புதுவையில் இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது : பொன்.ராதாகிருஷ்ணன்

புதுவையில் இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது : பொன்.ராதாகிருஷ்ணன்:-

புதுவை மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் வரும், என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காரைக்காலுக்கு வந்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

புதுவையில் மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு மாறாக தேர்தலில் வெற்றி பெறாத ஒரு தலைவரை முதல்அமைச்சராக காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தி இருக்கின்றது. எனவே எப்பொழுது வேண்டுமானாலும் புதுவை மாநிலத்திற்கு இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

புதுவையில் நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்று சொன்னால் மத்தியில் ஆளுகின்ற பிரதமர் நரேந்திரமோடியினுடைய திட்டங்களை புதுவை மாநிலத்திற்கு அதிகமாக கொண்டு சேர்க்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆளுமை நிறைந்த ஒரு அரசாங்கம் புதுவைக்கு வர வேண்டும். அது நிகழ்வதற்கான வாய்ப்பும் பெருகி வருகிறது.

சட்டம்ஒழுங்கை பொறுத்தவரை அது அந்தந்த மாநிலங்களின் கையில்தான் உள்ளன. ரயில் நிலையம் மற்றும் ரயில் பயணம் இதுபோன்ற இடங்களில் மட்டும் ரயில்வே துறையின் கவனம் கொடுக்கப்படுகிறது. அவர்களது எல்லைக்கு அப்பாற்பட்டு அவர்களால் செயல்பட முடியாது. இது எல்லோருக்கும் நன்றாக தெரியும். சட்டம்ஒழுங்கை பொறுத்தவரை மாநில அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். ரயில்வே பகுதிக்கு உள்ளே தவறுகள் நடைபெறாத வகையில் ரயில்வே துறை செயல்படும்.

பிரதமர் நரேந்திரமோடி எந்த கட்சியின் ஆட்சி, எந்த மாநிலத்தில் நடைபெறுகிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல், அனைத்து மாநில மக்களுக்கும் செய்ய வேண்டியது நமது கடமை, எனது இந்திய நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டியது எனது கடமை என்று எல்லா திட்டங்களையும் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வழங்கி வருகிறார்.

பிரதமர் எல்லா வி‌ஷயங்களுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுப்பார். சில வி‌ஷயங்களுக்கு சிறப்பம்சங்கள் புதுவை மாநிலத்திற்கு உள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் பிரதமர்தான் தரவேண்டும் என்று சொன்னால் எந்தளவிற்கு சாத்தியம் என்பது குறித்து மக்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

புதுவை மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ஏராளமான நிதிகள் கிடைக்காமல் இருந்து வருகிறது. புதுவையில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று மாநில பா.ஜனதா கட்சி சார்பில் தீர்மானமே போடப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது குறித்து நான் பலதடவை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜூடன் பேசி உள்ளேன். பிரதமர் நரேந்திரமோடி மீனவர்களின் கவலைகளை நேரடியாக தெரிந்து கொண்டிருக்கிறார். மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

உ.பி தேர்தலுக்கு பிரியங்கா தலைமை ஏற்கிறார் – காங்கிரஸ்

உ.பி தேர்தலுக்கு பிரியங்கா தலைமை ஏற்கிறார் – காங்கிரஸ்:-

வருகின்ற உத்திரபிரதேச மாநிலத்திற்கான சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ப்ரியங்கா தலைமை தாங்குவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலை பிரியங்கா காந்தி தலைமையில் சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைக்கும் அளவுக்கு ராகுல் காந்தியின் வழிகாட்டுதல்கள் சரியாக அமயவில்லை வேண்டும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அம்மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சத்யதேவ் திரிபாதி கூறுகையில்: இதுவரை, பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ரேபரேலி தொகுதியிலும், துணைத் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும் மட்டுமே பிரசாரம் செய்து வந்தார் தற்போது முதல் முறையாக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் தலைமை ஏற்க உள்ளார். தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 150 பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று தீவிர பிரச்சாரம் செய்வார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விஜயகாந்த் வீட்டு நாயின் பெயர் கேப்டனாம்

