நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் தாக்குதலுக்கு உள்ளான மாணவன்

இம்மாதம் முதல் வாரத்தில், பள்ளி வகுப்பில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் கொடூரமாக தாக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியத்ததுடன், பல செய்தி சேனல்களிலும் இந்த வீடியோ குறித்த செய்திகளும் வெளியானியின.

இந்த விவகாரம் குறித்து விசாரித்ததில், அடிவாங்கிய மாணவர் வகுப்பில் முதல் மதிபெண் எடுத்ததால், மேல் ஜாதி என்று சொல்லக்கூடிய சக மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் முசாபர்நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த இந்த சம்பவம் குறித்து, இரண்டு மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்களாம். மேலும், தாக்கப்பட்ட மாணவனின் தாத்தா போலீசில் புகார் கொடுத்த காரணத்திலால், அவங்க குடும்பம் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறதாம். இதன் காரணமாக, அந்த மாணவர் பள்ளியை விட்டே நின்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து மாணவரிடம் பேட்டி கேட்ட என்.டி.டி- மாணவர் எழுதி கொடுத்த கடிதத்தில், அந்த மாணவர்கள், கடந்த இரண்டு வருடங்களாகவே, இந்த மாணவர் மீது தாக்குதல் நடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

மாணவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பீகாரிலே இருக்கும் முஸாபர்நகர் கவர்மெண்ட் ஸ்கூல்லே படிக்கும் 16 வயசு ஸ்டூடன்டான என்னை அப்படி போட்டு காட்டுத்தனமாக ஏன் தாக்கினாங்க?  அப்ப நான் ஏன் அமைதியாக இருக்கிறேன் ? அப்ப்டீன்னு இரண்டு மூன்று நாளா என்னிடம் பலரும் கேட்பது அதிகரிச்சிக்கிடே போகுது.

இது பத்தி போலீஸ், உடன்  படிக்கும் மாணவர்கள், மீடியாவிடம் என்று சகலரிடமும் ஒரே காரணத்தை  திரும்பத் திரும்பச் சொல்லி எனக்கு ரொம்ப சோர்வாவும் , விரக்தியாவும் இருக்கிறது.

என்னுடைய அப்பா ஒரு ஆசிரியர். எல்லாவற்றிலும் நான் முன்னிலையிலே வர வேண்டும் என்பதற்காகவே அவர் எனக்கு வைத்த பெயரின் அர்த்தம் “The Best”. சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, என்னை முஸாபர்நகரில் உள்ள  பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து படிக்க வைத்தார். நானும் அவருடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்றது போல இருக்க வேண்டும் என்பதற்காக கடின உழைப்பை அளித்தேன். உழைப்பு காரணமாக படிப்பில் நான் சிறந்து விளங்கியது  என் அப்பாவுக்கு மகிழ்ச்சி கொடுத்தாலும், என்னை தனிமைப் படுத்தி விட்டது. அத்தோட பிரச்சனைகளும் உள்ளாக்கியது.

இப்ப சொன்னா உங்களுக்கு நம்பறதுக்கே கஷ்டமா இருக்கலாம். கடந்த இரண்டு வருஷங்களாகவே தினந்தோறும், குறிப்பிட்ட அந்த குறிப்பிட்ட இரண்டு சகோதர மாணவர்களால் தாக்கப்பட்டு வந்திருக்கிறேன். வாரத்திற்கு ஒரு முறையாவது என் முகத்தில் துப்புவார்கள். ஒருவர் என்னுடைய வகுப்பில் படிப்பவர். மற்றவர் என்னை விட இளையவர். அவரும் இதே பள்ளியில்தான் படிக்கிறார். அந்த இரண்டு மாணவர்களின் தந்தை, அரசியல் செல்வாக்கு மிகுந்த கிரிமினல் என்பதால், எனக்கு நடக்கும் கொடுமையை பற்றி என்னுடைய வீட்டில் சொல்வதற்கும் நான் பயந்திருக்கிறேன்.

நீங்கள் சமூக வலைதளங்களில் பார்த்த அந்த வீடியோ ஆகஸ்ட் 25-ம் தேதி எடுக்கப்பட்டது. என்னை அடிப்பது என்பது தனக்கு மிகுந்த இன்பத்தை அளிப்பதாக கூறி, என்னை அடித்த மாணவன், அதன் காரணமாகவே அதை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டான்.

ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்தவன் இவ்வளவு மார்க வாங்கறானே என்று என்னை செய்யும் சித்திரவதைகள் வேறு வேறானவை. அந்த வீடியோவில் நீங்கள் பார்த்திருக்கலாம். நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் என்னை, அவங்க ரெண்டு பேரும் தலையில் அடிப்பதை, நாற்காலியில் இருந்து கீழே தள்ளப்படுவதை, மிதிக்கப்படுவதை, சுவரில் நிற்க வைத்து, என் முகத்தில் அறையப்படுவதை, எல்லாவற்றையும் நீங்கள் பார்த்திருக்கலாம். உங்களுக்கு இப்ப பாக்கறதுக்கே மனசு வலிக்கும். அந்த அடிகளால் நான் பட்ட வேதனை சொல்லி மாளாது. அதனால் தான் இப்போ பள்ளிக்கு போறதையே நிறுத்திட்டேன்.

இவ்வாறு அந்த கடித்தத்தில் மாணவர் தெரிவித்துள்ளார்.