மு.க.அழகிரி தந்தை கருணாநிதியை இல்லத்தில் சந்தித்து பேசினார்

கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனது தந்தை கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார் என்றும், அவர் ஓய்வெடுக்க கூறி மருத்துவர்கள் கேட்டுக் கொண்டதால், பார்வையாளர்கள் அவரை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டது.

அப்போது, உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாகவும், விரைவில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் தெரிவித்து இருந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. இந்நிலையில், மீண்டும் கருணாநிதியை கோபாலபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனது தந்தை கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசி உள்ளார்.

மு.க.அழகிரி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதும், மு.க. ஸ்டாலினே என் அரசியல் வாரிசு. மு.க.அழகிரியை நினைத்து ஏங்கவில்லை என்று வெளிப்படையாக சமீபத்தில் கருணாநிதி பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலின் இன்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார்

தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று தலைமைச் செயலகத்தில், திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். பிறகு இந்த சந்திப்பு குறுத்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

காவிரி விவகாரம் தொடர்பாக விவசாயிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தின் அறிக்கையை அமைச்சர்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்தோம். இருவரையும் ஒரே அறையில்தான் சந்தித்து பேசினோம். தலைமைச் செயலாளரை சந்திக்கவில்லை. அதனுடைய நகலை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

நீதிமன்றம் என்பது வேறு, அது சட்டரீதியாக செல்ல வேண்டியது. எப்படி கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்களோ அந்த உணர்வை தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்களும் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக அரசின் நிர்வாகம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. நேற்று நாங்கள் விவசாயிகள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் நகலை நிதியமைச்சரிடம் கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்துள்ளனர். காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சியினரும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று நாங்கள் கூறியிருக்கிறோம். பரிசீலிக்கிறோம் என்று அமைச்சர்கள் உறுதிமொழி தந்திருக்கிறார்கள்.

திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உடையுமா? நீடிக்குமா?

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நேற்று நடந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் திமுக-வுடன் கூட்டணி வேண்டாம் என்ற கருத்தை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின், மாவட்ட தலைவர்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, மாநில துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர்கள் தணிகாசலம், சிரஞ்சீவி, மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் ஹசீனா சையத், எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் செல்வபெருந்தகை, எஸ்.சி பிரிவு மாநில அமைப்பாளர் தமிழ்செல்வன் மற்றும் மாவட்ட தலைவர்கள் வி.ஆர்.சிவராமன், ரங்கபாஷியம், கராத்தே தியாகராஜன், அசோகன் சாலமன், பாலையா உள்பட 56 மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தைத் தொடக்கி வைத்து திருநாவுக்கரசர் பேசும்போது, உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக மாவட்டத் தலைவர் யாரும் பேச வேண்டாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக திருச்சியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரதம் தொடர்பாக மட்டும் பேச வேண்டும் என்று கூறினார். ஆனால், கூட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவர்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் திமுகவினரின் அணுகுமுறை முறையானதாக இல்லை என்றே குற்றஞ்சாட்டிப் பேசியுள்ளனர்.

காங்கிரஸின் தில்லி தலைமை முதலில் திமுக தலைமையுடன் பேசியிருக்க வேண்டும். அதன் பிறகே, தமிழக காங்கிரஸாரோ அல்லது காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களோ திமுகவின் நிர்வாகிகளுடன் பேச அனுமதித்திருக்க வேண்டும். அப்படிப் பேசினால்தான் திமுக தலைமை இறங்கி வந்திருக்கும் என்று மாவட்டத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

கூட்டம் முடிவில் சு.திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்-அமைச்சர் மருத்துவமனையில் இருக்கும் சூழ்நிலையில் முக்கியமான பிரச்சினைகளான, காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்புக்கு ஆணை பிறப்பித்தல் மற்றும் பொதுத்துறை இலாகாக்களில் மாற்றங்களோ, அரசாணை பிறப்பித்தலோ அல்லது வெளியிடுவதோ இயலாமல் இருந்தது. அமைச்சரவை கூட்டமும் நடைபெறாமல் இருந்தது.