விஜயகாந்த் வீட்டு நாயின் பெயர் கேப்டனாம்:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பெரும் தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து விலக தொடங்கியுள்ளார்கள். மேலும், கட்சியில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள், தேர்தலில் தாங்கள் செய்த செலவுக்காக, கட்சி கொடுப்பதாக சொன்ன, தேர்தல் நிதியை கொடுக்கும்படி விஜயகாந்துக்கு கிடுக்குபிடி போட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், தேமுதிக வில் இருந்து பிரிந்து மக்கள் தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய சந்திரகுமார், மக்கள் தேமுதிக-வை திமுக-வுடன் இணைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அக்கட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார், ”விஜயகாந்த் மகன் வெளிநாட்டில் இருந்து ஒரு நாய் வாங்கியிருக்கிறார். இந்த நாய்க்கு ‛கேப்டன்’ என பெயர் சூட்டி அழைக்கிறார். இது எந்த அளவுக்கு கேவலமானது?,

இதில் இருந்தே விஜயகாந்த் மீது அவரது குடும்பத்திற்கு எவ்வளவு மதிப்பு உள்ளது என்பதை புரிய முடிகிறது.

மேலும் விஜயகாந்த் தனது கட்டுப்பாட்டில் இல்லை” என்று தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

மேலிடம் என்னை திரும்ப அழைத்தாலும் பதவியில் நீடிக்க மாட்டேன் : இளங்கோவன்

மேலிடம் என்னை திரும்ப அழைத்தாலும் பதவியில் நீடிக்க மாட்டேன் : இளங்கோவன்:

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மேலிடம் தன்னை திரும்ப அழைத்தாலும், பதவியில் நீடிக்க மாட்டேன், என்று தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தனது பதவியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜிநாமா செய்து, டெல்லி தலைமைக்கு கடிதத்தை அண்மையில் அளித்திருந்தார். இதை கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஏற்றுள்ளார்.

இந்த நிலையில், தாம்பரத்தை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள இளங்கோவனின் வீடு முன்பு கூடிய மாவட்டத் தலைவர்கள் பலர் ராஜிநாமா முடிவைக் கைவிட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். தொண்டர் ஒருவர் தீக் குளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர்களிடம் பேசிய இளங்கோவன், “பதவியை நானாகவே ராஜிநாமா செய்தேன். மேலிடம் என்னைத் திரும்ப அழைத்தாலும், பதவியில் நீடிக்க மாட்டேன். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், கட்சிக்கு நெருக்கடி கொடுக்காமல், மாவட்டத் தலைவர்கள் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

சென்னையில் கூலிப்படை ஆதிக்கம் அதிகரிப்பு : தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

சென்னையில் கூலிப்படை ஆதிக்கம் அதிகரிப்பு : தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு:

சென்னையில் கூலிப்படை ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக, தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தே.மு.தி.க. மருத்துவர் அணி துணை செயலாளர்கள் டாக்டர் முருகேஷ், செந்தில்குமார் உள்ளிட்டோர் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு கட்சியில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகுந்த வேதனையளிக்கும் வகையில் உள்ளது. விவசாயிகள், வழக்கறிஞர்கள் என்று அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கூலிப்படை ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

கூலிப்படையினருக்கு பணம் கொடுத்தால் கொலை செய்வது என்பது சகஜமாகி உள்ளது. எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். கூலிப்படையினரை ஒடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி 28-ந் தேதி(நாளை) காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தே.மு.தி.க. பா.ஜ.க.வில் இணைந்திருந்தால் இந்த முடிவு அவர்களுக்கு வந்திருக்காது. கட்சியினர் பிரிந்து சென்றிருக்க மாட்டார்கள். தலைமை எடுத்த தவறான முடிவால் நிர்வாகிகளை இழந்து தே.மு.தி.க. தவிக்கிறது. மக்கள் நலக்கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. வெளியேறியது மகிழ்ச்சியளிக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டால் கூட வெற்றி பெறுவோம். எனவே, தேர்தல் நேரத்தில் எங்களுடன் இணைய விரும்பினால் கட்சிகளை வரவேற்போம்.

