குற்றம் 23 படத்தின் இசை உரிமையை வாங்கி இருக்கிறது சோனி மியூசிக் நிறுவனம்

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘குற்றம் 23’ படமானது அதன் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல  வரவேற்பை பெற்று வருகிறது.

ஆர்த்தி அருணின்  ‘இன் சினிமாஸ் எண்டர்டைன்மென்ட்’ நிறுவனத்தோடு இணைந்து ‘ரெதான் – தி  சினிமா பீப்பல்’  நிறுவனத்தின் உரிமையாளர் இந்தெர் குமார் தயாரித்து வரும்  இந்த ‘குற்றம் 23’ படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இந்த ‘குற்றம் 23’ படத்தின் இசை உரிமையை தற்போது ‘சோனி மியூசிக்’ நிறுவனம் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. ” நடிப்பிற்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகர் அருண் விஜய் சார். அவருடைய படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குனர் அறிவழகன் சாருக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

உலகின் தலை சிறந்த இசை நிறுவனமான ‘சோனி மியூசிக்’ எங்கள் ‘குற்றம் 23’ படத்தின் இசை உரிமையை வாங்கி இருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது…இந்த (ஆகஸ்ட்) மாதத்தில் வெளியாக இருக்கும் ‘குற்றம் 23′ படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…’ என்று நம்பிக்கையுடன்  கூறுகிறார் ‘குற்றம் 23’ படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.

அருண் விஜய்க்கு ஜோடியாக திரிஷா

அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் கெடிக்கோ க்ரைம் திரில்லராக உருவாகி வரும் ‘குற்றம் 23’ படம் ரசிகர்களிடையே எதிர்ப்பார்பை பெற்றுள்ள நிலையில், மேலும் அதை அதிகரிக்கச் செய்யும் விதத்தில், தற்போது இப்படத்தில் திரிஷாவும் பங்கேற்றுள்ளார்.

அவரது பங்கேற்பு படத்திற்கு உள்ளே அல்ல, படத்திற்கு வெளியே. அதவாது படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் திரிஷா பங்கேற்றுள்ளார்.

‘குற்றம் 23’ படத்தின் இரண்டாம் போஸ்டரை ‘வெற்றிமாறன் ஏ.சி.பி’ என்ற பெயரில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ஆர்த்தி அருணின் ‘இன் சினிமாஸ் என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தோடு இணைந்து ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் உரிமையாளர் இந்தெர் குமார் தயாரித்து இருக்கும் ’குற்றம் 23’ திரைப்படம் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது.

குற்றம் 23 படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டார் நடிகை திரிஷா

அருண் விஜய் நடிக்கும் குற்றம் 23 படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டார் நடிகை திரிஷா

இயக்குனர் அறிவழகன் இயக்கி, அருண் விஜய் நடிப்பில் மெடிக்கோ – கிரைம் – திரில்லராக  உருவாகி வரும் ‘குற்றம் 23’ திரைப்படமானது அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் பெற்று வருகிறது. வலுவான கதை களத்தையும், திறமையான  கலைஞர்களையும் கொண்டு உருவாகியுள்ள குற்றம் 23 படத்தின் இரண்டவாவது போஸ்டரை இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிட்டார் நடிகை திரிஷா.

‘வெற்றிமாறன் ACP’ என்று அழைக்கப்படும் இந்த போஸ்டரை நடிகை திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்த்தி அருணின் ‘இன் சினிமாஸ் என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தோடு இணைந்து ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் உரிமையாளர் இந்தெர் குமார் தயாரித்து இருக்கும் குற்றம் 23 திரைப்படம், அருண் விஜய்யை வேறொரு பரிமாணத்தில் காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அருண் விஜய் அதிரடியாக மிரட்டும் போலீஸ் வேடம்!

