ஜல்லிக்கட்டு நடத்த சூப்பர் ஐடியா!!!

காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கிவிட்டாலும், உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த தொடர்ந்து தடை விதித்து வருகிறது.

சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் அவ்வபோது ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இருப்பினும், இந்த ஆண்டு அனுமதி கிடைக்கவில்லை என்றாலும், தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியே தீருவோம், என்று தமிழக மக்களும், சில அமைப்புகளும் சூளுரைத்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, யோசனை ஒன்றை கூறியுள்ளார். அதாவது, ‘ஜல்லிக்கட்டு’ என்பதற்கு பதிலாக ‘பொங்கல் விளையாட்டு’ என்று பெயர் மாற்றம் செய்து நடந்துக்கள். மேலும், அந்த பேனர்களில், “இங்கு ஜல்லிக்கட்டு நடத்தப் படவில்லை, பொங்கல் விளையாட்டு தான் நடைபெறுகிறது, என்று அச்சிடுங்கள்” என்று நேற்று முன் தினம் தனது பேஸ்புக் பக்கத்தில், அவர் கூறியுள்ளார்.

ஆனால், இது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்வி எழுந்த நிலையில், அவரது இந்த யோசனை சாத்தியமே, என்ற பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதில் ஒரு பதிவில், சூதாட்ட குற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், அந்த அணியைச் சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்களைக் கொண்டு, புதிய அணியை உருவாக்குகிறோம், என்ற பெயரில் புனே, ராஜ்கோட் என்று பெயர் மாற்றம் செய்து, அதற்கான ஏலத்தையும் நடத்தி விளையாடி வருகிறார்கள். இதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது.

அதாவது, இப்ப விளையாடுவது சென்னை,ராஜஸ்தான் இல்லையாம் புனே, ராஜ்கோட் அப்படின்னு சொல்றாங்க. பயிற்சியாளர்களுக்கும் தடையில்லை, வீரர்களுக்கு தடையில்லை. எப்போதும் போல அணி வீரர்கள் விளையாடுகிறார்கள், ஐபிஎல் அமைப்புக்கும் வருமானம் வருகிறது. இது சாத்தியம் என்றால், ஜல்லிக்கட்டுக்கும் இது சாத்தியமே, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், பொங்கல் விளையாட்டு, தமிழர் வீர விளையாட்டு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகும், தடை செய்யப்பட்டால், அதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தலாம் என்பதால், இந்த பெயர் மாற்றம் சாத்தியமானது தான்.