கலாபவன் மணிக்காக கண்ணீர் வடிக்கும் “ புதுசா நான் பொறந்தேன் “ படக்குழு

கலாபவன் மணிக்காக கண்ணீர் வடிக்கும் “ புதுசா நான் பொறந்தேன் “ படக்குழ: சஹாரா எண்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் ஷாகீர் ஜேன் தயாரிக்கும் படம் “ புதுசா நான் பொறந்தேன் “

இந்த படத்தில் பியோன் கதாநாயகனாக  நடிக்கிறார். இவர் தென்காசி பட்டிணம் படத்தில் சின்ன வயது சரத்குமாராக நடித்தவர். தமிழ், மலையாளம் உள்ளிட்ட நாற்பது படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஒரு மலையாளப் படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக கல்யாணி நாயர் நடிக்கிறார். மற்றும் கலாபவன் மணி, கராத்தே ராஜா, விஜயன், நரேஷ், சார்மிளா, பெஞ்சமின், மாபியா, சசி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – தாமஸ் / இசை – கணேஷ் ராஜா / பின்னணி இசை – வி.தஷி

எடிட்டிங் – அபிலாஷ் / கலை – உண்ணி / நடனம் – அக்ஷயா ஆனந்த்

ஸ்டன்ட் – மாபியா சசி / பாடல்கள் – கணேஷ் / தயாரிப்பு மேற்பார்வை – பிஜு, பேச்சிமுத்து

தயாரிப்பு – ஷாகீர் ஜேன்

கதை, திரைக்கதை, வசனம் – பாலு

இயக்கம் – மஜீத் அபு. இவர் ஏராளமான படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்….

மறைந்த நடிகர் கலாபவன் மணி இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் காட்சிகள் கொடைக்கானலில் படமாக்கிய போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. அதனால் நாங்கள் வேறொரு நாளில் படைபிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னோம் ஆனால் அவர் வேண்டாம் இப்போதே நடிக்கிறேன் என்று கூறினார். நாங்கள் புது யூனிட்டாக இருந்தும் கூட அவர் எங்களுக்கு அந்த சூழ்நிலையிலும் மறுக்காமல் தண்ணீர் தொட்டியில் மூழ்கி  சண்டை போடும் காட்சியில் நடித்தார். பிறகு இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பை நடத்தினோம். அப்படிப்பட்ட ஒரு நல்ல கலைஞன்  பிரிந்து சென்றது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது ..அவர் கடைசியாக நடித்தது எங்கள் படம் தான்…ஜூலை 8ம் தேதி ரிலீஸ் ஆகும் போது அவர் இல்லாதது எங்க யூனிட்டுக்கு ரொம்ப வருத்தம் என்றார் சோகத்துடன் இயக்குனர்.

கலபாவன்மணி மரணத்தில் நீடிக்கும் மர்மம்

கடந்த மார்ச் மாதம், தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தின் போது, மயங்கி விழுந்த நடிகர் கலாபவன் மணி, மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவர் அதிகமாக மது குடித்ததால் தான் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

ஆனால், அவரது குடும்பத்தார் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டியதால், போலீஸார் சந்தேக மரணம் என்ற ரீதியில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், பிரேத பரிசோதனை முடிவில் கலாபவன்மணி உடலில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருள் கலந்ததால் மரணம் நேர்ந்ததாக கூறப்பட்டது. கலாபவன்மணி அருந்திய மது மூலம் இந்த நச்சு பொருள் அவரது ரத்தத்தில் கலந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கலபாவன்மணி மரணத்தில் நீடிக்கும் மர்மம்

கலபாவன்மணி மரணத்தில் நீடிக்கும் மர்மம்

இதை தொடர்ந்து மது விருந்தில் பங்கேற்ற கலாபவன்மணியின் நண்பர்கள், மலையாள நடிகர்கள், அவரது உதவியாளர்கள் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

கலாபவன்மணிக்கு மது பழக்கம் காரணமாக கல்லீரல் பாதிப்பு இருந்தது. இதனால் அவர் பீர் மட்டும் குடித்து வந்ததாக அவரது உதவியாளர்கள் தெரிவித்து இருந்தனர். எனவே பீரில் உயிரை பறிக்கும் அளவுக்கு ரசாயன பொருள் இல்லை என்பதால் யாரோ பீரில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்திருக்கலாம் என்று புகார் எழுந்தது. இந்த கோணத்திலும் விசாரணை நடந்தது.