”அத்தனை திறமைகள் இருந்தும், பிரேக் வரலையே” என்று சொல்பவர்களின் வாயை அடைத்துவிட்ட அருண் விஜய், தற்போது தொடர் வெற்றி ஹீரோவாக வலம் வரத் தொடங்கிவிட்டார். ‘தடையற தாக்க’ படத்தின் மூலம் பரபரப்பான ஹிட் கொடுத்தவர் தொடர்ந்து ‘வா டீ’ என்ற படத்தின் மூலம் அமர்க்களமான கமர்ஷியல் ஆக்‌ஷன் படத்தை முடித்த கையோடு, இயக்குநர் அறிவழகனுடன் கைகோர்த்துள்ள படம் தான் ‘குற்றம் 23’

க்ரைம் திரில்லர் படமாக உருவாகும் ‘குற்றம் 23’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் அருண் விஜய், “முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறேன். அறிவழகன் சாரின் பரபரப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இந்த படம், எனது வெற்றிப் படங்களின் வரிசையில் ஒரு படமாக இருக்கும். இந்த படத்தில் நடிப்பதுடன், தயாரிக்கவும் செய்திருகிறேன்.

முதல் முறையாக போலீஸ் வேடம் என்பதற்காக தனியாக எந்த விஷயமும் செய்யவில்லை, அறிவழகன் மேற்கொண்ட ஆய்வுகளிலேயே போலீஸ் எப்படி இருக்க வேண்டும், என்பதை முடிவு செய்துவிட்டார். அதேபோல, எனது போலீஸ் ரசிகர் ஒருவர், போலீஸ் சம்மந்தமான சில விஷயங்களை எனக்கு அவ்வபோது சொல்வார். ஆகியவற்றை வைத்து இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

’என்னை அறிந்தால்’ படத்தில் விக்டர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. எங்கு போனாலும், என்னை விக்டர் என்று தான் அழைக்கிறார்கள். ஆனால், இந்த படத்திற்குப் பிறகு என்னை வெற்றி மாறன் என்று அழைப்பார்கள், இந்த படத்தில் எனது கதாபாத்திர பெயர் அது தான். தற்போது எனக்கு வி பேக்டர் நன்றாக வேலை செய்கிறது என்று நினைக்கிறேன்” என்று உற்சாகமுடன் பேசினார் அருண் விஜய்.

இயக்குநர் அறிவழகன் படம் குறித்து பேசுகையில், “மருத்துவம் சம்மந்தமான க்ரைம் கதை தான் ’குற்றம் 23’.மருத்துவம் சார்ந்த க்ரைம் என்பதால், இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ராஜேஷ்குமார் சாரின் நாவல்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டேன். அதில் ஒரு நாவலில் இருந்த கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, அதற்கு நான் திரைக்கதை அமைத்தேன், அந்த திரைக்கதைக்கு ராஜேஸ்குமார் சாரும் பாராட்டு தெரிவித்துவிட்டார்.

நாவல் கரு, எனது திரைக்கதை என்று மட்டும் இல்லாமல், மருத்துவ துறையில் சற்று ஆய்வையும் மேற்கொண்டேன். அதற்காக சில மருத்துவமனைகள், மருத்துவர்களிடம் சில விபரங்களையும் கேட்டு தெரிந்துக்கொண்டு தான் இந்த படத்தை எடுக்க ஆரம்பித்தேன். கமர்ஷியலாக எடுத்தாலும், அதில் உள்ள விஷயங்களின் உண்மைகளை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதை எனது அனைத்து படங்களிலும் கடைபிடித்து வருகிறேன், அப்படிதான் பேய் படமாக இருந்தாலும் ‘ஈரம்’ வித்தியாசமான பேய் படமாக இருக்கும், ‘வல்லினம்’ மாறுபட்ட விளையாட்டு சம்மந்தமான படமாக இருக்கும், ‘ஆறாது சினம்’ படம் ரீமேக்காக இருந்தாலும், ஒரிஜினல் படத்தில் இல்லாத ஒன்றை சேர்த்து சொன்னேன், அப்படித்தான் ‘குற்றம் 23 படமும் இதுவரை வராத வித்தியாசமான மருத்துவ க்ரைம் திரில்லர் படமாக இருக்கும்” என்றார்.

