2014ஆம் ஆண்டு பொங்கல் தல பொங்கல்

அடுத்த வருடத்தின் ஆரம்பமே அஜீத் குமாரின் ரசிகர்களுக்கு கோலாகலமான வருடமாக இருக்கும் . விஜயா productions  சார்பில் சிவா இயக்கத்தில் அஜீத் குமார்  ஜோடியாக தமன்னா ஜோடியாக நடிக்கும் பெயரிடபடாத  படத்தின் படப்பிடிப்பு பெரும் பகுதி முடிவடைந்தது. தயாரிப்பாளர்கள் வேங்கடரம ரெட்டி , பாரதி ரெட்டி ஆகியோர் இன்று இப்படத்தை பற்றி வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் இயக்குனர் சிவாவின் வேகமும் திட்டமிடுதலும் அஜீத் குமாரின் ஒத்துழைப்பும் இப்படத்தை நாங்கள் திட்டமிட்டதை போலவே  அடுத்த பொங்கலுக்கு வெளியிட முடியும் என நம்பிக்கையுடன் உள்ளதாக குறிப்பிட்டனர்.
50%  படம் முடிவடைந்த நிலையில் சுவிட்சர் லேன்ட்  நாட்டின் பெரும் பகுதிகளில் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைப்பில் இரு  இனிமையான பாடல்கள் தினேஷ் மாஸ்டரின் நடனம் அமைப்பில் அஜீத் , தமன்னா  ஜோடியுடன் படமாக்கப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது  அஜீத் குமார் படப்பிடிப்பில்  தான் ஒரு பெரிய நடிகர் என்ற எண்ணம் இன்றி  எளிமையாக படப்பிடிப்பு குழுவினர்களோடு ஒருவராக பணிபுரிந்தது சக குழுவினரையும் உற்சாகமூட்டியது. சந்தானம் , பலா, விதார்த் , முனீஸ் , சுஹைல் ,’நாடோடிகள்’ அபிநயா, மனோசித்ரா , ‘எதிர் நீச்சல்’  சுசா குமார், ரமேஷ் கண்ணா , இளவரசு , அப்பு குட்டி ,பிரதீப் ராவத் , கிரேன் மனோகர் , வித்யு லேகா ராமன் , தேவதர்ஷினி மற்றும் சில நட்சத்திரங்கள் நடிக்க உள்ள இந்த பிரம்மாண்ட படத்தின் ஒளிபதிவாளர்  வெற்றி , படத்தொகுப்பு காசி விஸ்வநாதன் , stunts செல்வா ,கலை மிலன் . முழுக்க முழுக்க ஜனரஞ்சகமாக தயாரிக்கப்படும் இந்த படத்தில் அஜீத்தின் உடை அமைப்பும்  , பாத்திர அமைப்பும் ரசிகர்களை கவர்வதுடன் அவர்களுக்கு பொங்கல் விருந்தாகவும் அமையும் எனக்  கூறினார் தயாரிப்பாளர்கள் .