பிரபல இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து கலக்கும் ‘கடுகு’ படத்தின் டீசர்

பிரபல இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து கலக்கும் ‘கடுகு’ படத்தின் டீசர்

“இந்த உலகத்துல கெட்டவங்கள விட மோசமானவங்க யாருன்னா… என்ற கம்பீர குரலில் ஆரம்பிக்கும்  ‘கடுகு’ படத்தின் டீசர் தான் தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் மக்கள் இடத்தில் தனக்கென்று ஒரு பெயரை சம்பாதித்த இயக்குனர் விஜய் மில்டன் இந்த கடுகு படத்தை இயக்க, ‘ரஃப் நோட்’ நிறுவனத்தின் சார்பில் பாரத் சீனி கடுகு படத்தை தயாரித்து இருக்கிறார். நடிகர் பரத், இயக்குனர் ராஜகுமாரன் மற்றும் விஜய் மில்டனின் சகோதரரும், தயாரிப்பாளருமான  பாரத் சீனி  ஆகியோர் கடுகு படத்தின்  முக்கிய கதாப்பாத்திரங்களில் கூட்டணி அமைத்து   நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டரை நிமிடம் ஓடக் கூடிய இந்த வீடியோவில், முதல் ஒன்றரை நிமிடம் பிரபல இயக்குனர்கள் சுசீந்திரன், லிங்குசாமி, பாண்டிராஜ், வெங்கட் பிரபு மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோர் நையாண்டியான யோசனைகளை கூற, அதன் பிறகு ஆரம்பமாகிறது கடுகு படத்தின் டீசர். கோலி சோடா படத்திற்கு பின் என்ன  பண்ணலாம் என்று கடுகு படத்தின் விஜய் மில்டன் கேட்க, அதற்கு  சுசீந்திரன் “இறுதிச்சுற்று மாரி ஒரு கதை இருக்குன்னு சொன்னீங்களே…” என்றும், இயக்குனர் பாண்டிராஜ் “பேசமா கோலி சோடா பார்ட் 2 வே பண்ணிடுங்க” என்றும் சொல்கின்றனர். அதனை தொடர்ந்து இயக்குனர் விஜய் மில்டன் கடுகு படத்தின் கதையை நடிகர் பாரத்திடமும், நடிகை சுபிக்ஷாவிடமும் பின்வருமாறு கூறுகிறார் “ஒரு பத்து பேர் உள்ள பஸ் ஸ்டாண்ட்ல, உன்ன மாரி ஒரு பையனையும், அவங்கள மாரி உள்ள ஒரு பெண்ணையும் தான் நோட் பண்ணுவாங்க. ஆனா மூணாவதா மக்கள் நோட் பண்ண கூடிய ஆள் யாரு?” என்று கேட்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். யார் அந்த மூன்றாவது நபர் என்ற ஆர்வம் பார்வையாளர்களின் மனதில் அலைந்து ஓட, அந்த இடத்தில் என்ட்ரி கொடுக்கிறார் நடிகரும், இயக்குனராமான ராஜ குமாரன்.

“இயக்குனர் ராஜகுமாரனையா நடிக்க வைக்க போறீங்க?” என்று இயக்குனர் லிங்குசாமி ஆச்சரியத்துடன் கேட்க, இயக்குனர் வெங்கட் பிரபுவோ “அப்படி என்றால் கடுகு படம் அதிரடியா? இல்ல திகில் படமா?” என்று சந்தேகத்துடன் கேட்கிறார். அதனை தொடர்ந்து ராஜகுமாரனை விஜய் மில்டனும் அவரது கடுகு படக்குழுவினரும் கதை சொல்ல அணுகுகின்றனர். ஆனால் ராஜகுமாரனோ “நல்ல யோசிச்சீங்களா? நான் தான் நடிக்கனுமா” என்று நையாண்டியாக கேட்கும் விதம் பார்வையாளர்களை கலகலவென சிரிக்க செய்கிறது.”அவர் நடிப்பதில் அவருக்கே சந்தேகமா???” என்று இயக்குனர் பாண்டிராஜ் விஜய் மில்டனிடம் கேட்ட,  “அவரை வச்சி முதலில் ஒரு டீசர் எடுப்போம். அது நல்ல ஹிட் ஆச்சுன்னா அப்படியே தொடர்ந்து போவோம்” என்று இயக்குனர் பாலாஜி சக்திவேலும், இயக்குனர் லிங்குசாமியும் கூறுகின்றனர். அப்போது ஆரம்பமாகும் கடுகு படத்தின் டீசரானது “இந்த உலகத்துல கெட்டவங்கள விட மோசமானவங்க யாருன்னா….” என்ற வார்த்தைகளோடு துவங்கி, “தப்பு நடக்கும் போது ஏன்னு தட்டி கேக்காத நல்லவங்க தான்….” என்ற வார்த்தைகளோடு முடிவடைகிறது. புலி வேஷம் போட்டிருக்கும் ராஜ குமாரனின் கெட்டப் கடுகு டீசரின் ஆரம்பத்தில் கம்பீரகமாகவும், இறுதியில் அவர் பார்க்கும் பார்வை அனைவரையும் சிரிக்க வைக்கும் விதத்திலும் அமைந்திருப்பது கடுகு டீசரின் சிறப்பம்சம்.