கிராமத்தில் இருந்து சிட்டிக்கு மாறும் மகிமா

‘சாட்டை’, ‘முசக்குட்டி’, ;அகத்தினை’ உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து கிராமத்து பெண்ணாகவே நடித்து வந்த மகிமா, தற்போது சிட்டி பெண் வேடத்திற்கு மாறியுள்ளார். அருண் விஜயை வைத்து அறிவழகன் இயக்கும் ‘குற்றம் 23’ படத்தில் தான் மகிமா சிட்டி பெண் வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில், தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மகிமா நம்பியார், இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின்  எதிர்பார்ப்புகளையும், ரசனைகளையும் பூர்த்தி செய்து, அவர்களின் உள்ளங்களில் நீங்கா இடத்தை பிடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார் மகிமா நம்பியார்.

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தை ரேதான் தி சினிமா பீபள்நிறுவனத்தை சேர்ந்த இந்தர் குமார் உடன் இணைந்து  இன் சினிமாஸ் என்டர்டைன்மன்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆரத்தி அருண் தயாரித்து வருகிறார்.

கிராமத்தில் இருந்து சிட்டிக்கு மாறும் மகிமா

கிராமத்தில் இருந்து சிட்டிக்கு மாறும் மகிமா

 

இந்த ’குற்றம் 23’ திரைப்படம் தனது கலைப்பயணத்திற்கு அமைந்த ஒரு சிறந்த தூண் எனவும், தமிழ் சினிமாவில் தன்னுடைய நிலையை ஒரு படி மேலே எடுத்து செல்லும் படமாகவும் அமையும் என்கிறார் மகிமா. “முதன் முதலில் எனக்கு அறிவழகன் சார் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததும், நான் சற்றே படப்படப்பானேன். அதன் பின்பு காலையில் எனக்கு நடைபெற்ற நடிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, அன்று மாலையே  படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன். முதன் முதலில் அருண் விஜய் சாருடன் நடிக்க போகிறோம் என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது, ஆனால் அவரின் சுமுகமானா பண்பும், நட்பு ரீதியாக பழகும் அவரின் இயல்பும் என்னை அந்த பயத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நான் அவரின் நடிப்பிற்கு தீவர ரசிகையாகி விட்டேன் என்பது தான் உண்மை. அது மட்டுமின்றி தடையற தாக்க படத்தில் அவரின் திறம்பட நடிப்பையும், அற்புதமான நடனத்தையும், அதிரடியான சண்டை காட்சிகளையும் கண்டு நான் பல முறை வியந்தது உண்டு.” என்கிறார் மகிமா.

இதுவரை கிராமிய கதாப்பாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த மகிமா, இந்த திரைப்படத்தில் சிட்டி பெண்ணாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. “பொதுவாகவே தனது படங்களில் கதாநாயகிகளை   மிக அழகாக சித்தரிக்கும் தனித்துவமான ஆற்றலை  படைத்தவர் இயக்குனர் அறிவழகன். அந்த வகையில் இந்த படம் எனக்கு கிடைத்த ஒரு அறிய பொக்கிஷம். என்னுடைய தென்றல் கதாப்பாத்திரத்தை நான் அதிக அளவில் காதலிப்பது மட்டுமில்லாமல் அந்த வேடத்தின் உயிராகவே நான் மாறியுள்ளேன்” என்கிறார் அழகும் அறிவும் ஒருங்கே இணைந்த மகிமா நம்பியார். மக்களின் அதிக எதிர்ப்பார்ப்பை பெற்று இருக்கும் இந்த திரைப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருப்பது குறிப்பிடதக்கது.

Visit Chennaivision for More Tamil Cinema News

நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன் சுஜா வருணி

ரம்யா கிருஷ்ணன் வழி என் வழி!-சுஜா வருணி

அண்மையில் வெளியாகியுள்ள ‘பென்சில்’ படத்தில் ஜீ.வி. பிரகாஷ்– ஸ்ரீதிவ்யா படிக்கும் பள்ளியில் ஆசிரியை வேடத்தில் வந்து அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளவர் சுஜா வருணி.

இவருக்கு வசீகரமுகமும் நடிப்புத்திறனும் இருந்தும் இன்னும் ராமனின் கால் பட அகலிகை கல்லாகக் காத்திருந்தது     போல நல்ல வாய்ப்புக்காக பொறுமையாகக் காத்திருக்கிறார்.

நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன் சுஜா வருணி

நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன் சுஜா வருணி

சுஜா வருணி இது பற்றிக் கூறும் போது  ” எனக்குப் புலம்பும் எண்ணமும் இல்லை.ஆதங்கமும் இல்லை. மற்றவர் வளர்ச்சியைப்  பார்த்துப் பொறாமைப் படும் குணமும் எனக்கு இல்லை.

நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்து இருக்கிறேன். வருகிற வாய்ப்புக்கு முழு அர்ப்பணிப்பு தர நான் தயாராக இருக்கிறேன். ‘பென்சில்’ படத்தில் நான் கதாநாயகி இல்லை என்றாலும் படம் முழுக்க வருவேன். கதையில் சஸ்பென்ஸ் முடிச்சில் என் கேரக்டர் இருக்கும். அதைப் பார்த்த பலரும் என்னிடம் அன்புடன் விசாரித்துப் பேசுகிறார்கள்.

என் சமூக வலைதளங்களில் தினமும் 200 பேராவது என் இன்பாக்ஸில் வந்து கருத்து சொல்கின்றனர். உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

நண்பர்களும் அக்கம் பக்கம் உள்ளவர்களும் உறவினர்களும் பாராட்டுகின்றனர்.” என்கிறார்.

இப்போது சுஜா நடித்து வரும் படங்கள் பற்றி என்ன கூறுகிறார்?

” அருண் விஜய்யுடன் ‘வாடீல்’ சசிகுமாரின் ‘கிடாரி’ மற்றும் ‘சதுரம்-2’ படங்களில் நடித்து வருகிறேன்.

‘பென்சில்’ படம் பார்த்து இரண்டு புதிய படவாய்ப்புகள் வந்திருக்கின்றன.

இதில் எல்லாமே பெயர் சொல்லும்படி, அடையாளம் கிடைக்கும்படியான கேரக்டர்கள் தான். ஆனால் அது பற்றி எதுவுமே வெளியில் சொல்லக் கூடாது என்று ஒப்பந்தமே போட்டுள்ளார்கள் .என்னால் ஒரே கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்க முடியாது. எனக்கும் போரடிக்கும். பார்ப்பவர்களுக்கும் போரடிக்கும்,திகட்டும். .

ஹாரர் படங்களில் ,சைக்கோத்தனமான கேரக்டர்களில்,மனநிலை பிறழ்ந்த கேரக்டர்களில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். நெகடிவ் ரோல்களில் கூட நடிக்க நான் தயார்.” என்றவரிடம் அப்படி யென்றால் கதாநாயகியாக நடிக்க ஆசை,ஆர்வம் இல்லையா? எனக் கேட்ட போது,

” கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க மறுக்க நான் முட்டாள் அல்ல. அதே நேரம் போஸ்டரில் படம் போட்டால் மட்டுமே லீடு ரோல் என்பது அல்ல. என்னிடம் சுஜா நீ ஏன் லீடுரோல் எடுக்கக் கூடாது என்கிற கேள்வி அடிக்கடி கேட்கப் படுகிறது. படத்தில் முக்கியமாக சஸ்பென்ஸாக இருப்பதும் கூட  ‘லீடு ரோல்’ என ஏற்க வேண்டியதுதான்.

சினிமா இப்போது மாறியிருக்கிறது. இப்போது கதாநாயகியை மையப்படுத்திய படங்களை விட குணச்சித்திரங்களை மையப்படுத்திய படங்கள் நிறைய வருகின்றன. படத்தை ‘லீடு’ செய்பவை இப்போது இப்படிப்பட்டவைதான்  அப்படிப்பட்ட குணச்சித்திரமாகவும் நடிக்க ஆசை.”

அவ்வப்போது விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறேன். அடுத்த படியேற ஆசை .அது மட்டுமல்ல பெயர் சொல்லும் கேரக்டர் செய்யவும் தயார்.” என்கிறார்.

சுஜாவின் இளமை,தோற்றம்,  நடிப்புக்கு ஏன் இன்னமும் தடை தாண்டி  சிரமத்துடன் போராடி ஓடும் நிலை உள்ளது ?