இந்த நிலையில் கலாபவன்மணியின் கல்லீரல், சிறுநீரகம், ரத்தம் உள்பட உடல் உறுப்புகள் ஐதராபாத்தில் உள்ள மத்திய ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தற்போது அந்த பரிசோதனை முடிவுகள் திருச்சூர் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

அந்த அறிக்கையில் கலாபவன்மணியின் உடலில் மெத்தனால் என்ற ரசாயன பொருள் 45 மில்லி கிராம் அளவுக்கு கலந்திருப்பது தெரிய வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்ததாகவும் மது அருந்தும்போது இந்த அளவுக்கு மெத்தனால் உடலில் கலக்க வாய்ப்பு இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கலாபவன் மணிக்கு யாரோ பீரில் மெத்தனாலை கலந்து கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் மீண்டும் ஏற்பட்டுள்ளதால், இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Visit Chennaivision for More Tamil Cinema News

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் 20.03.2016 மாலை சென்னை லயோலா கல்லூரி பெட்ரம் அரங்கில் நடைபெற்றது.

தமிழகமெங்கும் உள்ள நாடக நடிகர்கள்,சினிமா நடிகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் காலமான கலைஞர்கள் மனோரமா,குமரிமுத்து, கலாபவன் மணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொதுக்குழு முதல் நிகழ்வாக ஆண்டறிக்கையை கருணாஸ் வாசித்தார். பொதுவாக ஆண்டறிக்கையை வாசித்தல் என்பது சலிப்பூட்டும் அம்சமாக இருக்கும் ஆனால் அதை உணர்ச்சியூட்டும் உரையாக மாற்றி கருணாஸ் வழங்கினார்.
முதலில் நிகழ்ச்சிக்கான உணவு ஏற்பாடு உதவி செய்த ஹன்சிகாவுக்கும் விழாவின் செலவை ஏற்றிருந்த ஒளிப்பதிவாளர் -நடிகர் நட்டிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது..

1.12.1204முதல் 31.3.2015 வரையிலான ஆண்டறிக்கையை கருணாஸ்  வாசித்தார். கல்வி,மருத்துவம், திருமணம், மற்றும் இறுதிச் சடங்கு உதவி என 7,75,500, வழங்கப் பட்டதைக் கூறினார்.

‘குருதட்சணை’ திட்டம் பற்றி விளக்கித் துணைத்தலைவர் பொன்வண்ணன் உரைஆற்றினார்.அவர் பேசும் போது, ‘ ”குருதட்சணை ‘திட்டம்  என்பது தமிழகமெங்கும் சிதறிக் கிடக்கும் நாடக நடிகர்களைப் பற்றித் தகவல்கள் சேகரித்து ஒருங்கிணைக்கும் திட்டமாகும். செயற்குழு உறுப்பினர்கள் 10 குழுவாகப் பிரிந்து 2500 பேரில் 2050 பேரை பதிவு செய்ய உதவினார்கள். புகைப்படம் ,தகவல், வீடியோ, குரல்பதிவு போன்றவை நாடக நடிகர்களுக்கும் வாய்ப்புகளைத் தேடித்தரும் .இவற்றைத் தொகுத்து டைரக்டரி உருவாக்கப்படும். இணையதளத்திலும் வெளியிடப்படும். தங்களுக்கான நடிகர்களை இயக்குநர்கள் தேடிக்கொள்ள உதவியாக இருக்கும்” என்றார்.

அடுத்து மூத்த கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு. பி.யூ.சின்னப்பாவின் மருமகளுக்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டது. கொல்லங்குடி கருப்பாயி, ஜெமினி ராஜேஸ்வரி, டி.வி சேகர் போன்ற தமிழக மாவட்டங்கள் தோறும் ஒருவர் தேர்வு செய்து  நிதி உதவி வழங்கப் பட்டது.

நடிகர் சங்கத்துக்கான இணையதளத்தை எஸ்.எஸ்.ஆரின் பேரன் பங்கஜ் வடிவமைத்து இலவசமாக வழங்கினார்.