கடுகு டீசரை யூடூப்பில் கண்ட இயக்குனர் வெங்கட் பிரபு  “விஜய் மில்டனின் கதை களம் எப்போதுமே சற்று வித்தியாசமானது தான். அதை நிரூபிக்கும் வண்ணமாக அமைந்திருக்கிறது இந்த கடுகு படத்தின் டீசர்” என்றார். மேலும் இயக்குனர் லிங்குசாமி கடுகு டீசரை பார்த்த பிறகு, ” இந்த அளவிற்கு கடுகு டீசர் என்னை சிரிக்க வைத்து விடும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கண்டிப்பாக விஜய் மில்டனுக்கு இந்த கடுகு திரைப்படம் அடுத்த ஒரு மைல் கல்லாக அமையும். கடுகு படக்குழுவினருக்கும், விஜய் மில்டனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறினார். இப்படி பெரும்பாலான திரையுலக நட்சத்திரங்கள் விஜய் மில்டனின் கடுகு டீசருக்கு சமூக வலைத் தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் “மிகவும் இயல்பாகவும், எதார்த்தமாகவும்  உருவாக்கப் பட்டிருக்கிறது. கடுகு – விஜய் மில்டனின் ஒரு தைரியமான முயற்சி” என்று எழுதி இருக்கிறார். இப்படி பல சுவாரசியங்களை உள்ளடக்கி உள்ள கடுகு திரைப்படம் விரைவில் மக்கள் மனதிற்கு பிடித்த திரைப்படமாக உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தயாரானது ‘கபாலி’ விமானம்

தயாரானது ‘கபாலி’ விமானம்:-

ரஜினிகாந்தின் ‘கபாலி’ திரைப்படம் இதுவரை இந்திய திரைப்படங்களும் செய்யாத சாதனையை செய்து வருகிறது. கடல் கடந்து எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தற்போது வானத்திலும் வட்டமிடப்போகிறது. ஆம், ‘கபாலி’ விளம்பரம் அச்சடிக்கப்பட்ட விமானம் ஒன்றை ஏர் ஏசியா நிறுவனம் பறக்கவிடுகிறது.

‘கபாலி’ படத்துடன், விமான தூதராக கைகோர்த்துள்ள ‘ஏர் ஏசியா’ நிறுவனம், பிரத்யேகமாக கபாலி விமானம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தங்களது பயணிகளுக்கு கபாலி படத்தின் பாடல் கேசட்கள், படம் ரிலீஸின் போது முதல் நாள் டிக்கெட் உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஏர்-ஏசியா நிறுவனத்தின் விமானம் ஒன்றில் ‘கபாலி’ படத்தின் விளம்பரத்தை அச்சடித்துள்ளனர். இந்த விமானம் தற்போது தனது பயணத்தை தொடங்க உள்ளது.

Visit Chennaivision for More Tamil Cinema News

மேலிடம் என்னை திரும்ப அழைத்தாலும் பதவியில் நீடிக்க மாட்டேன் : இளங்கோவன்

மேலிடம் என்னை திரும்ப அழைத்தாலும் பதவியில் நீடிக்க மாட்டேன் : இளங்கோவன்:

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மேலிடம் தன்னை திரும்ப அழைத்தாலும், பதவியில் நீடிக்க மாட்டேன், என்று தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தனது பதவியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜிநாமா செய்து, டெல்லி தலைமைக்கு கடிதத்தை அண்மையில் அளித்திருந்தார். இதை கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஏற்றுள்ளார்.

இந்த நிலையில், தாம்பரத்தை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள இளங்கோவனின் வீடு முன்பு கூடிய மாவட்டத் தலைவர்கள் பலர் ராஜிநாமா முடிவைக் கைவிட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். தொண்டர் ஒருவர் தீக் குளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர்களிடம் பேசிய இளங்கோவன், “பதவியை நானாகவே ராஜிநாமா செய்தேன். மேலிடம் என்னைத் திரும்ப அழைத்தாலும், பதவியில் நீடிக்க மாட்டேன். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், கட்சிக்கு நெருக்கடி கொடுக்காமல், மாவட்டத் தலைவர்கள் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

மீண்டும் சட்டசபையில் சலசலைப்பை ஏற்படுத்திய கச்சத்தீவு விவகாரம் : திமுக வெளிநடப்பு

தமிழக சட்டசபை கூட்டத்தில் கச்சத்தீவு குறித்து பேசினாலே, பெரும் சலசலப்பும், கூச்சலும் குழப்பமும் ஏற்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கச்சத்தீவு குறித்து ஆளும் அதிகும அரசு திமுக மீது குற்றம் சாட்ட, அதற்கு பதிள் அளித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஆதாரங்களுடனும், புள்ளி விபரத்தோடும் பதில் அளித்து அவையையே அதிர வைத்தார்.

