தேசிய ஜூனியர் தடகள போட்டி : தமிழக அணி அறிவிப்பு

தேசிய ஜூனியர் தடகள போட்டி : தமிழக அணி அறிவிப்பு

தேசிய ஜூனியர் தடகள போட்டி : தமிழக அணி அறிவிப்பு

13வது தேசிய ஜூனியர் தடகளப் போட்டி நாளை கேரள மாநிலம், கோழிகோட்டில் தொடங்குகிறது. வரும் மே 28ஆம் தேதி நடைபெற உள்ள இப்போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் மொத்தம் 47 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக ஆண்கள் அணி: அஜித்குமார், அஜித் பார்த்திபன், நிதின், ரிஷ்வந்த், ராஜேஷ், ஹேமந்த் கண்ணன், ஹரிபிரசாந்த், பாலகிருஷ்ணன், வீர ராகவேந்திரன், மகராஜா, ஜான் ஜேக்கப், புருசோத்தமன், மணிராஜ், மகேஷ், புபேஷ்வர், கீர்த்திகேசன், கிருபா நித்யானந்த், சுஜித், கவுதம், ராஜேஷ்.

பெண்கள் அணி: தமிழ்செல்வி, ராமலட்சுமி, சுபா, சம்யாஸ்ரீ, நீலாம்பரி, சுப்புலட்சுமி, நித்யா, நந்தினி, சுனந்தனா, ஐஸ்வர்யா, பிரியதர்ஷினி, ஹர்ஷினி, கோபிகா, கல்பனா, காருண்யா, வித்யா, ரக்ஷ்னா தேவி, அகர்சனா, ஹேமமாலினி, அமர்த்தியா, இலக்கியா, மீனாட்சி, மஞ்சு, லோகமுத்ரா, தினா துர்கா, புவனேஷ்வரி, நந்தினி.

Visit Chennaivision for More Tamil Cinema News

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் இருந்து மார்கஸ் காட்னெர் பதவி நீக்கம்

கால்பந்து சம்மேளனத்தில் இருந்து மார்கஸ் காட்னெர் பதவி நீக்கம்

கால்பந்து சம்மேளனத்தில் இருந்து மார்கஸ் காட்னெர் பதவி நீக்கம்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் (பிபா) பல கோடி ஊழல் நடந்தது, கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்மேளனத்தின் தலைவர் செப் பிளாட்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவருக்கு 6 ஆண்டு தடையும் விதிக்கப்பட்டது. அதேபோல, ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தலைவர் பதவியை துறந்த மைக்கேல் பிளாட்டினியும் தடை நடவடிக்கையில் சிக்கியுள்ளார்.

இந்த நிலையில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் துணை பொதுச்செயலாளர் மார்கஸ் காட்னெர் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். அவரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது ‘பிபா’ கமிட்டியின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த 45 வயதான மார்கஸ் காட்னெர், ஜெரோம் வால்க்கே நீக்கப்பட்டதால் பொதுச்செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘பிபா’வின் புதிய பொதுச் செயலாளராக செனகலை சேர்ந்த பெண்மணி 54 வயதான பாத்மா சமோரா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார்: கோலி பேட்டி

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார்: கோலி பேட்டி

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார்: கோலி பேட்டி

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார்? என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது, என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், தோல்வியின் விளிம்பில் இருந்த பெங்களூர் அணியை டிவில்லியர்ஸ் தனது அதிரடி மற்றும் அனுபவ ஆட்டத்தின் மூலம் தனி மனிதராக இருந்து வெற்றி பெறச் செய்தார்.

போட்டிக்குப் பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த கோலி, உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் யார்? என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது, என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளோம். பெரிய மனிதர் எங்களை அடுத்தபடிக்கு சுமந்து சென்றுள்ளார். நான் அவருக்கு தலைவணங்குகிறேன். அவருக்காகவும், அணிக்காகவும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

Post you may like:

தேசிய கராத்தே போட்டியில் 21 பதங்கங்களை வென்றது தமிழக அணி

தேசிய கராத்தே போட்டியில் 21 பதங்கங்களை வென்றது தமிழக அணி

தேசிய கராத்தே போட்டியில் 21 பதங்கங்களை வென்றது தமிழக அணி

தேசிய கராத்தே போட்டியில் 21 பதங்கங்களை வென்றது தமிழக அணி

டெல்லியில் நடைபெற்ற தேசிய கராத்தே போட்டியில் தமிழக அணி 21 பதக்கங்களை வென்றது.

‘காய்’ தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்றது. நான்கு நாட்கள் நடைப்பெற்ற இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் மத்திய பிரதேசம் 11 தங்கப்பதக்கத்துடன் முதலிடத்தை பிடித்தது. தமிழகம் 8 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என்று மொத்தம் 21 பதக்கங்கள் கைப்பற்றி 2-வது இடத்தை பெற்றது.

