கமல்ஹாசனுக்கு கால் முறிவு! மருத்துவமனையில் அனுமதி!

கமல்ஹாசன் தனது வீட்டில் வழுக்கி விழுந்ததில், காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், அமெரிக்காவில் தனது ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சமீபத்தில் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் வழுக்கி விழுந்து காலில் அவருக்கு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். காலியில் சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனையில் உள்ள கமல்ஹாசன், சில நாட்களில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

லைகா தயாரிப்பில் உதயநிதி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்‌ஷன் நிறுவனம், தற்போது உதயநிதி ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறது.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை கவுரவ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இதுவரை, தனது சொந்த் தயாரிப்பு படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்து வந்த உதயநிதி முதல் முறையாக பிற தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Visit Chennaivision for More Tamil Cinema News

தவறான செய்தி வெளியிட்டால் வழக்கு தொடர்வோம் : லைகா அறிவிப்பு

விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’, கமல்ஹாசன் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரிப்பதுடன், பல படங்களை விநியோகமும் செய்து வருகிறது.இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக செயல்படும் லைகா, பிரான்ஸ் நாட்டில் வரி ஏய்ப்பு செய்ததாகவும், இதனால் அந்நிறுவன அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, லைகா நிறுவனத்தின் அங்கமான லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் கைவிடப்படுவதாகவும் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டது.ஆனால், இதை மறுத்துள்ள லைகா நிறுவனம், வேறு ஒரு நிறுவனத்தில் நடந்த சோதனையை லைகா நிறுவனத்தில் நடந்ததாக தவறாக தங்களது போட்டியாளர்கள் சித்தரித்து விட்டனர், இதற்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ராஜு மகாலிங்கம் கூறுகையில், “லைகா மொபைல் நிறுவனத்துக்கும் இந்த சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. லைகா மொபைல் விநியோகஸ்தரின் நிறுவனம் ஒன்றில் நடந்த சோதனையை லைகா நிறுவனத்துடன் முடிச்சுப் போட்டுள்ளனர். அதன் போட்டியாளர்கள்.

இந்த செய்திகள் வெளியிட்டோர் மீது சட்டப்படி லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போகிறார்கள். இன்னொன்று இந்த செய்திகளை லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்தோடு முடிச்சுப்போட்டு சிலர் எழுதி வருகின்றனர். இது மிகத் தவறானது. லைகா புரொடக்‌ஷன்ஸ் மிகவும் பெருமைக்குரிய நிறுவனம். எங்கள் செயல்பாடுகள் நேர்மையானவை. மிகப் பெரிய திட்டங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை களங்கப்படுத்த வேண்டாம். இந்த சோதனைக்கும் லைகாவும் எந்த சம்மந்தமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

சிம்புவுக்கு ஏற்பட்ட நிலை கமல்ஹாசனுக்கு ஏற்படுமா?

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவை விழிபிதுங்க வைத்தவர்களில் முக்கியமானவர்கள் இளங்கோவன் மற்றும் வழக்கறிஞர் ஜெயபால். இவர்கள் கோவை நீதிமன்றத்தில் பீப் பாடலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததை அடுத்துதான், சிம்பு மீது கோவை ரேஷ் கோர்ஸ் போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பிறகு சிம்புவின் நிலை என்ன ஆனது என்று உலகத்திற்கே தெரியும், இதற்கிடையில், சிம்பு மீது வழக்கு தொடர்ந்த இளங்கோவனும், வழக்கறிஞர் ஜெயபாலும், தற்போது கமல்ஹாசன் படத்திற்கு எதிராக போர்கொடி உயர்த்தியுள்ளனர்.

தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவையின் பொதுச்செயலாளர் இளங்கோவன் மற்றும் வழக்கறிஞர் ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ‘சபாஷ் நாயுடு’ பட போஸ்டரை கிழித்து போராட்டம் நடத்தினர்.

சிம்புவுக்கு ஏற்பட்ட நிலை கமல்ஹாசனுக்கு ஏற்படுமா?

சிம்புவுக்கு ஏற்பட்ட நிலை கமல்ஹாசனுக்கு ஏற்படுமா?

பின்னர் அருந்ததியர் முன்னேற்ற பேரவை பொதுச்செயலாளர் ப.இளங்கோவன் கோவை மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், “நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படத்துக்கு சபாஷ் நாயுடு என்று பெயரிட்டு விளம்பரங்கள் செய்து வருகின்றனர். இந்த தலைப்பு சமூக அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தை வெளியிட அனுமதி அளித்தால் சாதி பெயரில் படத்தலைப்புகளை கொச்சையாக அமைத்து திரைப்படங்களை உருவாக்கும் தவறான செயலுக்கு முன்னுதாரணமாக அமையும்.

ஆகவே இந்த படத்தின் தலைப்பை மாற்றும் வரையில், இந்த படத்தின் விளம்பரங்களோ அல்லது இந்த திரைப்படமோ வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் போராட்டங்கள் மூலமாகவும், வழக்குகள் மூலமாகவும் சிம்புவை ஆட்டம் காணச் செய்த, இளங்கோவன் மற்றும் வழக்கறிஞர் ஜெயபால், கமல்ஹாசன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், சிம்புவுக்கு ஏற்பட்ட நிலை கமலுக்கும்  ஏற்படுமா, என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மனு குறித்து கோவை கலெக்டர் எடுக்கும் நடவடிக்கை பொறுத்தே அடுத்தது என்ன நடக்கும் என்பது தெரிய வரும்.

தற்போது, கமல்ஹாசன், ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார்.

‘சபாஷ் நாயுடு படத்தின் தலைப்பு எதிராக ஏற்கனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரவிகுமார் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Visit Chennaivision for More Tamil Cinema News

PVP சினிமா நிறுவனம் படத்தயாரிப்பில் இருந்து வெளியேறவில்லை

PVP சினிமா நிறுவனம் படத்தயாரிப்பில் இருந்து வெளியேறவில்லை

PVP சினிமாவின் பத்திரிக்கை குறிப்பு:

‘நான் ஈ’, ‘விஸ்வரூபம்’, ‘தோழா’, ‘பெங்களூரு நாட்கள்’ போன்ற அற்புதமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கிய நிறுவனம் PVP சினிமா.  அண்மையில்,  இந்த நிறுவனம் படத்தயாரிப்பில் இருந்து வெளியேறுகிறது போன்ற செய்திகள்,  ஊடகங்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தகவல்  என்றும், இது போன்ற தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும்  PVP நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. “வதந்திகளும், ஆதாரமற்ற செய்திகளும் சமூக வலைத்தளங்களில் மற்றும் ஊடங்களில் பரவி கொண்டு வருகிறது. தோல்விகளை கண்டிறாத யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அந்த தோல்விகளை வெற்றி படிகளாக மாற்றுவதே உண்மையான வெற்றிக்கு பாதை வகுக்கும்.  ஏற்றங்களும், இறக்கங்களும் சமமாக இருக்கும் ஒரு துறை, சினிமா தான். அப்படி ஏற்பட்ட ஒரு சறுக்களுக்காக பாரம்பரியமிக்க  எங்கள்  நிறுவனம் ஒருபோதும் துவண்டுவிடாது. பிரபல ஹீரோ மற்றும் பிரபல இயக்குனரின்  கூட்டணியில் உருவாகும்  ஒரு படம் எங்களின் தயாரிப்பு வரிசையில் இருப்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம் . அதுமட்டுமின்றி,  PVP சினிமா தொடர்ந்து மக்களுக்காக தரம் வாய்ந்த படங்களை தயாரித்து வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக உள்ளது ” என்று சொல்கிறது PVP சினிமாவின் பத்திரிக்கை குறிப்பு.

Visit Chennaivision for More Tamil Cinema News

 

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர். நாம் இரசித்துக் குடிக்கும் காபி, அக்னிக் கனல் போல நம் நாவையே எரித்தால் எப்படி இருக்கும். அப்படி விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் நடக்கும் நெருப்பான போராட்டம்தான் வித்தையடி நானுனக்கு.

