பா.ஜ.க வை விமர்சனம் செய்யும் தகுதி குஷ்புவுக்கு இல்லை

பா.ஜ.க வை விமர்சனம் செய்யும் தகுதி குஷ்புவுக்கு இல்லை,என்று அக்கட்சியின் தமிழக தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

நேற்று சென்னை பா.ஜ.க அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்பதற்கு தினந்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் சான்றாக அமைந்துள்ளது. குற்ற சம்பவங்களில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். போலீஸ் துறையில் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்பவேண்டும்.

கல்லூரிகளில் விரிவுரையாளர்கள், முதல்வர்கள் பணியிடம் உள்பட அரசு துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பணியில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடுகிறது. ஆகவே அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே மக்களுக்கு நியாயம் கிடைக்கும்.

கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர், விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்பக்கோரி பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் வரும் 18-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

2-ம் கட்டமாக பள்ளி, கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. விரைவாக பூரண மதுவிலக்கை கொண்டுவதற்கான முயற்சியையும் எடுக்கவேண்டும். சிறார் இல்லத்தில் சிறுவர்கள் தப்பியோடியதும், அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது தற்கொலைக்கு முயன்றதும் வேதனையளிக்கிறது.

விசாரணையை தாமதப்படுத்தியதும், சிறார் இல்லத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் கொடுக்காமல் அடிமைகள் போல் நடத்துவதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று கருதுகிறேன். சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீண்டும் திருந்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும்.

பாலாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சி கண்டிக்கத்தக்கது. இதனை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

டெல்லியில் நடைபெற உள்ள முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் பங்கேற்று மாநில மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: இஸ்லாமிய மத போதகரான ஜாகீர் நாயக் பேச்சை மத்திய அரசு ஆய்வு செய்வது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?

பதில்: ஜாகீர் நாயக் பேச்சு பிரிவினையை தூண்டும் வகையில் இருப்பதால் வங்காளதேசம், கனடா உள்ளிட்ட பல வெளிநாடுகள் அவருடைய பேச்சுக்கு தடை விதித்துள்ளன. கருத்து சுதந்திரம் ஒருவரின் உயிரை கொல்லுமானால் அதனை ஏற்கமுடியாது.

கேள்வி: தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்துள்ள நிலையில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்வாரா? என்று குஷ்பு விமர்சனம் செய்துள்ளாரே?

பதில்: குஷ்பு விமர்சனம் செய்யும் அளவுக்கு தமிழக பா.ஜனதா இல்லை. அதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை. சட்டசபை தேர்தலுக்கு பொறுப்பு ஏற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்யவில்லை. அப்படி இருந்தால் தேர்தல் முடிவு வெளியாகிய உடன் அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். உள்கட்சி விவகாரத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்திருக்கிறார்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

வருகிற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும்

வருகிற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும்:-

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஈரோட்டில் பா.ஜ.கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழக மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண பிரதமர் துரித நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரு நாட்டு மீனவர்களையும், இரு நாட்டு அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார், 1974-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வும், மற்றும் அ.தி.மு.க.வும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இப்போது அதுபற்றி பேசிவருவது நியாயமா?, பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐ.எஸ். உளவாளி திருப்பூரில் தங்கியிருந்து கடை வைத்து நடத்தும் அளவிற்கு இருப்பது வேதனைக்குரியது. உளவுபடை இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையையும் ஏற்கமாட்டோம்.

