முதல் அமைச்சர் ஜெயலலிதா கைரேகை வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

அதிமுக வேட்பாளர் விண்ணப்பத்தில் கைரேகை வைத்தது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் சுயநினைவோடு வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றும், அதிமுக வேட்பாளர் விண்ணப்பத்தில் முதலமைச்சர் கைரேகை வைத்தது செல்லாது என அறிவிக்கக் கோரியும் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகைக்கு அரசு மருத்துவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினர். அதனால், முதலமைச்சர் கைரேகை வைத்தது தொடர்பான இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், தேவையற்ற முறையில் பொதுநல வழக்கு தொடர்வது சரியானது அல்ல என்றும், மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஜெயலலிதா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நேற்றிரவு சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்மநபர், ‘சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டில் குண்டுவெடிக்கும்’ எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து இருக்கிறார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அவர்களின் விசாரணையில், அந்த மர்ம தொலைபேசி அழைப்பு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து வந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது:-

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறுகிறது இது முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைப்பெற உள்ளது.

இந்த கூட்டத்தில், 2016 -17 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து அமைச்சர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தி உள்ளார்.

மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கட்டுக்குள் வைத்திருப்பது, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்களை எடுத்து செல்வது ஆகியவை குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

ஜெ 2 வது முறை பதவியேற்ற பின்  நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: கவிஞர் முத்துலிங்கம்

மத்திய அரசு தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: கவிஞர் முத்துலிங்கம்

பசும்பொன் அறக்கட்டளை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி கருத்தரங்கம் சென்னை அபிபுல்லா சாலையிலுள்ள தேவர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது ‘எம்.ஜி.ஆர். வழியை பின்பற்றி பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு சென்னையில் சிலை வைத்து சிறப்பித்தவர் முதல்வர் அம்மாதான். மத்திய அரசு தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். என்றும் திரைப்பட பாடலாசிரியர்., கவிஞர் முத்துலிங்கம் பேசினார்.

முன்னாள் அரசவைக்கவிஞரும், முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிஞர் முத்துலிங்கம் பேசியதாவது, ‘தேவர் ஒரு சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் சாதி பேதம் பார்க்காத சமத்துவஞானியாக வி்ளங்கிய ஆரசியல் ஞானி அவர்.

தேவர் படித்தது ஆறாம் படிவம் வரைதான். ஆனால் ஆங்கிலத்திலும் தமிழிலும் அற்புதமாக பேசக்கூடிய ஆற்றல் பெற்றவராக விளங்கினார்.

காசி இந்து சர்வ கலாச்சாலையில் இந்து மதத்தத்துவத்தைப் பற்றி மூன்று மணிநேரம் ஆங்கில பேராசியர்களே வியந்து போகும்படி ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினார்.

அதற்குத் தலைமைதாங்கிய இந்து சர்வ கலாச்சாலை துணைத்தலைவர் சர்.சி.பி ராமசாமி ஐயர் பேசும்போது, ‘உலகநாடுகளை ஆங்கிலம் அடக்கி ஆள்கிறது. அந்த ஆங்கிலத்தையே மூன்று மணிநேரம் எங்கள் சேது நாட்டுச் சிங்கம் முத்துராமலிங்கம் அடக்கி ஆண்டு விட்டது. இது சேது நாட்டுக்கு மட்டுமல்ல. தமிழ் நாட்டுக்கே பெருமை இந்தியாவுக்கும் இந்தியர்களுக்குமே பெருமை’ என்று பேசினார்..

தேவர் முதன்முதலில் மேடையேரியது 1933 ஆண்டு சாயல்குடியில் நடந்த விவேகானந்தர்

வாசக சாலையில்தான். அங்கும் மூன்று மணி நேரம் பேசி எல்லோரையும் ஆச்சரியப்ட வைத்தார். அந்த விழாவில்தான் காமராசர் முதன் முதலில்  தேவரை சந்திக்கிறார். தேவரும் அப்போதுதான் காமராசரை பார்க்கிறார்.

இப்படிப்பட்ட பேச்சை இதுவரை கேட்டதில்லையென்று காமராசர் மற்றவர்களிடம் பாராட்டிப் பேசியதோடு  இப்படிப்பட்ட தேவர் காங்கிரஸ் கட்சிக்கு பேச்சாளராக இருந்தால் கட்சி வெற்றி பெறும் என்று தன் விருப்பத்தை தெரிவித்தாராம்.

1936 ல் நடந்த ஜில்லா போர்டு உறுப்பினர் தேர்தலில் முதுகுளத்தூர் பகுதியில் நின்று மிகப்பெரிய வெற்றியை பெற்றார் தேவர். அதுதான் அரசியலில் அவருக்கு முதல் நுழைவு. விருது நகர் நகராட்சியில் முதன் முதல் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு காமராசரை நிறுத்தி வெற்றி பெற வைத்ததும் தேவர்தான்.

1937 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் காமராசர் ஜெயித்ததற்கு தேவர்தான் காரணம். அதுமட்டுமல்ல நீதிக்கட்சியை சேர்ந்தவர்களால் காமராசருக்கு ஏற்படவிருந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்தியதும் தேவருடைய பேச்சுதான். தென் மாவட்டங்களில்  நீதிக்கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததற்கும் தேவர்தான் காரணம்.

இதை ராஜாஜியே சொல்லியிருக்கிறார். தென் புலத்தில்  காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு என்னை பாத்தனென்று சொல்கிறார்கள்.  நான் பார்த்தனென்றால்  எனக்கு சாரதியாக இருந்து வெற்றி தேடி தந்தது இருபத்தொன்பது வயதே ஆன பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்கிற வாலிபர்தான். ்’ என்று மனம் திறந்து பாராட்டினார்  ராஜாஜி.

அந்த நேரத்தில் நீதிக்கட்சியை சேர்ந்த ராமநாதபுரம் அரசரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தேவர். இது அந்தக் காலத்தில் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. .அன்றைக்கு ராமநாதபுரம் தொகுதியென்பது ராமநாதபுரம்,பரமக்குடி முதுகுளத்தூர் தாலுகா அடங்கிய பெரிய தொகுதி.

பதவியில் இருப்பவன் தாமரை இலைத் தண்ணீரைப்போல ஒட்டியும் ஒட்டாமலும் பட்டும் படாமலும் இருக்க வேண்டும் என்றார் தேவர். அப்படி இருந்தாலும் கூட இருப்பவர்கள் இருக்க விடமாட்டார்கள் என்பதால்தான் தன்னைத் தேடி வந்த மாநில அமைச்சர் பதவி மத்திய அமைச்சர் பதவியை வேண்டாம் என்று மறுத்தார்.

உங்கள் பார்வேர்டு கட்சியை காங்கிரஸில் இணைத்துவிட்டு மத்திய அமச்சர் பதவியில் உங்களுக்கு எந்த இலாகா வேண்டுமோ அந்த இலாகவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நேரு கேட்டபோது, ‘நான் நேதாஜியை தலைவராக ஏற்றுக்கொண்டவன் உங்களைத் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. என்று நேருவிடம் பகிரங்கமாகவும். வெளிப்படையாகவும் சொன்னவர் தேவர்.

இதனால் வங்க மக்கள் தென்னாட்டு போஸ் என்று அடைமொழி கொடுத்து அழைத்துச் சிறப்பித்தார்கள். தேவரைப் போல துணிச்சல் மிகுந்த தலைவர்கள் அன்றைக்கு எவரும் இல்லை.

அரசியல் மேடையில் ஆன்மீகம் பேசமாட்டார். ஆன்மீக மேடையில் அரசியல் பேசமாட்டார். இன்றைக்கு திருமண மேடையில் கூட அரசியல் பேசி மேடையை அலங்கோலப் படுத்துபவர்கள்தான் அதிகம்.

தேவரது அரசியல் பேச்சில் அனல் பறக்கும். ஆன்மீக பேச்சில் ஞான ஊற்றுச் சுரக்கும். 1938ம் ஆண்டு மதுரையில் வைத்தியநாத ஐயர் தலைமையில் அரிசனங்கள் ஆலயப்பிரவேசம் செய்ததற்கு முத்துராமலிங்கத் தேவர்தான் பெருங்காரணம். இதை மூடி மறைத்துப் பலர் பேசுகிறார்கள்.

வாய்மை, தூய்மை, உண்மை, மெய்ம்மை, நேர்மை துணிவுடைமை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் தேவர். எல்லாருக்கும் நெருக்கமான தலைவர்கள் ைருக்கலாம். இணக்கமான தலைவர்கள் இருக்கலாம். ஆனால் தேவரைப் போல ஒழுக்கமான தலைவர்கள் எவருமே கிடையாது.

காமராசர், எம்.ஜி.,ஆர். ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது போல் தேவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும். அப்படிச் சிறப்பித்தால் அது தேவருக்கு மட்டும் பெருமையாக இருக்காது. மத்திய அரசுக்கும் பெருமையாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். அரசியலில்  இருந்தபோதுதான் தேவருடைய பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாடினார். தேவருடைய படத்தை சட்டமன்றத்திலே திறந்து வைத்து தேவருக்குப் பெருமை சேர்ந்ததும் எம்.ஜி.ஆர்.தான்.  தேவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பாடப்புத்தகத்தில் இடம்பெறச்செய்து மாணாக்காச் செல்வங்களும் அவருடைய பெருமையை அறியும்படி செய்தவரும் எம்.ஜி.,ஆர்.தான் ர் எம்.ஜி.ஆர் வழியில் சென்னை நந்தனம் பகுதியில் தேவருக்குச் சிலை வைத்து அந்தச் சாலைக்கே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலை என்று பெயரிட்டுச் சிறப்பித்தவர் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மாதான்.

அதுமட்டுமல்ல பசும்பொன் கிராமத்தில் அவர் நினைவிடத்தில் அமைந்துள்ள மார்பளவுச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவித்துச் சிறப்பித்தவரும் அம்மாதான்.  தேவரிடம் இருந்த துணிச்சல் இன்று அம்மா ஒருவரிடம் மட்டுமே இருக்கிறது. தேவர் இருந்திருந்தால் அம்மாவை வாழ்த்தியிருப்பார். என்று பேசினார் முத்துலிங்கம். நிகச்சியில் கவிஞர் ஜீவபாரதி, மேடைமணி நடராசன், கவிஞர் இதயகீதம் ராமனுஜம், ராஜராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி : ஜெயலலிதா அறிவிப்பு

சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி : ஜெயலலிதா அறிவிப்பு:-

சாலை விபத்துக்களில் உயிரிழந்த 14 பேரது குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

16-3-2016 அன்று காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், படப்பை கிராமத்தைச் சேர்ந்த கனகராஜின் மகன் செல்வன் சந்தோஷ்; தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சீரியனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜின் மகன் சுரேஷ், கனபுள்ளியின் மகன் மூவேந்திரன்; 1-4-2016 அன்று வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், தும்பேரி கிராமத்தைச் சேர்ந்த உதயகுமாரின் மகன் செல்வன் பில்லா; 18-4-2016 அன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரத்தைச் சேர்ந்த சோலையப்பனின் மகன் முருகன்;

5-5-2016 அன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், வடுவூர் கிராமத்தைச் சேர்ந்த சவுந்தரத்தின் மகன் சரவணன்; திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், பைங்காநாடு கிராமத்தைச் சேர்ந்த நடராஜின் மனைவி யசோதா; 8-5-2016 அன்று காஞ்சீபுரம் மாவட்டம், கன்னடப்பாளையம், கடப்பேரி கிராமத்தைச் சேர்ந்த தன்ராஜ், பிரபாகரன், முத்துராஜ்;

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், பெத்தாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி, பெரமையா, கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர்ராஜன், குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

சிறையில் இருந்து விடுதலையான மீனவர்களுக்கு நிதி உதவி : ஜெயலலிதா அறிவிப்பு

சிறையில் இருந்து விடுதலையான மீனவர்களுக்கு நிதி உதவி : ஜெயலலிதா அறிவிப்பு:

ஈரானில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 4 பேருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 4 பேர், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள துபாயில் அஜ்மான் கடல் பகுதியில் தனியார் மீன்பிடி படகில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் பிப்ரவரி 6-இல் மீன்பிடிக்கச் சென்றபோது வழி தவறி ஈரான் நாட்டுக்குச் சென்றதால், அங்கு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர். அப்போது ஈரான் நாட்டு கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒரு மீனவர் காயம் அடைந்தார்.

இவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசுத் துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதன்பேரில், ஈரான் நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளையும், மத்திய அரசின் வெளிவிவகாரத் துறையினையும் தமிழக அரசு அலுவலர்கள் தொடர்பு கொண்டு, சட்ட உதவிகளை மேற்கொண்டனர். இதனால், 4 பேரும் ஏப்ரல் 30-இல் விடுதலை செய்யப்பட்டு, மே 1-இல் சென்னைக்கு வந்தடைந்தனர்.

