரும். முந்தைய நிர்வாகம் செய்த குளறுபடிகள், தவறுகள் பற்றி புகார் செய்ய இருக்கிறோம். ”என்றார்.

தலைவர் நாசர்பேசும் போது ” இப்படி ஒரு பெரிய மாற்றத்துக்காக எங்கள் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி.

நம்பிக்கையைவிட அன்பு காட்டியது அதிகம். அதற்கும் நன்றி. அவச்சொல். அவதூறு , வாக்குவாதம் இல்லாமல் நடக்கும் முதல் கூட்டம் இது. இப்படிக் கல்யாண வைபவம் போல ஒவ்வொரு கூட்டமும் கொண்டாட்டமாக நடக்கும். எங்களை  நம்புங்கள் அனைவரும் இணைவோம். நல்லதே நடக்கும்.” என்றார். நிகழ்ச்சியில் அறிமுகவுரை மட்டுமல்ல தொகுப்புரை நன்றியுரை எல்லாமும் துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆற்றினார்.

நடிகர் சங்கம் 62 வது பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க புதிய கட்டத்தின் மாதிரி கட்டத்தை  முத்த நடிகர் சிவகுமார் , ஆருர்  தாஸ் ஆகியோர் திறந்து வைத்து சிறப்பித்தனர் .

பொதுகுழுவில் கலந்துகொண்டவர்கள்
தலைவர் –  நாசர்
துணைத்தலைவர்கள் –  பொன்வண்ணன் , கருணாஸ்
பொது செயலாளர் – விஷால்
பொருளாளர் – கார்த்தி

செயற்குழு உறுப்பினர்கள்

ராஜேஷ்,ஜூனியர்.பாலையா,பூச்சிமுருகன்,ராம்கி,பசுபதி,,ஸ்ரீமன்,பிரசன்னா,விக்னேஷ்,T.P.கஜேந்திரன்,கோவை சரளா,நளினி,நிரோஷா,A.L.உதயா,ரமணா,பிரேம் குமார்,நந்தா,பிரகாஷ்,தளபதி தினேஷ்,அயுப்கான்,பாலதண்டபாணி,குட்டி பத்மினி,சிவகாமி,சங்கிதா,சோனியா

நியமன குழு உறுப்பினர்கள்
மனோபாலா
சரவணன்
அஜய் ரத்தினம்
காஜாமொய்தின்
மருதுபாண்டியன்
ஜெரால்டுமில்டன்
வாசுதேவன்
காந்தி
காளிமுத்து
ரெத்தினசபாபதி
சரவணன்
காமராஜர்
ரகுபதி
லிதாகுமாரி
J.K.ரித்தீஷ்
மனோபாலா
ஹேமச்சந்திரன்

கடிடா நியமன குழு உறுபினர்கள்
ஐசரி கணேஷ்
S.V.சேகர்
பூச்சி முருகன்
குட்டி பத்மினி
ராஜேஷ்

பொதுக்குழுவில் கலந்துகொண்ட விருந்தினர்கள்

சூர்யா, வடிவேலு ,செந்தில்,விமல்,  விஷ்ணு ,ஜெயம் ரவி ,சூரி,விஜய் சேதுபதி ,பப்பி சிம்ஹா ,சுந்தர்.C ,K.S.ரவி குமார் ,ஜெயா பிரகாஷ் , R.பாண்டியராஜன் , அசோக் ,ஷாம் , பரத் , ஸ்ரீனிவாசன் (பவர் ஸ்டார்) , சின்னி ஜெயந்த், அப்பு குட்டி ,மோகன் (மைக்) ,சரவணன் ,நாட்டி நடராஜன் , A.L.அழகப்பன் , சங்கர் கணேஷ் , நிழல்கள் ரவி,ரகுமான், வைபோவ், சங்கீத, சுகஷினி, இனியா, ரோகினி, ரேக்கா, சச்சு , சுகன்யா, விஜய் கார்த்திகேயன் , டெல்லி கணேஷ், ஆரி,சோனா.எபி குஞ்சிமோகன், மன்சுருளி காண், ஜகுவார் தங்கம் ,ராமச்சதிரன், R.K.சுரேஷ் ,நித்தின் சத்திய,ரித்திவிகா மற்றும் பலர் .