2017 ம் ஆண்டு ஜல்லிக்கட்டுடன் தான் பொங்கல் விழா கொண்டாடப்படும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிடும். இதேபோல் அனைத்து கட்சிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிட வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க வின் தாமரை சின்னத்தை முடக்க கோரி வழக்கு தாக்கல்

பா.ஜ.க வின் தாமரை சின்னத்தை முடக்க கோரி வழக்கு தாக்கல்:-

பா.ஜனதா கட்சியின் தாமரை சின்னத்தை ரத்துசெய்து உத்தரவிடவேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹேமந்த் பாட்டீல், பா.ஜ., கட்சியின் தாமரை சின்னத்தை ரத்து செய்யக்கோரி மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

இதில் அவர் கூறியிருப்பதாவது:–

தாமரை ஒரு புனிதமான மலராகவும், தனித்தன்மை வாய்ந்த மலராகவும் நமது புராண இதிகாசங்களில் போற்றப்படுகிறது, மேலும் கடவுள் லட்சமியின் மலராகவும், செல்வம், வளமை, பெருக்கத்தின் குறியீடாகவும் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக தாமரை நமது தேசிய மலராகும்.

எனவே தாமரையை ஒரு கட்சியின் அடையாளமாக பயன்படுத்துவது தவறாகும். எனவே பா. ஜனதா கட்சியின் சின்னமான தாமரை மலர் பயன்படுத்தப்படுவதை முறையற்ற பயன்பாட்டு தடுப்பு சட்டத்தின் கீழ் ரத்து செய்யவேண்டும்.

தேர்தல் கமிஷனிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான வழக்கு அடுத்த வாரத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11 வயது சிறுமியுடன் திருமணம் : பா.ஜ.க தலைவர் மீது வழக்கு பதிவு

11 வயது சிறுமியுடன் திருமணம் : பா.ஜ.க தலைவர் மீது வழக்கு பதிவு:-

பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் ஜார்கண்ட் மாநிலத்தின், பா.ஜ.க மாநில தலைவரான தலா மராண்டியின் மகன் முன்னா மராண்டி, 11 வயது சிறுமியை திருமணம் செய்ததால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27ஆம் தேதி, முன்னா மராண்டி, 11 வயது சிறுமையை மணந்தார். இது குறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியது. இந்த செய்திகள் அடிப்படையில், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்துமாறு கோரியது. இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய் பிரகாஷ், விசாரணை நடத்தி, மாஜிஸ்திரேட்டு ராஜேஷ் சின்காவிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில், பா.ஜனதா தலைவர் தலா மராண்டி, அவருடைய மகன் முன்னா மராண்டி உள்பட 3 பேர் மீது, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, வழக்கு பதிவு செய்யப்பட்டதால், தலா மராண்டி பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர்கள் ஹேமந்த் சோரன், பாபுலால் மராண்டி உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

11 வயது சிறுமியை திருமணம் செய்த பா.ஜ.க. தலைவர் மகன்

11 வயது சிறுமியை திருமணம் செய்த பா.ஜ.க. தலைவர் மகன்  :-

ஜார்கண்ட் மாநிலம் பாஜக தலைவர் தலா மராண்டி இவரது மகன் முன்னா மராண்டி 2 வருடமாக ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் அந்த பெண்ணை ஏமாற்றி, இந்த வாரம் வேறு ஒரு 11 வயது சிறுமியை திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் ஒரு பெண் கோட்டா மாவட்ட நீதிமன்றத்தில் புகார் ஒன்றை கொடுத்து உள்ளார். அதில் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி முன்னா என்னை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று குற்றம் சாட்டிஉள்ளார். மேலும் அந்த பெண் ஜார்கண்ட் மகளிர் ஆனையத்திலும் புகார் அளித்து உள்ளார்.

இந்த 2 புகாரின் பேரிலும் மகளிர் ஆணையம் முன்னா மராண்டிக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் மல்லையாவுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி : பா.ஜ.க-வை கலாய்க்கும் காங்கிரஸ்

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜான், மீது பா.ஜ.க தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, அவருக்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக சுப்பிரமணியசாமி, ரகுராம் ராஜனால், இந்திய பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக தெரிவித்து வருகிறார்.