தன் வழி தனி வழி அதுதான் ஒரே வழி. இதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் போகக்கூடிய நேரெதிர் துருவங்கள் (Noir characters).  அவர்களின் காதலும், மோதலும் தான் வித்தையடி நானுனக்கு.

ஒரே காட்சியில் ஒரே சூழ்நிலைக்கு அதில் உள்ள கதாபாத்திரங்கள் விதம்விதமான மனோபாவங்களை வெளிப்படுத்துவார்கள் . அந்த உணர்வுக்குவியல்களை  தனது (Stroop effect) இசையால்  திகிலும் தீஞ்சுவையும் கலந்து நமக்குள் ஊடுருவுகிறார் இசையமைப்பாளர் விவேக் நாராயண்.

அமெரிக்காவில் வசிக்கும் சௌரா சையத் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஆழ்மனத் துடிப்பை எகிற வைத்து, திரையை சூடாக்கும் அனலடிக்கும் காட்சிகளுடன் ராம்நாதன் கே.பி எழுதி இயக்கியுள்ளார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் வித்தையடி நானுக்கு திரைப்படம் எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனங்களின் பெருமை மிகு கூட்டுத் தயாரிப்பு.

இரு கதாப்பாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் சைக்கோ த்ரில்லர் ‘வித்தையடி நானுனக்கு’!…

ராமநாதன் KB இயக்கத்தில், எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ்  தயாரிக்கும் புதிய படம் ‘வித்தையடி நானுனக்கு’.

இது ஒரு சைக்கோ த்ரில்லர் படமாகும்.

சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ என்ற படம் நினைவிருக்கிறதா.. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வசந்த சேனா வசந்த சேனா…’ பாடல் மிகப் பிரபலம். அந்தப் படத்துக்கு டிஎஸ் முரளிதரன் என்ற பெயரில் இசையமைத்தவர்தான் இப்போது ‘ராமநாதன் KB’ என பெயர் மாற்றிக் கொண்டு இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

அதுமட்டுமல்ல, படத்தின் இரு கதாப்பாத்திரங்களில் ஒருவர்  இவர்தான். இவருக்கு ஜோடியாக சவுரா சையத் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

விவேக் நாராயண் இசையமைக்கிறார். ராஜேஷ் கடம்கோட் ஒளிப்பதிவு செய்கிறார்.

எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் பேனரில் லோகநாதன் D – ஐஎஸ்ஆர் செல்வகுமார்  தயாரிக்கின்றனர்.

படத்தில் ஒரேயொரு பாடல்தான். அதுவும் மகாகவி பாரதியின் ‘பாயும் ஒளி நீ எனக்கு ‘எனத் தொடங்கும் அற்புதமான பாடல். இதற்கு மேற்கத்திய பாணியில் மெட்டமைத்துள்ளாராம் விவேக் நாராயண்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானலில்  படமாக்கப்பட்டுள்ளது.

Visit Chennaivision for More Tamil Cinema News

 

என்னை முந்தி கொண்ட கமல் கலகலப்பூட்டிய ரா.பார்த்திபன்

என்னை முந்தி கொண்ட கமல் கலகலப்பூட்டிய ரா.பார்த்திபன்

என்னை முந்தி கொண்ட கமல் கலகலப்பூட்டிய ரா.பார்த்திபன்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரபலமான ஓவியர் A.P.ஸ்ரீதர் கலை வண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகமான க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தை பிரபல இயக்குனர் நடிகர் திரு.ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் நடிகர் விக்ரமின் தாயாரான திருமதி ராஜேஸ்வரி ஆகியோர் ஊடகங்களின் முன்னிலையில் துவக்கி வைத்தனர்.

இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள், நிகழ்ச்சியில் குத்து விளக்கைக் தீபத்தை வரைந்து ஏற்றினார்கள் .

