உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு தேமுதிக என்ற ஒரு கட்சியே இருக்காது

உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு தேமுதிக என்ற ஒரு கட்சியே இருக்காது:-

தற்போது தேமுதிக செயல்படாத கட்சியாக உள்ளது, என்று கூறியுள்ள மக்கள் தேமுதிக-வின் சந்திரகுமார், உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு தேமுதிக என்ற ஒரு கட்சியே இருக்காது, என்று கூறியுள்ளார்.

ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சந்திரகுமார் கூறியதாவது:

மக்கள் தே.மு.தி.க அமைப்பு தி.மு.க.வுடன் இணையும் விழா வரும் 17-ந்தேதி சேலத்தில் நடக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதியை முதல்வர் ஆக்குவதுதான் எங்கள் குறிக்கோள். தி.மு.க.வுக்கு வலுசேர்க்க மக்கள் தே.மு.தி.க. தி.மு.கவுடன் சேர முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சென்று தே.மு.தி.க அதிருப்தி நிர்வாகிகளையும்- தொண்டர்களையும் சந்தித்து பேசி வருகிறோம். தே.மு.தி.க.வின் ஆணி வேராக உள்ள கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பல்வேறு தொண்டர்களை தி.மு.க.வில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் பேசும்போது, உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தால் கட்சி கலைக்கப்பட்டு பா.ஜனதாவுடன் சேர வாய்ப்பு உள்ளதாக பேசி உள்ளார்.

ஆகவே உள்ளாட்சி தேர்தலுக்குப்பிறகு தே.மு.தி.க. என்ற கட்சி காணாமல் போய்விடும். தே.மு.தி.க இப்போது செயல்படாத கட்சியாக உள்ளது. கட்சி பொறுப்பு மற்றும் பணியிலிருந்து பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் விலகி உள்ளதாக கூறுவது ஏமாற்று வேலை. அது ஒரு நாடகம்.

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்கள் ஆனால் இதுவரை கொடுக்கவில்லை.

இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.

விஜயகாந்த் வீட்டு நாயின் பெயர் கேப்டனாம்

விஜயகாந்த் வீட்டு நாயின் பெயர் கேப்டனாம்:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பெரும் தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து விலக தொடங்கியுள்ளார்கள். மேலும், கட்சியில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள், தேர்தலில் தாங்கள் செய்த செலவுக்காக, கட்சி கொடுப்பதாக சொன்ன, தேர்தல் நிதியை கொடுக்கும்படி விஜயகாந்துக்கு கிடுக்குபிடி போட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், தேமுதிக வில் இருந்து பிரிந்து மக்கள் தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய சந்திரகுமார், மக்கள் தேமுதிக-வை திமுக-வுடன் இணைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அக்கட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார், ”விஜயகாந்த் மகன் வெளிநாட்டில் இருந்து ஒரு நாய் வாங்கியிருக்கிறார். இந்த நாய்க்கு ‛கேப்டன்’ என பெயர் சூட்டி அழைக்கிறார். இது எந்த அளவுக்கு கேவலமானது?,

இதில் இருந்தே விஜயகாந்த் மீது அவரது குடும்பத்திற்கு எவ்வளவு மதிப்பு உள்ளது என்பதை புரிய முடிகிறது.

மேலும் விஜயகாந்த் தனது கட்டுப்பாட்டில் இல்லை” என்று தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி : தேமுதிக அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல் படு தோல்வியை சந்தித்த தேமுதிக,  தோல்விக்காண காரணத்தைக் கண்டுபிடிக்க, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்க, அத்தனை பேரும் மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்ததே தோல்விக்கு காரணம், என்று கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து, மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்த தேமுதிக, தற்போது அதிகாரப்பூவரமாக அதை அறிவித்துள்ளது.

இதற்கிடையில், தருமபுரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன், ”உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளோம். தேமுதிக தலைமையை ஏற்கும் கட்சிகள் எங்களுடன் இணைந்து போட்டியிடலாம்” என்று தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

கட்சியை கலைத்து விடுவேன்: பணம் கேட்கும் நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் மிரட்டல்

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பலம் பொருந்திய கட்சியாக விளங்கிய தேமுதிக, தேர்தல் முடிவுக்கு பிறகு பலவீன கட்சியாக மாறியுள்ளது. மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து அக்கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தும் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளையும் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் பேசி வருகிறார்.

தேர்தலின் போது, கட்சி நிர்வாகிகள் தேர்தல் நிதி வசூலித்து கட்சி தலைமையிடம் கொடுத்த போது, அதில் இருந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று விஜயகாந்த் அறிவித்திருந்தாராம். ஆனால், அந்த தொகை வழங்கப்படவில்லையாம். அதனால், அந்த பணத்தை இப்போது கொடுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் விஜயகாந்திடம் கேட்டார்களாம்.