” சினிமாவில் சில விஷயங்கள் எனக்குப் புரிவதில்லை. எனக்குச் சரியான வழிகாட்டல் இல்லை. வழிகாட்ட எடுத்துச் சொல்ல சரியான ஆட்கள் இல்லை.சினிமாவில் எங்கு என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை. அடுத்த தாக , நேரம் என்று ஒன்று வர வேண்டும். அது முக்கியம் .அடுத்து திறமையும் வேண்டும்.

நான் இதுபற்றி வருந்துவதைவிட முயற்சியை கடின உழைப்பை போடுவோம். அதற்குப் பலன் உண்டு. என்பதை உணர்ந்திருக்கிறேன். இப்படியே என் பயணம் இருக்கிறது. முன்னே ஓடுபவரைப் பார்த்து பொறாமைப் பட்டாலும் பின்னே ஓடி வருபவரைப் பார்த்து கவலைப்பட்டாலும் என் ஓட்டத்தை கவனிக்க முடியாது. எனக்கு என் ஓட்டம் முக்கியம். ” என்கிறவர் ,தன் ரோல் மாடல்  நடிகை ரம்யா கிருஷ்ணன்தான் என்கிறார்.

” அவர் இன்று எத்தனை பேருடன் நடித்தாலும் தனித்து தன்னை வெளிப்படுத்தி விடுவார். அவருக்கு தனித்த அடையாளம் கிடைத்திருக்கிறது. பாசிடிவ், நெகடிவ் ,டான்ஸ், வெஸ்டர்ன்  என எல்லாவற்றிலும் பெயர் வாங்கி விடுவார். இந்த இடம் அவருக்குச் எளிதாக கிடைக்கவில்லை. போராடித்தான் பெற்றிருக்கிறார். அவர்தான் எனக்கு முன் மாதிரி. அவர் இடத்தை பிடிக்க முடியுமோ முடியாதோ அவர் நிழலையாவது பிடிப்பேன்.”

யதார்த்தமும் நம்பிக்கையும் சுஜாவின்  பேச்சில் தென்படுகின்றன.

Visit Chennaivision for More Tamil Cinema News

‘வா’ உங்களில் ஒருவன்

 

விலங்குகளில் குள்ள நரியைத் தான் தந்திரத்துக்கு உதாரணம் சொல்வார்கள். அந்த குள்ள நரிகளுக்கு கூட தான் வளர்த்த பிள்ளைகள் மீது மட்டும் பாசம் இருக்கும். ஏமாற்றாது. ஆனால் மனிதர்களில் தன்னால் வளர்க்கப்பட்ட சிஷ்யனின் வயிற்றில் ஏமாற்றி அடிக்கும் குள்ள நரிகள் இருக்கிறார்கள் என்பதையே ‘வா’ பட பிரச்னை காட்டுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வா என்றொரு படம் ஆரம்பிக்கப்பட்ட போது அருண்விஜய்யை சீந்த கூட ஆள் இல்லை. அப்போது முதல் அந்த படத்துக்கு பிஆர்.ஓ வாக உழைத்தவர் கோபி. எத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் போராடி விகடனிலும், குமுதத்திலும் பேட்டி வரவைத்தார் என்பதும் சினிமா பத்திரிகையாளர்களுக்கு நன்றாக தெரியும்.

இத்தனை கஷ்டப்பட்டவரின் உழைப்பை சுரண்டி கடைசி நேரத்தில் படத்தை தட்டி பறித்திருக்கிறார் அவரது முன்னாள் குரு. இதற்கு முன்னணி பி.ஆர்.ஓக்கள் சிலர் துணை வேறு. சினிமாவில் ஒருவன் வளர்வதை தடுப்பது என்பது சகஜம் தான். ஆனால் அதில் ஒரு தர்மம் வேண்டாமா? இரண்டரை ஆண்டுகள் நாயாய் கஷ்டப்பட்டவன் வெளியில் நிற்க, தந்திரத்தால் பிடுங்கிய குள்ள நரி மேடையில் கைகோர்த்து நிற்கிறது. சினிமாக்காரர்களுக்கு தான் அறிவில்லை. நம்மை போன்ற பத்திரிகையாளர்களுக்குமா?
கோபியிடம் இருந்து பிடுங்கியவர்கள் நிகழ்ச்சியை நடத்திய லட்சணம் அங்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றாக தெரியும். மூன்று மணிக்கு நிகழ்ச்சி என அறிவித்துவிட்டு 5.23 க்கு தான் தொடங்கினார்கள். இத்தனைக்கும் அதற்கு முந்தைய நிகழ்ச்சி 2.30க்கே முடிந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் என்றால் அத்தனை கேவலமா?
இப்படிக்கு உங்களில் ஒருவன்
நடிகர் பரத், ஜெஸ்லி திருமண வரவேற்பு நிகழ்ச்சி

