நல்ல திட்டங்களை பயன்படுத்த பா.ஜ.க, போட்டி: தமிழிசை சௌந்தரராஜன்

விவசாயிகளின் நலன் கருதி பா.ஜ., 3 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் காலியாக உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கி, நேற்று முதல் நடந்து வருகிறது. நவம்பர் 2ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. இதுவரை அதிமுக, திமுக, பாமக ஆகிய கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து, பிரசாரத்தை துவக்கி உள்ளன. இந்நிலையில் பா.ஜ., வேட்பாளர் பட்டியmf விரைவில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், 3 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியல் இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும். விவசாயிகளின் நலன் கருதியே 3 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது என தெரிவித்தார்.

அரவக்குறிச்சியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கும் செந்தில் பாலாஜியும், கே.சி.பழனிசாமியும் காரணம்!

தமிழக சட்டசபைக்கு கடந்த மே 16-ந் தேதி தேர்தல் நடந்தது. அரவக்குறிச்சி சட்ட சபை தொகுதியில் அ.தி. மு.க. சார்பில் செந்தில் பாலாஜியும், தி.மு.க. சார்பில் கே.சி.பழனிசாமியும் போட்டியிட்டனர். இந்த 2 வேட்பாளர்களும் தேர்தலின்போது ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டனர். ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம், வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்களை வாரி வழங்கினர்.

இதனால் கே.சி.பழனி சாமியின் மகன் வீட்டிலும், கரூரில் உள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த அன்புநாதன் என் பவர் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி பெரும் தொகையை பறிமுதல் செய்தனர். பெரிய அள வில் முறைகேடுகள் நடந் ததால், அவரக்குறிச்சி தொகுதிக்கு நடைபெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் அரவக் குறிச்சி தொகுதிக்கு வருகிற நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. இதனையடுத்து 232 தொகுதிகளில் மட்டுமே சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. திமுக 89 இடங்களில் வென்று வலுவான எதிர்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்தது.

இந்த தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜியும், தி.மு.க. சார்பில் கே.சி.பழனி சாமியும் மீண்டும் போட்டியிடவுள்ளனர். இது தொடர்பாக ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனு வை விசாரித்த நீதிபதிகள், ‘ஏற்கனவே அரவக்குறிச்சி தொகுதியில்  தேர்தல் ரத்து செய்யப் பட்டது தொடர்பான வழக்கு வருகிற நவம்பர் 9-ந் தேதி எங்கள் முன்பு விசாரணைக்கு வருகிறது.

அந்த வழக்குடன், இந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதற்கு முன்பாக இந்த வழக்கிற்கு இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, அரவக்குறிச்சி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி, தி.மு.க. வேட் பாளர் கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். இதற்காக அனைவருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தர விடுகிறோம்’ என்று உத்தர விட்டுள்ளனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உணவு உண்கிறார்: பொன்னையன்

உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ந் தேதி அனுமதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இன்று  30-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றனர். புறப்படும் முன்பு, இங்குள்ள டாக்டர்கள் குழுவிடம், ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகளை தொடர வேண்டும் என்பது குறித்தும் பட்டியலிட்டு கொடுத்துள்ளனர்.

அதன்படி, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள சீமா, மேரி ஆகிய 2 பெண் பிசியோதெரபி நிபுணர்களும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சிகிச்சையும் அவருக்கு நல்ல பலனளித்து வருகிறது. இந்த நிலையில், முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்னையன் கூறியதாவது:- “ இறைவன் அருளாலும் மருத்துவர்களின் அற்புதமான சிகிச்சையாலும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தனக்கு தேவையான உணவை தாமே அருந்தும் அளவுக்கு ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் தற்போது முதல் அமைச்சர் ஜெயலலிதா ஓய்வு எடுத்து வருகிறார்” இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அதிமுக வேட்பாளராக களமிறங்கும் சசிகலா?

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக சசிகலா நடராஜன் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல் அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது. தற்போது முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அதன் காரணமாக, சசிகலாவை சட்டமன்ற உறுப்பினராக்கி, அதிமுக தலைமை பதவிக்கு அமர்த்த ஜெயலலிதா முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிக அளவில் பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் தேர்தலை தள்ளி வைத்தது.

மேலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக எம்எ.ல்.ஏ. சீனிவேல் உடல்நலக் குறைவால் காலமானார். எம்.எல்.ஏ. பதவி ஏற்பதற்கு முன்னதாகவே அவர் இறந்த காரணத்தால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளது. ஆகவே காலியாக உள்ள மூன்று தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கான தேர்தல் திகதி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியல் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கிவுள்ளது.

அக்டோபர் 17 ஆம் தேதி அதிமுக கட்சியின் 45 வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அதிமுக-வை தொடங்கி 44 ஆண்டுகள் முடிவடைந்து, வரும் அக்டோபர் 17 ஆம் தேதி 45 வது ஆண்டு தொடங்குகிறது. இது குறித்து தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி 44 ஆண்டுகள் நிறைவடைந்து, 17- ஆம் தேதி 45-வது ஆண்டு தொடங்குகிறது.