இதையடுத்து, ஒரு சிலருக்கு மட்டும் பணம் கொடுக்கப்பட்டதாம். பணம் கிடைக்காத பெரும்பாலானவர்கள், ஆலோசனை கூட்டத்தில் விஜயகாந்திடம் பணம் கேட்க, ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், கோபமாக பேசினாராம்.

நேற்று முன்தினம் நடந்த தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்திலும் சிலர் தேர்தலில் நின்று எல்லாத்தையும் இழந்து விட்டோம். தாங்கள் தருவதாக சொன்ன ரூ.10 லட்சத்தை கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று கேட்டுள்ளனர்.

இதனால், மேலும் ஆவேசம் அடைந்த விஜயகாந்த், “கடன் காரர்கள் போல பணம் கேட்கிறீர்கள், என்னை மிரட்டுகிறீர்களா? நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். கட்சியை கலைக்கவும் தயங்க மாட்டேன். இந்த பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்” என்று பேசினாராம்.

Visit Chennaivision for More Tamil Cinema News

தொண்டர்களிடம் ரஜினி வசனம் பேசிய விஜயகாந்த் மனைவி

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது வீரியமாக வலம் வந்த தேமுதிக, தேர்தல் முடிவுக்குப் பிறகு விலாசம் இல்லாமல் போன நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போது மீண்டும் வெளியே தலைக்காட்ட ஆரம்பித்துள்ள அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தோல்விக்கான காரணம் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து வர, அவர மனைவி பிரேமலதா, ரஜினிகாந்தின் வசனத்தை பேசி, தொண்டர்களுக்கு உற்சாகமூட்டி வருகிறார்.

தொண்டர்களிடம் ரஜினி வசனம் பேசிய விஜயகாந்த் மனைவி

தொண்டர்களிடம் ரஜினி வசனம் பேசிய விஜயகாந்த் மனைவி

சமீபத்தில் காரைக்குடியில் நடைபெற்ற தேமுதிக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்துக் கொண்ட பிரேமலதா விஜயகாந்த், மணமக்களை வாழ்த்தி பேசும் போது, ’பாட்ஷா’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் பேசும், ”ஆண்டவன் நல்லவர்களுக்கு சோதனை தருவார். ஆனால், கைவிட மாட்டார். கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார். ஆனால், கைவிட்டு விடுவார். எனவே, நமது பயணத்தில் நாம் உறுதியாக இருப்போம்” என்ற வசனத்தை பேசி, தொண்டர்களுக்கு உற்சாகமளித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தோல்வி அடைந்ததால், சோர்வடைந்து விட்டதாக கூறுகின்றனர். விஜயகாந்த் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும்போது, முதலில் வில்லனிடம் அடி வாங்கி, அடி வாங்கி கீழே விழுவார். பிறகுதான் எழுந்து நின்று திரும்ப விளாசுவார்.

அதேபோல், விஜயகாந்த் மீண்டும் எழுந்து வருவார். தேமுதிக வெற்றி பெறும். விஜயகாந்த் எப்போதும் எதிர்நீச்சல் போட்டுத்தான் வாழ்க்கையில் வெற்றிபெற்றிருக்கிறார். கடந்த தேர்தலில் தேமுதிக எடுத்த முடிவு தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லதை நினைத்து எடுத்த முடிவு. விரைவில் மக்கள் அதை உணர்ந்து நம் பக்கம் திரும்புவார்கள்” என்று தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில், பிரேமலதா விஜயகாந்துக்கு முன் ஜாமீன் வழங்க, அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திருப்பூரில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் பிரேமலதா மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு

அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில்  பிரேமலதா மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறேன். கடந்த ஏப்ரல் 1 ம் தேதி, திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி அவதூறாக பேசியதாக என் மீது திருப்பூர் வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நான் யாரையும் அவதூறாக பேசவில்லை. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்த கருத்தை வலியுறுத்தித்தான் பேசினேன். இதனால், வைகோவையும் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். தேமுதிகவுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்துடன் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவிற்கு நேற்று பதில் மனு தாக்கல் செய்த அரசு வழக்கறிஞர், பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்றும், தப்பிக்க முயல்வார் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு (இன்று) உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Visit Chennaivision for More Tamil Cinema News

மன்னிப்பு கேட்ட வைகோ மதிமுக நிர்வாகி பத்திரிக்கையாளரை தாக்க முயன்ற விவகாரம்

பத்திரிகையாளர்களை தாக்குவதும், தகாத வார்த்தைகளால் திட்டுவதையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடைபிடித்து வந்த நிலையில், தற்போது மதிமுக தொண்டர்களும் அத்தகைய செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள்.

