மெக்சிகோவில் பயணிகள் செல்லும் விமானத்தில் பாம்பு!

நடுவானில் பறந்துக்கொண்டிருந்த ஏரோ மெக்சிகோ 230 என்ற விமானத்தில் பாம்பு ஒன்று புகுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் டொரோன் பகுதியிலிருந்து தலைநகர் மெக்சிகோவிற்கு பறந்து கொண்டிருந்த விமானத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த விமானத்தில் பயணித்த பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அதில், விமானத்தின் மேல்பகுயில் உள்ள பெட்டியிலிருந்து பச்சை நிறத்தில் ஐந்தடி நீளமான பாம்பு ஒன்று சறுக்கி கீழே விழுகிறது.

பாம்பு பயணிகளிடையே புகுந்தவுடன் அனைவரும் அலறியடித்து ஓடியுள்ளனர்.

அதிஷ்டவசமாக, விமான குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை மெக்சிக்கோவில் தரையிறக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானத்தில் வந்து பாம்பை பிடித்துச் சென்றுள்ளனர்.

எனினும், பாம்பு கொடிய வகை பாம்பா என அறியப்படவில்லை. சம்பவம் குறித்து மெக்சிகோ விமான நிறுவனமும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.