நடிகர் சங்க கட்டட மாதிரி அனிமேஷன் படம் திரையிடப்படது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

கட்டடத்தில் என்னென்ன இருக்கும் என்று அடுத்துப் பேசிய விஷால் விளக்கினார்.

விஷால் பேசும் போது,
”1. பெரிய ஆடிட்டோரியம்.இ து 1000 பேர் அமரும் வசதி கொண்டது.

2. சிறிய திருமண மண்டபம் .இது 300 பேர் அமரும் வசதி கொண்டது.
.
3. பெரிய திருமண மண்டபம் .இது 900 பேர் அமரும் வசதி கொண்டது.
4.  சாப்பிடுமிடம் 400பேர் அமரும் வசதி கொண்டது.
5. பிரிவியூ திரையரங்கம் 150பேர் அமரும் வசதி கொண்டது.
,6. நடிகர் சங்க அலுவலகம் .
7.நடிகர்களுக்கான உடற்பயிற்சிக்கூடம்.இது  2 00 பேர்  கொண்டது.

அடுத்து கார் பார்க்கிங் .இது 165 கார்களுக்கான கார் நிறுத்தமிடம்.

இவ்வளவும் கொண்ட கட்டடமாகக் கட்டப்படும். இதற்கு 26 கோடிரூபாய் செலவாகும். கடன் 2கோடி உள்ளது .இந்தக் கட்டுமானத் தொகையைப் பெற நட்சத்திரக் கிரிக்கெட், விஷால் கார்த்தி இணைத்து நடிக்கும் படம் எடுப்பது போன்ற பல திட்டங்கள் உள்ளன.

சிறிய திருமண மண்டபத்திற்கான மொத செலவை திரு. ஐசரி கணேஷ் அவர்களும் , பிரிவிவ் திரையரங்கத்திற்கான மொத செலவை திரு .சிவகுமார்,சூரியா,
கார்த்தி குடுபத்தினர் ஏற்று கொள்வதாக உறுதி அளித்துள்ளனர்

இவற்றை வாடகைக்கு விடுவதன் மூலம் மாதம் 56 லட்சத்து 20 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 6 கோடியே74 லட்சம் வருமானம் பெறும் திட்டம் உள்ளது.

இதற்காக  ஏப்ரல் 17ல் நட்சத்திரக் கிரிக்கெட் நடத்தவிருக்கிறோம்.

சூப்பர்ஸ்டார் உள்பட பல நட்சத்திரங்கள் நடிக்கும் நாடகம் நடத்தும் திட்டமும் உள்ளது. ”

என்றவர், இன்றுதான் தான் செயலாளராக பதவி ஏற்பதாக உணர்வதாக கூறினார்.

விழாவின் இடையில் கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து ‘ஸ்கைப்’ மூலம் பேசி அனைவருக்கும் வாழ்த்துக்களைக் கூறினார்.

நடிகர் சங்கத்தின் கட்டட மாதிரியை நடிகர் சிவகுமார், வசனகர்த்தா ஆரூர் தாஸ் அகியோர் திறந்து வைத்தனர்.

பொருளாளர் கார்த்தி பேசும் போது ” இது கனவிலும் நினைத்துப் பார்க்காத மேடை இதை என்பெரிய குடும்பமாக உணர்கிறேன். இனி நாடக நடிகர்கள் எதற்கும் யாரிடமும் கை யேந்த விடமாட்டோம். மருத்துவ, கல்வி, ஓய்வூதியத்திட்டங்கள் பலன் தரும். முந்தைய நிர்வாகம் செய்த குளறுபடிகள், தவறுகள் பற்றி புகார் செய்ய இருக்கிறோம். ”என்றார்.

தலைவர் நாசர்பேசும் போது ” இப்படி ஒரு பெரிய மாற்றத்துக்காக எங்கள் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி.

நம்பிக்கையைவிட அன்பு காட்டியது அதிகம். அதற்கும் நன்றி. அவச்சொல். அவதூறு , வாக்குவாதம் இல்லாமல் நடக்கும் முதல் கூட்டம் இது. இப்படிக் கல்யாண வைபவம் போல ஒவ்வொரு கூட்டமும் கொண்டாட்டமாக நடக்கும். எங்களை  நம்புங்கள் அனைவரும் இணைவோம். நல்லதே நடக்கும்.” என்றார். நிகழ்ச்சியில் அறிமுகவுரை மட்டுமல்ல தொகுப்புரை நன்றியுரை எல்லாமும் துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆற்றினார்.

