ரெமோ நன்றி தெரிவிக்கும் விழாவில் கண்ணீர்விட்டு அழுத நடிகர் சிவகார்த்திகேயன்!

24 AM ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜாவின் முதல் தயாரிப்பு ரெமோ. அதன் வெற்றிக்காக ஒரு பிரஸ் மீட்டை நடத்தியது ரெமோ டீம். இவ்விழாவில் முதலில் கெளரவிக்கப்பட்டவர்கள் விநியோகஸ்தர்கள். திருப்பூர் சுப்பிரமணி உள்ளிட்ட பல்வேறு ஏரியாக்களைச்சேர்ந்த விநியோகஸ்தர்கள் மேடையில் சிறப்பு விருந்தினர்களால வரவேற்கப்பட்டனர். இவர்களைத்தொடர்ந்தே படக்குழுவினர் மேடை ஏறினர். பிரம்மாண்டமான மேடை, கண்கவரும் எல்.ஈ.டி. ஒளித்திரை என அரங்கத்தையே அசரவைத்திருந்தார் தயாரிப்பாளர் ராஜா.

இச்சந்திப்பில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் தவிர மீதமுள்ள அனைவருமே கலந்து கொண்டார்கள். மேலும், இப்படத்தில் தங்களுக்கு ஏற்பட்ட சந்தோஷ அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். இறுதியாக பேசிய சிவகார்த்திகேயன், படக்குழுவினரை பாராட்டி பேசியதோடு, “நாங்க என்ன செஞ்சோம், எங்கள ஏன் வேலை செய்ய விடமாட்ரிங்க. சிறுவர்களுக்கு பிடிக்கும் வகையிலான படத்தில் தான் நடித்து வருகிறேன், அப்படி இருந்தும் எனது படத்திற்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார்கள். தயவு செய்து எங்களை வேலை செய்ய விடுங்க” என்று உறுக்கமாக பேசியதோடு, கண்ணீர் விட்டு அழுதும் விட்டார்.

சிவகார்த்திகேயனின் இந்த அழுமை வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் அதே வேலையில், அவரது அழுகைக்கான பின்னணி குறித்தும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் இருந்து தான் சிவகார்த்திகேயன் வசூல் நாயகனாக உருவெடுத்தார். அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதோடு, அவரது படங்களையும் வெளியிட்டு லாபம் பார்த்து வந்தாராம். இதற்கிடையில் சிவகார்த்திகேயனிடம் அவர் கால்ஷீட் வாங்க, சிவாவோ சம்பளத்தை ஏற்றி விட்டாராம். அவரது இந்த சம்பள உயர்வுக்கு காரணம், தற்போது ரெமோ படத்தை தயாரித்த ஆர்.டி.ராஜா என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, தயாரிப்பாளர் சிவாவிடம் கோபம் கொண்டு தயாரிப்பாளர் சங்கம் வரை பஞ்சாயத்து வைத்துவிட்டாராம். ஒரு வழியாக சுமூகமாக அவரை விட்டு பிரிந்த சிவா, தற்போது ராஜாவை தயாரிப்பாளராக்கி படமும் நடிக்க தொடங்கிவிட்டதால், ‘வ.வ.ச’ தயாரிப்பாளருக்கு அவர் மீது பெரும் கோபம் ஏற்பட்டுள்ளதாம். மேடையில் சிவா அழுகைக்கு அவர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், சிவாவின் இந்த அழுமை வெறும் டிராமா மட்டுமே, கண்ணீர் விட்டு அழுது ரசிகர்களிடம் சிம்பத்தி ஏற்படுத்தவே இந்த முயற்சி, என்றும் பேசப்படுகிறது. இந்த நிகழ்ச்சியியை தொலைக்காட்சி ஒன்று நேரடி ஒளிபரப்பு செய்தது.