ஆமை போல் மெதுவாக வேலை செய்யும் காசாளர் இல்லை இவர்!

சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் உலகின் மிக ஸ்லோவான கேஷியர் என்று ஒரு வீடியோ வைரலாக பரவியது. வீடியோவில் இருந்தது புனேவில் உள்ள பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் கிளை ஒன்றில் பணிபுரியும் ப்ரேம்லதா ஷிண்டே எனும் பெண்மணி. இவர் மெதுவாக பணத்தை வாங்கி, எண்ணி, பாஸ் புக்கில் என்ட்ரி போடுவது ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு நக்கலாக பதிவிடப்பட்டது. ஆனால்…

இரண்டு மாரடைப்புகள், பேரலடிக் ஸ்ட்ரோக்குக்குப் பிறகு, சமீபத்தில்தான் பணியில் சேர்ந்திருக்கிறார் ப்ரேம்லதா. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வு பெற உள்ளார் இவர். மாரடைப்புகளுக்குப் பிறகு தனது வேலையில் உள்ள ஈடுபாட்டால், மீண்டும் பணிக்கு வரக் கோரிய அவருக்காக, கூடுதலாக ஒரு கௌன்ட்டர் அமைத்துக் கொடுத்திருக்கிறது வங்கி.

இது தெரியாமல், வீடியோ எடுத்து வைரலாக்கிவிட்டார்கள்.