நடிகர் சங்கம் 62 வது பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க புதிய கட்டத்தின் மாதிரி கட்டத்தை  முத்த நடிகர் சிவகுமார் , ஆருர்  தாஸ் ஆகியோர் திறந்து வைத்து சிறப்பித்தனர் .

பொதுகுழுவில் கலந்துகொண்டவர்கள்
தலைவர் –  நாசர்
துணைத்தலைவர்கள் –  பொன்வண்ணன் , கருணாஸ்
பொது செயலாளர் – விஷால்
பொருளாளர் – கார்த்தி

செயற்குழு உறுப்பினர்கள்

ராஜேஷ்,ஜூனியர்.பாலையா,பூச்சிமுருகன்,ராம்கி,பசுபதி,,ஸ்ரீமன்,பிரசன்னா,விக்னேஷ்,T.P.கஜேந்திரன்,கோவை சரளா,நளினி,நிரோஷா,A.L.உதயா,ரமணா,பிரேம் குமார்,நந்தா,பிரகாஷ்,தளபதி தினேஷ்,அயுப்கான்,பாலதண்டபாணி,குட்டி பத்மினி,சிவகாமி,சங்கிதா,சோனியா

நியமன குழு உறுப்பினர்கள்
மனோபாலா
சரவணன்
அஜய் ரத்தினம்
காஜாமொய்தின்
மருதுபாண்டியன்
ஜெரால்டுமில்டன்
வாசுதேவன்
காந்தி
காளிமுத்து
ரெத்தினசபாபதி
சரவணன்
காமராஜர்
ரகுபதி
லிதாகுமாரி
J.K.ரித்தீஷ்
மனோபாலா
ஹேமச்சந்திரன்

கடிடா நியமன குழு உறுபினர்கள்
ஐசரி கணேஷ்
S.V.சேகர்
பூச்சி முருகன்
குட்டி பத்மினி
ராஜேஷ்

பொதுக்குழுவில் கலந்துகொண்ட விருந்தினர்கள்

சூர்யா, வடிவேலு ,செந்தில்,விமல்,  விஷ்ணு ,ஜெயம் ரவி ,சூரி,விஜய் சேதுபதி ,பப்பி சிம்ஹா ,சுந்தர்.C ,K.S.ரவி குமார் ,ஜெயா பிரகாஷ் , R.பாண்டியராஜன் , அசோக் ,ஷாம் , பரத் , ஸ்ரீனிவாசன் (பவர் ஸ்டார்) , சின்னி ஜெயந்த், அப்பு குட்டி ,மோகன் (மைக்) ,சரவணன் ,நாட்டி நடராஜன் , A.L.அழகப்பன் , சங்கர் கணேஷ் , நிழல்கள் ரவி,ரகுமான், வைபோவ், சங்கீத, சுகஷினி, இனியா, ரோகினி, ரேக்கா, சச்சு , சுகன்யா, விஜய் கார்த்திகேயன் , டெல்லி கணேஷ், ஆரி,சோனா.எபி குஞ்சிமோகன், மன்சுருளி காண், ஜகுவார் தங்கம் ,ராமச்சதிரன், R.K.சுரேஷ் ,நித்தின் சத்திய,ரித்திவிகா மற்றும் பலர் .

மேலும் உறுபினர்களாக உள்ள மலையாள நட்கர் நடிகைகள்

ஜோஷ் , சீமா,வனிதா கிரிஸ்ஷ்ணச்சந்திரன், மேனகா சுரேஷ்,ரஞ்சினி, சபித ஆனந்த் ஆகியோரும் கலந்துகொண்டனர்

என் கெட்ட பெயரை மாற்றுவேன்! சத்தியம் செய்கிறார் சாமி!

என் கெட்ட பெயரை மாற்றுவேன்! சத்தியம் செய்கிறார் சாமி!

‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ போன்ற  சர்ச்சைப் படங்களுக்குப் பெயர் பெற்ற சாமி ‘நல்ல பிள்ளை’யாக மாறி இயக்கும் படம் ‘கங்காரு’.

