அரவக்குறிச்சியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கும் செந்தில் பாலாஜியும், கே.சி.பழனிசாமியும் காரணம்!

தமிழக சட்டசபைக்கு கடந்த மே 16-ந் தேதி தேர்தல் நடந்தது. அரவக்குறிச்சி சட்ட சபை தொகுதியில் அ.தி. மு.க. சார்பில் செந்தில் பாலாஜியும், தி.மு.க. சார்பில் கே.சி.பழனிசாமியும் போட்டியிட்டனர். இந்த 2 வேட்பாளர்களும் தேர்தலின்போது ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டனர். ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம், வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்களை வாரி வழங்கினர்.

இதனால் கே.சி.பழனி சாமியின் மகன் வீட்டிலும், கரூரில் உள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த அன்புநாதன் என் பவர் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி பெரும் தொகையை பறிமுதல் செய்தனர். பெரிய அள வில் முறைகேடுகள் நடந் ததால், அவரக்குறிச்சி தொகுதிக்கு நடைபெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் அரவக் குறிச்சி தொகுதிக்கு வருகிற நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. இதனையடுத்து 232 தொகுதிகளில் மட்டுமே சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. திமுக 89 இடங்களில் வென்று வலுவான எதிர்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்தது.

இந்த தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜியும், தி.மு.க. சார்பில் கே.சி.பழனி சாமியும் மீண்டும் போட்டியிடவுள்ளனர். இது தொடர்பாக ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனு வை விசாரித்த நீதிபதிகள், ‘ஏற்கனவே அரவக்குறிச்சி தொகுதியில்  தேர்தல் ரத்து செய்யப் பட்டது தொடர்பான வழக்கு வருகிற நவம்பர் 9-ந் தேதி எங்கள் முன்பு விசாரணைக்கு வருகிறது.

அந்த வழக்குடன், இந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதற்கு முன்பாக இந்த வழக்கிற்கு இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, அரவக்குறிச்சி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி, தி.மு.க. வேட் பாளர் கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். இதற்காக அனைவருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தர விடுகிறோம்’ என்று உத்தர விட்டுள்ளனர்.