மேலும் உறுபினர்களாக உள்ள மலையாள நட்கர் நடிகைகள்

ஜோஷ் , சீமா,வனிதா கிரிஸ்ஷ்ணச்சந்திரன், மேனகா சுரேஷ்,ரஞ்சினி, சபித ஆனந்த் ஆகியோரும் கலந்துகொண்டனர்

ஜீவா ரௌடியாக நடிக்கும் திருநாள் படப்பிடிப்பில் நிஜ ரௌடிகள் மோதல்

ஜீவா ரௌடியாக நடிக்கும் திருநாள் படப்பிடிப்பில் நிஜ ரௌடிகள் மோதல்

ஜீவா ரௌடியாக நடிக்கும் திருநாள் படப்பிடிப்பில் நிஜ ரௌடிகள் மோதல்

கோ. முகமூடி, ரௌத்ரம், நண்பன், யான் படங்களுக்குப் பிறகு ஜீவா நடிக்கும் படம் ‘திருநாள்’. இந்தப் படத்தில் ‘ஜீவா’ ரௌடியாக நடிக்கிறார். ரௌடி கேரக்டருக்காக செம்பட்டை முடியும், கறுத்த முகமுமாக மாற, 60 நாட்கள் வெயிலில் நடந்தும், ஓடியும் உடலை வருத்தி உடற்பயிற்சி செய்து ஜீவா இப்போது வேறொரு தோற்றத்தில் இருக்கிறார்.

கும்பகோணத்தில் நிஜ ரௌடிகள் சேஸிங்

‘திருநாள்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. சந்து-பொந்து வழியாக ஜீவா ரௌடிகளை துரத்தும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது, நிஜமாக இரண்டு ரௌடி கோஷ்டிகளுக்குள் அதே பகுதியில் சண்டை நடக்க, படக்காட்சியோடு நிஜ ரௌடிகளின் சண்டையும் தத்ரூபமாக படமாக்கியுள்ளார்கள்.

ஜீவா – நயன்தாரா

இந்தப்படத்தில் ஜீவா ஜோடியாக ‘ஈ’ படத்திற்குப் பிறகு மீண்டும் நயன்தாரா இணைகிறார். இவர்களுடன் ‘பாண்டியநாடு’ வில்லன் சரத்லோகித்தவா, கருணாஸ், மீனாட்சி, ஜோமல்லூரி, கோபிநாத் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி;

இசை – ஸ்ரீ;

சண்டை – சூப்பர் சுப்பராயன்;

கலை – வி.சீனு;

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பி.எஸ்.ராம்நாத்;

தயாரிப்பு – எம்.செந்தில்குமார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

எனது 17 படங்களுக்கும் U சர்டிபிகேட் தான் வி.சேகர்

ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. அடிதடி வெட்டுகுத்து, இசைபின்னணி, காதல், காமெடி என ஒவொருவரும் ஒரு பாணியை நூல் பிடித்தாற் போல் பிடித்து வெற்றி வாகை சூடியவர்கள் பலர் !

அதில் குடும்ப கதை மட்டுமே தன் பாணி என்று படமெடுத்து அத்தனையிலும் வெற்றிவாகை சூடியவர் இயக்குனர் வி.சேகர்.

அவரிடம் பேசினோம்….

குடும்பக் கதைகள் மட்டும்தான் உங்கள் பாலிசியா ?

நாம் எல்லோரும் குடும்பதிற்காகத் தான் வாழ்கிறோம்..குடும்பத்திற்காக தான் உழைக்கிறோம்! எதிர்கால சிந்தனை கூட கும்பதிற்காக மட்டுமே யோசிக்கிறோம்.

ஓவொரு குடும்பத்தில் நடக்கிற விஷயங்களை பதிவு செய்கிற போது அது தங்கள் வீட்டு நிகழ்வு போல் நினைத்து என்படங்களை வெற்றி பெற செய்தார்கள்.

இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் சரவண பொய்கை பற்றி ?

இதுவரை குடும்ப படங்களை மட்டுமே இயக்கிய நான் என் மகனை வைத்து எடுத்திருக்கும் காதல் கதைதான் “ சரவண பொய்கை “

இன்றைய இளைய தலைமுறையினர் ரசிக்கும் விதமாக எடுத்திருக்கிறோம்!