கவர்னர் வித்யாசாகர் முதல்-அமைச்சரை பார்த்துவிட்டு வந்த பிறகு, மூத்த அமைச்சர்களோடு, தலைமை செலாளர்களோடு, முதல்- அமைச்சரின் அனுமதியோடு அதில் ஒரு மாற்றம் தற்காலிக ஏற்பாடாக செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்துவார் என்றும், முதல்-அமைச்சரின் இலாகாக்களை பன்னீர்செல்வம் நிர்வகிப்பார் என்றும், அரசியல் சட்டப்படி அறிவிப்புகளை கவர்னர் வெளியிட்டு இருக்கிறார்.

முதல்-அமைச்சரின் உடல்நிலை தேறி மீண்டும் பணிகளை தொடரும் வரை இந்த இடைக்கால ஏற்பாடு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு எந்திரம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இடைக்கால ஏற்பாட்டை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. உள்ளாட்சி தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

18-ந் தேதி உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரவிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வரப்போகிறது என்று தெரியாது. எனவே உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட உடன், மீண்டும் இது குறித்து பேச முடிவு செய்து இருக்கிறோம். சென்ற முறை தி.மு.க.வுடன் இட ஒதுக்கீடு குறித்து பேசி வந்தோம். சில இடங்களில் பேச்சுவார்தை முழுமையாக வெற்றிகரமாக முடிவுற்றது. சில இடங்களில் பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடையவில்லை.

சில இடங்களில் இரண்டு கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், வேட்புமனு வாபஸ் வாங்கும் வரை காலஅவகாசம் இருந்தது. தொடர்ந்து பேசி வந்தோம், அதற்குள் உயர் நீதிமன்ற வழக்குப்படி தேர்தல் ரத்தாகிவிட்டது. தேர்தல் அறிவிக்கப்படுகிற போது உள்ளாட்சி மன்ற தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் தொடர்ந்து பேசுவோம்.

தி.மு.க கட்சி மீது உண்மையாக இருதேன் அதனால் மோசம் போனேன்: டி.ராஜேந்தர்

அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது “மத்திய அரசு, காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்க வேண்டும். காவிரி நீருக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நீதிமன்றம் வரை சென்று போராடினார். தற்போது அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஈழத் தமிழர்களுக்கு பெரும் துரோகம் இழைத்த காங்கிரசோடு கைக்கோர்த்த தி.மு.க.வோடு கூட்டணி வைக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த நேரத்தில் கடைசியாக ஒரு முறை முதல்-அமைச்சராக விரும்புகிறேன் என்று கருணாநிதி கலங்கிப் போய் பேசியதால் தேர்தலில் அவருக்கு எதிராக மாற்று அணியில் கூட போய் நிற்கக் கூடாது என்று ஒதுங்கி நின்றேன். இப்படி பல இக்கட்டான கட்டங்களில் ”கடவுளறிய கருணாநிதி மீதும் தி.மு.க. மீதும் நான் காட்டியது விசுவாசம். ஆனால் கர்மாவின் காரணமாகத்தான் நான் போய்விட்டேன் என்பேன் மோசம்.

அவர் தொடர்ந்து பேசிய போது “கருணாநிதி தனது பிள்ளைகளுக்காக யாரை வேண்டுமானாலும் இழப்பார். அதனால்தான், அப்போது திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரையே அவர் தூக்கி எறிந்தார். எம்.ஜி.ஆருக்கு முன்னால் நாம் எல்லாம் எம்மாத்திரம். என் 32-வது, 33-வது பிறந்தநாளின்போது கருணாநிதி, ‘ தம்பி ராஜேந்தர் என் வயதிலும் சரி, என் திறமையிலும் சரி, ‘என்னில் பாதி’ என்றார். அதன் அர்த்தம் காலம் கடந்து எனக்கு இப்போதுதான் புரிகிறது. கருணாநிதியோடு முடிந்துவிட்டது என் வாழ்வில் ஒரு பாதி.

இனி தலைகீழாக மாறப்போகிறது மறுபாதி. இனி இறைவன் அருளால் எனக்கு கிடைக்கும் புதுநீதி. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் ஆன்மாக்கள் எனக்கு காட்டுகிறது நல்ல வழி, காலம் எனக்கு திறந்துவிட்டது ஞானவிழி, இந்த பிறந்தநாளான இன்றிலிருந்து, ஒன்றிலிருந்து தொடங்கி புதிதாக போடப் போகிறேன் பிள்ளையார் சுழி.