இந்த நிலையில், இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது குறித்து பேசியதாவது:

1974-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது குறித்து நான் கடந்த 20-ந்தேதி சட்டமன்றத்தில் பேசினேன். இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி 21-ந்தேதி பதில் அளித்துள்ளார்.

அதில் “கச்சத்தீவை தாரை வார்க்க ஒரு போதும் துணை போகவில்லை என்று அவர் கூறியுள்ளார். திடீரென்று ஒரு நாள் பத்திரிகையில் அறிவிப்பு வந்ததாகவும் தாம் கடுமையாக எதிர்த்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவை விட்டுக்கொடுக்க ஒருநாளும் சம்மதிக்கவில்லை என்று கூறும் கருணாநிதி டெசோ மாநாட்டில் கச்சத்தீவை உரிமை கொண்டாட பல சலுகைகளை பெற்றதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் கச்சத்தீவை விட்டுக் கொடுக்க இவரும் உடந்தையாக இருந்ததாக தானே அர்த்தம்” என்றார்.

அப்போது துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து விளக்கம் அளிக்க முயற்சி செய்தார். தி.மு.க. உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக எழுந்து நின்று குரல் கொடுத்தனர். சபாநாயகர் அவர்களை உட்காரும்படி கூறினார். என்றாலும் அனுமதி வேண்டும் என்று துரை முருகன் வற்புறுத்தினார்.

முன்னதாக கச்சத்தீவு பற்றி முதல்வர் ஜெயலலிதா பேச தொடங்கியதும் தி.மு.க. உறுப்பினர்கள் அவ்வப்போது எழுந்து நின்று குரல் கொடுத்தனர்.

முதல்வர் ஜெயலலிதா இன்னும் கச்சத்தீவு தொடர்பான கேள்விகள் இருக்கின்றன. நான் பேசி முடித்ததும் உங்கள் கருத்துக்களை சொல்லலாம் என்றார்.

என்றாலும் தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து எழுந்து நின்று குரல் கொடுத்தனர். அ.தி.மு.க. உறுப்பினர்களும் தொடர்ந்து பதில் குரல் எழுப்பினார்கள். இதனால் கூச்சல்-குழப்பமாக இருந்தது.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

சபாநாயகர்:- தி.மு.க. உறுப்பினர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு முதல்வர் பேசும் போது குரல் எழுப்ப வேண்டும், வெளிநடப்பு செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே திட்டமிட்டு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையடுத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, “கச்சத்தீவு பற்றி பேச தொடங்கிய உடனேயே அவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்ற பயம். இதனால் தேவையில்லாமல் கூச்சலிட்டு இடையூறு செய்தார்கள். உங்களிடம் நான் எந்த பதிலும் எதிர்பார்க்கவில்லை. உங்கள் கட்சி தலைவரிடம் தான் பதிலை எதிர்பார்க்கிறேன். நான் பேசி முடித்த பிறகு பதில் சொல்லுங்கள் என்று கூறினேன். என்றாலும் அவர்களால் பதில் சொல்ல முடியாது என்பதால் வெளிநடப்பு செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

வெளிநடப்பு செய்த தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் சிறிது நேரம் கழித்து சபைக்கு திரும்பினார்கள்.

Visit Chennaivision for More Tamil Cinema News

விஜய் மில்டன் இயக்கத்தில் பரத் நடிக்கும் ‘கடுகு’

’கோலி சோடா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை வெற்றி இயக்குநராக நிலை நிறுத்திய பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், அடுத்ததாக இயக்கிய ‘10 எண்றதுக்குள்ள’ படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கிடையில், விஜய் மில்டன் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு ‘கடுகு’ என்று தலைப்பு வைத்துள்ளார்.

இப்படத்தில் பரத் ஹீரோவாக நடிக்க, இயக்குநர் ராஜகுமாரன் மற்றும் விஜய் மில்டனின் சகோதரரும், தயாரிப்பாளருமான பாரத் சீனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

விஜய் மில்டன் இயக்கத்தில் பரத் நடிக்கும் ‘கடுகு’

விஜய் மில்டன் இயக்கத்தில் பரத் நடிக்கும் ‘கடுகு’

ரஃப் நோட் புரொடக்‌ஷன் சார்பில், இப்படத்தை தயாரிக்கும் பாரத் சீனி படம் குறித்து கூறுகையில், “ஒரு   கலைஞனுக்கு தோன்றும் அல்லது உதயமாகும்  சிந்தனையை  முதலில்  ஒரு ரஃப் நோட்  தான் பதிவு செய்கிறது, அந்த வகையில் ரஃப் நோட் என்பது இன்றிமையாதது. அதனால் தான் சொந்த நிறுவனம் துவங்க வேண்டும் என்று எண்ணிய  போது  இந்தப் பெயரை தேர்ந்து எடுத்தேன். கண் இமைக்கும் நேரத்தில் வளர்ந்து கொண்டே  போகும் இந்த மாடர்ன் உலகில், மக்களின் ரசனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் எங்களின்  இந்த ‘கடுகு’ திரைப்படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்” என்றார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

அந்தரத்தில் பறந்த கார் – ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடந்த அதிசயம்

தமிழகத்தில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மற்றும் சாய்ராம் கல்வி குழுமம், படிப்பு மட்டும் இன்றி, மாணவர்களுக்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதற்கான நிகழ்ச்சி ஒன்றை கடந்த மே 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தியது.