இதில் சென்னையைச் சேர்ந்த ஸ்டீவன்குமார் வெள்ளிப்பதக்கம், கெவின்குமார் வெண்கலப்பதக்கம் வென்றதும் அடங்கும். இவர்கள் இருவரும் சினிமா சண்டை பயிற்சியாளர் ‘ஸ்டன்’ சிவாவின் மகன்கள் ஆவர். வெற்றி பெற்றவர்களுக்கு அகில இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

ஐபில் போட்டியில் இருந்து ஆசிஷ் நெஹ்ரா விலகல்

ஐபில் போட்டியில் இருந்து ஆசிஷ் நெஹ்ரா விலகல்

ஐபில் போட்டியில் இருந்து ஆசிஷ் நெஹ்ரா விலகல்

டெல்லி,மே 20 (டி.என்.எஸ்) காலில் ஏற்பட்ட தசை முறிவு காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து ஆசிஷ் நெஹ்ரா விலகினார்.

சன் ரைசஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ராவுக்கு காலில் தசை நார் முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐதராபாத் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தின்போது நெஹ்ராவின் காலில் தசை நார் முறிவு ஏற்பட்டது. அவர் இப்போது எலும்பியல் நிபுணரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சீசனின் எஞ்சிய ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Visit Chennaivision for More Tamil Cinema News

உலக குத்துச்சண்டை போட்டியில் 2வது சுற்றுக்கு மேரிகோம் தகுதி

உலக குத்துச்சண்டை போட்டியில் 2வது சுற்றுக்கு மேரிகோம் தகுதி

உலக குத்துச்சண்டை போட்டியில் 2வது சுற்றுக்கு மேரிகோம் தகுதி

கஜகஸ்தான்,மே 20 (டி.என்.எஸ்) கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டைப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை மேரிகோம் வெற்றி பெற்றார்.

உலக குத்துச்சண்டைப் போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை மேரிகோம் முதல் சுற்றில் சுவீடன் வீராங்கனை ஜூலினா சோடர்ஸ்ரோமை 3–0 என்ற கணக்கில் வீழ்த்தி 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை சரிதா தேவியும், முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

டென்னிஸ் இருந்து ஓய்வு பெறுகிறார் மரியா ஷரபோவா

டென்னிஸ் இருந்து ஓய்வு பெறுகிறார் மரியா ஷரபோவா

டென்னிஸ் இருந்து ஓய்வு பெறுகிறார் மரியா ஷரபோவா

மாஸ்கோ,மே 20 (டி.என்.எஸ்) பிரபல முன்னணி டென்னிஸ் வீராங்கனையான ரஷியா நாட்டைச் சேர்ந்த மரியா ஷரபோவா, ஊக்கமருந்து விகாரத்தில் சிக்கி தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளார்.

உலக டென்னிஸ் சம்மேளனம் அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதையடுத்து, அவரை விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்த பல முன்னணி நிறுவனங்களும் ஒப்பந்தத்தை ரத்து செய்தன. உலக அளவில் பிரபலமாக விளங்கிய அவர் ஒரே நாளி அனைத்தையும் இழந்தார்.

இதற்கிடையில், தான் தெரியாமல் தவறு செய்துவிட்டதாகவும், தனது தவறை மன்னித்து தனக்கு மீண்டும் டென்னிஸ் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ரஷ்ய டென்னிஸ் சம்மேளனம், மரியா ஷரபோவாவின் சூழ்நிலை மிகவும் கடினமாக இருப்பதாகவும், அவர் மீண்டும் டென்னிஸ் விளையாடுவார் என்பது நடக்காமல் போகலாம், என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தனது சொந்த நாட்டின் டென்னிஸ் சம்மேளனமே தனக்கு உதவி முன்வராத நிலையில், மரியா ஷரபோவா டென்னிஸில் இருந்து பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மரியா ஷெரபோவா தான், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை யார் என்று தெரியாது என்று சொன்னார், என்பது குறிப்பிடத்தக்கது.

Visit Chennaivision for More Tamil Cinema News

புனேயில் நடந்த முதல் டுவென்டி 20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி

புனேயில் நடந்த முதல் டுவென்டி 20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது . யுவராஜ் சிங்கின் ஆல் ரவுண்ட் அதிரடி ஆட்டத்தின் காரணமாக நேற்று புனேயில் நடந்த இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதலாவது டுவென்டி 20 போட்டியில் இந்தியா அருமையான வெற்றியைப் பெற்றது.

இந்திய அணி டாஸ் வென்று இங்கிலாந்தை பேட் செய்யப் பணித்தது. இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களைக் குவித்தது. ஹேல்ஸ் சிறப்பாக ஆடி 56 ரன்களைக் குவித்தார். அவரை யுவராஜ் சிங் போல்டாக்கி அனுப்பி வைத்தார். அவருக்கு அடுத்து அதிக ரன்களை எடுத்தவர் ரைட்தான். அவரது பங்கு 34 ரன்களாகும். கடைசி நிலையில் இறங்கிய பட்லர் 33 ரன்களைச் சேர்த்தார். இந்தியத் தரப்பில், யுவராஜ் சிங் 3 விக்கெட்களையும், திண்டா 2 விக்கெட்களையும், அஸவின் ஒரு விக்கெட்டையும் வீழ்கத்தினர். பின்னர் பேட்டிங்கைத் தொடங்கிய இந்தியா 17.5 ஓவர்களிலேயே 5 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றிக்குத் தேவையான ரன்னைத் தொட்டது. இங்கும் யுவராஜ் சிங்தான் கை கொடுத்தார். மின்னல் வேகத்தில் ஆடிய அவர் 38 ரன்களைக் குவித்தார். ஆட்டநாயகன் விருதை யுவராஜ் சிங் பெற்றார்.