உள்ளாட்சித் தேர்தல் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில், சென்னை மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் மேலும் 86 வார்டுகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சித் தலைமை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. அதன் விவரம்:

வேட்பாளர் பெயர் – வார்டு எண் (அடைப்புக்குறிக்குள்):

எஸ்.சரிதா சிவக்குமார் (வார்டு 1),

ந.திருசங்கு (வார்டு 2),

மா.வடிவுக்கரசி (வார்டு 3),

ச. ஆறுமுகம் (வார்டு 4),

கே.பி.சங்கர் (வார்டு 5),

எஸ்.பாபு (வார்டு 6),

பி.ஆதிகுருசாமி (வார்டு 7),

இ.வாசுகி (வார்டு 8),

உமா சரவணன் (வார்டு 9),

தி.மு.தனியரசு (வார்டு 10),

சரண்யா கலைவாணன் (வார்டு 11),

எம்.வி.குமார் (வார்டு 12),

எஸ்.விஜயலட்சுமி (வார்டு 13),

கா.சோபனா (வார்டு 14),

எஸ்.நந்தினி (வார்டு 15),

உ.வனிதா (வார்டு 16),

என். கவிதா நாராயணன் (வார்டு 17),

பி.செல்வி (வார்டு 18),

என்.பரந்தாமன் (வார்டு 19),

ஏ.வி.ஆறுமுகம் (வார்டு 20),

வ.முத்துசாமி (வார்டு 21),

என்.மேனகா (வார்டு 22),

அ.அகிலா (வார்டு 23),

இ.ஏழுமலை (வார்டு 24),

பா.லோகநாதன் (வார்டு 26),

எஸ்.ரெஜிலா (வார்டு 27),

ஏ.சந்திரசேகரன் (வார்டு 28),

ஆர்.பிரகாசம் (வார்டு 29),

எஸ்.நந்தகோபால் (வார்டு 30)

எஸ்.கனிமொழி (வார்டு 31),

என்.ஆனந்தன் (வார்டு 32),

தி.அஞ்சலிதேவி (வார்டு 33),

எஸ்.புவனேஸ்வரி (வார்டு 34),

ஏ.ஆர்.ஆர்.மலைச்சாமி (வார்டு 36),

கே.இ. செந்தமிழ் அரசு (வார்டு 37)

ஐ.ஏ.தங்கமணி (எ) ஏ.டி.மணி (வார்டு 38),

ஆர்.ராணி (வார்டு 40),

டி.திராவிட செல்வி (வார்டு 41),

ஜி.சந்திரா (வார்டு 42),

ஜே.கவிதா (வார்டு 43),

கோ.வரலட்சுமி (வார்டு 44),

கி.தினகரன் (வார்டு 45),

வி.முருகன் (வார்டு 46),

டபிள்யூ.எஸ்.ஆர்.அபிராமி (வார்டு 48),

பி.பிரமிளா தேவி (வார்டு 49),

ஜான்மேரி தாஸ் (வார்டு 50),

எஸ்.வசந்தி (வார்டு 51),

வ.பெ.சுரேஷ் ஜெயக்குமார் (வார்டு 53),

ப. ஸ்ரீராமுலு (வார்டு 54),

டி.சுபாஷ் சந்திரபோஸ் (வார்டு 56).