இவர்கள் 4 பேருக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் உதவித் தொகையை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Visit Chennaivision for More Tamil Cinema News

தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது : முதல்வர் ஜெயலலிதா

தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜெயலலிதா இன்று பதில் அளித்து உரையாற்றிய போது கூறியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் நேற்று விவாதத்தில் பங்கேற்று பேசும் போது, அண்மைக் காலமாக அடுத்தடுத்து நடக்கக் கூடிய கொலைகள், கொள்ளைகள், கூலிப்படையினருடைய அட்டகாசம் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்றும், கூலிப்படையினுடைய நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்து கொண்டிருக்கிறது என்றும்; உண்மைக்கு மாறான ஒரு குற்றச்சாட்டை சொல்லியுள்ளார்.

குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றி நான் சற்று முன் தெரிவித்துள்ளேன்.

கொலை சம்பவங்கள் குறித்து நாளேடுகளில் செய்திகள் வெளியாகும் போது, பொதுவாக அவை கூலிப்படையினரால் நடைபெற்றதாக செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், உண்மை நிலை என்னவெனில், பெரும்பாலான சம்பவங்களில் கொலையுண்டவர்களின் எதிரிகள், உறவினர்கள், கூட்டாளிகள் அல்லது நண்பர்கள் ஆகியோரே இச்செயலில் ஈடுபடுகின்றனர்.

மேலும், இரு தரப்பினரிடையே முன் விரோதம் காரணமாக, பழிக்கு பழியாக மாறி மாறி கொலைகள் நடக்கும் போது அச்சம்பவங்களில் இரு தரப்பினருக்கும் வேண்டியவர்களே சம்பந்தப்படுகிறார்கள். ஆனால் அது போன்ற சம்பவங்களிலும் கூலிப்படையினர் ஈடுபட்டதாக செய்திகள் வெளி வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களில் கூலிப்படைகள் ஈடுபட்டதாக நாளேடுகளில் செய்திகள் வெளிவந்துள்ள போதும் உண்மையில் அச்சம்பவங்களில் கூலிப்படையினர் ஈடுபடவில்லை. எனவே, கூலிப்படையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளதில் எள்ளளவும் உண்மையில்லை. கூலிப்படையினரை அறவே ஒழிக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்.

உறுப்பினர் எச்.வசந்த குமார் பேசும் போது திருட்டு வி.சி.டி.க்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தைச் சொல்லியுள்ளார். காணொலி திருட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல் துறை முனைப்புடன் எடுத்து வருகிறது.

காணொலி திருட்டைக் கட்டுப்படுத்தவும், பதிப்புரிமை சட்ட மீறலைக் கண்காணிக்கவும் எனது முதல் ஆட்சிக் காலத்திலேயே, 1995ஆம் ஆண்டு, காணொலி திருட்டு தடுப்புப் பிரிவு என்ற ஒரு தனிப் பிரிவு எனது தலைமையிலான அரசால் தொடங்கப்பட்டது. தற்போது 12 இடங்களில் இப்பிரிவுகள் உள்ளன.

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காணொலி திருட்டுக் குற்றம் 2004ஆம் ஆண்டு எனது தலைமையிலான அரசால் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், காணொலி திருட்டு தடுப்புப் பிரிவால் 13,784 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 13,446 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 108.72 கோடி ரூபாய் மதிப்பிலான திருட்டு குறுந்தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 52 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டனர்.

என்னுடைய இந்தப் பதிலுரை, உறுப்பினர்களுக்கு, திருப்தி அளித்திருக்கும் என, நான் நம்புகிறேன். எனது இந்தப் பதிலுரையை, ஏற்றுக் கொண்டு, மேதகு ஆளுநர் உரைக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, கொடுத்த திருத்தங்களை, உறுப்பினர்கள் திரும்பப் பெற வேண்டும், என்று கேட்டுக் கொள்வதோடு; தீர்மானத்தை, ஒருமனதாக, நிறைவேற்றித் தருமாறு, பேரவைத் தலைவர் வாயிலாக, இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனை வரையும், கேட்டுக் கொண்டு அமைகிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி : ஜெயலலிதா அறிவிப்பு

ஓசூரில் கொள்ளையர்களால் குத்தி கொலை செய்யப்பட்ட தலைமைக் காவலர் முனுசாமி, குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இன்றைய் சட்ட சபை கூட்டத்தின் போது, 110வது விதியின் கீழ் இதை தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, உயிரிழந்த முனுசாமியின் மகளின் உயர் கல்விச் செலவை அரசு ஏற்கும் என்றும் அறிவித்தார்.

உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி : ஜெயலலிதா அறிவிப்பு

உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி : ஜெயலலிதா அறிவிப்பு

மேலும், வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிரிழக்கும் போலீசாருக்கு உதவித்தொகை உயர்த்தப்படும். உதவித்தொகையை உயர்த்த சட்ட திருத்தம் கொண்டு வர தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு : ஜெயலலிதா கண்டனம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எண்ணெய் நிறுவனங்கள் 16.6.2016 முதல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 5 காசு என்ற அளவிலும், டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 34 காசு என்ற அளவிலும் உயர்த்தி உள்ளன. உலக சந்தைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதிலிருந்து மாதம் இரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளை இவை மாற்றி அமைக்கின்றன. விலை உயர்த்தப்படும் போதெல்லாம் உலகச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு நிலவும் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய காரணங்களாலேயே விலை உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.  இதே காரணத்தைத் தான் தற்போதும் இவை தெரிவித்துள்ளன.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு : ஜெயலலிதா கண்டனம் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு : ஜெயலலிதா கண்டனம்

எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோலியப் பொருட்களை தயாரிப்பதுடன், தேவையான அளவு கச்சா எண்ணெய்யைத் தான் இறக்குமதி செய்கின்றன. கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெறப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை விற்பனை செய்கின்றன. இவ்வாறு உள்ள சூழ்நிலையில் உலகச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு நிலவும் விலையினை அடிப்படையாக வைத்து அவற்றை இறக்குமதி செய்தால் நிர்ணயம் செய்யப்பட வேண்டிய விலையின் அடிப்படையில் உள்ளூர் விலையை நிர்ணயிப்பது தவறான விலை நிர்ணயக் கொள்கை ஆகும். இதை நான் ஏற்கெனவே பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். ஆனால் இந்தத் தவறான கொள்கை இன்னமும் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த தவறான அடிப்படையிலேயே தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

மத்திய அரசு 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பல தவணைகளில் பெட்ரோலுக்கு 11 ரூபாய் 77 காசு என்ற அளவிலும், டீசலுக்கு 13 ரூபாய் 57 காசு என்ற அளலும் கலால் வரியை உயர்த்தியுள்ளது.  கச்சா எண்ணெய் விலை சரிந்த போது இதன் முழுப் பயன் மக்களை சென்றடைய விடாமல் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போதைய விலை உயர்வு நியாயமானது அல்ல.  மேலும், நான் பல முறை சுட்டிக்காட்டியுள்ளபடி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கம் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தக் காரணிகளுக்கும் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.  எனவே இந்திய ரூபாயின் மதிப்பு என்ற காரணத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதும், மாற்றப்பட வேண்டிய கொள்கை ஆகும்.

தற்போதைய டீசல் விலை உயர்வு காரணமாக சரக்குக் கட்டணங்கள் அதிகரிக்கும். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வழி ஏற்படும்.  ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்க்கைத் தரம் பாதிப்படையும்.  எனவே, எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

சொத்து குவிப்பு வழக்கு குறித்து பேசவே ஜெயலலிதா டெல்லி செல்கிறார்

பிரதமர் மோடியை நேரில் சந்திக்க இன்று டெல்லி செல்லும் முதல்வர் ஜெயலலிதா, தன் மீதுள்ள சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பேசுவதற்காகவே செல்கிறார், என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டியளித்த இளங்கோவன் கூறியதாவது:

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் குற்றவாளிகள் இல்லை என்றால், மீண்டும் நீதி விசாரணை நடத்தி அவர்களை விடுதலை செய்தால் ஆட்சேபனை இல்லை. மக்கள் பிரச்சினைக்காக முதல்வர் ஜெயலலிதா டெல்லிக்கு செல்லவில்லை. சொத்து வழக்கு, 570 கோடி ரூபாய் பறிமுதல் குறித்து பேசவே அவர் டெல்லி செல்ல உள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கு குறித்து பேசவே ஜெயலலிதா டெல்லி செல்கிறார்

சொத்து குவிப்பு வழக்கு குறித்து பேசவே ஜெயலலிதா டெல்லி செல்கிறார்

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டாம் என கேரளாவின் புதிய முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறோம். த.மா.கா.வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைபவர்களை வரவேற்கிறோம். ஆனால், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேசிய ஜி.கே.வாசனை சேர்த்துக்கொள்ள மாட்டோம்.

என்னை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என தேசிய தலைமையிடம் சிலர் முறையிடுவதாக கூறுகிறீர்கள். இதுபோன்ற புகார்கள் வந்தால் தான் காங்கிரஸ். தமிழக சட்டமன்ற தேர்தலில் 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் வந்ததே மிகப்பெரிய வெற்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Visit Chennaivision for More Tamil Cinema News