‘பிக் பேங்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த அறிவியல் நிகழ்ச்சியை எல்.எம்.ஈ.எஸ் அகடெமியுடன் சேர்ந்து சாய்ராம் கல்வி குழுமம், சென்னை தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

பள்ளி மாணவர்களிடம் அறிவியலின் ஆர்வத்தை தூண்டும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அறிவியல் மூலம் நடத்தப்படும் அதிசய நிகழ்வுகள் செய்துக்காட்டப்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பயன் பெற்றார்கள். சென்னை மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்,  பெங்களூர், ஐதராபாத் போன்ற வெளின் மாநில பள்ளி மாணவர்களும் இந்த அறிவியில் நிகழ்வில் கலந்துக்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கு பேருந்து வசதி மற்றும் உணவு ஆகியவற்றை சாய்ராம் கல்வி குழுமம் இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அந்தரத்தில் பறந்த கார் – ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடந்த அதிசயம்

இந்த நிகழ்வில், ஒரு பொருளின் அழுத்தம் சீராக இருப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்கள் முன்னிலையில் செய்து காட்டப்பட்டது. அதாவது ஒரு ஆணி மீது, காலை வைத்தால் அது இறங்கிவிடும். அதே பல ஆணிகளை வைத்து அதன் மீது நாம் கால் வைத்தால், அப்போது நமக்கு எதுவும் ஆகாது, காரணம் நம் காலின் அழுத்தமானது, அந்த ஆணிகளில் சீராக பரவுகிறது. இதை தான் சிலர் கவுளுக்கு ஆணி காலனி அணிந்து நடக்கிறேன், ஆணி மெத்தையில் படுக்கிறேன், என்று நேர்த்திகடன் செய்கிறார்கள். இதுபோல பல்வேறு அறிவியல் விஷயங்களை, ஒரு மேஜிக் போல மாணவர்களிடம் செய்துக் காட்டியதால், அது அவர்களை வெகுவாக கவர்ந்ததோடு, அவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தையும் தூண்டியது.

இதேபோல, இரண்டு நோட்டு புத்தகங்களில் உள்ள தாழ்களை ஒன்றோடு ஒன்று புரட்டிப்போட்டால், அதை எப்படி பிரித்தாலும் பிரிக்க முடியாது, என்பதும் செய்துகாட்டப்பட்டது. இதைதான் பிக்‌ஷன் என்று சொல்கிறார்கள். அதாவது அந்த நோட்டு புத்தக தாழ்கள் இடையே இருந்த காற்று அடைக்கப்படுவதால், அந்த நோட்டு புத்தகத்திற்கு இப்படி ஒரு வலிமை கிடைக்கிறது. இது நோட்டு புத்தகத்தின் அளவைக்கொண்டு, பிக்‌ஷனின் சக்தியும் அதிகரிக்கிறது.

அந்த வகையில், இரண்டு பெரிய புத்தகங்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து, பிரிக்க முயற்சிக்கப்பட்டது. அதில், 210 டன் எடை கொண்ட கார் ஒன்றை, இணைக்கப்பட்ட நோட்டு புத்தகங்கள் கொண்டு தூக்கப்பட்டது. சுமார் 10 அடிக்கும் மேலாக தூக்கப்பட்ட்ட போதிலும், கார் அந்தரத்தில் பறந்ததே தவிர, நோட்டு புத்த்கங்கள் பிரிந்தபாடியில்லை. இவ்வாறு செய்யபட்ட பிக்‌ஷன் முறையைப் பார்த்து அங்கு இருந்த மாணவர்களும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள்.

இதுபோன்ற, நிகழ்வு நடைபெறும் இரண்டு நாட்களில் சுமார் 24 அறிவியல் விஷயங்களை மாணவர்களுக்கு செய்துக்காட்டப்பட்டது.

இந்த அறிவியல் நிகழ்வுகளை செய்பவர் எல்.எம்.ஈ.எஸ் அகடெமியின் நிறுவனர் பிரேமானந்த் சேதுராஜன். அமெரிக்காவில் பணியாற்றிய இவர் தற்போது, தமிழக பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதற்காக, இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன் முதல் முயற்சி தான் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ‘பிக் பேங்க்’ அறிவியல் நிகழ்ச்சி.

இந்த நிகழ்வு குறித்து சாய்ராம் கல்வி குழுமத்தின் முதன்மை தலைமை அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்துவிடம் கேட்ட போது, “பிரேமானந்த் சேதுராஜன், அறிவியல் சம்மந்தமான சில அறிய விஷயங்களை, வீடியோவாக யூடியுப் சேனலில் ஒளிபரப்பி வருகிறார். அந்த வீடியோக்களை தொடர்ந்து நாங்கள் பார்த்து வந்தபோது, அவருக்கும், மாணவர்களுக்கும் இதை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து, அவரை தொடர்புகொண்ட போது அவர் அமெரிக்காவில் இருந்தார். அப்போது, தமிழகம் வந்தால் நேரில் சந்திப்பதுடன், எந்த உதவியாக இருந்தாலும் எங்களிடம் கேளுங்கள் என்று கூறியிருந்தோம்.