ந.ரஞ்சித் விஜயாலயன் (வார்டு 57),

ராஜேஸ்வரி ஸ்ரீதர் (வார்டு 58),

கே.சரஸ்வதி (வார்டு 59),

இசட்.ஆசாத் (வார்டு 60),

ஏ.நாகராஜன் (வார்டு 64),

தேவ ஜவஹர் (வார்டு 65),

தமிழ்ச்செல்வி தேவதாஸ் (வார்டு 66),

எம்.சரிதா (வார்டு 67),

டி.யோகபிரியா (வார்டு 68),

எம்.தாவூத்பீ (வார்டு 69),

பரிமளா சுரேஷ் (வார்டு 70),

எஸ்.புஷ்பராஜ் (வார்டு 71),

நா.துலுக்கானம் (வார்டு 73),

லோ.ரமணி (வார்டு 74),

எஸ்.சசிக்குமார் (வார்டு 75),

வி. பிரியா (வார்டு 76),

சொ.வேலு (வார்டு 78),

பி.கே.மூர்த்தி (வார்டு 80),

ஆர்.சுந்தரி (வார்டு 81),

வி.ரமேஷ் (எ) நீலகண்டன் (வார்டு 82),

என்.உஷா (வார்டு 83),

ஆர்.இளங்கோ (வார்டு 84),

கே.கிளாரா (வார்டு 85),

ஜோசப் சாமுவேல் (வார்டு 86),

த. பிரகாஷ்குமார் (வார்டு 87),

எஸ்.சித்ரா (வார்டு 88),

எஸ். சிவகாமி (வார்டு 89),

டி.எஸ்.பி.ராஜகோபால் (வார்டு 90),

எஸ்.சாந்தினி (வார்டு 93),

சாவித்திரி வீரராகவன் (வார்டு 94),

சுதா (வார்டு 95),

வே.வாசு (வார்டு 97),

டி.வி.சதீஷ்குமார் (வார்டு 98),

மலர்கொடி (வார்டு 99).

ஏ.புனிதவதி எத்திராஜன் (வார்டு 104),

நிர்மலா தேவி (வார்டு 107).

இதில் 56 -ஆவது வார்டில் போட்டியிடும் சுபாஷ் சந்திரபோஸ் மாநகராட்சி மன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 56 -ஆவது வார்டில் தொடர்ந்து 4 முறை வெற்றிபெற்றவர் ஆவார். சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றினால், சுபாஷ் சந்திரபோஸ் மேயராக்கப்படுவார் எனத் தெரிகிறது.

காங்கிரஸுக்கு 11 வார்டுகள் ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சிக்கான திமுகவின் 2 -ஆவது பட்டியலில் காங்கிரஸுக்கு 25, 39, 47, 52 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் பட்டியலில் காங்கிரஸுக்கு 7 வார்டுகள் ஒதுக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 11 வார்டுகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கப்படாத வார்டுகள்: 35, 55, 61, 72, 77, 79, 96 ஆகிய 7 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். 200 வார்டுகளில் 182 வார்டுகளுக்கு திமுக சார்பில் வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று சென்னையில் 95 சதவீதம் கடைகள் அடைப்பு திமுக, விசிக, தமாகா கட்சிகள் மறியல்

காவிரி பிரச்சினையில் கர்நாடகத் தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் நேற்று நடத்தப்பட்ட சாலை, ரயில் மறியல் போராட்டங்களின் போது மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

தலைநகர் சென்னையில் 95 சதவீதம் அளவுக்கு கடை கள் அடைக்கப்பட்டன. காவிரி பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி யும், தமிழர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையைக் கண்டித்தும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எழும்பூர் ராஜ ரத்தினம் விளையாட்டு அரங்கம் முதல் சென்னை எழும்பூர் வரை திமுகவினர் பேரணியாக சென்றனர். எழும்பூர் ரயில் நிலைய வாயிலில், கர்நாடக அரசுக்கு எதி ராகவும், காவிரி பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் திமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.

அப்போது, ஸ்டாலின் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திமுகவினர் ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் தலை மையில் திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். கைதான திமுகவினர் புதுப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தேமுதிக சார்பில் கோயம் பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட் டத்துக்கு தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்தார்.

சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் தமாகா தொண் டர்கள் பரவலாக பங்கேற்றனர். இதுகுறித்து கூறிய ஜி.கே.வாசன், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு அமைக்கவும் வலியுறுத்தி நடத்தப்பட்ட முழுக் கடையடைப்பு வெற்றி பெற் றுள்ளன” என்றார்.

