சிங்கம் 3 வந்த சோதனை: வருத்தத்தில் சூர்யா

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கம் 3’ படத்தின் ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது.

ஆனால், ஜல்லிக்கட்டு போராட்ட கலவர சம்பவங்களால், மீண்டும் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்போடு வெளியான ‘24’ படம் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், ‘சிங்கம் 3’ படத்தை தான் சூர்யா நம்பியிருந்தார். ஆனால், அறிவித்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பு தரப்பு திணறிவருகிறது.

சூர்யாவுக்கு பெரிய ஓபனிங்கோ அல்லது ரசிகர்கள் பட்டாளமோ இல்லாத காரணத்தால், படம் நன்றாக இருந்தால் மட்டுமே வசூல் ஈட்ட முடியும் என்ற நிலையில், மற்ற படங்களுடன் ரிலீஸ் செய்யாமல் தனியாக ரிலீஸ் செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்ற ‘சிங்கம் 3’ குழுவின் திட்டத்திற்கு சோதனை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற கலவர சம்பவங்களில் போலீசார் செய்த அடாவடி நடவடிக்கைகள் மூலம் காவல் துறை மீது மக்கள் கோபத்தில் உள்ளார்கள். இந்த நேரத்தில் போலீஸ் படமான ‘சிங்கம் 3’ யை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் போனால், உள்ளதும் போன நிலைதான் ஏற்படும், என்ற அச்சத்தில் படத்தை இப்போதைக்கு ரிலீஸ் செய்வதில்லை, என்ற முடிவுக்கு தயாரிப்பு தரப்பு வந்துள்ளது.

இதற்கிடையில், சூர்யாவின் படம் ரிலீஸ் தடை படுவதை, நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் கலாய்க்க தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே சூர்யாவின் சிங்கம் வரிசைப் படங்களை கலாய்த்து வந்த நெட்டிசன்கள், தற்போது ‘சிங்கம் 3’ படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே மீம்ஸ்கள் மூலம் கலாய்க்க தொடங்கியிருப்பது சூர்யாவை ரொம்பவே வேதனைக் கொள்ளச் செய்துள்ளது.