நடிகர் பரத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (14.09.2013) அன்று சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

விழாவில் திமுக தலைவர் டாக்டர் மூ.கருணாநிதி கலந்து கொண்டு வாழ்த்தினார்  மற்றும் தேமுதிக தலைவர்  விஜயகாந்த். எல்.கே.சுதீஷ்,பார்த்தசாரதி.எம்.எல்.எ,மா.சுப்ரமணியம்,ஜே.கே.ரிதீஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

திரைப்பட நடிகர்,நடிகைகள்,இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டு  மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர், நடிகைகள் ;   நடிகர் ராஜ்கிரண், சூர்யா,சத்யராஜ்,அர்ஜுன்,செந்தில்,சிம்பு,டி.ஆர்,ஆர்யா,ராதாரவி,பார்தீபன்,எஸ்.வி.சேகர், அஷ்வின் சேகர், விமல் , சிவகார்த்திகேயன்,விவேக்,பாண்டியராஜன்,நடிகர் விஜயின் மனைவி சங்கீதா,விஜய் ஆண்டனி,செல்முருகன்,போஸ் வெங்கட்,சாந்தனு,நடிகர் ஜீவாவின் மனைவி,விக்ரம்பிரபு,அருண்விஜய்,மோகன்,நகுல்,துஷ்யந்த்,ஸ்ரீமன்,ரமேஷ்கண்ணா,நரேன், சோனா, எம்.எஸ்.பாஸ்கர்,பசுபதி,சுஹாசினி,தியாகராஜன்,சக்தி ,குஷ்பு,மும்தாஜ்,சரண்யா பொன்வண்ணன்,உதயா,நடிகர் சரத்குமார் மகன் ராகுல் அஷ்வின் ஆகியோரும்

தயாரிப்பாளர்கள் …..

ஏ.வி.எம்.சரவணன்,ஆர்.பி.சௌத்ரி.கே.ஆர்,ஏ.எல்.அழகப்பன்,ரமேஷ்,சையது,பி.எல்.தேனப்பன்,ஜின்னா,டி.ஜி.தியாகராஜன்,எச்.முரளி,சித்ராலக்ஷ்மணன்,கே.எஸ்.சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன், ஆபாவாணன்,ஏ.எம்.ரத்னம்,புஷ்பாகந்தசாமி,கே.எஸ்.சாமிநாதன்,முரளிதரன்,பஞ்சுசுப்பு, அபிராமிராமநாதன், திரு, கலைப்புலி எஸ்.தாணு,பாஸ்கர்,ருக்மாங்கதன்,எஸ்கேப் ஆர்டிஸ்ட் பி.மதன்,ஜேம்ஸ்,பட்டியல் சேகர்,ஸ்டுடியோ9 சுரேஷ் ஆகியோர்களும்…

இயக்குனர்கள் ……..

கே.பாலசந்தர்,ஷங்கர்,அமீர்,கே.எஸ்.ரவிக்குமார்,விக்ரமன்,ஆர்.வி.உதயகுமார்,மணிரத்னம், பாக்யராஜ்,கே.வி.ஆனந்த்,ஆர்.கே.செல்வமணி,எஸ்.எஸ்.ஸ்டேன்லி,ஷக்திசிதம்பரம்,பத்ரி,காந்திகிருஷ்ணா,ஹோசிமின்,ஹரிஆர்.கண்ணன்,துறை,திருமுருகன்,ஏ.எல்.விஜய்,ஜி.என்.ஆர்.குமரவேலன், எம்.ராஜா,வெற்றிமாறன் வி.பிரபாகர்,சுந்தர்.சி,எஸ்.ஜெ.சூர்யா,ஈ.ராமதாஸ்,சண்முகசுந்தரம் ஆகியோரும் ……..

