என் திருமணம் முறிவு பற்றி வெளியான செய்திகள் பொய் இல்லை: செளந்தர்யா ரஜினிகாந்த்

ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, கணவர் அஷ்வினுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதனை செளந்தர்யா உறுதி செய்துள்ளார்.

2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் செளந்தர்யா ரஜினிகாந்த். இந்தத் தம்பதியருக்கு வேத் என்கிற மகன் உண்டு.

சமீபகாலமாக, செளந்தர்யா – அஷ்வின் இடையே கருத்துவேறுபாடு நிலவி வருவதால், விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் செளந்தர்யா மற்றும் அஷ்வின் ஆகிய இருதரப்பும் மனுத்தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இத்தகவலை செளந்தர்யா உறுதி செய்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

என் திருமணம் தொடர்பான செய்திகள் உண்மைதான். கடந்த ஒருவருடமாக இருவரும் பிரிந்துவாழ்கிறோம். விவாகரத்து குறித்து பேசிவருகிறோம் என்று கூறியுள்ளார்.