அதன்படி, தமிழகம் வந்த அவர் என்னை சந்தித்து, பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கேம்ப் ஒன்றை செய்ய இருப்பதாக கூறியதோடு, அதற்கான இடம் உள்ளிட்ட வசதிகளை கேட்டார். இதற்கு உடனே சம்மதம் தெரிவித்து, தற்போது அதை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். இது ஆரம்பம் தான், இதுபோன்ற பல்வேறு விஷயங்களை செய்வதற்கு சாய்ராம் கல்வி குழுமம் முழு ஒத்துழைப்பையும் கொடுக்கும்.

கல்வியில், ஒழுக்கம் என்று சிறந்த கல்லூரிகளில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தாலும், படிப்பு மட்டும் இன்றி மாணவர்களு வேறு சில வழிகளில் ஆக்கப்பூர்வமான விஷயங்களை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் தான் இந்த அறிவியல் நிகழ்வு நடத்தப்பட்டது. தற்போது பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த் அறிவியல் கண்காட்சியைப் போல எதிர்காலத்தில், மிகப்பெரிய் அறிவியல் விஷயங்களோடு, கல்லூரி மாணவர்களுக்கும் நடத்துவோம்” என்று தெரிவித்தார்.

எல்.எம்.ஈ.எஸ் அகடெமியின் நிறுவனர் பிரேமானந்த் சேதுராஜன், இந்த நிகழ்வு குறித்து பேசுகையில், “நான் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவன், அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தேன். தற்போது எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை தியரில் சொல்வதை விட பிராக்டிக்லாக சொல்வதே சிறந்தது. அதிலும் சிறுவர்களிடம் சொல்லும்போது, அவர்களுக்கு புரிவதுடன், அவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதத்திலும் சொல்ல வேண்டும். அதனால், தான் இந்த அறிவியல் நிகழ்வுகளை மேஜிக் போல அவர்களிடம் காட்டி வருகிறோம்.

சுமார் 24 அறிவியல் நிகழ்வுகள் இந்த இரண்டு நாட்கள் கண்காட்சியில் செய்யப்பட்டது. மாணவர்களும் மிகவும் உற்சாகத்தோடு, இந்த நிகழ்வுகளில் பங்கெடுத்தார்கள்.

நான் அமெரிக்காவில் இருக்கும்போதே, இரண்டு ஆண்டுகளாக இதுபோன்ற அறிவியல் விஷயங்களை வீடியோவாக பதிவு செய்திருக்கிறேன். அதை பலர் பார்த்தும் வருகிறார்கள். இதை நேரடியாக மாணவர்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும், என்ற எனது கனவு இன்று நினைவாகியுள்ளது.

இதற்கு பெரும் உறுதுணையாக இருந்த சாய்ராம் கல்வி குழுமத்திற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது முதல் முயற்சி என்பதால், இந்த நிகழ்வில் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இதுபோன்ற அறிவியல் நிகழ்ச்சியை தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக அரசிடமும் அனுமதி கோரியுள்ளோம். அவர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

நான் அமெரிக்காவில் பணிபுரிந்ததற்கு காரணம், அங்குள்ள கல்வி முறை மற்றும் உலக நாடுகளின் கல்வி முறையை அறிந்துக்கொள்வதற்கே. 6 வருடங்கள் பணியாற்றிய நான், தற்போது எனது பணியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகத்திற்கே வந்துவிட்டேன். ஒரு நாடு வல்லரசு ஆக வேண்டும் என்றால், அந்த நாட்டில் கண்டுபிடிப்புகள் அதிகமாக இருக்க வேண்டும், என்று அப்துல் கலாம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால், நமது கல்வி முறை மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டதாகவே உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த அறிவியில் நிகழ்வுகளை மேற்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

அச்சமின்றி படத்தின் டீசர் விஷால் வெளியிடுகிறார்

அச்சமின்றி படத்தின் டீசர் விஷால் வெளியிடுகிறார்

அச்சமின்றி படத்தின் டீசர் விஷால் வெளியிடுகிறார்

என்னமோ நடக்குது என்ற வித்தியாசமான படத்தைத் தயாரித்த டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” அச்சமின்றி “

தயாரிப்பாளர் வி .வினோத்குமார், நாயகன் விஜய்வசந்த், இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் என்னமோ நடக்குது படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ” அச்சமின்றி ”  படத்தின் மூலம் இணைகிறார்கள்.முக்கிய வேடத்தில் சமுத்திரகனி  நடிக்கிறார்.

நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ராதாரவி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், பரத்ரெட்டி, நித்தியா, ஜெயகுமார், தலைவாசல் விஜய், ஷண்முக சுந்தரம் மற்றும் குழந்தை நட்சத்திரங்களாக ஹிருதிக், நிகிலா ஸ்ரீ  ஆகியோரும் நடிக்கிறார்கள். கௌரவமான வேடத்தில் ரோகினி நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – A.வெங்கடேஷ்

இசை – பிரேம்ஜி

எடிட்டிங் – பிரவீன்

இணை இயக்கம் – வள்ளிமுத்து

பாடல்கள் –  யுகபாரதி

வசனம் – ராதா கிருஷ்ணன்

கலை – சரவணன்

ஸ்டன்ட் – கணேஷ்குமார்

நடனம் – விஜி சதீஷ்

தயாரிப்பு மேற்பார்வை – சொக்கலிங்கம்

தயாரிப்பு – வி.வினோத்குமார்

கதை, திரைக்கதை, இயக்கம் – P.ராஜபாண்டி

படம் பற்றி இயக்குனர் பி.ராஜாண்டியிடம் கேட்டோம்..

இது கர்ஷியல் கலந்த சமூகத்தை பிரதிபலிக்கின்ற படம். இன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெற்றோர்களுக்கு சமூகத்தின் மீது என்ன அக்கறை இருக்கிறது ? அதே மாதிரி சமூகத்திற்கு மக்கள் மீது என்ன மாதிரியான அக்கறை இருக்கிறது என்பதை பக்கா கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறோம். நிறைய செலவு செய்திருக்கிறோம் என்றார் இயக்குனர் பி.ராஜபாண்டி.

இந்த படத்தின் டீசரை பார்த்து வெகுவாக பாராட்டினார் நடிகர் விஷால் சார். அத்துடன் படத்தின் டீசரை இம்மாதம் 13 ம் தேதி வெளியிடுகிறார்.

அவருக்கும் எங்களது படக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர் நாயகன் விஜய் வசந்தும், தயாரிப்பாளர் வி.வினோத்குமாரும்.

Visit Chennaivision for More Tamil Cinema News

கோஹினூர் வைரம் சம்பந்தமாக முக்தா V. சீனிவாசன் கோரிக்கை

கோஹினூர் வைரம் சம்பந்தமாக முக்தா V. சீனிவாசன் கோரிக்கை

கோஹினூர் வைரம் சம்பந்தமாக முக்தா V. சீனிவாசன் கோரிக்கை

பல கோடி ரூபாய் மதிப்புமிக்க கோஹினூர் வைரம் நம் நாட்டில் ஆந்திரா, கோதாவரி நதிக்கரையில் கண்டெடுக்கப் பட்டது.

அப்போது இந்தியாவை ஆண்ட முகலாய அரசு அந்த வைரத்தைக் கைப்பற்றி தனிடம் வைத்துக்கொண்டது. முகலாய அரசின் முடிவுக்கு பின் நம்மை ஆண்ட ஆங்கிலேயர் அதை கைப்பற்றி தன்னிடம் வைத்துக் கொண்டது. பின் அதை லண்டன் கொண்டுசென்றது.

சமீபத்தில் லண்டன் சென்ற நான் அதை பார்த்தேன். நம்பொருளை மியூசியத்தில் பார்வைப் பொருளாக வைத்திருந்தார்கள் கண்ணீர் வடித்தேன்.

நாடு திரும்பியதும் அப்போது மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்திடம் சொன்னேன் ..அது என் இலாகா இல்லை, வேறு இலாகா பேரை சொன்னார்.

அப்படியே செய்தேன் கடிதம் எழுதினேன். கடிதம் வந்த விபரம் மட்டும் வந்தது. வேறு எதுவும் நடக்க வில்லை.

நான் மறுபடியும் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதினேன். அவர் சம்மந்தப்பட்ட இலாகாவுக்கு அனுப்பி அதன்  மூலம் அங்கிருந்து கடிதம் வந்தது.

நம் மோடி அரசு, இங்கிலாந்து அரசிடம் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திருப்பி தரும்படி சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கடிதம் வந்துள்ளது. இவ்வாறு பட அதிபர் முக்தா V.சீனிவாசன் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

கோ 2 டிரெய்லர்

கோ 2 டிரெய்லர்

இயக்குனர் : சரத்

நடிகர்கள் : பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, பாலா சரவணன், இளவரசு, ஜான் விஜய், கருணாகரன், பரத் ரெட்டி, மயில்சாமி, கிரேன் மனோகர், நாசர், ஷான்

இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

Visit Chennaivision for More Tamil Cinema News

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் 20.03.2016 மாலை சென்னை லயோலா கல்லூரி பெட்ரம் அரங்கில் நடைபெற்றது.

தமிழகமெங்கும் உள்ள நாடக நடிகர்கள்,சினிமா நடிகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் காலமான கலைஞர்கள் மனோரமா,குமரிமுத்து, கலாபவன் மணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொதுக்குழு முதல் நிகழ்வாக ஆண்டறிக்கையை கருணாஸ் வாசித்தார். பொதுவாக ஆண்டறிக்கையை வாசித்தல் என்பது சலிப்பூட்டும் அம்சமாக இருக்கும் ஆனால் அதை உணர்ச்சியூட்டும் உரையாக மாற்றி கருணாஸ் வழங்கினார்.
முதலில் நிகழ்ச்சிக்கான உணவு ஏற்பாடு உதவி செய்த ஹன்சிகாவுக்கும் விழாவின் செலவை ஏற்றிருந்த ஒளிப்பதிவாளர் -நடிகர் நட்டிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது..