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 10-ம் தேதி தமிழகம் வர இருக்கிறார். அன்றைய தினம் சென்னையில் நடைபெறும் பா.ஜ.க. ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மேலும் உள்ளாட்சி தேர்தலை எப்படி சந்திப்பது மற்றும் வெற்றி வியூகங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு அவர் ஆலோசனை நடத்துகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

காலை 6 மணிக்கே கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுகிறது : அன்புமணி ராமதாஸ்

காலை 6 மணிக்கே கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுகிறது : அன்புமணி ராமதாஸ்:

டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 12 மணி திறக்கப்படுவதாக அறிவித்துவிட்டு, காலை 6 மணிக்கே கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக, அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் பா.ம.க-வுக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர். ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் குரு ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

டாக்டர்.அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:- நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பா.ம.க.வுக்கு தோல்வி அல்ல. ஒரு சறுக்குதான்.

ஒரு பைசா கூட கொடுக்காமல் தமிழகத்தில் 23 லட்சம் வாக்குகள் பெற்று உள்ளோம். 97 லட்சம் மக்கள் வாக்களிக்காமல் தவிர்த்துள்ளனர்.

தற்போது விற்பனை இல்லாத டாஸ்மாக் கடைகளை தான் மூடி உள்ளனர். டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படும் என அறிவித்து காலை 6 மணிக்கே கள்ளத்தனமாக விற்பனை நடைபெறுகிறது.

இந்தியாவில் 21 மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் 20-வது இடத்தில் பின் தங்கி உள்ளது” என்றார்.

டாக்டர். ராமதாஸ் பேசுகையில், “காவிரி நீர் பிரச்சனைக்கு தி.மு.க. அரசு தான் காரணம். கடந்த 1924-ல் மைசூர் அரசும், சென்னை அரசும் சேர்ந்து காவிரி ஒப்பந்தம் ஆனதை 1974-ம் ஆண்டு தி.மு.க. அரசு புதுப்பிக்காமல் தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டது.

காவிரி டெல்டாவில் மீத்தேன், ஷெல் எரிவாயு எடுக்க முயன்றால் பா.ம.க. அதனை தடுத்து நிறுத்தும். உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதில் பா.ம.க. அமோக வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

மேயரை மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை ஊழலுக்கு வழி வகுக்கும் : ராமதாஸ்

மேயரை மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை ஊழலுக்கு வழி வகுக்கும், என்று பா.ம.க நிறுவனர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயர் பதவிக்கு நேரடியாகத் தேர்தல் நடத்தும் முறைக்கு முடிவு கட்டி,  மறைமுகத் தேர்தல் மூலம் மேயரை தேர்வு செய்வதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் பிற்போக்குத்தனமானதாகும்..

பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகர்பாலிகா சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் 1996 ஆம் ஆண்டிலிருந்து  தமிழகத்தில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தேர்தல்களில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஆகிய இரு பதவிகளைத் தவிர மீதமுள்ள அனைத்துப் பதவிகளும் நேரடித் தேர்தல் மூலமாகவே நிரப்பப்பட்டு வந்தன. 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு,  தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர் பதவிகளையும் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பும் வகையில் சட்டத்திருத்தம் செய்தது. 2011 ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக, நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்கள் அனைவருமே நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்தது. ஆனால், அதே அ.தி.மு.க. இப்போது மேயர்கள் மட்டும் மறைமுகத் தேர்தலில்  மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று கூறி சட்டத் திருத்தம் கொண்டு வருவது விந்தையாக உள்ளது.

சில மாநகராட்சிகளில் உறுப்பினர்களின் ஆதரவு மேயருக்கு அவ்வளவாக இல்லை என்பதால் மாமன்றங்கள் முறையாக செயல்படுவதில்லை என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், அதைக் கருத்தில் கொண்டே மாநகராட்சி உறுப்பினர்கள் மூலம் மேயர்களை தேர்வு செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்கத்தை ஏற்க முடியாது. கடந்த 2011 ஆம் ஆண்டில் மேயர்களை மறைமுகமாக தேர்வு செய்யும் முறையை மாற்றி நேரடியாக தேர்வு செய்யும் வகையில் அதிமுக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. 2011-ஆம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி இதற்கான சட்டத் திருத்த முன்வரைவை தாக்கல் செய்து பேசிய அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி,‘‘ மாநகராட்சி மேயர்கள் மறைமுகமாக தேர்வு செய்யப்படுவதால் மாநகராட்சி உறுப்பினரே மேயராக தேர்வாகிறார். அவ்வாறு தேர்வாகும் மேயர் ஒட்டுமொத்த மாநகராட்சிக்கும் மேயராக செயல்படாமல், தாம் தேர்வான வட்டத்திற்கு மட்டும் மேயராக செயல்பட்டு அங்கு அதிக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துகின்றனர்.

அதுமட்டுமின்றி, மாநகராட்சி மேயர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படும் போது சிறப்பான நிர்வாகத்தை வழங்கவும், மக்களுக்கு விரைவாக சேவைகளை வழங்கவும் வாய்ப்பு ஏற்படும்’’ என்று கூறியிருந்தார். இப்போது மேயர்களை மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க ஆட்சியாளர்கள் முடிவு செய்திருக்கும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன் கே.பி. முனுசாமியால் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து தவறுகளும் மீண்டும் நடப்பதை அரசே ஊக்குவிக்கிறதா? என்ற வினாவுக்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்.

உள்ளாட்சித் தலைவர்கள் அனைவரும் நேரடியாக தேர்வு செய்யப்படுவது தான் முறையானதாக இருக்கும்; அது தான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக 1986 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மாநகராட்சிகள் தவிர்த்து பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் கூட அனைத்து உள்ளாட்சித் தலைவர் பதவிகளும் நேரடியாகத் தான் நிரப்பப்பட்டன. இப்போது மறைமுகமாக நிரப்பப்படும் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவி கூட அப்போது நேரடியாகத் தான் நிரப்பப்பட்டது. அதனால் தான் அப்போது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் மிக வலிமையாக செயல்பட்டன. உள்ளாட்சிகளில் ஜனநாயகமும் தழைத்தோங்கியது.

ஆனால், அதற்கு மாறாக  மறைமுகத் தேர்தல் மூலம் மேயர் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவானால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் எதிரணியிலுள்ள மாநகராட்சி உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் கலாச்சாரம் பெருகும். அது ஜனநாயகப் படுகொலைக்கும், ஊழலுக்கும் வழி வகுக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இதற்கெல்லாம் மேலாக தமிழகத்திலுள்ள 12 மாநகராட்சிகளில் சென்னை, நெல்லை, திருச்சி, வேலூர், தூத்துக்குடி ஆகிய 5 மாநகராட்சிகளின் எல்லைகளுக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும்கட்சியான அதிமுக கடந்த தேர்தலில் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. அதனால் அம்மாநகராட்சிகளில் மேயர் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாகவே இப்படி ஒரு முடிவை அதிமுக எடுத்திருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. அரசின் இந்த முடிவு தமிழகத்திற்கு நல்லதல்ல.

எனவே, மாநகராட்சி மேயர்களை மாநகராட்சி உறுப்பினர்களைக் கொண்டு மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். இப்போது நடைமுறையில் உள்ளவாறு மேயர்களை மக்களால் நேரடியாக தேர்வு செய்யும் முறையே தொடர அரசு வகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி : தேமுதிக அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல் படு தோல்வியை சந்தித்த தேமுதிக,  தோல்விக்காண காரணத்தைக் கண்டுபிடிக்க, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்க, அத்தனை பேரும் மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்ததே தோல்விக்கு காரணம், என்று கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து, மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்த தேமுதிக, தற்போது அதிகாரப்பூவரமாக அதை அறிவித்துள்ளது.

