மதுரையில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் கைது

மதுரையில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் கைது

மதுரையில் பட்டாசு கடை உரிமம் வழங்க லஞ்சம் வாங்கிய மாவட்ட வருவாய் அலுவலரின் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலரின் உதவியாளராக இருப்பவர் அன்புச்செல்வன். இவரிடம் கருப்பூராணியை சேர்ந்த சுப்புராஜ் என்பவர் பட்டாசு கடை வைப்பதற்காக அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார்.

அப்போது உரிமம் வழங்க ரூ.30,000 லஞ்சமாக அன்புச்செல்வன் கேட்டுள்ளார். இந்நிலையில் சுப்புராஜ் மதுரையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து அன்புச்செல்வன் சுப்புராஜிடம் பணத்தை வாங்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கையும், களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் இவர் ஏற்கனவே லஞ்சம் கேட்டு பலரை அலைகழித்துள்ளது தெரிய வந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்பட்டு கைது செய்யப்பட்ட நிகழ்வினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Post

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை மீனம்பாகத்தில் அமைந்துள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் மிகவும் போக்குவரத்து நெரிசலான ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது. இந்த…