1.12.1204முதல் 31.3.2015 வரையிலான ஆண்டறிக்கையை கருணாஸ்  வாசித்தார். கல்வி,மருத்துவம், திருமணம், மற்றும் இறுதிச் சடங்கு உதவி என 7,75,500, வழங்கப் பட்டதைக் கூறினார்.

‘குருதட்சணை’ திட்டம் பற்றி விளக்கித் துணைத்தலைவர் பொன்வண்ணன் உரைஆற்றினார்.அவர் பேசும் போது, ‘ ”குருதட்சணை ‘திட்டம்  என்பது தமிழகமெங்கும் சிதறிக் கிடக்கும் நாடக நடிகர்களைப் பற்றித் தகவல்கள் சேகரித்து ஒருங்கிணைக்கும் திட்டமாகும். செயற்குழு உறுப்பினர்கள் 10 குழுவாகப் பிரிந்து 2500 பேரில் 2050 பேரை பதிவு செய்ய உதவினார்கள். புகைப்படம் ,தகவல், வீடியோ, குரல்பதிவு போன்றவை நாடக நடிகர்களுக்கும் வாய்ப்புகளைத் தேடித்தரும் .இவற்றைத் தொகுத்து டைரக்டரி உருவாக்கப்படும். இணையதளத்திலும் வெளியிடப்படும். தங்களுக்கான நடிகர்களை இயக்குநர்கள் தேடிக்கொள்ள உதவியாக இருக்கும்” என்றார்.

அடுத்து மூத்த கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு. பி.யூ.சின்னப்பாவின் மருமகளுக்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டது. கொல்லங்குடி கருப்பாயி, ஜெமினி ராஜேஸ்வரி, டி.வி சேகர் போன்ற தமிழக மாவட்டங்கள் தோறும் ஒருவர் தேர்வு செய்து  நிதி உதவி வழங்கப் பட்டது.

நடிகர் சங்கத்துக்கான இணையதளத்தை எஸ்.எஸ்.ஆரின் பேரன் பங்கஜ் வடிவமைத்து இலவசமாக வழங்கினார்.

நடிகர் சங்க கட்டட மாதிரி அனிமேஷன் படம் திரையிடப்படது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

கட்டடத்தில் என்னென்ன இருக்கும் என்று அடுத்துப் பேசிய விஷால் விளக்கினார்.

விஷால் பேசும் போது,
”1. பெரிய ஆடிட்டோரியம்.இ து 1000 பேர் அமரும் வசதி கொண்டது.

2. சிறிய திருமண மண்டபம் .இது 300 பேர் அமரும் வசதி கொண்டது.
.
3. பெரிய திருமண மண்டபம் .இது 900 பேர் அமரும் வசதி கொண்டது.
4.  சாப்பிடுமிடம் 400பேர் அமரும் வசதி கொண்டது.
5. பிரிவியூ திரையரங்கம் 150பேர் அமரும் வசதி கொண்டது.
,6. நடிகர் சங்க அலுவலகம் .
7.நடிகர்களுக்கான உடற்பயிற்சிக்கூடம்.இது  2 00 பேர்  கொண்டது.

அடுத்து கார் பார்க்கிங் .இது 165 கார்களுக்கான கார் நிறுத்தமிடம்.

இவ்வளவும் கொண்ட கட்டடமாகக் கட்டப்படும். இதற்கு 26 கோடிரூபாய் செலவாகும். கடன் 2கோடி உள்ளது .இந்தக் கட்டுமானத் தொகையைப் பெற நட்சத்திரக் கிரிக்கெட், விஷால் கார்த்தி இணைத்து நடிக்கும் படம் எடுப்பது போன்ற பல திட்டங்கள் உள்ளன.

சிறிய திருமண மண்டபத்திற்கான மொத செலவை திரு. ஐசரி கணேஷ் அவர்களும் , பிரிவிவ் திரையரங்கத்திற்கான மொத செலவை திரு .சிவகுமார்,சூரியா,
கார்த்தி குடுபத்தினர் ஏற்று கொள்வதாக உறுதி அளித்துள்ளனர்

இவற்றை வாடகைக்கு விடுவதன் மூலம் மாதம் 56 லட்சத்து 20 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 6 கோடியே74 லட்சம் வருமானம் பெறும் திட்டம் உள்ளது.

இதற்காக  ஏப்ரல் 17ல் நட்சத்திரக் கிரிக்கெட் நடத்தவிருக்கிறோம்.

சூப்பர்ஸ்டார் உள்பட பல நட்சத்திரங்கள் நடிக்கும் நாடகம் நடத்தும் திட்டமும் உள்ளது. ”

என்றவர், இன்றுதான் தான் செயலாளராக பதவி ஏற்பதாக உணர்வதாக கூறினார்.

விழாவின் இடையில் கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து ‘ஸ்கைப்’ மூலம் பேசி அனைவருக்கும் வாழ்த்துக்களைக் கூறினார்.

