ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது

நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய அங்கீகாரமான பத்ம விருதுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, ஒலிம்பிக் சாதனையாளர் சாக்‌ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகர், வட்டு எறியும் வீரர் விகாஸ் கவுடா, ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த எய்ட்ஸ் ஆராய்ச்சி மருத்துவர் சுனிதி சாலமன் பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார். சுனிதி சாலமன் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 20 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டி20 தொடரில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி , 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது.

இந்த இரண்டு தொடர்களையும் இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது.

முதலாவது 20 ஓவர் போட்டி கான்பூரில் 26 ஆம் தேதியும், 2-வது போட்டி நாக்பூரில் 29 ஆம் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் பிப்ரவரி 1 ஆம் தேதியும் நடக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணியின் மாற்றம் குறித்து அணி நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்திய தேர்வு குழுவினர் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்துள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர்கள் அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

34 வயதான அமித் மிஸ்ரா கடைசியாக அக்டோபர் மாதம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் அணியில் இடம் பிடித்து இருந்தாலும் அவருக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 27 வயதான பர்வேஸ் ரசூல் 2014-ம் ஆண்டில் டாக்காவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். 20 ஓவர் போட்டி அணியில் அவர் இடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணி வருமாறு:

லோகேஷ் ராகுல், மன்தீப்சிங், விராட்கோலி (கேப்டன்), டோனி, யுவராஜ்சிங், சுரேஷ்ரெய்னா, ரிஷாப் பான்ட், ஹர்திக் பாண்ட்யா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், யுஸ்வேந்திரா சாஹல், மனிஷ் பாண்டே, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், நெஹரா.

ஜல்லிக்கட்டு: ஒலிம்பிக் பதக்கத்தை திருப்பி கொடுத்த மாரியப்பன்

பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தனது பதக்கத்தை திருப்பி கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

உலகை திரும்பி பார்க்கச் செய்த வரலாற்று புரட்சிகளில் சென்னையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டமும் இடம் பிடித்து விட்டது. குழந்தைகள், சிறியவர்கள், முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என்று அனைவரும் பங்கேற்று வரும் இந்த போராட்டத்தில் தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவாக மாற்றுத் திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தம்முடைய பதக்கத்தை திருப்பித் தருவதாக அறிவித்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டம்: ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் வீரர் சேவாக்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று முன் தினம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம் தற்போது ஒட்டு மொத்த தமிழகத்தில் மட்டும் இன்றி, வெளிநாடுகளிலும் பரவியுள்ளது.

மும்பை தாராவியில் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் அல்லாத பிரபலங்களும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். நேற்று தனது ட்விட்டர் பக்கம் மூலம் கிரிக்கெட் வீரர் முகமது கைப் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் அமைதி வழியில் செல்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அமைதி வழியை தொடருங்கள். இந்த அறப்போராட்டம் எல்லோருக்கும் பாடம், என்று தெரிவித்துள்ளனவர், தமிழகத்தில் உச்ச நீதிமன்றத்தை மதித்தபடியே, நடைபெறும் அமைதி போராட்டம் பற்றிய போட்டோ மீம் ஒன்றை ரீடிவிட் செய்துள்ளார். அந்த மீமில் தேசிய ஊடகங்கள் இப்போராட்டத்தை புறக்கணிப்பது குறித்து, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுவரை தமிழர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது பிற மாநிலத்தைச் சேர்ந்த பிரபலங்களும் குரல் கொடுப்பதால், இந்த போராட்டம் இனி சர்வதேச அளவில் பேசப்படும் அளவுக்கு வீரியம் அடைந்துள்ளது.

கேப்டன் பதவியிலிருந்து விலகினார் மகேந்திர சிங் டோனி!

இந்தியக் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளின் அணித் தலைமைப் பொறுப்பிலிருந்தும் மஹேந்திரசிங் தோனி நேற்று புதன்கிழமை விலகிக் கொண்டார்.

ஏற்கனவே அவர் டெஸ்ட் அணித் தலைமைப் பொறுப்பிலிருந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்தார்.

