சுவாதியின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம் : போலீஸ் நடவடிக்கை

சுவாதியின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம் : போலீஸ் நடவடிக்கை:-

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட இளம் பெண் சுவாதி, கொலை வழக்கில் இதுவரை குற்றவாளி குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. போதிய தடயங்கள் இல்லாததால் இந்த வழக்கு போலீஸாருக்கு சவால் நிறைந்ததாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரயில்வே போலீஸாரிடம் இருந்து சென்னை போலீஸுக்கு சுவாதி வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, சுவாதியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை போலீஸார் முடக்கியுள்ளனர். கொலை செய்தவர் குறித்த தகவல்களை திரட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுவாதி இறந்ததிலிருந்து பலர் அவரின் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Visit Chennaivision for More Tamil Cinema News