சமந்தா, நாக சைதன்யா திருமணத்தில் திடீர் குழப்பம்!

நாக சைதன்யா – சமந்தா இருவரும் காதலித்து வருகிறார்கள், இவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டு இறுதியில் நிச்சயதார்த்தமும், அடுத்த ஆண்டு திருமணமும் நடைபெற உள்ளது.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடக்கும் இந்த திருமண வேலைகள் தற்போது கலைகட்டியுள்ளது.

இந்த நிலையில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சமந்தா, குடும்பத்தார் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க, நாக சைதன்யா தரப்பு இந்து முறைப்படி தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று கூறுகிறார்களாம்.

இரு தரப்பையும் சமாதானம் செய்த சில உறவினர்கள், இந்து மற்றும் கிறிஸ்தவம் என்று இரண்டு முறைப்படியும் திருமணம் நடத்திவிடலாம் என்று யோசனை சொல்ல, இரு வீட்டாரும் அதை ஏற்றுக்கொண்டாலும், திருமணம் நடைபெறும் இடத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.

இரண்டு முறைப்படியும் ஐதராபாத்திலேயே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று நாக சைதன்யா தரப்பு கூறி, சமந்தா குடும்பத்தினர் கிறிஸ்தவ முறைப்படியான திருமணத்தை சென்னையில் வைக்க வேண்டும் என்று கூறுகிறார்களாம். ஆனால், இந்த விஷயத்தில் கராராக இருக்கும் நாக சைதன்யா தரப்பு ஐதராபாத்தில் மட்டுமே திருமணம், என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்களாம்.

இதனால், நாக சைதன்யா – சமந்தா திருமணத்தில் சற்று குழப்பம் நீடித்து வருவதாக, தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.