இதையடுத்து, ரிசர்வ்  வங்கி ஆளுநராக தனது பதவிகாலத்தை நீட்டிப்பு பெற விரும்பவில்லை, என்று ரகுராம் ராஜான் தெரிவித்துள்ளார்.

விஜய் மல்லையாவுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி : பா.ஜ.க-வை கலாய்க்கும் காங்கிரஸ்

விஜய் மல்லையாவுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி : பா.ஜ.க-வை கலாய்க்கும் காங்கிரஸ்

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், கடன் மோசடியாளரும், தொழிலதிபருமான விஜய் மல்லையாவை ரிசர்வ் வங்கி ஆளுநராக மத்திய அரசு நியமிக்கலாம், என்று பா.ஜ.க அரசை கலாய்த்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கஜேந்திர சவுகான் முதல் சேத்தன் சவுகான் வரை இந்த அரசால் நியமிக்கப்பட வேண்டியவர்கள் நிறையவே இருக்கிறார்கள். விஜய் மல்லையாவை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமித்தால் மிகப்பெரிய அனுபவம் கிடைக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

டெல்லியில் பூரண மதுவிலக்கு : கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதிய பா.ஜ.க

டெல்லியில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், என்பதை வலியுறுத்தி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பா.ஜ.க கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து பா.ஜ்.க செய்தி தொடர்பாளர் அஸ்வினி உபத்யாய், முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

டெல்லியில் பூரண மதுவிலக்கு : கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதிய பா.ஜ.க

டெல்லியில் பூரண மதுவிலக்கு : கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதிய பா.ஜ.க

அரசியலமைப்பு சட்டம் 47-ன் கீழ் தேசிய தலைநகரான டெல்லியில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆல்கஹால் மனிதர்களது நடத்தையையும், கற்றுக் கொள்ளும் திறனையும், ஞாபக சக்தியையும் பாதிக்கிறது. மது அருந்துவது கல்லீரல் புற்றுநோய், வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் ஏற்பட்ட முக்கிய காரணமாக உள்ளது.

ஆல்கஹாலால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் நெஞ்சு வலி ஏற்படும் அபாயம் உள்ளது.

இவ்வாறு அந்த கடிதத்தில் உபத்யாய் தெரிவித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

 

ரூ.570 கோடி பண விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு தொடர்பா?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பாக ஈரோட்டில் மூன்று கண்டய்னர் லாரிகள் மூலம் பிடிபட்ட ரூ.570 கோடி விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதை மறுத்துள்ள அக்கட்சியின் தமிழக தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன், இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக பா.ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகள், கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சியின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும்.

அகில இந்திய பா.ஜனதா கட்சியின் தேசிய கூட்டம் அலகாபாத்தில் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு பின் தொய்வின்றி வருங்காலத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

ரூ.570 கோடி பண விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு தொடர்பா?

ரூ.570 கோடி பண விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு தொடர்பா?

ரூ.570 கோடி விவகாரத்தில் பா.ஜனதா கட்சிக்கோ, மத்திய அரசுக்கோ தொடர்பு கிடையாது. பணம் இருந்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்று இருக்கமாட்டோமா?.

கர்நாடகாவில் மாநிலங்களவைக்கு குதிரை பேரம் நடந்து உள்ளது. இதனால் பா.ஜனதா கட்சி பற்றி பேச இளங்கோவனுக்கு அருகதை இல்லை. அவரது கட்சி வேலையை முதலில் பார்க்கட்டும். எங்கள் கட்சியில் 25 நிர்வாகிகள் தான் நியமிக்க முடியும். இதில் யாரும் குழப்பம் ஏற்படுத்த முடியாது.

கச்சத்தீவை காங்கிரஸ்-தி.மு.க.தான் இலங்கைக்கு வழங்கியது. கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். இதற்கான சட்ட திட்டங்களை ஆராய்ந்து செயல்பட வேண்டும். கச்சத்தீவில் இலங்கை கடற்படை தளம் மற்றும் ராணுவ தளவாடங்களை வைப்பது கண்டிக்கத்தக்கது. தி.மு.க. கூட்டணியில் இருப்பதால்தான் காங்கிரஸ் கட்சி தோற்க முடிந்தது.

