மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமையே: நடிகை சிருஷ்டி டாங்கே

மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமையே: நடிகை சிருஷ்டி டாங்கே

வளர்ந்து வரும் அழகிய நடிகை சிருஷ்டி டாங்கே. சமீபத்திய அவரது வெற்றி என்பது அச்சமின்றி. அதற்கு முன் தர்மதுரை.

சமீபத்தில் அவரை சந்தித்த போது..

நான் கடுமையாக போராடி வெற்றி பெற்றிருக்கிறேன். நான்கு படங்கள் வெற்றி பெற்று நானும் இந்த ரேசில் சேர்ந்திருக்கிறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வருடம் குறைந்தது பத்துப் படங்களாவது எனக்கு ரிலீஸ் ஆயிடும்.

இப்போ நான் இன்னும் சந்தோஷமாக இருக்கிறேன். மோகன்லால் நடிக்கிற படம் . மேஜர்ரவி டைரக்ஷன்னு சொன்னாலே உடம்பெல்லாம் சிலிர்க்குது.

மோகன்லால் படத்துல நடிக்கிறோம்ன்னு ஒப்பந்தமான உடனேயே எப்ப அவருடன் நடிப்போம் என்று துடிச்சிட்டு இருந்தேன். நடிக்க ஆரம்பிச்ச உடனேயே ஜாம்பாவானுடன் நடித்த பெருமை எனக்கு.

“ 1971 – Beyond The Border “ என்ற இந்தப் படம் எனக்கு மலையாளத்தில் முதல் படம். அல்லு சிரிஷுடன் ஜோடியாக நடிக்கிறேன். ராணுவம் சம்மந்தப் பட்ட கதை இது. நான் தமிழ் பேசும் தமிழ் பெண்ணாக நடிக்கிறேன்.

“ 1971 – Beyond The Border “ படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகுது.

2017 எனக்கு நம்பிக்கை கொடுக்கும் ஆண்டாக அமையும் என்று சந்தோஷமாகச் சொன்னார் அழகு பதுமையான கன்னக்குழி சிருஷ்டி டாங்கே !

Related Post

நடிகர் வினுசக்ரவர்த்தி மரணம்!

நடிகர் வினுசக்ரவர்த்தி மரணம்!

பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தி (74) சென்னையில் போலிஸ் சப் -இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா…