கன்னடர்களுக்கு எதிராக இலங்கையில் போராட்டம்!

காவிரி நீர் பிரச்சினையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெரும் வன்முறை சம்பவங்கள் அறங்கேறியது.

இதில் தமிழர்களின் வாகனங்கள் தீயிட்டு எறிக்கப்பட்டதுடன், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

தற்போது, வன்முறை சம்பவங்கள் குறைந்தாலும், கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் அச்சத்துடனே உள்ளனர்.

கர்நாடாகாவில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்களை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும், தொழிலாளர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ள இந்த போராட்டத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழர்களின் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கன்னடர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இலங்கையில் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இலங்கை வடக்கு மாகானத்தைச் சேர்ந்த தமிழர்கள் சிலர், கன்னடர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில், “தாயக தமிழனில் கை வைத்தால்…ஈழத்து தமிழனுக்கு வலிக்குமடா…”, “கன்னடனே நிறுத்து உன் ரவுடித்தனத்தை” போன்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.