பெங்களூரில் வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு

பெங்களூரில் கலவரத்தைக் கட்டுப்படுத்த 7 இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெங்களூரு மாநகரக் காவல்துறை ஆணையர் மேக்ரி கூறியிருப்பதாவது:

பெங்களூரில் கலவரம் தொடர்ந்து நடந்து வருகிறது. லாரிகள், பேருந்துகள், வேன்கள் எரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்துக் கலவரத்தைக் கட்டுப்படுத்த பெங்களூரு மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பேட்டராயணபுரா, ராஜகோபால்நகர், கெங்கேரி, காமாட்சிபாளையா, மாகடி சாலை, விஜய நகர் மற்றும் ராஜாஜி நகர் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.