இதை முன்னிட்டு அன்று காலை 10 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டை, தலைமைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆருடைய சிலைக்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்து, கழகக் கொடியினை ஏற்றி வைத்து ‘தொடக்க நாள் மலரை’ வெளியிட உள்ளார்.

நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன் பிறப்புகளும் கலந்து கொள்வார்கள்.

சூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி: நமீதா

ஹீரோக்கள் தான் உடலை இளைக்கவும் ஏற்றவும் ரிஸ்க் எடுப்பார்கள். ஹீரோயின்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள் என்ற எழுதப்படாத விதியை சமீபகாலமாக இந்திய நடிகைகள் உடைத்துவருகிறார்கள். அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின்

மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் நடிகை நமீதா கடந்த ஆண்டு தனது ரீ எண்ட்ரிக்காக  சுமார் 20 கிலோ அளவுக்கு தனது உடலை இளைத்து ஆச்சர்யப்படுத்தினார். ’இனி படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்’ என்று சொன்னவர் தேர்வு செய்து நடித்த படம் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ”புலிமுருகன்”.

நேற்று வெளியான ”புலிமுருகன்”இதுவரை மலையாள திரையுலகமே பார்த்திராத வகையில் மிகப்பெரிய வெற்றிப்படமாகி உள்ளது. தனது ரீ எண்ட்ரி படம் தான் நினைத்தது போலவே அமைந்த உற்சாகத்தில் இருந்த நமீதாவிடம் பேசினோம்.”

புலிமுருகன்”படம் பற்றி… கடந்த ஆண்டு ரீ எண்ட்ரிக்காக கதைகள் கேட்டபோது இந்த படத்தின் இயக்குனரிடமும் கேட்டேன்.  நம் தென்னிந்திய மொழிகளில் இதுவரை வந்திராத அளவுக்கு அட்வென்சர் வகை கதையாக இருந்தது. மிகவும் வித்தியாசமான இந்தக் கதையை எப்படி எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமானது. படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ஜுலி. ஒரு பணக்கார குடும்பத்தில் இருப்பவள்.

புலிமுருகனின் குணத்தைப் பார்த்து அவர்மீது காதல்வயப்படும் கேரக்டர். படம் முழுக்கவே புலிமுருகனுடனேயே இருந்து அவருக்கு ஆதரவாக இருக்கும் வேடம். ஒரு சூப்பர்ஸ்டார் படத்தில் இடம் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா? உடனே ஓகே சொல்லிவிட்டேன்.

பொதுவாக மலையாள படங்கள் என்றாலே குறைவான பட்ஜெட்டில் தான் எடுப்பார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இந்த படம் சுமார் 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. நான் எப்போதுமே பட்ஜெட், ஹீரோ ஆகியவற்றை பார்ப்பவள் இல்லை. ஆனால் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது சந்தோஷமாகத் தான் இருக்கிறது.

மோகன்லாலுடன் நடித்த அனுபவம்…

அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது நமக்கு தெரியும். ஆனால் நமக்கு அதிகம் தெரியாத அவரது இன்னொரு முகம் இண்டெலெக்சுவல். ஆமாம், அத்தனை புத்தகங்கள் படிக்கிறார். அவரது வாசிப்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது. புலிமுருகன் கேரக்டரில் மோகன்லால் தவிர வேறு ஒருவரை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த பாத்திரமாகவே மாறினார். படப்பிடிப்பில் திடீரென்று ஒரு ஆசை வந்தது. அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும். கேட்டவுடனேயே ஓ… தாராளமா… என்று எடுத்துக்கொண்டார். அந்த படம் அத்தனை பெரிய வைரலாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

நீங்கள் பிராணிகளை அதிகம் நேசிப்பவர். உங்களுக்கு இந்த படம் அமைந்தது தற்செயலானதா?

ஆமாம். என் வீட்டில் நான் இப்போது மூன்று

சிட்சு வகை நாய்க்குட்டிகளை வளர்க்கிறேன். அவை நாய்கள் அல்ல, என் குழந்தைகள். என் குடும்பத்தில் அவர்களும் இணைந்துவிட்டார்கள். இந்த கதை சொல்லும்போது ஆரம்பத்தில் இது வேட்டை கதை போல உள்ளதே என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் போக போக வன விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தும் ஒரு படம் என்பது புரிந்தது.

அரசியல் சினிமா இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?

ஏன் இதில் என்ன கஷ்டம்? இரண்டும் வேறு வேறு. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சத்தமில்லாமல் செய்துகொண்டும் இருக்கிறேன். அதற்காக மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சியான அதிமுகவில் இணைந்தேன். அதற்கும் சினிமாவுக்கும் தொடர்பு இல்லை.