இதுவரை திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பாக நான் இயக்கிய 17 படங்களுக்குமே “U “ சர்டிபிகேட் படங்கள் தான்.

சரவண பொய்கை படத்திற்கு ஒரு கட் கூட இல்லாமல்  U சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.

கார்ல்மார்க்ஸ், அருந்ததி, விவேக், கருணாஸ், கோவைசரளா, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் காதல், காமெடி படமாக உருவாகி உள்ளது.

விரைவில் படம் திரைக்கு வர உள்ளது என்றார் வி.சேகர்.

நான் எப்பவுமே ஹீரோ இல்லை: நடிகர் கருணாஸ்

நந்தா படத்தில் “லொடுக்கு பாண்டி” வேடத்தில் பாலாவால் அறிமுகப் படுத்தப் பட்டு யார் இவர்? சூப்பராக நடிக்கிறாரே! சரியான தேர்வு என்று பாராட்டப் பட்ட கருணாஸ் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். திடீர் என்று கதாநாயகனாகி திண்டுக்கல் சாரதி, அம்பா சமுத்திரம் அம்பானி,சந்தமாமா, ரகளபுரம் போன்ற படங்களில் நடித்தார்.

அவரிடம் பேசியதிலிருந்து

நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகனாவது என்பது புதிதில்லை ஆனால் அதுவே தொடர்வதில்லையே!

நகைச்சுவை நடிகர்களுக்கென்று ஒரு வரைமுறையான கதைகள் மட்டுமே பொருந்தும்..சினிமாவின் வழக்கமான கதாநாயகத் தனம் உள்ள கதைகள் சரி வராது. பத்துப் பேரை அடிப்பது பஞ்ச்டயலாக் பேசுவது எதுவுமே காமெடி நடிகர்களுக்கு ஒத்துவராது.அப்படிப்பட்ட கதைகளில் நடித்தால் படத்தின் ரிசல்ட் வேற மாதிரி ஆகும்.காமெடி நடிகர்களுக்கு பொருத்தமான கதைகள் அமையும் பட்சத்தில் தான் தொடர முடியும்.

நாகேஷ் நடித்த நீற்குமிழி, சர்வர் சுந்தரம், கவுண்டமணி நடித்த “பணம் பத்தும் செய்யும்” வடிவேலு நடித்த 23 ம் புலிகேசி, சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா , நான் நடித்த திண்டுக்கல் சாரதி, அம்பா சமுத்திரம் அம்பானி, ரகளபுரம், சந்தமாமா போன்ற எல்லா படங்களுமே பேமிலி கதைகள் தான் ..காமெடியும் பேமிலியும் இணைந்தால் வெற்றி நிச்சயம்.

கதாநாயகனான பிறகு காமெடி வேடங்களில் நடிப்பதிலேயே ஏன்?

நான் எப்பவுமே காமெடி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதில்லை ..காமெடி வேடங்கள் தான் ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சேர்க்கும்.

இப்போது பி.வி.பிரசாத் இயக்கத்தில் சகுந்தலாவின் காதலன், தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கும் படம், கார்த்தி நடிக்கும் “கொம்பன்” சத்யசிவா இயக்கும் படம், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தயாரிக்கும் இரண்டு படங்கள், தர்மராஜ் இயக்கும் “இளமைக்காலங்களில்” ,உத்தம திருடன் என பத்து படங்களில் நடிதுக்கொண்டு இருக்கிறேன்.

தயாரிப்பாளரானது பற்றி

நான் சினிமாவில் சம்பாதித்தது தானே சினிமாவில் முதலீடு செய்கிறேன். நல்ல கதை கிடைத்து, சரியான தயாரிப்பாளர் கிடைக்காத போதுதான் நானே தயாரிப்பாளரானேன் அதனால் கொஞ்சம் கடனாகி விட்டது ..அதையெல்லாம் கொஞ்ச கொஞ்சமாக அடைத்துக் கொண்டிருக்கிறேன். சிறிது காலத்திற்கு தயாரிப்பாளன் என்கிற கிரீடத்தை கழட்டிவைத்துவிட்டு நகைச்சுவை நடிகனாக மேக்கப் போடவே விரும்புகிறேன் என்றார் கருணாஸ்.