மன்னிப்பு கேட்ட வைகோ மதிமுக நிர்வாகி பத்திரிக்கையாளரை தாக்க முயன்ற விவகாரம்

மதிமுக நிர்வாகி பத்திரிக்கையாளரை தாக்க முயன்ற விவகாரம்

இன்று நாகர்கோவில் வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வந்த போது, அக்கட்சியின் நிர்வாகி ஒருவ, “ தேர்தலில் குழப்பத்திற்கு காரணம் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியாளர்கள்” என்று கூறி செய்தியாளர்களிடம் ஆவேசமாக பாய்ந்ததோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டினார்.

இதையடுத்து, ஆவேசம் அடைந்த செய்தியாளர்கள், வைகோ காரை சூழ்ந்து வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கூறினர். இதனால் காரைவிட்டு இறங்கிய வைகோ தொண்டரின் செயலுக்கு வருத்தம் தெரிவிதார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Visit Chennaivision for More Tamil Cinema News

கருப்பு பணம் பதுக்கல்: லலித் மோடி பெயரை வெளியிட்ட சுவிஸ் வங்கி

சட்டவிரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டில் சிக்கி, தற்போது லண்டனில் தலைமறைவாகியுள்ள, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோதி, சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கியிருப்பதாக அந்நாட்டு அறிவித்துள்ளது.

லலித் மோடியும், அவரது மனைவி மினால் மோடியும் வரி ஏய்ப்பு செய்து சுவிட்சர்லாந்து (சுவிஸ்) வங்கிகளில் ரகசியமாக பணம் குவித்திருக்கிறார்களா என்பது தொடர்பாக அந்த நாட்டு அரசிடம் இந்தியா விவரங்கள் கேட்டுள்ளது.

கருப்பு பணம் பதுக்கல்: லலித் மோடி பெயரை வெளியிட்ட சுவிஸ் வங்கி

கருப்பு பணம் பதுக்கல்: லலித் மோடி பெயரை வெளியிட்ட சுவிஸ் வங்கி

இது குறித்து சுவிட்சர்லாந்து (சுவிஸ்) அரசு அவர்களின் பெயர்களுடன் 2 அறிவிக்கைகள் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிக்கைகளை பெறுவதற்கு 10 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நபர் பற்றி தெரிவிக்க வேண்டும் என்று லலித் மோடியையும், அவரது மனைவி மினால் மோடியையும் சுவிஸ் பெடரல் வரி நிர்வாக அமைப்பு கூறி உள்ளது.

Visit Chennaivision for More Tamil Cinema News

பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த கலெக்டர் மீது நடவடிக்கை

மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானி மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் அஜய் சிங் கங்வார்.

இவர் தனது பேஸ்புக்கில் நாட்டின் முதல் பிரதமர் நேரு பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். அதில் அவர், ‘‘1947-ம் ஆண்டு நம் நாடு இந்து தலிபான்கள் தேசமாக மாறுவதை தடுத்தது நேருவின் தவறா? ஐஐடி, இஸ்ரோ, பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம், ஐ.ஐ.எம், பெல் போன்ற நிறுவனங்களை உருவாக்கியது அவரது தவறா? ஆசாராம் பாபு, ராம் தேவ் போன்றவர்களை பாராட்டாமல், சாராபாய், ஹோமி ஜஹாங்கீர் போன்ற விஞ்ஞானிகளை பாராட்டியது அவரது தவறா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த கலெக்டர் மீது நடவடிக்கை

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருப்பவர் இதுபோல் கருத்து தெரிவிப்பது சர்வீஸ் விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி அஜய் சிங் கங்வார் மீது விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், கங்வார் பர்வானி கலெக்டர் பதவியிலிருந்து தலைமை செயலக துணைச் செயலாளர் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அஜய் சிங் கங்வாருக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய வேண்டும் என்று பேஸ்புக்கில் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி (நேதாஜி பிறந்தநாள்) கருத்து தெரிவித்திருந்ததாக மத்திய பிரதேச மாநில அரசு நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டை கங்வார் மறுத்துள்ளார்.

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

மானியம் அல்லாத பொதுச் சந்தை விலையில் விற்பனை செய்யப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.21 உயர்ந்துள்ளது. அதேசமயம் விமான எரிபொருள் (ஏடிஎப்) விலை 9.2 சதவீதம் உயர்ந்துள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

மாநிலங்களில் விதிக்கப்படும் விற்பனை வரிக்கு ஏற்ப ஒவ்வொரு விமான நிலையத்திலும் ஏடிஎப் விலை மாறுபடும். ஏடிஎப் விலை ஏற்றம் விமான நிறுவனங்களை மேலும் நெருக்கடிக்கு தள்ளும்.

ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டெர்குலோப் விமான நிறுவனங்களின் பங்கு விற்பனை நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Visit Chennaivision for More Tamil Cinema News