சிறுமியிடம் பலாத்காரம் செய்ய தொல்லை கொடுத்த சித்தப்பா

9 வயது சிறுமிக்கு பலாத்காரம் செய்ய தொல்லை கொடுத்த சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தை சேர்ந்தவர் சரவணன்(42). இவர் கூலி தொழிலாளியாகியாக உள்ளார். இவருக்கு சங்கரன்(45) என்ற அண்ணன் உண்டு. இவர் பெருமாபட்டு கிராமத்தில் வசித்து வருகிறார். அவருக்கு, 9 வயதில், ஒரு மகள் உள்ளார்.

இவரது வீட்டிற்கு சரவணன் கடந்த 2ம் தேதி சென்றுள்ளார். தங்கையின் கணவர் என்பதால் மரியாதையுடன் வீட்டில் அனுமதித்து உபசரித்தார்கள் மனைவியின் அக்காள் குடும்பத்தினர். இவர்கள் இருவருக்கும் 9 வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது.

அந்தக் குழந்தையும் சித்தப்பா என்ற முறையில் சரவணனுடன் நன்றாக விளையாடி உள்ளார். மேலும், இரவு தூங்கும் போது, சிறுமி சித்தப்பாவுடன் தூங்கியுள்ளார். ஆனால், சித்தப்பா சிறுமியும் அவரது பெற்றோரும் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்த போது, சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், விடிந்த உடன் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சரவணன் வெளியேறி இருக்கிறார்.

இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் படி, குரிசிலாப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சரவணனை நேற்று கைது செய்தனர்.