என்னை முந்தி கொண்ட கமல் கலகலப்பூட்டிய ரா.பார்த்திபன்

நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் “நாம் ஏதாவது புதுமையாக செய்ய முயன்றால் அதை முந்திக் கொண்டு செய்ய இங்கே கமல்ஹாசன் , A.P ஸ்ரீதர் போன்ற பலபேர் இருக்கிறார்கள்  நானும்  ரவுடிதான் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை  தனியாக எடுத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். ஆனால்  தசாவதாரத்தின் பல்ராம் நாயுடுவை தனியாகப் பிரித்து ஒரு படமாக்கி கமல்  அந்த வேலையை ஆரம்பித்து விட்டார் . குத்துவிளக்கு ஏற்றுவதை நெருப்பு இல்லாமல் ஓவியமாக எதாவது ஒரு நிகழ்ச்சியில் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் . ஆனால் இங்கே ஸ்ரீதர் செய்து விட்டார். இந்த ட்ரிக் ஆர்ட் மியூசியம் உண்மையிலேயே ஒரு சுவாரஸ்யமான அனுபவம் ” என்றார் .

நிகழ்ச்சியில் பேசிய ஏ.பி.ஸ்ரீதர் “இதுபோன்ற  தந்திரக் கலை ஓவியக் காட்சியகங்கள்  உலகம் முழுக்க பனிரெண்டு  நாடுகளில் 42 இடங்களில் இது இருக்கிறது . பார்வையாளரின் பங்களிப்பு இல்லாமல் இவை முழுமை அடையாது . இந்தியாவில் இதுதான் முதல் முதல் . அடுத்து பெங்களூர், மும்பை  உள்ளிட்ட இடங்களிலும் இதை அமைக்க இருக்கிறேன் . இங்கே பெரியவர்களுக்கு கட்டணம் 150 ரூபாய். சிறியவர்களுக்கு 100 ரூபாய்” என்றார்.

இங்கு என்ன சிறப்பு?

“தந்திரக் கலை” மூலம் இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாண ஓவியமாகத் தெரியும் விதமான தந்திரங்கள் நிறைந்த கலைப் பொருள்கள் இங்கு நிறுவப்பட்டிருகின்றன. இதுவரை ஓவியம் என்பது அழகியல் தன்மை கொண்டது, கலைப்பொருள் சேகரிப்பாளர்களுக்கான முதலீடு அல்லது தெய்வீகமானது என்றுதான் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இந்த ட்ரிக் ஆர்த்வகை ஓவியம் அல்லது ஓவிய அருங்காட்சியகம் என்பது  வேடிக்கையானதாக, நகைச்சுவை ததும்பும் விதமாக, உரையாடல் தன்மை கொண்டதாக இருக்கும். தந்திரக் கலை ஓவியங்கள் என்பது அப்படிப்பட்ட கலை, பங்கேற்பாளர் இன்றி இந்த ஓவியங்கள் முற்றுப் பெறாது . இது “ஒளியியல் மாயக் கலை” (Optical Art) அல்லது முப்பரிமாண ஓவியங்கள் (3D Art) என்றும் அறியப்படுகிறது. பார்ப்பவர் அந்த ஓவியத்துடன் ஓர் விளையாட்டிலோ அல்லது செய்கையிலோ ஈடுபடுவது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் புத்திசாலித்தனமான கோணங்களுடன் அந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.‘க்ளிக் ஆர்ட் மியுசியம்’  ஒளியியல் மாய ஓவியங்கள் நிறைந்த இடமாக, உங்கள் அதிக மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இடமாக இருக்கும்! கச்சிதமான உள்கட்டமைப்பும், புதுமையான ஓவியங்களும் பார்வையாளரை வேறொரு உலகத்திற்கு, ஒரு மாய உலகிற்குக் கூட்டிச் செல்லும்படி இருக்கிறது அந்த மாய உலகில் நாம்  மோனா லிசாவின் விருந்தாளியாகவோ, அட்லஸின் நண்பராகவோ இருக்கக் கூடும்! இந்த TRICK ART 2,000 வருடங்கள் பழமையானது என்றும், பின்னர் அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஓவிய வடிவமாக உருவானது என்றும் சொல்லப்படுகிறது. ‘டொம்போ-ல- ஈல்’ என்பது இதன் ஃப்ரெஞ்சுப் பெயர். ‘கண்களை ஏமாற்று’ என்று  பொருள் .