பரத்துடன்  நடிக்கும் ”பொட்டு” படம் அல்மோஸ்ட் ஓவர். ஜானி என்பவர் சொன்ன கதை நன்றாக உள்ளது. அடுத்த நகர்வுக்கு காத்திருக்கிறேன்.

இன்னும் சில படங்களின் அறிவிப்பும் வரும். மலையாளம் போலவே தமிழ், தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன்.

முதல்வர் உடல்நலம் பற்றி…

மாண்புமிகு அம்மா அவர்கள் இதற்கு முன்பு எத்தனையோ சோதனைகளை தாண்டி வந்திருக்கிறார். அம்மாவுக்கு கடவுளின் ஆசி எப்போதுமே உண்டு. இத்தனை கோடி மக்கள் அம்மாவுக்காக பிரார்த்திக்கிறோம். அவர்கள் மீண்டு வருவார்கள் என தீர்க்கமாக சொல்லி முடித்தார் நமீதா.

சென்னை மேயர் சைதை துரைசாமி வீட்டில் வருமானவரி சோதனை!

சென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரது வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் 40 இடங்களில் இன்று வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சென்னை, மதுரை, கோவை, நெல்லை,  திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள 40 இடங்களில் பல்வேறு நிறுவனங்கள், நகைக் கடைகள், வீடுகள், அலுவலகங்கள் என ஏராளமான இடங்களில் வரிமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதில் சென்னையின் பிரபல வைர வியாபாரியான கிரித்திலாலுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுகிறது. அதேபோல முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமான இடங்களிலும், மேயர் சைதை துரைசாமி வீட்டிலும் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மேயர் சைதை துரைசாமி வீட்டு பகுதியில் பத்திரிகையாளர்கள் கூடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எம்.பி பதவியை ராஜினாமா செய்கிறார் அதிமுக வேட்பாளர் சசிகலா புஷ்பா: கார்டன் உத்தரவு

திமுக எம்.பி. திருச்சி சிவா மற்றும் அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில், டெல்லி விமான நிலையத்தில் எம்.பி திருச்சி சிவாவை, சசிகலா புஷ்பா அறைந்த விவகரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சசிகலா புஷ்பா. தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், என்று கார்டன் தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து, இன்று தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சசிகலா புஷ்பா கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணல் கடத்தல் விவகாரம்: அதிமுக பிரமுகர் உட்பட 15 பேர் கைது

மணல் கடத்தல் லாரியை பறிமுதல் செய்ய முயன்ற காவல் ஆய்வாளரை தாக்கிய புகாரில் அதிமுக பிரமுகர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: வேலூர் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் பாண்டி நேற்று முன்தினம் இரவு பெருமுகை அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி நிற்காமல் பெருமுகை பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்துக்குள் லாரி நுழைந்தது.

மணல் கடத்தல் வாகனத்தை பறிமுதல் செய்ய வந்திருப்பதாகக் கூறி ஆய்வாளர் கல்லூரிக்குள் நுழைந்தார். இதைக்கண்ட லாரி ஓட்டுநர் தப்பியோடினார். இதையடுத்து, ஆய்வாளர் பாண்டி லாரியை பறிமுதல் செய்ய முயன்றபோது, அவருடன் கல்லூரி தாளாளரும் அதிமுக பிரமுகரு மான ஜி.ஜி.ரவி தகராறில் ஈடுபட்ட தாக தெரிகிறது. எனினும், லாரியை பறிமுதல் செய்ய ஆய்வாளர் பாண்டி முயன்றதால், அவரை ஜி.ஜி.ரவியும் அவரது ஆட்களும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆய்வாளரையும், ஜீப் ஓட்டுநரையும் சிறைபிடித்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து, காவல் ஆய்வாளர் பாண்டி, ‘வாக்கி டாக்கி’ மூலம், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பன்னீர் செல்வம், போக்குவரத்து ஆய்வா ளர் சீதாராமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் மீட்டனர். தாக்குதலுக்கு ஆளான ஆய்வாளர் பாண்டி, வேலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், 134 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்து, ஜெயலலிதா முதல்வரானாலும், அவர் நினைத்த வெற்றி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 190 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று எதிர்ப்பார்த்த ஜெயலலிதாவுக்கு 134 என்பது பெரும் ஏமாற்றத்தை அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு எதிராகவே, சில அதிமுக நிர்வாகிகள் செயல்பட்டதாகவும், அதனாலயே, அதிகுக-வின் தொகுதிகள் சில கை நழுவி போனதாகவும், ஜெயலலிதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், வெற்றிக்கு பாடுபட்டும் உழைத்தவர்கள் குறித்து பட்டியல் ஒன்றை தயாரித்துள்ள முதல் ஜெயலலிதா, வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

தற்போது, வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும் வெற்றியை பெற வேண்டும், நிர்வாகிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதுடன், உள்ளாட்சி தேர்தலில் போதிய வெற்றி பெறவில்லை என்றாலும், நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.