15 வயது மாணவியை கற்பழித்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது

15 வயது மாணவியை கற்பழித்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர் . விழுப்புரம் மாவட்டம், ஆண்டாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது-23). இவர், நாமக்கல் மாவட்டம், போடிநாயக்கன்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த, 15-வயதுடைய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய சக்திவேல் அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

மாணவியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட நாமக்கல் மகளிர் போலீசார், கடந்த செப்டம்பரில் சக்திவேலை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஏற்கனவே, 15-வயதுடைய இன்னொரு சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. அச் சிறுமி இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை திருமணம் செய்ய உடந்தையாக இருந்ததாகவும், சக்திவேல் திருமணம் செய்த, 15 வயதுடைய அச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, சக்திவேலின் நண்பர் முருகன் (வயது-26, என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இருவரையும், போலீஸ் எஸ்.பி.மகேஸ்வரன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் ஆசியா மரியம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.