ஓவியங்களை முப்பரிமாணத் தன்மையுடன், ஒரு நிஜப் பொருளாக காண்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட வடிவம்.  அறைகள், உண்மையில் இருக்கும் அளவைக் காட்டிலும் பெரியதாகத் தெரிய வேண்டும் என்பதற்காக க்ரேக்கம் மற்றும் ரோமத்தில் இந்த ஓவிய வடிவம் தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது. மேற்கத்திய ஓவியங்களில் பல காலங்களாக இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, குறிப்பாக மேற்கூரை வரைய. அக்காலத்தில், தட்டையானதொரு மேற்கூரையைக் கூட கவிந்த கூரையாகக் காட்டும் அளவுக்குத் திறமை வாய்ந்த ஓவியர்களாக இருந்தார்கள். 14ஆம் நூற்றாண்டில் கட்டிடக் கலையில் தோன்றிய தொலைவுத் தோற்ற (perspective) காட்சியாக்கத்தின் விளைவாக, ஓவியக் கலை மற்றும் கட்டிடக் கலையில் பரந்த காட்சி வித்தைகளின் தேவை அதிகரித்தது. ஒளியியல் மாயை மூலம் கண்களை ஏமாற்றும் அந்த காட்சிக் கலை தொழில் நுட்பம்  பின்னர் மாய-யதார்த்த உருவப் படங்கள் வரைவதற்கான ஒரு பாணியாக மாறி 17ஆம் நூற்றாண்டு வாக்கில் ஃப்ரென்ச்சு மேல்தட்டு வர்க்கத்தினர் மத்தியில் பிரபலமானது.

கிரேக்கம் மற்றும் ரோமத்தில் அதன் வேர்களைக் கொண்டக் இக்கலையை  போம்பெய் போன்ற பழமைவாய்ந்த நகரங்களில் இன்றும் காணலாம். பண்டைய கிராக்க ஓவியர் ஜீயுசிஸ் மற்றும் அவரது பரம வைரி ஃபர்ஹாசியஸின் கதை ஓவியம் பிரபல உதாரணம். இந்த வகை ஓவியத்தில் காணப்படும் செய்கைக்கு ஈடாக அல்லது பதிலாக ஒரு செய்கையில் ஈடுபட தூண்டுவதன் மூலம் இது பார்வையாளர் பங்கேற்பைக் கோருகிறது. ஒரு ஓவியக் களத்தில் ஓவியரும் பார்வையாளரும் போரில் ஈடுபடுவது போன்றதொரு நிகழ்வைத் தருவது. இந்த ஓவியங்களைப் பார்க்கும்போது மூளைக்கும் கண்களுக்கும் இடையில் ஒரு போரே நிகழ்கிறது. அனுபவங்கள் வாயிலாகவும், அனுமானங்கள் மற்றும் முன் முடிவுகள் மேற்கொள்ளும் பண்புகளாலும் மூளையில் முன்பதிவாக இருக்கும் காட்சிப் படிமங்கள் எதிரில் தெரியும் ஓவியம் என்ன சொல்கிறதென சட்டென முடிவெடுக்கத் தூண்டுகிறது,

அதேவேளை ஆழ் மனதோ உண்மையைக் கண்டுபிடித்து அதை வெளிப்படுத்தப் போராடுகிறது. இதுதான் க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகம் உங்களுக்குக் கொடுக்கும் புதுமையானதொரு அனுபவம். ஒவ்வொரு கோணத்திலும் இடத்திலிருந்தும் காணும்போதும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தந்திரக் கலை ஓவியங்களும் வேறு வேறு மாதிரித் தெரியும். புகைப்படக் கருவி கொண்டு காண்கையில் அந்த ஓவியங்களின் மாய அழகு பரம்மாண்டமாகத் தோன்றும். இந்தத் தந்திரக் கலை ஓவியங்களைக் காண்பதால் மூளை ஆரோக்கியமானதொரு புறத் தூண்டுதலைப் பெறுவதாக  சமீப காலங்களில் நடந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளை அனுபவிக்கும் மாற்றங்கள் மனிதனின் அடிப்படை இயல்பூக்கத்திற்கு சவாலாக அமைவதால் இத்தூண்டுதல் நல்ல மன எழுச்சியைக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.

