சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் அதிமுக தலைமை அலுவலகம் வந்தபோது மோதல்?

அதிமுக பொதுக்குழு கூடும் நிலையில் பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடும் மனுவை பெற அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா கட்சி தலைமை அலுவலகம் வரவிருந்ததால் கட்சி அலுவலகம் பரப்பாக இருந்தது. அப்போது சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞரும், அவரது கணவர் லிங்கேஸ்வரனும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் வந்தனர். அவர்களை அடையாளம் கண்டு கொண்ட சசிகலா ஆதரவாளர்கள் கும்பல் அவரை சூழந்து கொண்டு அடித்து உதைத்தது. சரமாரியாக விழுந்த அடியைத் தாங்க முடியாமல் அவர்கள் அலறினர்.

சசிகலாவின் கணவரையும் வக்கீலையும் கொலைவெறி தாக்குதலுடன் அதிமுகவினர் விரட்டியடித்தனர். இதனால் அங்கு கலவரமாக காட்சியளித்தது. அதிமுக தொண்டர்களிடமிருந்து சசிகலா புஷ்பா வக்கீல் மற்றும் கணவர் ரத்த காயத்துடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.