குஜராத் மாநிலத்தில் ஷாருக்கானை பார்க்க வந்த ரசிகர் கூட்டம்!

விரைவில் வெளியாக உள்ள ‘ராயீஸ்’ என்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் ஷாருக்கான், நேற்று குஜராத் மாநிலம் வதோதரா பகுதிக்கு சென்றிருந்தார்.

அப்போது ராஜ்தானி விரைவு ரயில் வண்டியில் வந்த ஷாரூக்கானை காண ரசிகர்கள் குவிந்து இருந்ததால், ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்ப்பட்டது.

சுமார் 10.30 மணிக்கு வந்த ரயில் அங்கு சுமார் 10 நிமிடங்கள் நின்றிருந்தது. அந்த நேரத்தில் ஷாருக்கானை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டும், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

இதற்கிடையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் இருவரும் காயம் அடைந்துள்ளனர்.

ரயில் புறப்பட்ட பிறகும், ரயில் பின்னால் ரசிகர்கள் ஓடியதால் ஒருவர் மீது ஒருவர் கீழே விழுந்ததாகவும், அதன் காரணமாக ஒருவர் உயிரிழந்ததாகவும், காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.