இதற்கிடையில், தருமபுரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன், ”உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளோம். தேமுதிக தலைமையை ஏற்கும் கட்சிகள் எங்களுடன் இணைந்து போட்டியிடலாம்” என்று தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

கட்சியை கலைத்து விடுவேன்: பணம் கேட்கும் நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் மிரட்டல்

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பலம் பொருந்திய கட்சியாக விளங்கிய தேமுதிக, தேர்தல் முடிவுக்கு பிறகு பலவீன கட்சியாக மாறியுள்ளது. மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து அக்கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தும் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளையும் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் பேசி வருகிறார்.

தேர்தலின் போது, கட்சி நிர்வாகிகள் தேர்தல் நிதி வசூலித்து கட்சி தலைமையிடம் கொடுத்த போது, அதில் இருந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று விஜயகாந்த் அறிவித்திருந்தாராம். ஆனால், அந்த தொகை வழங்கப்படவில்லையாம். அதனால், அந்த பணத்தை இப்போது கொடுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் விஜயகாந்திடம் கேட்டார்களாம்.

இதையடுத்து, ஒரு சிலருக்கு மட்டும் பணம் கொடுக்கப்பட்டதாம். பணம் கிடைக்காத பெரும்பாலானவர்கள், ஆலோசனை கூட்டத்தில் விஜயகாந்திடம் பணம் கேட்க, ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், கோபமாக பேசினாராம்.

நேற்று முன்தினம் நடந்த தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்திலும் சிலர் தேர்தலில் நின்று எல்லாத்தையும் இழந்து விட்டோம். தாங்கள் தருவதாக சொன்ன ரூ.10 லட்சத்தை கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று கேட்டுள்ளனர்.

இதனால், மேலும் ஆவேசம் அடைந்த விஜயகாந்த், “கடன் காரர்கள் போல பணம் கேட்கிறீர்கள், என்னை மிரட்டுகிறீர்களா? நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். கட்சியை கலைக்கவும் தயங்க மாட்டேன். இந்த பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்” என்று பேசினாராம்.

Visit Chennaivision for More Tamil Cinema News

பி.ஆர்.ஓ-க்கள் சங்க தேர்தல் : தலைவராக டைமண்ட் பாபு தேர்வு

பி.ஆர்.ஓ-க்கள் எனப்படும் மக்கள் தொடட்பாளர்கள் பணி தமிழ் திரையுலகில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு திரைப்படத்தின் செய்திகளையும், அப்படம் தொடர்பான நிகழ்வுகளையும், பத்திரிகையாளர்கள் மூலம் உலகிற்கு எடுத்துச் செல்லும் பணியைச் செய்து வரும் பி.ஆர்.ஓ-க்களுக்காக, தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கம், உருவாக்கப்பட்டு, அதற்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்தல் நேற்று, சென்னை வடபழனியில் உள்ள பி.ஆர்.ஓ-க்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

பி.ஆர்.ஓ-க்கள் சங்க தேர்தல் : தலைவராக டைமண்ட் பாபு தேர்வு

பி.ஆர்.ஓ-க்கள் சங்க தேர்தல் : தலைவராக டைமண்ட் பாபு தேர்வு

இதில் தலைவர் பதவிக்கு டைமண்ட் பாபு, ஆதம்பாக்கம் ராமதாஸ், நெல்லை சுந்தர்ராஜன் ஆகியோர் போட்டியிட்டனர்.

காலையில் தொடங்கி நன்பகல் 2 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. பிறகு வெற்றி பெற்றவர்களின் விபரம் அறிவிக்கப்பட்டது.
இதில், தென்னிந்திய மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தலைவராக டைமண்ட் பாபு வெற்றி பெற்றார். இவர் 6-வது முறையாக இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்:

துணை தலைவர்கள் – பி.டி.செல்வகுமார், வி.கே.சுந்தர். பொதுச் செயலாளர் – ஜான். பொருளாளர் – விஜயமுரளி. இணைச் செயலாளர் – நிகில் முருகன் மற்றும் யுவராஜ்.

செயற்குழு உறுப்பினர்கள்:

வெட்டுவானம் சிவகுமார், மேஜர் தாசன், அந்தணன், பாலன், ஆறுமுகம், கிளாமர் சத்யா, சக்திவேல், சரவணன், ரேகா.

Visit Chennaivision for More Tamil Cinema News