உங்களுக்கு அங்கு என்ன காத்திருக்கிறது?  உங்கள் மூளைக்கு வேடிக்கையானதொரு பயற்சி காத்திருக்கிறது. வேடிக்கை, நகைச்சுவை ஆனால் நிச்சயமாக நீங்கள் மூட்டாளாக்கப்பட மாட்டீர்கள்!

“கண் கட்டு வித்தைக்கு தயாராக வாருங்கள்” என்ற சவாலோடு அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களில் சில:

1. “மாமா – யு வான ஹேட் மீ” – ஆதாம் ஆப்பிள் கொடுப்பது போன்ற ஓவியம்.

2. “… இப்போது சிறந்த அவார்டைப் பெறுபவர்” – ஆஸ்கர், ஆஸ்கர் அவார்டு தரப் போகிறார்.

3. “நீங்களும் தேவதைகளே” – உடலற்ற இரண்டு தேவதைகள் இருக்கும். நீங்கள் அங்கு தேவதைகளாவீர்கள்.

4. “டால்ஃபினும் நானும்” – சட்டகத்திலிருந்து குதிக்கும் டால்ஃபினுக்கு வளையம்கொடுங்கள்.

5. “தி கட்டிங் எட்ஜ்” – மாயக் கலை நிபுணர் ஒருவர் உங்கள் உடலை இரண்டாக வெட்டி அருகில் வைத்தால் எப்படி இருக்கும்?

6. “நடுவுல கொஞ்சம் கதவைக் காணோம்” – நீங்கள் கழிப்பறையில் இருக்கும்போது யாரேனும் எட்டிப் பார்த்தால் எப்படி இருக்கும்?

7. “நீ என்ன பெரிய அப்பா டக்கரா” – அந்த சட்டகத்திலிருந்து சீறிக் கொண்டுவ் அரும் நாகப் பாம்பை எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களிடம் உள்ளதா?

8. “வெனிஸ் ஒன்றும் தூரமில்லை” – வெனிசில் படகில் போகும் கனவு காண்பவரா நீங்கள், அப்படியென்றால் இது உங்களுக்கான இடம்.

9. “காபியைக் காட்டிலும் அந்த புன்னகை ஆவலைத் தூண்டக்கூடியது” –மோனலிசாவின் விருந்தாளியாக விரும்புகிறீர்களா? உங்களுக்காக அவள் காபியோடு காத்திருக்கிறாள்…

10. “மோனலிசவுடன் காபியும் இசையும்” – உங்களுக்கு காபி கொடுத்து இசைக்கவும் காத்திருக்கிறாள் மோனலிசா.

11. “அம்மாவின் கருவறை” – தாயின் கருவரைக்குள் மீண்டும் செல்லும் உணர்வு அந்தமாபெரும் குமிழியில்.

12. “செல்ஃபி புள்ள” – சிம்பான்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் பாவம் அதை பயமுறுத்திவிடாதீர்கள்!

13. “அப்பாடா, ஒருவழியாக வைர மோதிரம் கிடைக்கப் போகிறது” – அட்லஸ் உங்களுக்காக காத்திருக்கிறார்.

14. “மண்டைத் தீவு” –மண்டையோட்டுக் கோட்டைக்குள் படியேறிப் போகும்போது கவனம்!

இதுபோல் மொத்தம் 24 ஓவியங்கள். இங்கு எந்த விதிகளும் கிடையாது, உண்மையில் செய்யக்கூடாதவை என்று எதுவுமில்லை, வழக்கமாக இதுபோன்ற பொது உடங்களில் எதையெல்லாம் அனுமதிக்க மாட்டார்களோ அதற்கெல்லாம் “க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தில்” இடமுண்டு. ஒரு மனிதன் தனக்குள் ஒளிந்திருக்கும் நடிகரை, ஒளிப்பதிவாளரை அல்லது இயக்குனரை வெளியே கொண்டு வர இந்தக் கலைக்கூடம் உதவும்.