பரபரப்புக்காக முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கிறார் என்கிற விமர்சனம் சாமியைத்  துரத்தி வருகிறது.

சாமி படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டு அவரை விடாமல்  தொடர்ந்து  வருகிறது.’நான் அப்படிப்பட்ட இயக்குநரல்ல. ஆளை விடுங்கப்பா சாமி’ என்று வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார் சாமி.

இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான சாமி இப்போது பாசவுணர்வை தூக்கிப்பிடிக்கிறார். அதுதான் ‘கங்காரு’

எப்படி ஒரு கங்காரு தன் குட்டியை வயிற்றுப் பையில் சுமக்கிறதோ அப்படி தன் தங்கையை மார்பிலும் தோளிலும் சுமக்கும் அண்ணனின் கதைதான் கங்காரு என்கிறார் சாமி.

தன்மீது விழுந்த முத்திரை பற்றி அவர் என்ன நினைக்கிறார்?

”நானும் பெரிய பெரிய இயக்குநர்கள் மாதிரி விதவிதமான கதைகளில் ரகம் ரகமான நிறங்களில் புதுப்புது படம் இயக்க வேண்டும் என்று நினைத்துதான் இங்கு வந்தேன். ஆனால் நினைத்தமாதிரி இங்கே நிலைமை இல்லை.யாரும்  என்னைக் கண்டு கொள்ளவில்லை.  என்மீது கவனமும் மற்றவர் பார்வையும் படவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் ஒரு பரபரப்புக்காக இப்படிப்பட்ட படங்களை இயக்கினேன். நான் கவனிக்கப்பட்டேன். ஆனால் பெயர் கெட்டு விட்டது. சாமி இப்படிப்பட்ட ஆசாமி என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

என் படங்களை விமர்சித்தவர்கள் கூட சாமி அழுத்தமாகக் கதை சொல்லத் தெரிந்தவன் என்பதை ஒப்புக் கொள்ளவே செய்தார்கள். அழுத்தமாகச் சொல்லத் தெரிந்ததால்தான் இவ்வளவு விமர்சனங்கள் வந்தன என்றும் என் நண்பர்கள் சொல்வதுண்டு.

எது எப்படியோ அது என்  தவறுதான்.  பெயர் கெட்டுவிட்டது. மாற்ற வேண்டும். இனி நான் வேறு சாமி.இந்த சாமிக்குள் நிறைய கனவுகள் படைப்புகள் உள்ளன. அதற்குள் என்னை இப்படி தவறான முத்திரை குத்தி குறுகிய வட்டத்துக்குள் போட்டு அமுக்கி விட வேண்டாம். இந்த கெட்ட பெயரை மாற்றவேண்டும். துடைத்தெறிய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இப்போது ‘கங்காரு’ எடுக்கிறேன். இதன் மூலம் என் கெட்ட பெயரை  மாற்றுவேன்.இந்தப் படம் நிச்சயம் என் பெயரை மாற்றும் . ”என்கிறார்.

சாமி பற்றி விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் தமிழ்ச்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் என்று வைரமுத்து கூறியுள்ளாரே?

“கவிப்பேரரசு வைரமுத்து சார் பற்றி நான் இங்கு சொல்லியே ஆகவேண்டும்.அவர் இருக்கிற உயரத்துக்கு என்னைப்பற்றி புகழ்ந்து பேச அவசியமில்லை. அவர் அப்படிப் பட்ட மனிதரும் அல்ல.

அவர் பாடல் எழுத வேண்டும் என்று நான் விரும்பி அவரைச் சந்தித்தேன். வைரமுத்து அவர்களை அணுக எனக்கு பயமாக இருந்தது. அவருக்கு சம்பளம் எப்படியோ என தயக்கம். ஸ்ரீநிவாஸ் மூலம்தான் அவரிடம் போனோம். நம் படத்தின் பட்ஜெட்டுக்கு அவர் வாங்கும் சம்பளத்தைக் கொடுக்க முடியுமா என்று பயந்தேன். எனவே யோசித்தேன். கதை கேட்டார் சொன்னேன். சம்பள விஷயம்பற்றி தயங்கிக் கேட்டதும்எங்கள் பட்ஜெட் நிலையறிந்து  எழுதிக் கொடுத்தார்.. தன் 5 பாடல்கள் மூலம் படத்துக்குப் பலம் சேர்த்துவிட்டார். எனக்குப் பணம்  முக்கியமில்லை என்று குறைத்துக்கொண்டு எங்கள் பட்ஜெட்டுக்குள் வாங்கிக் கொண்டார்.