தொழில்நுட்ப கலைஞர்கள்……காதல் கந்தாஸ்,கலா மாஸ்டர்,கே.எஸ்.செல்வராஜ்,ராஜசேகர்,ஸ்ரீதர்மாஸ்டர்,அசோக் ராஜா மாஸ்டர்,தொழிலதிபர் பின்னிமில் ஷண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பரத்தின் பெற்றோர்களும் ஜெஸ்லியின் பெற்றோர்களும் பரத்தின் மேனேஜர் பழனிகுமார்,செல்வா ,அனூப்குமார் மற்றும் டைமன்பாபு,சிங்காரவேலு,மௌனம்ரவி,ரியாஸ் ஆகியோர் வரவேற்றனர்.

தயாரிப்பாளர் காரை பரிசாக பெற்ற இயக்குனர்

தயாரிப்பாளர் காரை பரிசாக பெற்ற இயக்குனர்

தயாரிப்பாளர் காரை பரிசாக பெற்ற இயக்குனர்

எம்.சுசில்மோகன் மற்றும் எம்.ஹேமந்த் தயாரிக்கும்  “டீல்”  இப்படத்தில்  அருண்விஜய் ,கார்த்திகா மற்றும் சுஜவாருணி, மெரினா சதீஷ், dance மாஸ்டர் கல்யாண், வம்சி, ஜெயபிரகாஷ், ரேணுகா பலர் நடிக்கின்றனர்.இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.சிவஞானம் இயக்குகிறார்.

 முதல் 18 நாட்களில் எடுத்த சீன்களை எடிட்செய்து பார்த்த தயாரிப்பாளர் ஹேமந்த், அவருடைய காரை இயக்குனர் சிவனனத்திற்கு பரிசாக கொடுத்துள்ளார். எதிர்பாராத பரிசால் இயக்குனர் மெய்சிளிர்த்துப்போனார்.

 பர பரப்பாக நடந்துக்கொண்டிருக்கும் படப்பிடிப்பு இதுவரை 60 சதவிதம் முடிந்துள்ளது.  அனைவருக்கும் “டீல்” டீமின் இனிய புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள் !
இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த பேரரசு

இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த பேரரசுமசாலா படங்களுக்கு பேர்போனவரான இயக்குநர் பேரரசு, இயக்கத்துடன் பாடல்களும் எழுதி வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார். பரத், சுனைனாவை வைத்து ‘திருத்தணி’ படத்தை இயக்கியிருக்கும் பேரரசு, அப்படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார்.

‘திருத்தணி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 19) சென்னை, கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் பன்னீர் செல்வம், நடிகர்கள் அருண் விஜய், அசோக், இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஜெயம் ராஜா, ஜி.கிச்சா, ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஜெ.சூர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

திரையிடப்பட்ட பாடல்கள் அனைத்துமே அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சியில் பேசியவர்கள் அனைவரும் “கமர்ஷியல் படம் எடுப்பது என்பது ரொம்ப கஷ்ட்டமான விஷயம். அதை மிகச் சரியாக செய்பவர் இயக்குநர் பேரரசு. கமர்ஷியல் படம் எடுப்பவர்கள் அனைவருமே பேரரசு படத்தை தொடாமல் எடுக்க முடியாது. அந்த அளவுக்கு ஒரு நிலையான இடத்தை அவர் பிடித்திருக்கிறார்.” என்று கூறினார்கள்.

எஸ்.ஜெ.சூர்யா பேசுகையில், “மனித அவதாரம் எடுத்த கடவுள் ராமனுக்கு வாழ்க்கையில் 14 வருடம் இடைவெளி வந்துதது. அதுபோலதான் பேரரசு சாருக்கு ஒரு இடைவெளி. புத்திசாலிகள் இடைவெளியை பயன்படுத்தி கொண்டு புத்துணர்ச்சியுடன் திரும்பி வருவார்கள். முட்டாள்கள் தான் கவலைப்படுவார்கள். பேரரசு சார் புத்திசாலி, ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் ‘திருத்தணி’ படத்தின் மூலம் புத்துணர்ச்சி பெற்று வந்திருக்கிறார்.” என்றார்.