நடிகர் சங்கத்தின் கட்டட மாதிரியை நடிகர் சிவகுமார், வசனகர்த்தா ஆரூர் தாஸ் அகியோர் திறந்து வைத்தனர்.

பொருளாளர் கார்த்தி பேசும் போது ” இது கனவிலும் நினைத்துப் பார்க்காத மேடை இதை என்பெரிய குடும்பமாக உணர்கிறேன். இனி நாடக நடிகர்கள் எதற்கும் யாரிடமும் கை யேந்த விடமாட்டோம். மருத்துவ, கல்வி, ஓய்வூதியத்திட்டங்கள் பலன் தரும். முந்தைய நிர்வாகம் செய்த குளறுபடிகள், தவறுகள் பற்றி புகார் செய்ய இருக்கிறோம். ”என்றார்.

தலைவர் நாசர்பேசும் போது ” இப்படி ஒரு பெரிய மாற்றத்துக்காக எங்கள் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி.

நம்பிக்கையைவிட அன்பு காட்டியது அதிகம். அதற்கும் நன்றி. அவச்சொல். அவதூறு , வாக்குவாதம் இல்லாமல் நடக்கும் முதல் கூட்டம் இது. இப்படிக் கல்யாண வைபவம் போல ஒவ்வொரு கூட்டமும் கொண்டாட்டமாக நடக்கும். எங்களை  நம்புங்கள் அனைவரும் இணைவோம். நல்லதே நடக்கும்.” என்றார். நிகழ்ச்சியில் அறிமுகவுரை மட்டுமல்ல தொகுப்புரை நன்றியுரை எல்லாமும் துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆற்றினார்.

நடிகர் சங்கம் 62 வது பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க புதிய கட்டத்தின் மாதிரி கட்டத்தை  முத்த நடிகர் சிவகுமார் , ஆருர்  தாஸ் ஆகியோர் திறந்து வைத்து சிறப்பித்தனர் .

பொதுகுழுவில் கலந்துகொண்டவர்கள்
தலைவர் –  நாசர்
துணைத்தலைவர்கள் –  பொன்வண்ணன் , கருணாஸ்
பொது செயலாளர் – விஷால்
பொருளாளர் – கார்த்தி

செயற்குழு உறுப்பினர்கள்

ராஜேஷ்,ஜூனியர்.பாலையா,பூச்சிமுருகன்,ராம்கி,பசுபதி,,ஸ்ரீமன்,பிரசன்னா,விக்னேஷ்,T.P.கஜேந்திரன்,கோவை சரளா,நளினி,நிரோஷா,A.L.உதயா,ரமணா,பிரேம் குமார்,நந்தா,பிரகாஷ்,தளபதி தினேஷ்,அயுப்கான்,பாலதண்டபாணி,குட்டி பத்மினி,சிவகாமி,சங்கிதா,சோனியா

நியமன குழு உறுப்பினர்கள்
மனோபாலா
சரவணன்
அஜய் ரத்தினம்
காஜாமொய்தின்
மருதுபாண்டியன்
ஜெரால்டுமில்டன்
வாசுதேவன்
காந்தி
காளிமுத்து
ரெத்தினசபாபதி
சரவணன்
காமராஜர்
ரகுபதி
லிதாகுமாரி
J.K.ரித்தீஷ்
மனோபாலா
ஹேமச்சந்திரன்

கடிடா நியமன குழு உறுபினர்கள்
ஐசரி கணேஷ்
S.V.சேகர்
பூச்சி முருகன்
குட்டி பத்மினி
ராஜேஷ்

பொதுக்குழுவில் கலந்துகொண்ட விருந்தினர்கள்

சூர்யா, வடிவேலு ,செந்தில்,விமல்,  விஷ்ணு ,ஜெயம் ரவி ,சூரி,விஜய் சேதுபதி ,பப்பி சிம்ஹா ,சுந்தர்.C ,K.S.ரவி குமார் ,ஜெயா பிரகாஷ் , R.பாண்டியராஜன் , அசோக் ,ஷாம் , பரத் , ஸ்ரீனிவாசன் (பவர் ஸ்டார்) , சின்னி ஜெயந்த், அப்பு குட்டி ,மோகன் (மைக்) ,சரவணன் ,நாட்டி நடராஜன் , A.L.அழகப்பன் , சங்கர் கணேஷ் , நிழல்கள் ரவி,ரகுமான், வைபோவ், சங்கீத, சுகஷினி, இனியா, ரோகினி, ரேக்கா, சச்சு , சுகன்யா, விஜய் கார்த்திகேயன் , டெல்லி கணேஷ், ஆரி,சோனா.எபி குஞ்சிமோகன், மன்சுருளி காண், ஜகுவார் தங்கம் ,ராமச்சதிரன், R.K.சுரேஷ் ,நித்தின் சத்திய,ரித்திவிகா மற்றும் பலர் .

மேலும் உறுபினர்களாக உள்ள மலையாள நட்கர் நடிகைகள்

ஜோஷ் , சீமா,வனிதா கிரிஸ்ஷ்ணச்சந்திரன், மேனகா சுரேஷ்,ரஞ்சினி, சபித ஆனந்த் ஆகியோரும் கலந்துகொண்டனர்