அவரிடம் பேசியபோது தானுண்டு தன் வேலையுண்டு என்று அவர் யோசிக்க வில்லை.என்னைப்பற்றி என் படத்தைப் பற்றி படப்பிடிப்பு பற்றி பட்ஜெட்பற்றி சினிமாவின் இன்றைய தொழில் சூழல்பற்றி படைப்புச் சூழல் பற்றியெல்லாம் பேசினார். அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். நம் சினிமாபற்றி உலக சினிமா பற்றி எல்லாம்  நிறைய பேசினார். நான் வியப்புடன் கேட்டுக் கொண்டு இருந்தேன்.

ஒரு பாடல் உருவாகும்போது அவர் எடுத்த அக்கறை சாதாரணமானதல்ல. ஒலிப்பதிவுக்கு வந்தார். உன்னிப்பாகக் கவனித்தார். வரிகளைப் பாடிக் காட்டினார்.அவருக்கு இருக்கும் வேலைகளில் அவர் இருக்கும் உயரத்தில் இதெல்லாம் அவருக்கு அவசியமில்லை. இருந்தாலும் செய்தார்.அதுதான் அவரது தொழில் நேர்த்தி.அதனால்தான் அவர்  இவ்வளவு காலம் கடந்தும் இன்றும் நிற்கிறார்.

படத்தில் வரும் பாடல் காட்சிகளை யார் யார் எல்லாம் எந்தெந்த விதத்தில் எல்லாம் சிறப்பு சேர்க்க முடியும் என்று அவர் விளக்கியதும் எனக்குள் பல ஜன்னல்கள் திறந்த உணர்வு.

‘கங்காரு’ பாடல்கள் இப்போதே வெற்றிபெற்று விட்டன. படம் வந்ததும் மேலும் பட்டையைக் கிளப்பும் அவருக்கு இன்னொரு தேசியவிருது நிச்சயம்.

இத்தனை நாள்  வைரமுத்து சாரை சந்திக்கவில்லையே என வருத்தப் பட்டேன். அவர் எனக்கு சினிமா குருநாதர் ஆகிவிட்டார். இனி என் எல்லாப் படங்களுக்கும் அவரிடம் ஆலோசனை கேட்கலாம் என்றிருக்கிறேன்.” என்று  நீ ஈஈஈளமாக வைரமுத்துவுடனான  நினைவுகளில் மூழ்கியவரை அடுத்த கேள்வி கேட்டு மீட்டோம்.

மற்ற சிறப்புகள் என்னென்ன?

”இசையமைப்பாளர் புதிதாகத் தேடிய போது ஒரு நண்பர் மூலம் ஸ்ரீநிவாஸ் அறிமுகமானார். அவரை ஒப்பந்தம் செய்யும் முன்பே மெட்டு போட்டுக்காட்டி என்னைக் கவர்ந்தார். ஒப்பந்தம் செய்து விட்டோம்.

இதில் நாயகனாக நடிக்கும் அர்ஜுனாவை நான் ஏற்கெனவே ‘மிருகம்’ படத்துக்காக பார்த்திருந்தேன். ஆனால் ஆதியை நடிக்க வைத்தேன். இந்தக் கதைக்குப் பொருத்தமாகத் தோன்றியதால் அர்ஜுனாவை நடிக்க வைத்துள்ளேன். அதேபோல தங்கையாக வரும் ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, ஆர். சுந்தர்ராஜன் எல்லாரையுமே கதைக்காக தேர்வு செய்து நடிக்க வைத்தேன்.நடிகர்களுக்காக நான் என்றும் கதை செய்ய மாட்டேன். ” என்கிறார்.

அண்ணன் தங்கை பாசமெல்லாம் காலம் கடந்தது என்பார்களே..?