அண்ணா சாலையில் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். விசிக சார்பில் பேசின் பிரிட்ஜ் அருகே ரயில் மறியலில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவனை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட வர்களும் கைது செய்யப்பட்டனர். மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, இளைஞரணிச் செயலாளர் ஷேக் முஹம்மது தலைமையில் சைதாப்பேட்டையில் ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான அரசியல் தலைவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

திமுக நகரச் செயலாளர் வெட்டி படுகொலை

விழுப்புரத்தில் திமுக நகரச் செயலாளர் செல்வராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த அவரை 5 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை வெட்டி சாய்த்தது.

தினந்தோறும் 4 பேருடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் செல்வராஜ், வழக்கம்போல இன்றும் 4 பேர் துணையுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு அருகே இன்று அதிகாலை 6 மணி அளவில் அடையாளம் தெரியாத 5 பேர், அவருக்கு மரியாதையாக வணக்கம் தெரிவித்து பேசிக்கொண்டிருந்தனர். திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டி சாய்த்துள்ளனர். செல்வராஜுடன் வந்த 4 பேரும் தடுக்க முயன்றனர். அதில் ஒருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

தகவல் அறிந்த காவல்துறை எஸ்.பி. நரேந்திர நாயர், டிஐஜி அனிதா உசேன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். செல்வராஜ் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த செல்வராஜுக்கு ஜெயபாரதி என்ற மனைவியும், விக்கேனஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.

திமுக மகளிரணி நிர்வாகி வெட்டி கொலை ஒருவர் கைது

கொருக்குப்பேட்டையில் திமுக மகளிர் அணி நிர்வாகியை வீட்டு வாசலில் வைத்து கழுத்தை வெட்டி கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கொருக்குப்பேட்டை மேற்கு கிருஷ்ணப்ப கிராமணி தோட்டத்தை சேர்ந்தவர் சேகர் (48). இவரது மனைவி லட்சுமி (45). ஆர்.கே.நகர் தொகுதி 42-வது வட்ட திமுக மகளிர் அணி நிர்வாகி. அதே பகுதியில் பூ வியாபாரம் செய்தார். வட்டிக்கும் பணம் கொடுத்து வந் துள்ளார். தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வரும் தொந்தி கணேஷ்(27) என்பவர் லட்சுமியிடம் அடிக்கடி பணம் கடன் வாங்குவார். கணேசுக்கும் லட்சுமியின் தோழி ஓருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். லட்சுமியிடம் அடிக்கடி பணத்தை கடன் வாங் கிய கணேஷ், அந்த பணத்தை லட்சுமியின் தோழிக்கு செலவழித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட் களாக லட்சுமியின் தோழி, கணேஷ் உடனான தொடர்பை துண்டித்து விட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் நேற்று காலை 11.45 மணியளவில் லட்சுமியின் வீட்டுக்குச் சென்று அவரது தோழியின் இருப்பிடம் குறித்து தகவல் கேட்டு மிரட்டியுள் ளார். லட்சுமி தகவல் அளிக்க மறுக் கவே கணேஷ், தான் மறைத்து வைத் திருந்த கத்தியை எடுத்து லட்சுமி யின் கழுத்தில் குத்தி விட்டு தப்பி யோடிவிட்டார். படுகாயமடைந்த லட்சுமியை அவரது தங்கை தேவி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு லட்சுமி இறந்துவிட்டார். இது தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கணேஷின் சொந்தஊர் ராஜ பாளையம். தண்டையார்பேட்டை யில் உள்ள ஜெயின் டியூப்ஸ் நிறுவனத்தில் தங்கியிருந்து ஓட்டு நராக வேலை செய்து வந்துள்ளார். லட்சுமியை கொலை செய்து விட்டு தனது சொந்த ஊரான ராஜபாளையத்திற்கு தப்பி ஓட முயற்சித்தபோது போலீஸார் அவரை கைது செய்தனர்.

காவிரி பிரச்சினையை வலியுறுத்தி திமுக மற்றும்  காங்கிரஸ் வெளிநடப்பு

மு.க.ஸ்டாலின் உள்பட 79 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடந்த 17-ந்தேதி ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது. எனவே இன்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் அனைவரும் இன்று சபைக்கு வந்தனர்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசியதாவத:-

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா புதிய அணை கட்ட முயற்சி எடுத்து வரும் நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

இது கேரள அரசின் புதிய திட்டம் என்றாலும் தமிழகத்தின் நலன் காக்கின்ற வகையில் திட்ட ஆய்வுக்கான அனுமதியை மத்திய அரசு கைவிட வேண்டும்.