இந்த நிலையில், தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை நேற்று மாலை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அனுப்பி வைத்துள்ளார். அத்தோடு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள இங்கிலாந்துடனான ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளில் சாதாரண வீரராக நீடிப்பது தொடர்பில் தனக்கு பிரச்சினை இல்லை என்றும் தோனி அறிவித்துள்ளார்.

இதனிடையே, இனி, இந்தியக் கிரிக்கெட் அணியின் மூன்று வகைப் போட்டிகளுக்குமான தலைவராக விராட் கோஹ்லி நீடிப்பார் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

தங்கமகன் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி வழங்கி முதல்வர் பன்னீர் செல்வம் வாழ்த்து! Tamilnadu Chief Minister Panner Selvam Awarded 2 crrore cash price to Gold Medalist Mariappan

ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாரா ஓலிம்பிக்ஸ் 2016 போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற த.மாரியப்பனுக்கு கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கி வாழ்த்தினார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரேசில் நாட்டின், ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாரா ஓலிம்பிக்ஸ் 2016 போட்டியின் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த த.மாரியப்பன்.

அவருக்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று 10.9.2016 அன்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, பாரா ஓலிம்பிக்ஸ் 2016 போட்டியின் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற த.மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத் தொகையான 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று வழங்கி வாழ்த்தினார்.

தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமார், த.மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா ஆகியோர் உடனிருந்தனர்.

ஐபிஎல் 20-20 2017 போட்டி: அணி மற்றும் அணி வீரர்கள் பட்டியல்!

விவோ ஐபிஎல் 2017 தொடரில் ஆடுவதற்காக மொத்தம் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 44 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 140 கிரிக்கெட் வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. எஞ்சியுள்ள வீரர்கள் அடுத்த ஆண்டு போட்டி தொடங்கும் முன்பாக ஏலம் மூலம் எடுக்கப்படுவார்கள்.

ரைசிங் புனே சூப்பர்ஜையான்ட்ஸ் அணி, மகேந்திர சிங் தோனி தலைமையிலேயே வரும் ஐபிஎல் தொடரிலும் களம் காண உள்ளது.

குஜராத் லயன்ஸ் அணியின் தலைவராக சுரேஷ் ரெய்னா தொடருவார். புனேவும், குஜராத் அணியும் தலா 16 பழைய வீரர்களை தங்கள் வசம் வைத்துள்ளன.

மும்பை மற்றும் டெல்லி அணியின் வீரர்களில் எந்த மாற்றமுமில்லை.

விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது பழைய 20 வீரர்களை தக்க வைத்துக்கொண்டுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது 17 பழைய வீரர்களை தக்க வைத்துள்ளது.

பஞ்சாப் அணி, பழைய 19 வீரர்களையும், கொல்கத்தா அணி பழைய 14 வீரர்களையும் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

ஐபிஎல் 20-20 2017 போட்டி: அணி மற்றும் அணி வீரர்கள் பட்டியல்!

ஐபிஎல் 20-20 2017 போட்டி: அணி மற்றும் அணி வீரர்கள் பட்டியல்!

ஐபிஎல் 20-20 2017 போட்டி: அணி மற்றும் அணி வீரர்கள் பட்டியல்!

ஐபிஎல் 20-20 2017 போட்டி: அணி மற்றும் அணி வீரர்கள் பட்டியல்!

ஐபிஎல் 20-20 2017 போட்டி: அணி மற்றும் அணி வீரர்கள் பட்டியல்!

ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்தியா 2-ஆவது உலகக் கோப்பை

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி 2-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இதன்மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் இந்தியாவின் கோப்பைக் கனவு நிறைவேறியுள்ளது. முன்னதாக, கடந்த 2001-ஆம் ஆண்டு இந்திய ஜூனியர் அணி கோப்பையை வென்றுள்ளது.

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடங்கியது முதல், போட்டியை நடத்தும் நாட்டைச் சேர்ந்த ஒரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, இரு அணிகளுக்கு இடையேயான இறுதிச்சுற்று லக்னெளவில் நடைபெற்றது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் கோல் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்தது.