“நம் மண்ணில் இன்னமும் ஈரமும் பாசமும் வற்றிப்போய் விடவில்லை. இன்னமும் பாசமலர் அண்ணன் தங்கைகள் இருக்கவே செய்கிறார்கள். அம்மா பிள்ளை பாசமும் இருக்கவே செய்கிறது. இதற்கு ஏராளமான நிஜக்கதைகள் இருக்கின்றன.

‘கங்காரு’ நவீன பாசமலர் என்று சொல்வேன். நிச்சயம் இது பேசப்படும். பாராட்டப்படும் எதுவும் மிகையில்லாதபடி சொல்லி இருப்பது நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.

முந்தைய படங்கள் பற்றி என் அம்மாவே என்னைத் திட்டியிருக்கிறார். ‘இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியாக படம் பண்ணு ‘என்று .அந்த அம்மாவே பாராட்டும்படி இப்படம் இருக்கும். “என்கிறார்.

இது வரையிலான சாமியின் பிம்பத்தை இப்படம் நிச்சயம் உடைக்கும் என்பது அவரது பேச்சிலிருந்து புரிகிறது.’கங்காரு’ படம் வரட்டும்.

ஐயப்பசாமி மாலை போட்டவராக திருந்திய’நல்ல’சாமிக்கு வாழ்த்துக்கள்!

சென்னையில் கவிஞர் வைரமுத்துவுக்கு பாராட்டு விழா

மகத்தான கலைஞர்களை சரியான நேரத்தில் பாராட்டாமல் விடுவது தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய அளவிலும்  சகஜம். தனக்கு தாமதமாகக் கிடைத்த பத்ம பூசன் விருதை பாடகி எஸ். ஜானகி அவர்கள் திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அவ்வாறில்லாமல் நாமே நமது மகத்தான கலைஞர்களை சேர்ந்து பாராட்டும் ஒரு தொடக்கத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் செய்துள்ளது. கடந்த முறை இயக்குனர் மணிவண்ணனை கவுரவித்ததோடு ஹரிதாஸ் தயாரிப்பாளரையும் பாராட்டி மகிழ்ந்தது.
தற்போது  இன்னொரு முன்னுதாரணமாக, சுமார் 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிவிட்ட கவிஞர் வைரமுத்துவுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி, சென்னையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் பாராட்டு விழா நடக்கிறது.
பாடலாசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர் என பன்முகம் கொண்ட கவிஞராக தமிழ்சினிமாவில் கோலோச்சி வருபவர் வைரமுத்து. அந்த வகையில் அவர் பாடல்களை மட்டுமில்லாமல் ஏராளமான கட்டுரைகளையும், நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
கவிஞர் வைரமுத்து 1980-ம் ஆண்டு ரிலீஸான நிழல்கள் படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப்பொழுது… என்ற பாடல் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார். இதுவரை அவர், 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்.
இதுவரை அவர் 6 தேசிய விருதுகளையும், 6 தமிழக அரசின் விருதுகளையும் வாங்கியிருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். அது மட்டுமில்லாமல் இப்போது வந்திருக்கும் புதிய பாடலாசிரியர்களுக்கு மத்தியில் அவரும் போட்டி போட்டுக் கொண்டு பல படங்களில் பாடல்களை எழுதி வருகிறார்.
அப்படி அவர் பாடல்கள் எழுதி விரைவில் திரைக்கு வர இருக்கும் படங்களில் ஒன்று தான் கங்காரு.  புதுமுகம் அர்ஜுனா, வர்ஷா அஸ்வதி.R, பிரியங்கா, தம்பி ராமையா, கலாபவன் மணி   மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை சாமி டைரக்ட் செய்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் இடம்பெறும் 6 பாடல்களையும் கவிஞர் வைரமுத்துவே எழுதியிருக்கிறார். ஆகவே படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீடு கவிஞர் வைரமுத்துவுக்கு பாராட்டு விழாவாக நடத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்பாடு செய்து வருகிறார்.
அதன்படி, இந்த விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்,நடிகைகள், டைரக்டர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்,பாடகிகள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் இந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவை பற்றிய ஒரு ட்ரெய்லரும், அவர் எழுதி மிக பிரபலமான 10 பாடல் காட்சிகளும், விழாவில் திரையிடப்படுகிறது.