சசிகலா புஷ்பாவின் முன் ஜாமீன் மனு மீது 23 ஆம் தேதி விசாரணை

எம்.பி சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் மற்றும் அம்மா ஆகிய நான்கு பேர் மீது, அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண்கள் பாலியல் புகார் அளித்தனர்.

இதன் பேரில் நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சசிகலா புஷ்பா எம்.பி. உள்ளிட்ட 4 பேரும் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, மதுரை உயர் நீதிமன்ற கிளை கடந்த 14 ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து சசிகலா புஷ்பா உள்ளிட்ட 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆஜராகி, இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வருகிற 23-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.