அமெரிக்க ஓபன் டென்னிஸ்: வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார்

டென்னில் உலகின் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்து வந்த செரிபிய நாட்டு வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி, சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த இரு வாரங்களாக நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி நேற்று நள்ளிரவு (இந்திய நேரப்படி) நடைபெற்றது. இதில் ஜோகோவிச் – வாவ்ரிங்கா மோதினார்கள்.

3 மணி மற்றும் 54 மணி நேரம் நீடித்த இப்போட்டியில் 6-7 (1-7), 6-4, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி வாவ்ரிங்கா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். முதன் மூலம் அவர் முதல் முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இது அவர் வென்ற மூன்றாவது கிராண்ட்சிலாம் பட்டமாகும். ஏற்கனவே, 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் அவர் வென்றிருந்தார்.

கோப்பையை கைப்பற்றிய வாவ்ரிங்காவுக்கு ரூ.23.40 கோடி பரிசு கிடைத்தது.