Visit Chennaivision for More Tamil Cinema News

ஜெயலலிதாவின் கையெழுத்து பா.ம.க-வின் வெற்றி : ராமதாஸ் அறிவிப்பு

ஜெயலலிதாவின் கையெழுத்து பா.ம.க-வின் வெற்றி : ராமதாஸ் அறிவிப்பு

ஜெயலலிதாவின் கையெழுத்து பா.ம.க-வின் வெற்றி : ராமதாஸ் அறிவிப்பு

டாஸ்மாக் மதுக்கடைகளின் நேரம் குறைப்பு, 500 கடைகள் மூடல் ஆகியவற்றுக்கு ஜெயலலிதா போட்ட கையெழுத்து பா.ம.க-வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி, என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள ஜெயலலிதா 5 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முக்கியமாக தமிழகத்தில் மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்படும். 500 சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும் என்பதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டிருக்கிறார். இதுதொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த 35 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். பா.ம.க. தொடங்கப்பட்ட நாளில் இருந்து 26 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை முன் வைத்து ஏராளமான போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். அந்த வகையில் தமிழகத்தில் மது விற்பனை நேரமும், மதுக்கடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருப்பது பா.ம.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும்.

தமிழகத்தின் மது விற்பனையில் 90 சதவீதம் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலான 5 மணி நேரத்தில் தான் நடைபெறுகிறது. இதைக்கருத்தில் கொண்டு மது விற்பனை நேரத்தை காலையில் 2 மணி நேரம் குறைத்ததற்கு பதிலாக மாலையில் 2 மணி நேரம் குறைத்திருந்தால் அது ஓரளவாவது பயனுள்ளதாக இருந்திருக்கும்.

அதேபோல், விற்பனை நேரம் நாளை(இன்று) முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 500 சில்லறை மதுக்கடைகள் எப்போது மூடப்படும் என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்காதது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. இதற்கெல்லாம் மேலாக படிப்படியாக மது விலக்கை ஏற்படுத்துவதற்கான வாக்குறுதி இந்த ஒற்றை நடவடிக்கையுடன் முற்று பெற்றுவிடக் கூடாது.

தமிழகத்தில் சுமார் 7 ஆயிரம் மதுக்கடைகள் இருக்கும் நிலையில் ஆண்டுக்கு 500 மதுக்கடைகளை மூடினால் முழு மதுவிலக்கை ஏற்படுத்த இன்னும் 14 ஆண்டுகள் ஆகும். இது மிக நீண்ட அவகாசமாகும். முழு மதுவிலக்கு என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டு விட்ட நிலையில் மாதம்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மதுக்கடைகளை மூடி இந்த ஆண்டு இறுதிக்குள் முழு மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் சமூகத்திற்கு பயனுள்ளதாக அமையும்.

இது தொடர்பான தெளிவான கொள்கைகளை வகுத்து தமிழகத்தில் முழு மதுவிலக்கு எப்போது ஏற்படுத்தப்படும், எந்தெந்த கால இடைவெளியில் எவ்வளவு கடைகள் மூடப்படும் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய மதுவிலக்கு செயல்திட்டத்திற்கான கால அட்டவணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

மதுக்கடைகள் மூடப்படுவதால் வேலை இழக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று அரசு வேலை வழங்குவதற்கான அறிவிப்பையும் அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

