வங்கி ஏ.டி.எம்.களில் விரைவில் ரூ.50, 20 எடுக்கலாம் எஸ்.பி.ஐ. தலைவர் அறிவிப்பு

வங்கி ஏ.டி.எம்.களில் விரைவில் ரூ.50, 20 எடுக்கலாம் எஸ்.பி.ஐ. தலைவர் அறிவிப்பு

விரைவில் ஏ.டி.எம்.,களில் ரூ.50, ரூ.20 நோட்டுக்கள் எடுக்கலாம் என்று எஸ்.பி.ஐ. சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வங்கிகளில் குவிந்தனர். மேலும் தேவைக்காக பணம் எடுக்கவும் வங்கிகள், ஏ.டி.எம்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர்.

முதலில் வங்கிகளில் ரூ.2000 நோட்டுக்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இதையடுத்து புதிய ரூ.500 நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்தன. ஆனால் இந்தத் தொகைக்கு சில்லறை தேடி அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் ஏடிஎம்களில் விரைவில் ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுக்கள் கிடைக்கும் என்று எஸ்.பி.ஐ சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்களின் சில்லறை தட்டுப்பாடு பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More

Related Post

எம் ஜி ஆர் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை துறை கருத்தரங்கு தொடங்கியது!

எம் ஜி ஆர் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை துறை கருத்தரங்கு தொடங்கியது!

டாக்டர் எம் ஜி ஆர் மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை துறை சார்பாக ஸ்மார்ட் சிட்டி தொடர்பான இரண்டு…