பிரதமரை சந்திக்கதமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க் கள், அனைத்து கட்சி எம்.எல். ஏ.க்கள் அடங்கிய குழுவை அரசு கூட்டி பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை ஏற் படுத்தி தமிழகத்தின் நலன் காக்க வற்புறுத்த வேண்டும்.

கர்நாடகாவில் ஆட்சி மாச்சரியங்களை மறந்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அழுத்தம் தருவது போல் தமிழக அரசும் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். சட்டமன்றத்திலும் ஒரு தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

காவிரியில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வலியுறுத்தி விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டம் இன்று நடந்து வருகிறது. 100 இடங்களில் ரெயில் மறியலும் 1000 இடங்களில் சாலை மறியலும் நடக்கிறது.

இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், விவசாயி கள், வணிகர்கள் அனைவரும் ஆதரவு தந்துள்ளனர். எனவே சபை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார

இதே போல் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் கருத்தை வலியுறுத்தினார். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி பதில்
இதற்கு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரி வாக பதில் அளித்தார். முதல்- அமைச்சர் ஜெயலலிதா இதுவரை எடுத்துள்ள நட வடிக்கை பற்றியும், மத்திய அரசுக்கு எழுதிய கடிதங் களையும் அவர் விரிவாக பட்டியலிட்டார்.

1969-ம் ஆண்டு கேரளா வுடன் நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கருணாநிதியால்தான் இவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதற்கு எங்கள் மீது பழிபோடுவதா? என்றார்.

அப்போது மு.க.ஸ்டாலின் எழுந்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது பற்றியோ சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது பற்றியோ பதிலில் விளக்கம் இல்லாததால் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதே போல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

மாதிரி சட்டப்பேரவை கூட்டம் நடத்தியது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் விளக்கம்

இடை நீக்கம் செய்யப்பட்ட திமுக உறுப்பினர்களி ந்று தமிழக சட்டப்பேரவை வளாகத்தில், மாதிரி சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தினார்கள்.

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தை நடத்தியது ஏன்? என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாதிரி சட்டமன்றம் எப்படி நடக்கும் என்பதை எங்களுடைய உறுப்பினர்களைக் கொண்டு ஒரு மணி நேரம் நடத்தியிருக்கிறோம்.

அப்படி நடத்தியிருந்த நேரத்தில், எங்களது கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் அவைத் தலைவராக இருந்து செயல்பட்டார்.

இதில் யாரையும் கிண்டலோ, கேலியோ செய்து, யாரையும் விமரிசிக்கக் கூடாது என்ற அடிப்படையில், மக்கள் பிரச்னையை மட்டுமே பேச வேண்டும் என்று உறுப்பினர்கள் அனைவருக்கும் உத்தரவிட்டு நடத்தியிருக்கிறோம்.

ஒரு சட்டமன்றம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நடத்திக் காட்டியிருக்கிறோம்.

திமுக உறுப்பினர்கள் அவைக்கு வரக் கூடாது என்று அவைத் தலைவர் உத்தரவு போட்டிருக்கும் நிலையில், அவைக்குச் சென்ற எங்களது திமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அவையில், இடை நீக்கம் செய்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், அதற்கு அவைத் தலைவர் தனபால் ஒப்புக் கொள்ளவில்லை.

அதே போல, பிற கட்சித் தலைவர்களும் இடை நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களுக்கு, கட்சித் தலைவர் கருணாநிதி சார்பில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு செல்ல முடியாத அளவுக்கு இன்றும் அறை எண் 4ன் கதவு பூட்டப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால், யார் தவறு செய்கிறர்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரியும். எனவே, பேரவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போது நாங்கள் மாதிரி சட்டப்பேரவையை நடத்தினோம். அதனை நீங்கள் பார்த்தீர்கள். பதிவும் செய்து கொண்டீர்கள். பொதுமக்களுக்கும் பேரவைக் கூட்டம் எப்படி நடக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இடை நீக்கத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். அது திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. எனவே, விரைவில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.