தேர்தல் 2016 பாஜக 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தேர்தல் 2016 பாஜக 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

bjp-3rd-candiidate-list

தேர்தல் 2016 பாஜக 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

 1. பூந்தமல்லி (தனி) – அமர்நாத்
 2. எழும்பூர் (தனி) – வெங்கடேசன்
 3. ராயபுரம் – ஜெமிலா
 4. சேப்பாக்கம் – தாமரை கஜேந்திரன்
 5. ஆயிரம் விளக்கு – சிவலிங்கம்
 6. வேளச்சேரி – டால்பின் ஸ்ரீதர்
 7. ஆலந்தூர் – சத்தியநாராயணன்
 8. ஸ்ரீபெரும்புதூர் (தனி) – மனோகரன்
 9. பல்லாவரம் – கோபி அய்யாசாமி
 10. தாம்பரம் – வேதா சுப்ரமணியம்
 11. அரக்கோணம்(தனி) – விஜயன்
 12. வேலூர் – இளங்கோவன்
 13. கீழ்வைத்தினான்குப்பம் (தனி) – விமலா ராமச்சந்திரன்
 14. வாணியம்பாடி – வெங்கடேசன்
 15. வேப்பனஹள்ளி – ப்ரேமநாதன்
 16. தர்மபுரி – ஆறுமுகம்
 17. ஹரூர் (தனி) – வேடியப்பன்
 18. போளூர் – தமிழரசி தேவதாஸ்
 19. வானூர் (தனி) – திருசெல்வகுமார்
 20. விக்கிரவாண்டி – பழனிவேலு
 21. மேட்டூர் – பாலசுப்ரமணியன்
 22. ராசிபுரம்(தனி) – குப்புசாமி
 23. பெருந்துறை – சந்திரசேகர்
 24. அந்தியூர் – மோகன்குமார்
 25. கூடலூர் (தனி) – அன்பரசன்
 26. கோயம்புத்தூர் – கண்ணன்
 27. தொண்டாமுத்தூர் – கருமுத்து தியாகராஜன்
 28. கிணத்துக்கடவு – முத்துராமலிங்கம்
 29. பொள்ளாச்சி – சிவகுமார்
 30. உடுமலைப்பேட்டை – கந்தசாமி
 31. ஆத்தூர் – இளஞ்செழியன்
 32. நிலக்கோட்டை(தனி) – அழகுமணி
 33. கிருஷ்ணராயபுரம்(தனி) – நவீன்குமார்
 34. மணப்பாறை – செந்தில் தீபக்
 35. ஸ்ரீரங்கம் – ராஜேஷ்குமார்
 36. திருவெறும்பூர் – சிட்டி பாபு
 37. மணச்சநல்லூர் – சேது அரவிந்த்
 38. பெரம்பலூர் (தனி) – கலியபெருமாள்
 39. ஜெயங்கொண்டம் – கிருஷ்ணமூர்த்தி
 40. கடலூர் – செல்வம்
 41. குறிஞ்சிப்பாடி – சக்தி கணபதி
 42. திருத்துறைப்பூண்டி (தனி) – உதயகுமார்
 43. திருவாரூர் – ரெங்கதாஸ்
 44. திருவிடைமருந்தூர் (தனி) – வாசுதேவன்
 45. பாபநாசம் – குணசேகரன்
 46. மேலூர் – பூபதி கக்கன்
 47. மதுரை – கார்த்திக் பிரபு
 48. மதுரை மேற்கு – சசிகுமார்
 49. பெரியகுளம் (தனி) – செல்லம்
 50. கம்பம் – பிரபாகரன்
 51. ராஜபாளையம் – ராமச்சந்திரராஜா
 52. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – ராமசாமி
 53. திருச்சுழி – பாலா ரவிராஜன்
 54. முதுகுளத்தூர் – அரசகுமார்
 55. திருச்செந்தூர் – ஜெயராமன்
 56. வாசுதேவநல்லூர் (தனி) – ராஜ்குமார்
 57. திருநெல்வேலி – மகாராஜன்

Visit Chennaivision for More Tamil Cinema New

Similar Tags : தேர்தல் 2016 பாஜக, தேர்தல் 2016 பாஜக 3வது வேட்பாளர் பட்டியல்