அருங்காட்சியகத்திற்குள் நுழைந்ததும், அங்கிருக்கும் உதவியாளர் ஒருவர் அருங்காட்சியகம் பற்றியும் அங்குள்ள ஓவியங்கள் குறித்தும் அங்கு நீங்கள் எப்படிச் சுற்றித் திரியலாம், எங்கு நின்று எப்படி புகைப்படம் எடுக்கலாம் என்றெல்லாம் விளக்குகிறார்  உள்ளே, முக்கியமான இடங்களில் விளக்கக் காணொளிப் படங்களும் திரையிடப்பட்டிருக்கும், அது உங்களை ஒரு ‘கலைப் போருக்குத்’ தயாராக்கும்.

இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கிய ஸ்ரீதர்   காரைக்குடி அருகில் இருக்கும் பள்ளத்தூர் எனும் ஒரு கிராமத்தில் பிறந்தவர்.  இவர் ஒரு சிறந்த ஓவியர், யாரும் துணியாத பாதையில் பயணிப்பதே இவருக்குப் பிடித்தமானது. இதுவரை அவர் 62 ஓவியக் கண்காட்சிகள் வைத்துள்ளார். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இவரது ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. வித்தியாசமான சிந்தனையுடன், புதுமையான தொழில்நுட்பத்துடன் இவர் படைக்கும் ஓவியங்கள் கமலஹாசன், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளை அலங்கரித்துள்ளது. இது தவிர இவரது ஓவியங்கள் மாபெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் பிரதான தேர்வாக இருக்கிறது. விருதுகள், பிரபலங்களின் பாராட்டுகளோடு இவர் ஓய்ந்துவிடவில்லை, என்றென்றைக்கும் புதிய உற்சாகத்துடன் புதிய புதிய விஷயங்களைப் படைக்கும் ஆர்வத்துடன் ஓடிக்கொண்டே இருக்கிறார். இதுபோன்ற எண்ணற்ற புதுவகையான படைப்புகளை நமக்காக படைக்க விரும்பும் ஸ்ரீதரின் வேட்கை என்றைக்கும் தணியாது. இப்படிப்பட்ட சிறப்புகளை கொண்ட ஏ.பி. ஸ்ரீதர் அமைத்துள்ள இந்த தந்திரக் கலை  ஓவியக் காட்சியகத்தை இயக்குனர்- நடிகர் ஆர். பார்த்திபன் துவங்கி  பல்வேறு ஓவியங்களுடன் இணைந்து  தோற்றம் காட்டினார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

நாசர் தலைமையில் ஒரு ஜனநாயகப் புரட்சி!

நாசர் தலைமையில் ஒரு ஜனநாயகப் புரட்சி!

நாசர் தலைமையில் ஒரு ஜனநாயகப் புரட்சி!

தமிழன்  வீரத்திற்கும் புரட்சிக்கும் முதன்மையானவன். அன்று ஆங்கிலேயனை எதிர்த்த முதல் புரட்சியாளன் வீரபாண்டிய கட்ட பொம்மன். இன்று புரட்சிக்குணம் குறைந்து நமக் கென்ன என்று இருக்கும் அலட்சிய மனோபாவமுள்ள மக்களை ஒரு ஜனநாயக புரட்சிக்கு அழைத்துச் செல்ல நாசர் தலைமையில்  ஒரு குழு புறப்படுகிறது. தன்னுடன் மகேந்திரன, வினோத்குமார் ,தனு, அஜெய் ரத்தினம், ராகசெந்தில் ,மாயி,சுந்தர,என  இணைத்துக்கொண்டு  தன் படையுடன் புறப்பட்டிருக்கிறார் நாசர். நாசரின் புரட்சிப் போராட்டம் வென்று எடுக்குமா? என்பதை ரிவான் இயக்கத்தில் சீனீவாசப்பா தயாரிப்பில் K3 சினி கிரியேசன் நிறுவனம் உருவாக்கிக்  கொண்டிருக்கும் ‘திட்டிவாசல்’ திரைபடத்தின் மூலமாக எதிர்பார்க்கலாம். புரட்சியை நோக்கி ‘திட்டிவாசல்’ பயணிக்கிறது.