ஆட்டத்தின் 8-ஆவது நிமிடத்திலேயே குர்ஜந்த் சிங் அதிரடியாக கோலடித்து இந்தியாவின் வெற்றிக்கான கணக்கை தொடக்கி வைத்தார். இதனால், தங்களது முதல் கோலுக்காக பெல்ஜியம் அணியினர் போராடியபோதும், இந்தியாவின் தடுப்பாட்டத்தால் அது தள்ளிக் கொண்டே போனது.

இந்நிலையில், பெல்ஜியத்துக்கான பெருத்த அடியாக, இந்தியா இரண்டாவது கோல் அடித்தது. ஆட்டத்தின் 22-ஆவது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் தனது பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.

இதனால் முதல் பாதியிலேயே இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு ஆட்டத்தின் 70-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பு மூலம் பெல்ஜியம் அணி ஒரு கோல் அடித்தது.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் அந்த அணிக்கு கோல் வாய்ப்பு ஏதும் கிடைக்காத காரணத்தால், இந்தியா 2-1 கோல் கணக்கில் வென்றது. இதன்மூலம் இந்தியா தங்கப்பதக்கத்தையும், பெல்ஜியம் வெள்ளியையும் உறுதி செய்தன.

ஜெர்மனி வெற்றி: இதனிடையே, வெண்கலப் பதக்கத்துக்காக நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தது நடப்புச் சாம்பியனான ஜெர்மனி.

கிரிக்கெட்டில் சிவப்பு அட்டை பயன்படுத்த முடிவு

கால்பந்து மற்றும் ஹாக்கி போட்டிகளில் வீரர்கள் ஒழுங்கினமாக நடந்துக் கொண்டால், அவர்கள் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்படுவார்கள்.

அத்தகைய முறை கிரிக்கெட் போட்டியிலும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை பரிந்துரை செய்யும், ‘மெர்லிபோர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) ஐ.சி.சி யிடம் பரிந்துரை செய்துள்ளது.

கிரிக்கெட் போட்டியின் புதிய விதிமுறைகள் குறித்து ஆராய்ந்து, ஐ.சி.சி-க்கு தெரியப்படுத்தும் இந்த எம்.சி.சி கிளப்புக்கு தலைவராக மைக் பிரியர்லே இருக்கிறார். தலைமை நிர்வாகிகளாக ஜான் ஸ்டெப்ஹன்சன் உறுப்பினர்களாக ரிக்கி பாண்டிங், ரமீஸ் ராசா ஆகியோர் உள்ளனர்.

சிவப்பு அட்டை முறையை அறிமுகப்படுத்த பரிந்துரைத்துள்ள இந்த கிளப், ‘பேட்’ அளவு குறித்தும் யோசனை தெரிவித்துள்ளது.

வார்த்தையால் பதிலடி கொடுத்த விராட் கோலி!

மொகாலி டெஸ்டில் விராட் கோலியை கிண்டல் அடித்த பென் ஸ்டோக்ஸ்க்கு, இன்று அவர் அவுட்டாகி செல்லும்போது விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜா பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார்.

அப்போது இந்திய வீரர்கள் சந்தோசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவுட்டான விரக்தியில் பென் ஸ்டோக்ஸ் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டே சென்றார். அதற்கு விராட் கோலி பதிலடி கொடுத்தார். அவர்கள் இருவரும் அப்போது முறைத்துக் கொண்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கப்பட்டார்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. விராட் கோலி 62 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது சந்தோசத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் திடீரென வாயை மூடிக் கொண்டார். முதல் இன்னிங்சில் அபராதம் விதிக்கப்பட்டதை கேலி செய்யும் வகையில் அமைதியான முறையில் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அப்படி செய்தார்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் விளையாடும்போது பென் ஸ்டோக்ஸ் 5 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது விராட் கோலி தனது வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்து ‘மூச்’ விடக்கூடாது என்ற தோனியில் செய்கை காட்டி அமைதியான முறையில் உணர்வை வெளிப்படுத்துகிறேன் என்று பதிலடி கொடுத்தார். பென் ஸ்டோக்ஸ் பேசாமல் பெவிலியனுக்கு நடையை கட்டினார்.