Visit Chennaivision for More Tamil Cinema News

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்கிய லைக்கா

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்கிய லைக்கா

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்கிய லைக்கா

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்கிய லைக்கா, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைக்கா புரொடக்ஷன் இணைந்து வழங்கும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் “ சபாஷ் நாயுடு” படத்தின் துவக்க விழா இன்று காலை 9 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா, லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஸ்கரன் மற்றும் கருணாமூர்த்தி, ராஜு மஹாலிங்கம் இவர்களுடன்  நடிகர் பிரபு, நடிகர் சிவகுமார், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்சங்க பொதுச் செயலாளார் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் படத்தின் தலைப்பை தமிழ், ஹிந்தி, தெலுங்கு மூன்று மொழியிலும் அறிவித்தார்.

லைக்கா நிறுவனத்தின் சேர்மன் சுபாஸ்கரன் அவர்கள் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் நாசரிடம் வழங்கினார்.

விழாவில் நடிகர் சங்க  பொதுச்செயலாளர் விஷால் லைக்கா குழும தலைவர் சுபாஸ்கரனுக்கு நன்றி தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகவுள்ள சபாஷ் நாயுடு

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகவுள்ள சபாஷ் நாயுடு

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகவுள்ள சபாஷ் நாயுடு

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகவுள்ள சபாஷ் நாயுடு படத்தின் துவக்க விழா இன்று நடிகர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முதலாவதாக பேசிய நாசர் இந்த நடிகர் சங்க வளாகத்தில் திரு.கமல்ஹாசன் அவர்கள் மங்களகரமான ஒரு விழாவை துவக்கிவைத்துள்ளார். அவரது திரைப்பட துவக்கவிழாவை இங்கே நடத்தியுள்ளார். இதை தொடர்ந்து இங்கே பல விழாக்கள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். இவ்விழாவை நடத்த வாடகையாக ருபாய் 2.5 – லட்சத்தையும் செலுத்தியுள்ளார்.

அடுத்ததாக பேசிய உலகநாயகன் கமல்ஹாசன் , நடிகர் சங்க வளாகத்தில் விழாவை நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்திற்கான விளம்பரங்களில் “ மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா ?? “ என்ற வாசகம் இருக்கும். அதை படத்தின் தலைப்பு என்று பலரும் யூகித்து இருக்கலாம். அதுவல்ல படத்தின் தலைப்பு , அந்த வாசகம் “ மீண்டும் இங்கே நடிகர் சங்க நிர்வாகத்தில் பொறுப்பேற்று இருப்பது யாரென்று தெரிகிறதா ?? என்பதை குறிக்கும். நடிகர் சங்க கட்டிடத்தை மீண்டும் எழுப்ப புதிதாக பொறுப்பேற்று இருக்கும் நிர்வாகம் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நிர்வாகிகள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விஷயம் இங்கே காத்துகொண்டு இருக்கிறது என்று கூறியவர் நடிகர் சங்க தலைவர் நாசர் , பொது செயலாளர் விஷால் , பொருளாளர் கார்த்தி , துணை தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளை மேடைக்கு அழைத்தார்.

மேடையில் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு லைகா குழுமதத்தின் தலைவர் திரு. அல்லிராஜா சுபாஷ்கரன் 1-கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இந்த விழாவை இங்கு நடத்தி நடிகர்சங்கத்திற்கு பெருமை சேர்த்த உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு நடிகர் சங்கம் ­­­­­சார்பாக எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ருபாய் 1 கோடிக்கான காசோலையை வழங்கிய லைகா குழும தலைவர் திரு. அல்லிராஜா சுபாஷ்கரன் அவர்களுக்கும் நடிகர் சங்கம் ­­­­­சார்பாக எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.